24/05/2025
இன்றைய தினம் கௌரவ ஆளுநருடன் சைவ அமைப்புகளின் தலைவர்களின் சந்திப்பு இடம்பெற்றது நல்லூர் விவகாரம் உட்பட சைவ மக்கள் சமகாலத்தில் எதிர்கொள்ளும பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
ஆக்க பூர்வமான பயனுறுதி வாய்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இச்சந்திப்பில் நல்லை சிவகுரு ஆதீனம் தலைமையில் யாழ்ப்பாணத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் அகில இலங்கை சைவ அர்ச்சகர் சபை சைவ பரிபாலன சபை அகில இலங்கை சைவ மகா சபை சைவ வித்யா விருத்தி சங்கம் இலங்கை சைவசமய பேரவை உட்பட அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக இந்துகற்கைகள் பேராசிரியர், திருக்கேதீச்சரம் அறஙகாவலர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர் சைவ அமைப்புக்களின் இணையமான தமிழ் சைவப்பேரவையின் கோரிக்கை மனு இணைத்தலைவர் தவத்திரு வேலன் சுவாமிகள் பொதுச்செயலாளர் சிவத்திரு தங்கவேல் சிவரூபன் ஆகியோரின் கையொப்பதுடன் ஆளுநரிடம் சைவ இணைய பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது.