Jaffna Transgender Network

Jaffna Transgender Network Volunteer-run network in Jafnna working to build community livelihoods for trans, q***r and gnc (gender-non-confirming) individuals.

21/07/2026
05/06/2026

சுயமரியாதை நடை 2026
யாழ்ப்பாணத்தின் ஐந்தாவது சுயமரியாதை நடையினை ஒழுங்குசெய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சுயமரியாதை நடையானது, இம்முறை 5ஆவது தடவையாக யாழ்ப்பாண மண்ணில் மிக எழுச்சியுடன் இடம்பெறவுள்ளது. இதுவரை காலமும் பொதுமக்களிடமிருந்தும், ஊடகங்களிடமிருந்தும் எமக்குக் கிடைத்த பேராதரவிற்கும் நேர்மறையான பதில்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

• காலம் - 06.06.2026
• நேரம் - மாலை 3.30
* நடை இடம்பெறும் வீதி – யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக ஆரம்பித்து யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதிஊடாக பண்ணை வீதியினை அடைந்து இறுதியில் யாழ்ப்பாணம் கோட்டையில் முடிவடைகின்றது.

இச்சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்குமே சமூகப் பொறுப்பு உண்டு என்பதை உணர்த்துவதற்கும், LGBTQIA+ சமூகத்தினரை சக மனிதர்களாக மதித்து, அவர்கள் தங்களுக்குரிய உரிமைகளுடன் ஒடுக்குமுறைகளற்ற வாழ்வை வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கும் விடுக்கப்படும் சுயமரியாதைக்கான அழைப்பு !
அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் குரல்கொடுக்கும் எமது பயணத்தின் ஓர் அங்கமாக, 'சுயமரியாதை நடை' (Pride Walk) யாழ்ப்பாணத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமும் சமூகப் பொறுப்பின் அவசியத்தை வலியுறுத்தவும், டுபுடீவுஞஐயூ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாகுபாடற்றதொரு வாழ்விடத்தை உருவாக்குவதே இந்த நடையின் முதன்மை நோக்கமாகும்.
உரிமைக்கான எமது இந்தப் பயணத்தில், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துகொள்ளுவோம். நாம் ஒவ்வொருவரும் இன்னொருவருக்கான இருக்கின்றோம் என்பதனை மீள வலியுறுத்துவோம்.
சுயமரியாதை, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சுயமரியாதை நடைபயணத்தில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் எம்மோடு கைகோர்த்து நடக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும் அற்றதொரு சமூக மாற்றத்தை நோக்கி ஒன்றிணைந்து பயணிப்போம், வாருங்கள்!
இன்னொருவருக்காக நாம் அனைவரும்
We Exist For Each Other

Pride Walk 2026
Celebrating its 5th year, the Jaffna Pride Walk will take place on June 6, 2026, at 3:30 PM, from the Public Library to the Fort. Grounded in equality and social justice, it urges everyone to reject oppression, combat LGBTQIA+ discrimination, and embrace the powerful truth: We Exist for Each Other.

ஒவ்வொரு மனிதனும் அவர்கள் விரும்பும் உடலில் வாழ்வதே உண்மையான சுதந்திரம். திருநர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பொருத்தமில்...
09/04/2026

ஒவ்வொரு மனிதனும் அவர்கள் விரும்பும் உடலில் வாழ்வதே உண்மையான சுதந்திரம். திருநர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பொருத்தமில்லாத ஒரு உடலில் சிறைப்பட்டிருப்பதை உணர்கிறார்கள். அவர்கள் விரும்பும் அடையாளத்தோடு வாழ அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

பால்நிலை மாற்று அறுவை சிகிச்சை என்பது வெறும் விருப்பம் அல்ல, அது அவர்களது உடல் மற்றும் உளவியல் ரீதியான அடிப்படைத் தேவை. இந்த உரிமையை சட்டரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பெற்றுத் தருவது ஒரு சமூகமாக எமது கடமையாகும்.

இலங்கை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள பால்நிலை அங்கீகாரச் சான்றிதழ் தொடர்பான வழக்கு, திருநர்களது அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆபத்தான சூழலில் உள்ளது.

அவர்களது உடலை அவர்கள் தீர்மானிக்கட்டும். அவர்களது அடையாளத்தை அவர்கள் தீர்மானிக்கட்டும். அதற்கு இந்தச் சமூகம் தடையாக இருப்பதைக் களைந்து, அவர்களது உரிமைக்காகக் குரல் கொடுப்பது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.

ஒருவரின் பால்நிலை அடையாளமானது புறக்கணிக்கப்படும் போது, அவரால் இயல்பாக வாழ முடிவதில்லை. குறிப்பாகத் திருநங்கை எனில் ஒரு ஆ...
02/04/2026

ஒருவரின் பால்நிலை அடையாளமானது புறக்கணிக்கப்படும் போது, அவரால் இயல்பாக வாழ முடிவதில்லை. குறிப்பாகத் திருநங்கை எனில் ஒரு ஆணின் உடலில் தம்மை வலுக்கட்டாயமாகப் பொருத்தியிருப்பதைப் போலவும், திருநம்பி எனில் ஒரு பெண் உடலில் தம்மை வலுக்கட்டாயமாகப் பொருத்தியிருப்பதைப் போலவும் உணரச் செய்யும். அத்துடன் பால்நிலைப்படுத்தப்பட்ட இந்தச் சமூகத்தில் தமது இயல்பு வாழ்க்கையை வாழ்வதே சவாலாக இருக்கும். எனவே தத்தமது பால்நிலையைத் தெரிவு செய்துகொள்வதற்கு அனைவருக்கும் உரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள திருநர்களுக்கு எதிரான வழக்கானது, 2016ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையினை (Circular No. 01-34/2016) கேள்விக்குட்படுத்துகின்றது. இது பல திருநர்களது வாழ்க்கையினை மிக மோசமாகப் பாதிப்பதுடன், சமூகம் அவர்களை அடக்குமுறைக்குட்படுத்தவும், சுரண்டவும், துஷ்பிரயோகம் செய்யவும் வழிவகுக்கும்.

எனது பால்நிலை அடையாளத்தை வெளிப்படுத்தவும், அதனை அடிப்படையாகக் கொண்ட என் உரிமைகளையும் கடமைகளையும் அனுபவிப்பதற்கும் எனக்கு...
31/03/2026

எனது பால்நிலை அடையாளத்தை வெளிப்படுத்தவும், அதனை அடிப்படையாகக் கொண்ட என் உரிமைகளையும் கடமைகளையும் அனுபவிப்பதற்கும் எனக்கு உரிமை உள்ளது. தற்போது இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள திருநர்களுக்கு எதிரான வழக்கானது, என் உரிமையினை மீறுகின்றது.

"இலங்கையில் பால்மாற்று அறுவைச் சிகிச்சையும், ஒருவர் தனது பால்நிலையைத் தானே தெரிவு செய்வதற்கான உரிமையும் வளங்களும் உள்ளனவா?" என்று சிலர் கேட்கின்றனர். உண்மையில் அது சட்டரீதியானது.

2016ஆம் ஆண்டு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி (Circular No. 01-34/2016), நபரொருவர் ஒரு மனநல மருத்துவரிடம் (Psychiatrist) ஆலோசனை பெற்று, "பால்நிலை அங்கீகாரச் சான்றிதழ்" (Gender Recognition Certificate) ஊடாகத் தனது பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையில் பால்நிலையினை மாற்றிக்கொள்ள முடியும்.

ஆனாலும், பால்மாற்று அறுவைச் சிகிச்சை செய்வதற்கான வளங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியிலேயே உள்ளன; அதற்கான பொருளாதாரச் செலவும் அதிகம். எனவே, தத்தமது பால்நிலையைத் தெரிவு செய்துகொள்வதற்கு இலங்கையில் உள்ள அனைத்துப் பிரஜைகளும் உரித்துடையவர்கள்.

+

இலங்கையில் திருநர்கள், “தம் நாட்டில் தம்மைத் தாமாக வாழ அனுமதிக்கும் சட்டம் இருக்கிறது" என்ற நம்பிக்கையில் வாழந்துவருகின்...
25/02/2026

இலங்கையில் திருநர்கள், “தம் நாட்டில் தம்மைத் தாமாக வாழ அனுமதிக்கும் சட்டம் இருக்கிறது" என்ற நம்பிக்கையில் வாழந்துவருகின்றனர். பால்நிலை அங்கீகாரச் சான்றிதழ் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்ற திருநர்கள் கூட தம் சொந்த நாடான இலங்கைக்குத் திரும்பி உள்ளனர்.
இலங்கை உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள பால்நிலை அங்கீகாரச் சான்றிதழ் தொடர்பான வழக்கு, திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆபத்தான சூழலில் உள்ளது. இதனால் திருநர்களது வாழ்வியல் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
திருநர்களின் உரிமை என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட நபரினதோ அல்லது குழுவினதோ கோரிக்கை அல்ல, அது மனித உரிமைகளின் ஒரு பகுதி. அது எமது சமூகத்தின் பால்நிலை பல்வகைமையின் அடையாளம்.

Happy Pongal 2026
15/01/2026

Happy Pongal 2026

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaffna Transgender Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Jaffna Transgender Network:

Shortcuts

Share