Puthiya Velicham

Puthiya Velicham Puthiya Velicham Puthiya velicham literally translates to New Light or New beginnings.

This organization focuses on resolving the economic, social, academic, professional, domestic and psychological problems faced by a society that only recently emerged from three decades of civil and ethnic unrest. Last year, Puthiya velicham visited 19 schools and spoke with hundreds and thousands of students, teachers, excombatants, and war widows within the Valvettithurai, Point Pedro, Jaffna, Mannar, Thalai Mannar, Killinochi, Puthukudiriruppu, Mullivaikkal, Mullaithivu, Trincomale, Malaiyakam, Hutton, Mattakkalappu areas. The project used a therapeutic approach in an effort to heal the psychological trauma experienced by the community members as an attempt to bestow confidence, faith, and positivity in affected individuals.

We’re looking for volunteers!The Global Tamil Research Conference 2026 is coming to Toronto from October 15–18, and we’d...
10/02/2026

We’re looking for volunteers!

The Global Tamil Research Conference 2026 is coming to Toronto from October 15–18, and we’d love to have you join our volunteer team.

Whether you can help for a few hours or throughout the conference, your time and support will make a difference. High school and university students, social workers, community workers, and anyone who would like to get involved are welcome.

It’s a great opportunity to meet new people, gain experience, and be part of an international gathering celebrating Tamil research, language, and heritage.

You’ll receive a certificate confirming your completed volunteer hours.

Interested in joining us? You’ll find the application link in the first comment below.
We look forward to welcoming you to the team!

From Displacement to a Life of Dignity—Let Us Support Their Journey Home!Every Little Contribution Makes a Big Differenc...
09/11/2026

From Displacement to a Life of Dignity—Let Us Support Their Journey Home!

Every Little Contribution Makes a Big Difference!
சிறு துளி பெரு வெள்ளம்!

https://www.canadahelps.org/en/charities/imho-canada/p2p/TamilCanadianWalk2026/team/ekuruvi-steps-2026/captain/ekuruvi-steps-2026?fbclid=IwdGRzaAUQAE9jbGNrBQ__2HBkb2YFZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQMMzUwNjg1NTMxNzI4AAEe_xlJnyK0KbSzxJD4WxaFzNh-FisaO-hp_vuiVC6P9VEx_B3aqlRUFtgavWg_aem_KUMzb81TFvtzbwQ-HMgWWQ&sfnsn=scwspwa

தாயகம் திரும்பும் குடும்பங்களுக்குத் துணைநிற்போம்!

1980களில் தமிழர் தாயகத்தில் போரும் இராணுவ நடவடிக்கைகளும் தீவிரமடைந்தபோது, பல இலட்சம் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடல் வழியாகத் தமிழ்நாட்டைச் சென்றடைந்தனர்.

அவர்களில் பலரைப்போல நாங்களும் பின்னர் கனடா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறிவிட்டோம். ஆனால் வசதிகளற்ற பல குடும்பங்கள் இன்னும் குடியுரிமையின்றி, தமிழ்நாட்டின் மறுவாழ்வு முகாம்களிலும் அவற்றுக்கு வெளியிலும் வாழ்ந்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் சுமார் 104 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 15 வருடங்களில் இந்த முகாம்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். சிலர் தமிழ்நாட்டு வாழ்க்கைக்குப் பழகிவிட்டார்கள். இன்னும் பலருக்குத் தாயகம் திரும்ப வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், “அங்கு சென்றால் எங்கே வாழ்வது? எப்படிப் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பது? சூழ உள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா ? வருமானத்திற்கு என்ன செய்வது?” என்ற பல கேள்விகளும் அச்சங்களும் அவர்களிடம் இருக்கின்றன.

அந்தத் தயக்கம் மிகவும் நியாயமானது. பல வருடங்களாக முகாம்களில் வாழ்ந்த ஒரு குடும்பம் திடீரெனத் தாயகம் திரும்பி, எல்லாவற்றையும் புதிதாக ஆரம்பிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

அதனால்தான் தாயகம் திரும்பும் குடும்பங்களை வரவேற்று, அவர்களுக்கு ஆதரவளிப்பது உலகத் தமிழர்களாகிய எமது கூட்டுப் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன்.

இதன் முதற்கட்டமாக, திருகோணமலைக்குத் தாயகம் திரும்பும் 30 தமிழ் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் மீள்குடியேற்றத்திற்காக நிதி திரட்டப்படுகிறது.

உங்கள் நன்கொடை அவர்களின் தங்குமிடம், உணவு, கல்வி மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கு உதவும்.

இந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவை (Canadian Tamil Congress), IMHO Canada மற்றும் OfERR Ceylon ஆகிய அமைப்புகள், ஏனைய சமூக அமைப்புகளுடன் இணைந்து, இத்தகைய குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவும் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளன. இந்த முயற்சியில் E-Kuruvi Steps 2026 இணைந்துகொள்கிறது.

இந்தத் தகவல் உங்களுக்குத் தாமதமாகக் கிடைத்திருந்தாலும், அதைப் புறக்கணித்துவிடாமல் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள்.
செப்டம்பர் 13, ஞாயிற்றுக்கிழமை, Pickering நகரிலுள்ள Millennium Square Park-இல் நடைபெறும் நடைபவனியில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பதிவு காலை 8:30 மணிக்கு ஆரம்பமாகும். Brampton மற்றும் Scarborough பகுதிகளிலிருந்து காலை 8:00 மணிக்கு புறப்படும் வகையில் இலவசப் பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு நாளிலோ ஓராண்டிலோ முடிந்துவிடக்கூடிய பணி அல்ல. பலரும் தொடர்ந்து கைகொடுத்து முன்னெடுக்க வேண்டிய நீண்டகால மனிதநேயப் பணி.

நாம் ஒவ்வொருவரும் எங்களால் முடிந்த சிறிய உதவியைச் செய்தாலே, அவை ஒன்றுசேர்ந்து ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

உங்களால் முடிந்த $50 அல்லது $100 நன்கொடையாக வழங்கி, தாயகம் திரும்பும் இந்தக் குடும்பங்களுக்குத் துணைநிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் நன்கொடைக்கான அதிகாரப்பூர்வ வரி ரசீது IMHO Canada அமைப்பினால் வழங்கப்படும். நன்கொடைக்கான ரசீதை உங்கள் வருமானவரி அறிக்கையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிறு துளி பெருவெள்ளம்!
இடம்பெயர்விலிருந்து கண்ணியமான வாழ்விற்கு—தாயகம் திரும்பும் அவர்களின் பயணத்தில் நாமும் துணைநிற்போம்!

அன்புடன்
நவஜீவன் அனந்தராஜ்

நீங்கள் Online இல் நன்கொடை வழங்குவதற்கான இணைப்பைக் கீழே உள்ள கமெண்டில் இணைத்துள்ளேன். I have included the online donation link in the comment below.

தாயகம் திரும்பும் குடும்பங்களுக்குத் துணைநிற்போம்!1980களில் தமிழர் தாயகத்தில் போரும் இராணுவ நடவடிக்கைகளும் தீவிரமடைந்தபோ...
09/10/2026

மரங்களை நேசித்த சமூகத் தொண்டர் கருணாநிதி காலமானார்மரங்களை பாதுகாக்கும் பணியில் தனது வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த சமூகத...
08/02/2026

மரங்களை நேசித்த சமூகத் தொண்டர் கருணாநிதி காலமானார்

மரங்களை பாதுகாக்கும் பணியில் தனது வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த சமூகத் தொண்டர் கருணாநிதி மறைந்தார். இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

மரங்களுக்காக வாழ்ந்து, அவற்றின் வளர்ச்சிக்காக tireless-ஆக உழைத்த அவர், பலருக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தார். அவரது முயற்சியால் பல இடங்களில் மரங்கள் நட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்தன.

“மனிதர்கள் மறந்தாலும், மரங்கள் அவரை மறக்காது” என அவரை நெருங்கியவர்கள் உருக்கமாக நினைவுகூருகின்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல தியாகங்களைச் செய்த கருணாநிதியின் மறைவு, சமூகத்திற்கும் இயற்கை அன்பர்களுக்கும் ஒரு பெரும் இழப்பாகும்.

07/22/2026
கடந்த 7 ஆண்டுகளாக, Ekuruvi Steps ஆயிரக்கணக்கான மக்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி ஊக்குவித்து வருகிறது. இந்த ஆண்ட...
07/09/2026

கடந்த 7 ஆண்டுகளாக, Ekuruvi Steps ஆயிரக்கணக்கான மக்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி ஊக்குவித்து வருகிறது. இந்த ஆண்டு, பங்கேற்பாளர்கள் தொடர்ந்து 60 நாட்கள் தினமும் 10,000 அடிகள் நடக்கும் சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்து, தங்களது உறுதி, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளனர்.

அவர்களின் இந்தச் சிறப்பான சாதனையை ஒன்றிணைந்து கொண்டாடும் இந்நிகழ்வில் தங்களின் வருகை எங்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

நிகழ்வு விவரங்கள்

📅 திகதி: வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2026
🕡 6:30 PM – 7:00 PM: சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
🚶 7:00 PM – 8:00 PM: Grand Walk A Thone
📍 இடம்: Boxgrove Community Park
346 Box Grove By-pass, Markham

வாருங்கள்...

🏅 சாதனையாளர்களை பாராட்டுவோம்.
💚 ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்போம்.
💜 மீளெழுந்த பெண்கள் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்போம்.
🎉 Ekuruvi Steps-இன் வெற்றிகரமான 7வது ஆண்டை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.

இந்த சிறப்பான தருணத்தில் தாங்களும் உங்கள் குடும்பத்தினரும் கலந்துகொண்டு எங்களை மகிழ்விப்பீர்கள் என மனமார நம்புகிறேன்.

நன்றி. தங்களை நேரில் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்,

Navajeevan Anantharaj
Puthiya Velicham
Ekuruvi Steps 2026

Ekuruvi Steps 2026 – Grand Finale Walk A Thone நிகழ்விற்கு தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் நேரில் அழைப்பதி...
07/08/2026

Ekuruvi Steps 2026 – Grand Finale Walk A Thone நிகழ்விற்கு தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் நேரில் அழைப்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த 7 ஆண்டுகளாக, Ekuruvi Steps ஆயிரக்கணக்கான மக்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி ஊக்குவித்து வருகிறது. இந்த ஆண்டு, பங்கேற்பாளர்கள் தொடர்ந்து 60 நாட்கள் தினமும் 10,000 அடிகள் நடக்கும் சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்து, தங்களது உறுதி, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளனர்.

அவர்களின் இந்தச் சிறப்பான சாதனையை ஒன்றிணைந்து கொண்டாடும் இந்நிகழ்வில் தங்களின் வருகை எங்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

நிகழ்வு விவரங்கள்

📅 திகதி: வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2026
🕡 6:30 PM – 7:00 PM: சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
🚶 7:00 PM – 8:00 PM: Grand Walk A Thone
📍 இடம்: Boxgrove Community Park
346 Box Grove By-pass, Markham

வாருங்கள்...

🏅 சாதனையாளர்களை பாராட்டுவோம்.
💚 ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்போம்.
💜 மீளெழுந்த பெண்கள் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்போம்.
🎉 Ekuruvi Steps-இன் வெற்றிகரமான 7வது ஆண்டை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.

இந்த சிறப்பான தருணத்தில் தாங்களும் உங்கள் குடும்பத்தினரும் கலந்துகொண்டு எங்களை மகிழ்விப்பீர்கள் என மனமார நம்புகிறேன்.

நன்றி. தங்களை நேரில் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்,

நவஜீவன் ஆனந்தராஜ்
நிறுவனர் – புதிய வெளிச்சம்
ஏற்பாட்டாளர் – Ekuruvi Steps 2026

60 நாட்கள்...தினமும் 10,000 காலடிகள்...ஒவ்வொரு நாளும் உங்களை நீங்கள் வென்ற ஒரு அற்புதமான பயணம்!Ekuruvi steps 2026 💜 Supp...
07/08/2026

60 நாட்கள்...
தினமும் 10,000 காலடிகள்...
ஒவ்வொரு நாளும் உங்களை நீங்கள் வென்ற ஒரு அற்புதமான பயணம்!

Ekuruvi steps 2026
💜 Support Resilient Women Entrepreneurs

🌿 Ekuruvi Steps 2026 – Grand Finale Walk A Thone 🌿7 ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளில் ஆரோக்கிய மாற்றம்!60 நாட்கள் ...
07/05/2026

🌿 Ekuruvi Steps 2026 – Grand Finale Walk A Thone 🌿

7 ஆண்டுகள்... ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளில் ஆரோக்கிய மாற்றம்!
60 நாட்கள் தொடர்ந்து
தினமும் 10,000 அடிகள்
உறுதி, ஒற்றுமை, ஆரோக்கியம் – இதுவே எங்கள் பயணம்.

இந்த 60 நாள் ஆரோக்கியப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த அனைவரையும் கௌரவிக்கும் Ekuruvi Steps 2026 நிறைவு விழா, Certificate Presentation Ceremony, மற்றும் Grand Walk A Thone நிகழ்வில் தங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

📅 திகதி: வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2026
🕡 6:30 PM – 7:00 PM: Certificate Presentation Ceremony
🚶 7:00 PM – 8:00 PM: Grand Walk A Thone
📍 Boxgrove Community Park
346 Box Grove By-pass, Markham

சமூக அங்கத்தவர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், சமூகத் தலைவர்கள், நலன்விரும்பிகள் என அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
வாருங்கள்...

சாதனையாளர்களை பாராட்டுவோம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கொண்டாடுவோம்.
மீளெழுந்த பெண்கள் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்போம்.
Ekuruvi Steps-இன் 7வது ஆண்டு வெற்றியை ஒன்றாகக் கொண்டாடுவோம்!

உங்கள் ஒவ்வொரு அடியும் மாற்றத்தை உருவாக்குகிறது.
நிறைவு நாள் Walk A Thone-இல் அனைவரும் சந்திப்போம்!

Ekuruvi Steps 2026 – நிறைவு நாள் Walk A Thoneஆரோக்கியப் பயணத்தின் 7வது ஆண்டை ஒன்றாகக் கொண்டாடுவோம்!60 நாட்கள்.தினமும் 10...
07/02/2026

Ekuruvi Steps 2026 – நிறைவு நாள் Walk A Thone
ஆரோக்கியப் பயணத்தின் 7வது ஆண்டை ஒன்றாகக் கொண்டாடுவோம்!

60 நாட்கள்.
தினமும் 10,000 அடிகள்.
நூற்றுக்கணக்கான உறுதியான மனிதர்கள்.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள்.
ஒரே இலக்கு – ஆரோக்கியமான வாழ்க்கை.

Ekuruvi Steps ஆரோக்கிய இயக்கத்தின் 7வது ஆண்டை பெருமையுடன் கொண்டாடும் இவ்வேளையில், இந்த 60 நாள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த அனைவருடனும் இணைந்து, Ekuruvi Steps 2026 நிறைவு விழாவையும் Grand Walk A Thone நிகழ்வையும் கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

📅 திகதி: 10 ஜூலை 2026, வெள்ளிக்கிழமை
📍 இடம்: Boxgrove Community Park
346 Box Grove By-pass, Markham

🏅 சான்றிதழ் வழங்கும் விழா: 6:30 PM – 7:00 PM
🚶 நிறைவு நாள் Walk A Thone: 7:00 PM – 8:00 PM

இந்த நிகழ்வில் பங்கேற்பாளர்கள் மட்டுமல்லாது, சமூக அங்கத்தவர்கள், சமூகத் தலைவர்கள், நலன்விரும்பிகள், ஆதரவாளர்கள் என அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். வாருங்கள், இந்த ஆரோக்கியப் பயணத்தின் நிறைவை ஒன்றாகக் கொண்டாடுவோம்.

மீளெழுந்த பெண்கள் தொழில்முனைவோருக்கு ஆதரவு அளிப்போம்.

இந்த 60 நாட்கள் எங்களுடன் இணைந்து நடந்த ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும், தன்னார்வலர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனுசரணையாளர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

வாருங்கள்! Ekuruvi Steps-இன் 7வது ஆண்டு நிறைவு நாள் Walk A Thone-இல் அனைவரும் சந்திப்போம்.

Address

Unit 60, 3011 Markham Road
Toronto, ON
M1X 1L7

Alerts

Be the first to know and let us send you an email when Puthiya Velicham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Puthiya Velicham:

Shortcuts

Share