20/04/2026
அன்பு உறுப்பினர்களே,
நமது தமிழ் பண்பாட்டுக் கழகம் சார்பாக இந்த ஆண்டின் கோடைகால கடற்கரை இன்பச் சுற்றுலா வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்காக ஹாங்காங் தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள “பிக் வேவ் பே” கடற்கரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. “பிக் வேவ் பே” கடற்கரை ஒரு அழகான நீச்சல் கடற்கரை. இங்கு உங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. உங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்து மகிழ்ந்து, நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து சிறிது நேரம் விடுபட்டு மகிழும் வாய்ப்பாக இருக்கும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக சுவாரஸ்யமான விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மிடில் ரோடு – TST (தபால் அலுவலகம்) இடத்தில் இருந்து காலை 9.00 மணிக்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “Tung Chung” பகுதியில் இருந்து போதுமான உறுப்பினர்கள் பதிவு செய்தால், அங்கிருந்து பேருந்து ஏற்பாடு செய்யவும் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.
சுவையான மதிய உணவு நிகழ்வில் வழங்கப்படும். கூகுள் படிவத்தை நிரப்பும் போது உங்கள் உணவு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம். மதியத்திற்கு பிறகு சுவையான தேநீர் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்படும்.
நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் எளிது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவம் இணைப்பின் மூலமாகவோ அல்லது தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர்களை தொடர்பு கொண்டு உங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டியது மட்டுமே.
"இந்த ஆண்டின் கோடைகால கடற்கரை இன்ப சுற்றுலாவிற்கு பதிவு செய்ய, இந்த கூகுள் படிவ இணைப்பை சொடுக்கவும்:"
https://forms.gle/kTzmRvonfmaUicom7
நன்றி,
தபக குழு.
Dear Members,
On behalf of our Tamil Cultural Association, we are delighted to inform you that this year’s Summer beach picnic will be held on May 10th. For this occasion, “Big Wave Bay Beach” located on the Eastern side of Hong Kong Island, has been chosen. “Big Wave Bay Beach” is a beautiful swimming beach, equipped with all the basic facilities you may need. It will be a wonderful opportunity to relax with your family, enjoy, and take a refreshing break from the hustle and bustle of city life.
We have also planned fun games for women and children to make the day more enjoyable. A bus has been arranged from Middle Road – TST (Post Office), which will depart at 9:00 am. If sufficient members register from Tung Chung, we will be happy to arrange a bus from Tung Chung as well.
Delicious lunch will be provided at the venue, and you can select your food preference when filling in the Google Form. Yummy Tea & Snacks will also be served at the venue afternoon.
Your part is very simple. Please confirm your participation either through the Google Form link provided below or by contacting the Executive Committee members of the Tamil Cultural Association.
Click this google form link to register for the Summer beach picnic:
https://forms.gle/kTzmRvonfmaUicom7
Thank you,
Team TCA
Date: 10 May 2026 (Sunday)
Bus departs from Middle Road – TST (Post Office) Departing Time: 9:00 am
TCA members: $50 for adult, $30 for kid. (3 years and above)
Non-Members: Adults & Kids $100 per person
The trip cost includes transportation, lunch and snacks.
EC members to contact:
Tamilselvan - 91649545
Devi Karthik- 94459696
Sulaiman - 66446841
Irshad Ali - 94205248
Hasan - 51786401
To become a TCA member or renew your membership fill out the Google form from the below link, submit it and pay the annual membership fee ($200). NOTE: TCA yearly membership is from 1 Apr – 31 Mar of every year.
https://forms.gle/G1tV6L9X3jHwspn26
Please choose one of the following payment modes and send a WhatsApp message with a screenshot of your payment to TCA at: +852 6263 2434 or notify by email with your transfer slip to [email protected].
1. TCA Bank Details: A/C name: Tamil Cultural Association Account no 121-869648-838 Bank: HSBC
2. FPS: +852 6263 2434.
3. By Cash to any of the office bearers of the TCA EC Committee.
Thank you
Team TCA