CITU Pudukkottai

  • Home
  • CITU Pudukkottai
Directions

CITU Pudukkottai உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்

16/10/2025
15/10/2025

14/10/2025
10/10/2025
09/10/2025
08/10/2025

கேங்மேன் தொழிலாளர்கள் கைது சிஐடியு கண்டனம்!!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் பணியாளர்களை களஉதவியாளர்களாக மாற்றிட வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை காவல்துறை கைது செய்ததற்கு சிஐடியு கண்டனம்.

தமிழ்நாடு மின்சார காரியத்தில் ஆரம்பநிலை பதவியாக களஉதவியாளர் என்கிற பதவி மட்டுமே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும்நிலையில். 2019 ஆம் ஆண்டு அதிமுக அரசு கேங்மேன் என்கிற புதிய பதவியை உருவாக்கி 10,000-ம் பணியாளர்கள் 2021 ஆம் ஆண்டு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டனர். கேங்மேன்களுக்கான பணி வரன்முறைகளான கம்பம் நடுதல், கம்பி இழுத்தல், கட்டுமான பணிகள் மட்டுமே செய்திட வரையறை செய்யப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 66,000-த்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களில் ஆரம்பகட்ட காலிப்பணியிடங்களான களஉதவியார், கம்பியாளர் பதவியில் மட்டும் 28,000-ம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கேங்மேன் பணியாளர்களுக்கு பணிநியமன ஆணையில் வழங்கப்பட்ட பணிகளுக்கு மாறாக, களப்பிரிவில் களஉதவியாளர், கம்பியாளர், தொழிற்நுட்ப உதவியாளர், மின்பாதை ஆய்வாளர், கணக்கீட்டாளர், போன்றோர் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக கேங்மேன் பணியாளர்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கேங்மேன் பணியாளர்கள் அனைவரும் களஉதவியாளர்களாக மாற்றப்படுவார்கள் என முன்னாள் மின்துறை அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜி அவர்கள் சட்டசபையில் அறிவித்திருந்தார். மேற்கண்ட அறிவிப்பை நிறைவேற்றிட கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக கடிதம் அளித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணாத நிலையில் தமிழகம் முழுவதும் 12 தலைமைப்பொறியாளர் மண்டல அலுவலகங்கள் முன்பாக காத்திருப்பு போராட்டம் 07.10.2026 இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அமைதியான முறையில் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் கேங்மேன் ஊழியர்களையும், சங்கத்தலைவர்களையும் காவல் துறை கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது.

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தின் அடிமட்ட பணிகள் நேரடியாக பாதிக்கப்பட்டு மக்கள் சேவை பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்தும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வுகண்டிட சிஐடியு தமிழ்மாநிலக்குழு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.

தோழமையுள்ள,

(ஜி.சுகுமாறன்),

மாநில பொதுச்செயலாளர்.

08/10/2025

I gained 1,672 followers, created 71 posts and received 137 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

07/10/2025
07/10/2025

Address

New Bus Stand

Website

Alerts

Be the first to know and let us send you an email when CITU Pudukkottai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed non profit organization?

Share