Helping Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Helping, Community Organization, Birkenmatt 23, 6343 Risch, Switzerland, FL.

உண்மைக்கதை… True Story (வீடியோ)
07/07/2016

உண்மைக்கதை… True Story (வீடியோ)

Helping Handsஉண்மைக்கதை… True Story (வீடியோ) By editor - July 5, 2016 0 23 Share on Facebook Tweet on Twitter SHARE Facebook Twitter tweet Previous articleயோகா பயிற்சிகள்…How to Do Surya Namaskar Step (வீடியோ)Next articleதமிழனுக்கே தெரியாத தமிழ் வரலாறு…Tamil History (வீடியோ) editor

மனத்தை உருக்குகிற கதை…Touching Story (வீடியோ)
07/07/2016

மனத்தை உருக்குகிற கதை…Touching Story (வீடியோ)

Helping Handsமனத்தை உருக்குகிற கதை…Touching Story (வீடியோ) By editor - June 24, 2016 0 200 Share on Facebook Tweet on Twitter SHARE Facebook Twitter tweet Previous articleஉங்களுக்குத் தொப்பையா ? தொலையிது விடுங்க மாமு. முதல்ல இதப் பண்ணுங்க…Weight Loss (வீடியோ)Next articleரெமோ…Remo (வீடியோ) editor

அழாமல் இதைப்பாருங்கள் பார்ப்போம். சோல்லும்போதே கண்ணுக்குள்ள கரப்பான் புகுந்துட்டுதே…Try To Watch This Without Crying (வீ...
07/07/2016

அழாமல் இதைப்பாருங்கள் பார்ப்போம். சோல்லும்போதே கண்ணுக்குள்ள கரப்பான் புகுந்துட்டுதே…Try To Watch This Without Crying (வீடியோ)

Helping Handsஅழாமல் இதைப்பாருங்கள் பார்ப்போம். சோல்லும்போதே கண்ணுக்குள்ள கரப்பான் புகுந்துட்டுதே…Try To Watch This Without Crying (வீடியோ) By editor - June 27, 2016 0 24 Share on Facebook Tweet on Twitter SHARE Facebook Twitter tweet Previous articleஅழகுமிக்க யோகா பயிற்சிகள். யோகா என்றாலே ஆரோக்கியம்...

ஒவ்வொரு துளி முக்கியத்துவம்…Every Drop Importance
07/07/2016

ஒவ்வொரு துளி முக்கியத்துவம்…Every Drop Importance

Helping Handsஒவ்வொரு துளி முக்கியத்துவம்…Every Drop Importance By editor - June 14, 2016 0 74 Share on Facebook Tweet on Twitter SHARE Facebook Twitter tweet Previous articleகிராம மக்களின் ஆரோக்கியம் காக்கும் ஈஷா…Great JobNext article​மூலிகை, சித்த மருத்துவம் – மருத்துவர் அன்பு கணபதி…Awesome Tips e...

நெஞ்சத்தை வருடும் ஓர் வீடியோ…Most Touching Video (வீடியோ)
07/07/2016

நெஞ்சத்தை வருடும் ஓர் வீடியோ…Most Touching Video (வீடியோ)

Helping Handsநெஞ்சத்தை வருடும் ஓர் வீடியோ…Most Touching Video (வீடியோ) By editor - July 6, 2016 0 11 Share on Facebook Tweet on Twitter SHARE Facebook Twitter tweet Previous articleயோகா பயிற்சிகள்…Yoga (வீடியோ) editor

மண்சரிவில் சிக்கிய வீட்டாருக்காக உணவின்றி காத்திருந்த நாய்
07/07/2016

மண்சரிவில் சிக்கிய வீட்டாருக்காக உணவின்றி காத்திருந்த நாய்

Helping Handsமண்சரிவில் சிக்கிய வீட்டாருக்காக உணவின்றி காத்திருந்த நாய் By editor - May 20, 2016 0 30 Share on Facebook Tweet on Twitter SHARE Facebook Twitter tweet Previous articleபிரின்ஸ் அஞ்சலி – சர்ச்சை கலகம்Next articleஇலங்கை வெள்ளம் – மல்வானை பகுதியில் வேண்டும் உதவி editor

வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளை உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் வழ...
02/03/2016

வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளை உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் வழங்கியது.
----------------------------------------------------------------
வன்னியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 176 குடும்பங்களுக்கு 16.11.2015 அன்று அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவி புரிந்துள்ளது, உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் இணை நிறவனமான "அரும்புகள்" சமூக அபிவிருத்தி நிறுவனம்.
வடக்கில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு பெருமளவிலான மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
திரு முருகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டம் திருமுருகண்டி கிராமசேவகர் பிரிவில் உள்ள 52 குடும்பங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டம் பொன்னகர் கிராமசேவகர் பிரிவில் உள்ள 124 குடும்பங்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி புரிந்துள்ளது, அரும்புகள் சமூக அபிவிருத்தி நிறுவனம்
மேற்குறிப்பிட்ட கிராமங்களில் கூலித்தொழில் செய்கின்ற குடும்பங்கள் வாழ்வதோடு போரினால் பாதிக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களும் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்பிரதேசங்களை அண்டிய மற்றைய பிரதேசங்களிலும் இன்னும் பலநூறு குடும்பங்கள் உதவிகளுக்காக காத்திருக்கின்றனர். உதவிகள் செய்யக் காத்திருக்கும் உறவுகள் குறித்த இம்மக்களுக்கு உதவிகள் செய்யுமாறு அன்போடு வேண்டப்படுகின்றனர்.

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!!!-------------------------------------------------பசிக்கிறதம்மா... பசிக்கிறத...
12/05/2015

அம்மா பசிக்கிறது..!
கொஞ்சம் சோறு போடுங்கள்!!!
-------------------------------------------------

பசிக்கிறதம்மா...
பசிக்கிறது!

இரு கரம் கூப்பி
கேட்கின்றேன்...
என் வயிற்றினுள்
ஏதோ சத்தங்கள்
பல கேட்கின்றது..!

எனக்கு அச்சத்தம்
என்னவென்றும்
தெரியவில்லை!
ஒன்றும் புரியவும் இல்லை!

ஈர் இரண்டு
நாட்களாக எந்த
உணவும் உண்ணவில்லை..!
இரண்டு நாட்களாக
மலம் கூடக்
கழிக்கவில்லை..!

ஒட்டிய வயிற்றுடன்
அலைந்து திரிகின்றேன்..!
ஒரு பிடி உணவேனும்
தருவீர்களென எண்ணி..!

எனைப் பெற்றவர்கள்
உயிரோடு இருந்திருந்தால்...
நான் வருவேனா
உங்களின் வாசல் தேடி..??

முலைப்பால் கூட
முழுதாகப் பருகவில்லை..!
எனை வயிற்றினில்
சுமந்தவளும் வயிராற
உணவு உண்டதில்லை..!

முகவரி தெரியாத
எனைப் பார்த்து
மூதேவி என்கின்றார்கள்!!

நான் என்ன தவறு
செய்தேனோ - எனை
வசை பாடுகின்றார்கள்.??

இவர்களிடம் நான்
முத்தம் ஒன்று கேட்டேனா..?
இல்லை, சொத்தில்
பங்கு கேட்டேனா.??

இல்லை, சொகுசுப்
பஞ்சணை கேட்டேனா..?
இல்லை, நீ என்
சொந்தமெனச் சொன்னேனா.??

உங்கள் எச்சமான
மிச்சமாக இருக்கும்
உணவைத்தானே
கேட்கின்றேன்!!!

ஒரு பிடியேனும்
தருவீர்களென எண்ணி..!

ஒரு சாண் வயிறுதான்...
ஆனால், ஒன்றும்
புரியவில்லை எனக்கு!

கல்லுடைக்கும் இயந்திரம் போல
என் வயிற்றுக்குள் பல
சத்தங்கள் கேட்கின்றது..!

என்னால் நிற்கக் கூட
முடியவில்லை!!!
கால்கள் தளர்கின்றது!!

நடக்கவும் முடியவில்லை!!!
கண்கள் இருட்டுகின்றன

கதறி அழுவதற்குக் கூட
முடியவில்லை.!!
தொண்டை வரண்டு...
கண்களில் நீர் கூட
வர மறுக்கிறது..!

உதடுகள் மூடி...
உலகமே தலை கீழாகச்
சுற்றுவது போல்,
உணர்வற்றுப் போனது எனக்கு!!

ஒரு தடவையேனும் - சற்று
எனை குனிந்து பாருங்களேன்..!
என்னால் முடியவில்லையே!!
கரம் கொடுத்தேனும்
உதவிடுங்களேன்..!

இல்லையென்றால் - எனைக்
கருணைக் கொலை
செய்து விடுங்களேன்!!!

அதுவும்....
முடியவில்லையென்றால் - ஓர்
உதவி செய்யுங்களேன்..!

நான் இறந்த பிறகு
என்னுடலை எரித்திடவோ,
புதைத்திடவோ வேண்டாம்!!!

பட்டினியால் இறந்த எனை...
பசியால் வாடும்
மிருகங்களுக்கே
உணவாக்கி விடுங்கள்!
அவையேனும் பசியாறட்டும்!!!

- சுப காண்டீபன்

கடவுளுக்கு ஓர் கடிதம்...!********************************அன்புள்ள கடவுளுக்கு,ஏழை நான் எழுதும் வேண்டுகை மடல் இது!நீங்கள் ...
09/11/2015

கடவுளுக்கு ஓர் கடிதம்...!
********************************
அன்புள்ள கடவுளுக்கு,
ஏழை நான் எழுதும் வேண்டுகை மடல் இது!
நீங்கள் என்றுமே நலம் தான்,
ஆனால்
நாங்கள் இங்கு நலிவுற்றவர்களாய் வீதிகளில்.
கோயில், சேர்ச், மசூதி,விகாரை....என
அனைத்திலும் நீங்கள் வசதியாகவே வாழ்கிறீர்கள்.
வறுமை பற்றி நீங்கள்
அறிந்திருக்க வாய்ப்பே கிடையாது.
தூணிலும் துரும்பிலும்
உங்களால் வசிக்க முடியும் என்று சொல்லுறாங்கள்.
வீதியில் வாழும் எங்களை விரட்டி
உங்களுக்காக ஊரெங்கும் மாளிகை கட்டுறாங்கள்....
உங்களுக்கொரு பிரச்சினை என்றால்
ஊரே போர்க்களம் ஆகுது இங்கு.. ஆனால்
எங்களை திரும்பி பாக்க யாருமே இங்கில்லை..
வயிற்றுக்காய் கையேந்தும் எங்களை கடந்து போய்,
வசதியாய் வாழும் உங்களிடம்
தருகிறார்கள் பணமும் பொருளும்!!!!
இன்னும் நீண்ட பல கேள்விகள் உண்டு என்னிடத்தில்.
ஆனாலும் எதற்கும் உங்களிடமிருந்து பதில் வராது என்று எனக்கு நன்கு தெரியும்.....
ஆதலால் இத்துடன் முடிக்கிறேன் என் மடலை.
ஐயா கடவுளாரே !!!
எனக்கு இறந்த பின் சொர்க்கம் வேண்டாம்...
ஆனால் உலகில் நான்
வாழும் நாட்களை நரகமாய் மாற்றாதீர்
அதுவே போதும் எனக்கு …..
நன்றி
இப்படிக்கு உங்களிடம்
நாள்தோறும் கையேந்தும்
ஏழை.
அன்பு நண்பர்களை ..
நம் கண் முன் தினமும் நம் நாட்டில் கானும் காட்சிகள் .
எல்லம் இருப்பவர்களுக்கு லஞ்சம் பொருள் என்று அள்ளிக் கொடுக்கும் இந்த உலகம் ஒன்றும் இல்லாதவாறுக்கு
பிச்சை என்று கில்லிக் கொடுக்கவே
யோசிக்கிறது.
கொண்டு செல்ல எதுவும் இல்லை
இந்த உலகில் முடிந்த வரை கொடுத்து விட்டு செல்வோம் உண்மையான அன்பை .
வறுமைகள் ஒழியூட்டும் இவர்கள் வாழ்கை சிரக்கட்டும் .
நம் சிந்திக்க வேண்டியவை .
அதிகமாக பகிருஙக்ள் நண்பர்களை .
நட்புடன் உங்கள் நண்பன்.
நன்றி- நன்புடன் G. கண்ணன்

ஒரு குட்டிக் கதை...ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒர...
08/28/2015

ஒரு குட்டிக் கதை...

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டிக் கொண்டிருந்தான். சத்தத்தைக் கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது...

கடுப்பில் மகனுடைய கையைப் பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரைக் கொண்டு என்பதை.... வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவைப் பார்த்து "அப்பா.. என்னோட விரல் திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மௌனமாக வெளியே வந்தார்.

வெளியில் நின்றிருந்த காரைப் பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்துகொண்டு காரின் முன்பு உட்கார்ந்துவிட்டார்

அப்பொழுதுதான் அந்த கீறல்களை கவனித்தார் என்ன எழுதியிருகிறது என்று.. அந்த வாசகம்

" ஐ லவ் யூ அப்பா".

மனிதர்களை பயன்படுத்துகிறோம், பொருட்களை நேசிக்கிறோம்...

எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ..?

ஒரு காலை இழந்த நிலையிலும் சுயதொழில் முயற்சியால் முனேற்றம் கண்ட செல்வி. மலர் அவர்கள் உதவும் உறவுகளின் உதவிக்காக நன்றியினை...
08/13/2015

ஒரு காலை இழந்த நிலையிலும் சுயதொழில் முயற்சியால் முனேற்றம் கண்ட செல்வி. மலர் அவர்கள் உதவும் உறவுகளின் உதவிக்காக நன்றியினை தெரிவிக்கிறார்.

இங்கு வருகை தந்திருக்கும் உதவும் உறவுகள் அமைப்பினுடைய தலைவர் எமது தந்தை திரு. சு. வெற்றிமயில்நாதன் ஐயா அவர்களுக்கும், பெரியோர்களுக்கும்!
மற்றும்

எம்மை போன்று இங்கு வருகை தந்திருக்கும் எம் உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்!!!
இங்குள்ள ஒவ்வொருவரை போன்று நானும் இழப்புக்களை எதிர்கொண்டு மீண்டேளுந்த ஒருவரே நான்!!!

போர் என் “”...காலை பறித்தது போல், வறுமை எம் வாழ்வை பறித்திடுமோ? என்று எண்ணிய போது எனக்கு வாழ்வளித்தது. இவ் ...”உதவும் உறவுகள்”
அமைப்பின் தலைவர் ...”திரு வெற்றிமயில்நாதன் தந்தை” அவர்கள் முன் வந்து
வறுமையிலும், முதுமையிலும் வாடிய எனது அன்னையும், தந்தையும் இன்று என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றகளை கண்டு அமைதியும் ஆறுதல் அடைகின்றனர்.

அங்கங்கள் துண்டாடப்பட்டு திண்டாடும் எம்மை, எமது சமுகம் மாற்றுதிரனாளிகள் என பார்கின்ற போது நாம் தோற்றுவிட்டோம் என்றெல்லாம் எண்ணி துவண்டுவிட்டோம்.

ஆனால் எம்மை “ஆற்றவும்”, “ஏற்றவும்”, “போற்றவும்” எமக்காக உறவுகள் இருக்கிதை கண்டு எமக்குள்ளும் தவிக்கும் தவிப்பு எமக்காகவும் உறவுகள் உண்டு எனக்கும் எதிர்காலம் உண்டு என்பதை எண்ணவைத்தது இந்த உதவும் உறவுகள் தான்!

எமக்கான வாழ்வை நாமே! அமைத்து சுயமாக வளமாக வாழ சுய தொழில் உதவிகளை வழங்கியதோடு மாதாந்த உதவிகளையும் வழங்கி “...என் வாழ்வு சிறக்க..” வழி செய்த இவ் உதவும் உறவுகள் அமைப்பினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

இன்று இங்கு வந்திருக்கும் உறவுகளை போல், எம்மை போன்ற இன்னும் பல உறவுகள் உதவிகள் கிடைக்காமல் இருக்கின்றது அவர்களுக்கும் உங்களுடைய உதவிகள் கிடைக்க பெற வேண்டும். எம்மைபோன்றோருக்கு வாழ்வழிக்கும் உதவும் உறவுகளின் தந்தை அவர்களையும் வாழ்த்தி விடை பெறுகின்றேன்
-நன்றி-

https://drive.google.com/file/d/0B0j7Y8I0gYkedlFYYUthdUw0Sjg/view?pli=1

Support : Helping

Address

Birkenmatt 23, 6343 Risch
Switzerland, FL
32256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Helping posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share