Federation of Indian Trade Unions - FITU

Federation of Indian Trade Unions - FITU labour movement

The FITU West Bengal State Committee has called for urgent intervention from both the Central and State Governments to p...
05/14/2025

The FITU West Bengal State Committee has called for urgent intervention from both the Central and State Governments to protect Bengali migrant workers from harassment and oppression based on caste and religion in various Indian states. They demand immediate action to end such incidents and eliminate all forms of discrimination against these workers.

May 1st, Labor Day, was observed nationwide. crony capitalism is eroding workers' rights, effectively turning them into ...
05/02/2025

May 1st, Labor Day, was observed nationwide. crony capitalism is eroding workers' rights, effectively turning them into wage slaves. The FITU (Federation of Indian Trade Unions) called for sustained protests and struggles to protect workers' rights. In Kerala, FITU-led May Day rallies and public meetings were organized in various district centers.

அமைதிக்கான மக்கள் இயக்கம் -  தமிழ்நாடு சார்பாக பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போரை நிறுத்து என்ற தலைப்பில் 2024 அக்டோபர...
10/19/2024

அமைதிக்கான மக்கள் இயக்கம் - தமிழ்நாடு சார்பாக பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போரை நிறுத்து என்ற தலைப்பில் 2024 அக்டோபர் 18 சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் கே எஸ் அப்துல் ரஹ்மான் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை எம் எல் ஏ, மனித நேய மக்கள் கட்சி தலைவர் முனைவர் MH ஜவாஹிருல்லா எம்எல்ஏ, முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணைத்தலைவர் நவாஸ் கனி எம்பி, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்தனர். இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் இந்த கோரிக்கையை தாங்கள் எழுப்புவோமென சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதி அளித்துள்ளனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட வணிகர் சங்கத்தின் தலைவர் சௌந்தர்ராஜன் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு வணிகர் சங்கங்கள் ஒத்துழைக்கும் என்றும் உறுதியளித்தார்.

அரங்கம் நிறைந்த மக்களாலும் உணர்ச்சி பூர்வ உரைகளாலும் நிகழ்ச்சி இது சிறப்பாக அமைந்தது.

மூத்த பத்திரிக்கையாளர் டி எஸ் எஸ் மணி, வெல்ஃபேர் கட்சி மாநிலத் துணைத் தலைவர் முகமது கவுஸ், பேராசிரியர் கிளாக்சன் அடங்கிய குழு நிகழ்ச்சியை சிறப்பாக வடிவமைத்து வழி நடத்தியது.

இந்நிகழ்வில் பேர் வெல்ஃபேர் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் முகமது இஸ்மாயில், வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் Adv ஷாஜகான் தலைமையில் வெல்ஃபேர் கட்சி செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

*பாலஸ்தீன் மீதான போரை நிறுத்து.* வெல்ஃபேர் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டசர்வ மத தலைவர்கள்,நாடாளுமன...
10/17/2024

*பாலஸ்தீன் மீதான போரை நிறுத்து.*

வெல்ஃபேர் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட
சர்வ மத தலைவர்கள்,
நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,வணிகர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்கும்

*"அரங்க கூட்டம்"*

நாள்: 18.10.2024 வெள்ளிக்கிழமை, மாலை : 4.30 மணிக்கு,
இடம்: ரம்ஜான் மஹால்,ராயபுரம் சென்னை.

10/14/2024

'மதரஸாக்களை மூட பரிந்துரைப்பது முஸ்லிம் இனப்படுகொலை கும்பலின் திட்டம். அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்த மத உரிமைகளில் குழந்தை உரிமை ஆணையம் அத்துமீறியுள்ளது': K.S. அப்துல் ரஹ்மான்

மதரஸாக்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தவும், மதரஸாக்களை மூடவும் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் பரிந்துரை செய்திருப்பது சங்க பரிவாரத்தின் முஸ்லிம் இனப்படுகொலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிராக மதரஸாக்கள் செயல்படுகின்றன என்றும், மதரசாக்களில் உள்ள கல்வி முறை குழந்தைகளின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது என்ற ஆணையத்தின் கருத்து உண்மையும் அல்ல, அறிவுப்பூர்வமானதும் அல்ல.

முஸ்லிம் சமூகத்தின் வழிபாட்டு தலங்களையும், உடை மற்றும் உணவு கலாச்சாரத்தையும், வக்ஃப் சொத்துக்களையும் மத ரீதியான தனித்தன்மைகளையும் குறிவைத்து நடந்து கொண்டிருக்கும் சங்க பரிவாரத்தின் இனப்படுகொலை திட்டத்தின் தொடர்ச்சியே மதராஸாக்களை மூடச் சொல்வதும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மதரஸாக்களுக்கு சிறப்பு நிதி எதுவும் கிடைப்பதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதற்கு நேர்மாறான பிரச்சாரங்களை சங்பரிவாரம் நடத்துகிறது. சங்பரிவாரம் மேற்கொள்ளும் அனைத்து பிரச்சாரங்களும் பொய்களின் மேல் கட்டமைக்கப்பட்டவைதான்.

அரசியல் சாசனம் அளித்துள்ள மத உரிமைகளில் குழந்தை உரிமைகள் ஆணையம் அத்துமீறி நுழைந்துள்ளது. ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை நினைவுபடுத்தும் இத்தகைய இனவெறி நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. குழந்தை உரிமைகள் ஆணையத்தின் கடிதத்தை திரும்பப் பெற வேண்டும், நிலைப்பாட்டை சரி செய்ய வேண்டும்.

K.S. அப்துல் ரஹ்மான்
மாநிலத் தலைவர்
வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு.

சர்க்கர நாற்காலியில் வாழ்க்கையை முன்னெடுத்த போதும் சமூகத்திற்கான போராட்டத்தில் முன்னணியில் நின்ற காரணத்தால் நீண்ட நெடுங்...
10/12/2024

சர்க்கர நாற்காலியில் வாழ்க்கையை முன்னெடுத்த போதும் சமூகத்திற்கான போராட்டத்தில் முன்னணியில் நின்ற காரணத்தால் நீண்ட நெடுங்காலம் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி சிறைவாசத்தில் தன் வாழ்நாளை கழித்த சமூகப் போராளி பேராசிரியர் ஜி என் சாய்பாபா மறைந்தார்.

பிறரின் உதவி இல்லாமல் தன் ஒரு நாளை கடக்க முடியாத பேராசிரியர் சாய்பாபா அரசுக்கு எதிராக சதி செய்தார் என்ற போலி குற்றச்சாட்டை சுமத்தி காங்கிரஸ் அரசும் பாசிச பாஜக அரசும் அவரை சிறையிலேயே நீண்ட நாட்கள் அடைத்து வைத்தனர். தன் வாழ்வின் பெரும் நாட்களை சிறையில் கழித்து உடல் நலிந்து நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலை பெற்றார் சாய்பாபா. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அரசு அவரை சிறையிலேயே அடைத்து வைத்த கொடுமை உலகில் வேறு எங்கும் இருக்காது.

ஒரு வகையில் அவர் இறக்கவில்லை அரசின் அடக்கு முறையால் படுகொலை ஆளாகியுள்ளார் என்று தான் கூற வேண்டும்.

சமூகப் போராளி சாய்பாபாவிற்கு வெல்ஃபேர் கட்சியின் கண்ணீர் அஞ்சலி.

K.S. அப்துல் ரஹ்மான்
மாநிலத் தலைவர்
வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு

தொழிலாளர்கள் இடையே சமூக நீதியை மறந்த திமுக அரசு.அன்னிய நிறுவனங்கள் இந்திய மண்ணில் தொழில் நிறுவனங்களை துவங்குகின்ற பொழுது...
10/10/2024

தொழிலாளர்கள் இடையே சமூக நீதியை மறந்த திமுக அரசு.

அன்னிய நிறுவனங்கள் இந்திய மண்ணில் தொழில் நிறுவனங்களை துவங்குகின்ற பொழுது அவர்கள் வைக்கும் கோரிக்கைகளில் முதன்மையானது தொழிற்சங்க முடக்கம்தான்.

உலகிலேயே மிகச் சிறந்த தொழிற்சட்டங்களை கொண்ட இந்தியாவில் வெளிநாட்டு, உள்நாட்டு குரோனிக் பெருமுதலாளிகளின் சேவையாளர்களான ஒன்றிய, மாநில அரசுகள் அச்சட்டங்களை முடக்குவதற்கான எல்லா முனைப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றன. புதிய நான்கு தொழிற்சட்ட திருத்தங்கள் அதன் வெளிப்பாடு.

பாசிச பாஜகவை எதிர்ப்பதாக கூறிக் கொள்ளும் திமுக, ஒன்றிய அரசு நிறைவேற்றும் அனைத்து கொள்கைகளையும் சட்டங்களையும் புறவாசல் வழியாக தமிழ்நாட்டில் நிறைவேற்றி வருகிறது. ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள தொழில் சட்டங்களை எவ்வித தயக்கமும் மாற்றங்களும் இன்றி ஏற்றுக் கொண்டுள்ளது திராவிட மாடல், சமூக நீதி விடியல் அரசு.

சாம்சங் நிறுவனத்தில் தங்கள் உரிமைகளுக்காக போராடிவரும் தொழிலாளர்கள் மீது தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் படு கேவலமானது. ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் தொழிற்சங்கங்கள் அமைப்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அவர்களுக்கு அளித்துள்ள தார்மீக உரிமை. அந்த உரிமையை ஓர் அந்நிய நிறுவனம் கேள்வி கேட்கின்ற பொழுது அந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு தயங்கி நிற்பதும் ஒத்து ஊதுவதும் எவ்வளவு கேவலமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அந்நிய நிறுவனம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது. அதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாக தங்களை கூறிக் கொள்ளும் அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன.

தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இல்லையெனில் அந்நிய முதலாளித்துவ நிறுவனங்கள் தொடர்ந்து இந்திய தொழிலாளர்களை சுரண்டும். நேற்று நோக்கியா. இந்த சாம்சங். நாளை வேறொரு நிறுவனம்.

சமூக நீதியின் அடையாளமாக தங்களை கூறிக் கொள்ளும் திமுக பாசிச எதிர்ப்பின் போது மட்டும் தான் அந்த சமூக நீதியை கூவுகிறது. தொழிலாளர் சமூகத்தின் நலன்களை பொறுத்தமட்டில் சமூகநீதி அவர்களின் முதுகுக்குப் பின்னால் தான். அரசுகள் என்றும் முதலாளித்துவத்தின் சேவையாள்கள் என்பதை ஒன்றிய அரசைப் போலவே விடியலரசும் நிருபித்துக் கொண்டிருக்கிறது.

K.S. அப்துல் ரஹ்மான்
மாநிலத் தலைவர்
வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு

10/10/2024

இந்திய தொழிற்துறையில் தனித்த அடையாளமான டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திரு இரத்தன் டாடாவின் மறைவிற்கு வெல்ஃபேர் கட்சியின் அஞ்சலி...

K.S. அப்துல் ரஹ்மான்
மாநிலத் தலைவர்
வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு.

FITU KERALA STATE NEWLY ELECTED STATE COMMITTEE MEMBERS  FITU Kerala State office bearersJyothivas             president...
09/02/2024

FITU KERALA STATE NEWLY ELECTED STATE COMMITTEE MEMBERS

FITU Kerala State office bearers

Jyothivas president
Thasleem Gen: Secretary
Usman. Treasurer

Sunny Mathew. Vice: President
Shanavas. Vice: President

Jameela Sulaiman Secretary
Siraj Udheen Secretary

M H Muhammad. Legal Convener

09/01/2024

FITU Kerala state conference

09/01/2024

Grand Rally as part of FITU 3rd Kerala state conference @ Perinthalmanna

Address

New Delhi, IL

Telephone

+919500830941

Website

Alerts

Be the first to know and let us send you an email when Federation of Indian Trade Unions - FITU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Federation of Indian Trade Unions - FITU:

Share