Chicago Tamil Sangam

Chicago Tamil Sangam Bonded by the common identity of heritage with one of the world’s ancient Languages – Tamil and its p

சிகாகோ தமிழ்ச் சங்கம் 1969- ல் இருந்து சிகாகோ பெருநகரில் வாழ்ந்து, வளர்ந்து வரும் தமிழ் மக்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் உதவிக் கரங்களாக இருந்து வருகிறது. சங்கத்தை அமைத்த முன்னோக்குடையார்களும், சலிப்பின்றி உழைக்கும் உள்ளார்வத் தொண்டர்களும், தொடர்ந்து உற்சாகத்தை அளிக்கும் உறுப்பினர்களும்தான் இச்சங்கத்தின் வெற்றிக்கு வித்துக்களாவர். வித்துக்கள்தாம் ஏனெனில் இது மேலும், மேலும் வளர்ந்து மிகப்பெரும், முது பெரும் தருவாக வளரவிருக்கின்றது.

தமிழ்நாட்டின் புதிய அரசினை வரவேற்று, முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மாண்புமிகு C.ஜோசப் விஜய் அவர்களுக்குஎங்களின் இதயம்...
05/11/2026

தமிழ்நாட்டின் புதிய அரசினை வரவேற்று, முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் மாண்புமிகு C.ஜோசப் விஜய் அவர்களுக்குஎங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகள்!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்மங்காத தமிழென்று சங்கே முழங்கு!வணக்கம்.அமெரிக்கத் தமிழர்களின் அடையாளமாகத் திகழும் சிகாகோ தம...
05/01/2026

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

வணக்கம்.

அமெரிக்கத் தமிழர்களின் அடையாளமாகத் திகழும் சிகாகோ தமிழ்ச் சங்கம், தாய்மொழியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறது. அவ்வகையில், நமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்.

நம் மொழி வெறும் பேச்சு மொழி மட்டுமல்ல; அது நம் அடையாளம், பண்பாடு, பெருமையின் சின்னம். கிடைத்திருக்கும் தரவுகளின் படி, 2800 ஆண்டுகளுக்கு முன்னரே பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இலக்கணம் வகுத்த செம்மொழி. இந்தச் செம்மொழியை, தெவிட்டாத தமிழ் அமிழ்தை, உலகத்தரம் வாய்ந்த கல்விக்கூடங்களில் அனைவரும் பயில தேவையானவற்றை செய்ய வேண்டியது நம் கடமை. அவ்வகையில், 1867-இல் தொடங்கப்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் (UIUC), முதன்முறையாகத் தமிழ் மொழியை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

முதற்கட்டமாக $25,000 அமெரிக்க டாலர் விதைப் பணம் (Seed Fund) திரட்ட உள்ளோம். இந்த நிதி ஒரு நிரந்தர அறக்கட்டளையாக (Endowment) மாற்றப்பட்டு, அதன் மூலம் வரும் வருவாய், ஆண்டுதோறும் தமிழ் கல்வி கற்பிக்க பயன்படுத்தப்படும்.

இது ஒரு தொடக்கம் மட்டுமே! எங்களின் இலக்கு UIUC-இல் ஒரு "நிரந்தரத் தமிழ் இருக்கை" (Permanent Chair for Thamizh) அமைப்பது. இதன் மூலம் தமிழ் பேரறிஞர்களின் விரிவுரைகள், உலகத்தரம் வாய்ந்த மாணவர் பட்டறைகள் வாயிலாகத் தமிழ் மொழியின் மணம் உலகெங்கும் பரவும்.

நம் பண்பாட்டைக் காக்கவும், வளர்க்கவும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் உங்களது ஆதரவினையும் உங்களால் இயன்ற நிதியுதவியினையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களின் பங்களிப்பு உலக அரங்கில் தமிழின் புகழை நிலைநாட்ட உதவும். தமிழை உலகளாவிய உயர்கல்வி மேடையில் ஏற்றிடுவோம்! வருக! வருக!

https://chicagotamilsangam.org/tamilstudies/

செயற்குழு,
சிகாகோ தமிழ்ச் சங்கம்

🌟 **Chicago Tamil Sangam – 100-Day Run/Walk Challenge 2026**🗓️ **May 1, 2026 – August 8, 2026**Get ready to move, connec...
04/29/2026

🌟 **Chicago Tamil Sangam – 100-Day Run/Walk Challenge 2026**
🗓️ **May 1, 2026 – August 8, 2026**

Get ready to move, connect, and build a lasting healthy habit this summer with the **Chicago Tamil Sangam 100-Day Run/Walk Challenge**!

Whether you're a beginner taking your first steps or a seasoned runner, this challenge is designed for *everyone*. Together, let’s stay active, motivated, and inspired as a community.

🏃‍♂️ **The Goal**
Complete **at least 100 miles in 100 days** — at your own pace, anytime, anywhere.

---

📋 **Challenge Guidelines**

**1. 📱 Track Your Progress on Strava**
Join our official Strava Club and log your miles regularly:
🔗 https://strava.app.link/0GbNarvXXSb

* Please record all walks as “Runs” for consistency
* Prefer cycling? You’re welcome to join—just inform the event admin for separate tracking

---

**2. 🌍 Open to All**
This is a **virtual challenge** — participate from anywhere in the world and stay connected with our global Tamil community.

---

**3. 🛡️ Your Safety Comes First**

* Warm up before and stretch after every session
* Stay hydrated and listen to your body
* Choose safe, well-lit, and comfortable routes

---

**4. 🎉 Grand Finale – Community Meetup**
Celebrate your achievement with a **5K Run/Walk Gathering** along with fellow participants!
📍 Venue & date: *To be announced soon*

---

**5. 🏅 Recognition & Awards**
All participants who complete **100 miles** will be **recognized and honored** by Chicago Tamil Sangam during the celebration event.

---

**6. 📲 Stay Connected & Motivated**
Join our WhatsApp group for updates, encouragement, and community support:
🔗 https://chat.whatsapp.com/KSRWJQqOaO17Z1C1mVicef

---

**7. 💪 Build a Lifetime Habit**
Consistency creates transformation.
These 100 days could be the start of a healthier, stronger you!

---

🚀 **Ready to Get Started?**

Lace up your shoes, track your progress, and let’s make this summer meaningful—
**one step, one mile, one day at a time.**

Securing the Future, Programming the World - Online EventWe invite high school and college students to an interactive se...
04/16/2026

Securing the Future, Programming the World - Online Event

We invite high school and college students to an interactive session on the two most transformative forces in tech today. Whether you are choosing your major or looking to refine your stack, join us to discuss the ethics, architecture, and opportunities within Artificial Intelligence and Cyber Defense.

Meeting Link: https://us06web.zoom.us/j/88667241498?pwd=Z1bi295XALNHb44swxQN3DJSj4UwDi.1
Meeting ID: 886 6724 1498
Passcode: 1234

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், மூத்த உறுப்பினருமான திரு. இரா. அனந்தகிருட்டினண் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற...
04/09/2026

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், மூத்த உறுப்பினருமான திரு. இரா. அனந்தகிருட்டினண் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி நம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவு நமது சங்கத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது அரும்பணிகளும், தமிழ்ச் சங்கத்தின் மீதான பற்றும் நம் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும். சிகாகோ தமிழ்ச் சங்கம் அவருக்கு தனது கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறது.

ஐயாவின் இறுதிப் பயண சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை 4/12/26 அன்று நடக்கவுள்ளது

Funeral Services on Sunday 4/12/26 from 10 AM to 11 AM
McCauley-Sullivan Funeral Home & Crematorium,
530 West, Boughton Road,
Bolingbrook, Illinois 60440

HEART - Round Table Discussion for High School Students.We invite aspiring medical professionals to attend an informativ...
03/25/2026

HEART - Round Table Discussion for High School Students.
We invite aspiring medical professionals to attend an informative session.

Register here: https://heart-cts.paperform.co/

சிகாகோ தமிழ் சங்கத்தின் மகளிரடமிருந்து அனைவருக்கும் இனிய மகளிர் நாள் நல்வாழ்த்துகள்! 🌸From the Women of Chicago Tamil Sa...
03/08/2026

சிகாகோ தமிழ் சங்கத்தின் மகளிரடமிருந்து அனைவருக்கும் இனிய மகளிர் நாள் நல்வாழ்த்துகள்! 🌸

From the Women of Chicago Tamil Sangam:
Happy Women’s Day!!

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்செம்மை...
03/08/2026

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;"
— பாரதியார்

"அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ்நாட்டின் கண்கள்!"
-பாவேந்தர் பாரதிதாசன்

அன்னைத் தமிழையும் அறிவையும் வளர்த்து, அடுத்த தலைமுறையைச் செதுக்கும் பெண்கள் ஒரு சமூகத்தின் கண்கள். வீட்டிலும் நாட்டிலும் அறிவை விதைத்து, சமுதாய மேன்மைக்கு வழிகாட்டும் மகளிரின் பணி மகத்தானது.

தமிழ் மொழியின் இனிமையைப் பிள்ளைகளுக்கு ஊட்டி, ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கும் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. இத்தகைய உன்னதமான வழிகாட்டிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்!

"தோழர் நல்லகண்ணு" எனப் பொதுமக்களின் பாசப்பெயரைப் பெற்ற இவர், வாழ்நாள் முழுவதும் மக்கள் நலமே உயர்ந்த கடமையெனக் கருதி ஈடுப...
02/26/2026

"தோழர் நல்லகண்ணு" எனப் பொதுமக்களின் பாசப்பெயரைப் பெற்ற இவர், வாழ்நாள் முழுவதும் மக்கள் நலமே உயர்ந்த கடமையெனக் கருதி ஈடுப்பாட்டுடன் உழைத்த அரிய மனிதர். அவரது பயணம் அரசியல் வரம்புகளுக்குள் மட்டுப்படாதது; அது நீதியும் சமத்துவமும் மனிதக் கண்ணியமும் நிலைநிறுத்தும் ஒளிவழியாக இருந்தது. பொது வாழ்வில் நேர்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர். அதிராத குரலில் பேசியே ஆதிக்க சக்திகளை ஆட்டம் காண வைத்தவர். விவசாயிகளின் வலி, தொழிலாளர்களின் துயரம், ஒதுக்கப்பட்டோரின் குரல் என அனைத்தையும் தம் உயிர்நாடியாய் கொண்டு தன் இறுதி காலம் வரை அவர்களின் மேம்பாட்டிற்காக ஓயாது உழைத்த தகைசால்த்தமிழர்.

"நம்ம நாட்டுல சமத்துவச் சமூகத்தைக் கொண்டு வர்றதுங்கிறது பெரிய பயணம். இயக்கமும் நாடும் முக்கியம்னு நெனைக்கணும், இன்னும் வேகமாக ஓடணும், உழைக்கணும். தியாகங்கள் இல்லாம எதையும் சாதிக்க முடியாது!" - என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவ்வாறே வாழ்ந்த மாவீரர் தோழர் நல்லகண்ணு ஐயா , தமிழகத்தின் பெருமைமிகு அரசியல் அடையாளம். மார்க்ஸ் – அம்பேத்கர் – பெரியார் பேரறிஞர் மூவரின் கூட்டுப் பொதுவுடைமைச் சிந்தனையை தமிழ்நாட்டில் வளர்த்த ஆளுமை தோழர் நல்லகண்ணு ஐயா.

அவரது மறைவு ஒரு காலத்தின் முடிவாகத் தோன்றினாலும், அவர் விதைத்த மனிதநேய விதைகள் தலைமுறைகளைத் தாண்டி வளரும். எளிமை, கருணை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை நம் வாழ்வில் நிலைநிறுத்துவதன் மூலம் அவரை உண்மையாகப் போற்றுவோம்.அநீதிகள் எங்கே நடைபெற்​றாலும், அதனைக் கண்டு பொங்கி எழுந்த தோழர் நல்லகண்ணு ஐயாவிற்கு செவ்வணக்கம்!

-சிகாகோ தமிழ்ச் சங்கம்

நமது சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 57-ஆவது பொங்கல் விழா கொண்டாட்டங்களை, News 7 Tamil தொலைக்காட்சி தனது உலகத்தமிழ் செய்திகளில...
01/31/2026

நமது சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 57-ஆவது பொங்கல் விழா கொண்டாட்டங்களை, News 7 Tamil தொலைக்காட்சி தனது உலகத்தமிழ் செய்திகளில் ஒளிபரப்பியுள்ளது.

சிகாகோ வாழ் தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை உலகம் முழுவதும் உள்ள தமிழ் உறவுகளுடன் பகிர்ந்துகொண்ட News 7 Tamil குழுவினருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! 🙏✨

https://www.youtube.com/watch?v=cWT3aesMitw

🚩

சிகாகோ தமிழ் சங்கத்தின் சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட பொங்கல் விழா குறித்த ஒரு செய்தி தொகுப்பை காணலாம்......

Address

Chicago Tamil Sangam, PO BOX 9606
Naperville, IL
60567

Alerts

Be the first to know and let us send you an email when Chicago Tamil Sangam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share