08/29/2026
தந்தை பெரியார் அவர்களின் 148 ஆவது பிறந்த நாள் பல்வேறு இடங்களில் சிறப்பாக்க் கொண்டாடப்பட உள்ளது. செப்டம்பர் 17 அன்றும் மற்ற நாட்களிலும் கொண்டாடப் படும். உலகின் பல நாடுகளிலும் பல்வேறு முறையில் குடும்பங்களாகவும், குழந்தைகள் நிகழ்ச்சிகளாகவும் கொண்டாடப்பட ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன.
அமெரிக்காவில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு
“ பெரியார்- ஓட்டம்/ நடை” பல இடங்களில் நடைபெற உள்ளது.
பெரியார் “ மக்கள் சுய மரியாதையுடன் மானமும் அறிவும் பெற்றவர்களாக வாழ வேண்டும் “
“அனைவரும் சம ம். ஆண்களும் பெண்களும் சம மாக நண்பர்களாக வாழ வேண்டும்”
“பெண்ணடிமை, மூடப் பழக்கங்கள் ஒழிய வேண்டும்”
“பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும்”
“இதற்குத் தடைகளக இருப்பவை எவையாக இருந்தாலும், ஒழிக்கப் பட வேண்டும்”
அவரை வெறும் கடவுள் மறுப்பாளர் என்றோ, பார்ப்பன எதிரி என்றோ சொல்லி இருட்டடிக்க முயல்பவர்களை அடையாளங் காணுங்கள். அவர்கள் மனிதநேயத்தின் எதிரிகளாகத்தான் இருப்பார்கள்!