Tampines Tamil Toastmasters Club - தெம்பனீஸ்தமிழ்ப் பேச்சாளர் மன்றம்

  • Home
  • Singapore
  • Singapore
  • Tampines Tamil Toastmasters Club - தெம்பனீஸ்தமிழ்ப் பேச்சாளர் மன்றம்

Tampines Tamil Toastmasters Club - தெம்பனீஸ்தமிழ்ப் பேச்சாளர் மன்றம் பேச்சாற்றலையும், தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமா?

அனைத்து தமிழ் உள்ளங்ககளையும் அன்புடன் வரவேற்கிறோம்
10/08/2023

அனைத்து தமிழ் உள்ளங்ககளையும் அன்புடன் வரவேற்கிறோம்

Chozhan & Tampines Tamil Toastmasters Clubs jointly host the club level contests on 16th September 2022 and 25th Septemb...
10/09/2022

Chozhan & Tampines Tamil Toastmasters Clubs jointly host the club level contests on 16th September 2022 and 25th September 2022.

We invite you all to support and make this event a great success.

https://youtube.com/shorts/A6WQ9H42zwQ

16/07/2022

வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!!

அன்பு தமிழ் உள்ளங்கள் அனைவருக்கும் தெம்பனிஸ் பேச்சாளர் மன்றம் சார்பாக வணக்கம்!!!

கடந்த ஜூலை 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை "புன்னகை" என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு மன்ற கூட்டம் ஆரம்பித்தது. இதன் சிறப்பு அம்சமாக , எங்களின் மன்ற புதிய செயற்குழு பதவி ஏற்பு விழா, விருந்தினர்கள் சூழ சிறப்பாக, நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் நம் மன்ற கூட்டம் நேரில் நடைபெற்றது தனி சிறப்பு, இணையத்திலும் நண்பர்கள் இனைந்து இது ஒரு ஹைபிரிட் கூட்டமாக அரங்கேறியது.

அரங்க காவலர் TM வெங்கடசுப்பு குறளுடன் கூட்டத்தை துவக்க, முன்னாள் தலைவர் TM மணிகண்டன் வரவேற்புரை வழங்கினார்
நிகழ்ச்சி நெறியாளர் TM தியாகராஜன் தன் பணியை செவ்வனே ஆற்றினார்

முதல் அங்கம் - தயாரிக்கப்பட்ட உரை

தயாரிக்கப்பட்ட உரை வழங்கிய TM அகிலா சுந்தர் தான் எப்படி போட்டி தேர்வுகளுக்கு தன்னை தயார் படுத்திய வாழ்க்கை அனுபவங்களை அனைவருக்கும் உற்சாகம் தரும் விதத்தில் சிறப்பாக படைத்தார்

இரண்டாம் அங்கமான அரங்க பேச்சை நல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளுடன் சிறப்பாக வழி நடத்தினார் TM உமா

மூன்றாம் அங்கமான மதிப்பீடு அங்கத்தில் TM அகிலா படைத்த திட்டத்தை சிறப்பாக மதிப்பீடு செய்து நல்ல மேம்பாடுகளை வழங்கினார் TM ராதிகா

புதிய செயலவை பதவியேற்பு

புதிய செயலவை பதவியேற்பு நிகழ்ச்சியின் துவக்கமாக சென்ற ஆண்டின் சாதனைகளையும், செயல்பாட்டினையும் சிறந்த அறிக்கையாக வழங்கினார் முன்னாள் தலைவர் TM மணிகண்டன்.

அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு நம் மன்றத்தின் வெற்றி பேச்சாளர்களுக்கு DTM ஹரிகிருஷ்ணன் முத்துசாமி விருது வழங்கினார்.

தயாரிக்கப்பட்ட உரை :
தமிழ் செல்வன் ஆர்த்தி
தியாகராஜன்
ராதிகா
அரங்கப்பேச்சு :
அகிலா மணிகண்டன்
தியாகராஜன்
சிறந்த மதிப்பீட்டாளர்
உமா மஹேஸ்வரி
வெற்றி பெற்றவர்களுக்கு மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

அனைவரும் ஆவலுடன் காத்திருந்த புதிய செயலவை பதவியேற்பு நிகழ்வு DTM ஹரிகிருஷ்ணன் முத்துசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

புதிய செயலவை ஏற்புரை வழங்க இந்த ஆண்டிற்கான திட்ட மேலோட்டதையும் வழங்கினர்.

வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தவர்கள்.

DTM ஹரிகிருஷ்ணன் முத்துசாமி, முன்னாள் மாவட்ட-80 தலைவர் மன்ற வழிகாட்டி, ஆலோசகர் முற்றும் ஆதரவாளர்
DTM வசந்தம் ராஜு , மன்ற ஆலோசகர்
TM தினேஷ் ராஜன், T4 Area Director
TM சங்கர நாராயணன், Div-T Director
TM சுமதி , முன்னாள் T4 Area Director

இறுதியாக மன்ற தலைவர் மைக்கேல் ஜோசப் அனைவருக்கும் நன்றி கூறி, அன்றைய வெற்றி பேச்சாளருக்கு பரிசளித்து, மாலை உணவு பரிமாறி நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும், தெம்பனீஸ் IAEC உறுப்பினர் சந்திரசேகர் அவர்கள் மற்றும் குழுவினருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்

எங்களின் அடுத்த மன்ற கூட்டத்திற்கு உங்கள் அனைவரின் வருகையை எதிர்நோக்கும் தெம்பனீஸ் தமிழ் பேச்சாளர் மன்றம்.

நன்றி! வாழ்க தமிழ்!! வளர்க தமிழ்!!

01/07/2022
வைகாசி மாதம் அக்னி நட்சத்திரம் சுட்டெரிக்கும் சூரியன்  ஆனாலும் குளிர்ந்த காற்றோடு  மண்ணை ஈரமாக்கி  மனதை இதமாக்கியது கோடை...
28/05/2022

வைகாசி மாதம்
அக்னி நட்சத்திரம்
சுட்டெரிக்கும் சூரியன்
ஆனாலும்
குளிர்ந்த காற்றோடு
மண்ணை ஈரமாக்கி
மனதை இதமாக்கியது
கோடைமழை.
மே மாதம் 20ம் நாள், வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணி, ‘கோடை மழை’ என்ற கருப்பொருளோடு துவங்கியது, எமது தெம்பனீஸ் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் 82வது மன்றக் கூட்டம்.
‘தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை’
என்ற அறத்துப்பால் இல்லறவியல் குறளோடு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார், தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவரும், அன்றைய அரங்கக் காவலருமான பேச்சாளர் பிரபாகரன் அவர்கள்.
அடுத்ததாக, வந்திருந்த அனைத்து பேச்சாளர்கள், விருந்தினர்கள், பிற மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று இணைய மேடை யை அன்றைய நெறியாளரான பேச்சாளர் வேல்முருகன் அவர்களிடம் ஒப்படைத்தார் தலைவர் மணிகண்டன் அவர்கள்.
நெறியாளர், அன்றைய நிகழ்ச்சி நிரலையும் விதிமுறைகளையும் அறிவித்து மிக நேர்த்தியாக நிகழ்ச்சி யை வழிநடத்திச் சென்றார்.
இன்றைய சொல் : திண்ணம்
முதல் அங்கம்: தயாரிக்கப்பட்ட உரை
முதலாவதாகத் திட்டம் படைத்தவர் கம்பன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் ராஜாமோகன் அவர்கள். ‘வழிகாட்டுதல்’ என்ற தலைப்பில் கேள்விக்கணைகளோடு ஆரம்பித்து, தன்னுடைய சிறிய வயது லட்சியத்தை ஆர்வத்தோடு விளக்கி, பேச்சாளர் மன்றத்திற்கு தான் வந்த கதையையும், தனக்கு வழிகாட்டியாக விளங்கியவர்களையும் அழகான காட்சி வில்லைகளோடு தெளிவுற விளக்கினார்.
இரண்டாவதாகத் திட்டம் படைத்தவர் பாரதியார் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் சுரேஷ் அவர்கள். ‘முழுநேர வழிகாட்டியாக ஆசை’ என்ற தலைப்பில், ‘அறிவே மனிதனை உருவாக்கும் கருவி’ என்ற அப்துல் கலாமின் பொன்மொழி கொண்டு தொடங்கி, அவரது வழிகாட்டுதலில் தான் விரிவுரையாளராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றத்தில் தனக்கிருந்த பங்கு, அந்தப் பணியில் தான் சந்தித்த சவால்கள் அனைத்தையும் இயல்பான தமிழில் பகிர்ந்துகொண்டார்.
மூன்றாவதாகத் திட்டம் படைத்தவர், பேச்சாளர் அகிலா மணிகண்டன் அவர்கள். ‘வீட்டை ஒழிப்போம்’ என்ற தலைப்பில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதின் சிறப்புகளையும், தேவையில்லாத பொருட்களை அகற்றுவதனால் வீட்டிலும் உடலிலும் மனதிலும் ஏற்படும் நேர்மறையான மாற்றங்களையும் அழகாக விளக்கினார். மேலும், இதனை எளிமையாக தினந்தோறும் எவ்வாறு செய்வது என்பதை தன் வலையொளியில் பதிவேற்றிய தகவலையும் பகிர்ந்து கொண்டார்.
இறுதியாகத் திட்டம் படைத்தவர் பேச்சாளர் ராதிகா அவர்கள். ‘கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் சேட்டை’ என்ற தலைப்பில், சில மாதங்களுக்கு முன் எம் மன்றத்தின் சிறப்பு அங்கமாக நடந்தேறிய கலந்துரையாடல் நிகழ்வில் தான் ஏற்பாட்டாளராக இருந்து செயல்பட்ட அனுபவங்களை நகைச்சுவையோடு விளக்கினார்.
நேரக்கண்காணிப்பாளரின் அறிக்கையோடு சிறந்த தயாரிக்கப்பட்ட உரைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
அடுத்த அங்கம்: சிறப்பு அங்கம்.
‘ முத்தமிழ்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அங்கம், அரங்கப் பேச்சு அங்கம் இரண்டையும் கலந்த ஒரு அங்கமாக வழிநடத்திச் சென்றவர் பேச்சாளர் மைக்கேல் ஜோசப் அவர்கள். இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் விளக்கிப் பேசினார்கள் முத்தான மூன்று பேச்சாளர்கள்.
இயற்றமிழ் குறித்து‘உண்டால் அம்ம இவ்வுலகம்’ என தொடங்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை இயல்பான தமிழில் விளக்கிப் பேசினார் பேச்சாளர் தியாகராஜன் அவர்கள்.
‘இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை’ என இசைத்தமிழ் குறித்து பாமாலையோடு ஆரம்பித்து, சங்ககால நூல்கள் கூறும் இசைக்கருவிகள் பற்றிய தெளிவுரையையும், பாமர மக்களும் புரிந்து கொள்ள ஏதுவாக மாறிய இசைத் தமிழையும், தெருக்கூத்தின் முக்கியத்துவத்தையும், கிராமிய பாடலில் இருந்த நவரசத்தையும் ஆங்காங்கே இனிய குரலில் பாடி, மிக நேர்த்தியாகவும் நெகிழ்வாகவும் பேசினார் பேச்சாளர் உமா மகேஸ்வரி அவர்கள்.
நாடகத்தமிழ் குறித்து, பெருஞ்சலங்கை ஆட்ட வகையில், காலில் வெண்கலச் சலங்கை கட்டி, கற்காலம் தொடங்கி, அகநானூறு நூல்களில் உள்ள பாடல்கள் வாயிலாக, மொடாமேளம், பறை என பலதரப்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தி தெளிவான விளக்க உரை அளித்தார் பேச்சாளர் நித்தியானந்தம் அவர்கள். பேச்சுக்காக மட்டுமல்லாமல், பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி வலையொளி வாயிலாக தான் கற்றுக்கொண்ட பெருஞ்சலங்கை ஆட்டத்தை, நான்கு அடவுகள் கொண்டு, தன் நண்பர் இசைக்கருவி வாசிக்க ஆடிக் காட்டியும், அது மனதிற்கும் உடலுக்கும் எவ்வாறு புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதையும் தெரிவித்தார்.
மூன்றாவது அங்கம்: அரங்கப் பேச்சு அங்கம்
திடீர் தலைப்புகள் கொடுத்து, ஒரே தலைப்பில் வெட்டியும் ஒட்டியும் பேசச் செய்து, வேறுபட்ட முறையில் அரங்கப் பேச்சு அங்கத்தை வழிநடத்திச் சென்றவர் பேச்சாளர் சுதா அவர்கள்.
நேரக் கண்காணிப்பாளரின் அறிக்கைக்குப் பிறகு சிறந்த அரங்க பேச்சுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
நான்காவதுஅங்கம்: மதிப்பீட்டு அங்கம்
பேச்சாளர் ராஜா மோகன் அவர்களது திட்டத்தை கம்பன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் சுகந்தினி அவர்களும்,பேச்சாளர் சுரேஷ் அவர்களின் திட்டத்தை சேரன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் உமாசங்கர் அவர்களும், பேச்சாளர் அகிலா மணிகண்டன் அவர்களின் திட்டத்தை பேச்சாளர் கம்பன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் அன்னபூரணி அவர்களும், பேச்சாளர் ராதிகா அவர்களின் திட்டத்தை தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பேச்சாளர் எழிலி கருணாகரன் அவர்களும் சிறப்புற மதிப்பீடு செய்தார்கள்.
ஐந்தாவது அங்கம் : பொது மதிப்பீடு அங்கம்
உரிச்சொல் கணக்கீட்டை பேச்சாளர் ராஜன் அவர்களும், மொழி மதிப்பீட்டை பெக்கியோ மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் லட்சுமி சொக்கலிங்கம் அவர்களும் சிறப்புற செய்தார்கள்.
இம்மாதக் கூட்டத்திற்கான பதாகையை வடிவமைத்த இந்தியாவைச் சேர்ந்த மாணவி மதுஸ்ரீ அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக நேரக்கண்காணிப்பாளராகவும், வாக்குச்சீட்டு கணக்கெடுப்பாளராகவும் செயல்பட்ட தலைவர் மணிகண்டன் அவர்கள், நியமன உறுப்பினர்களாக பங்களித்த, வெளிமன்றங்களில் இருந்து வந்து கலந்து கொண்ட பேச்சாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களையும், வெற்றியாளர்களுக்குப் பரிசுப் புத்தகங்களையும் வழங்கினார். குழுப்புகைப்படத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவை நாடியது.
வெற்றியாளர்கள் விவரம்:
தயாரிக்கப்பட்ட உரை-------- பேச்சாளர் ராதிகா ராமலிங்கம்
பரிசுப் புத்தகம்----------------- இனிய நீதி நூல்கள் (கவிஞர் பத்மதேவன்)
அரங்கப் பேச்சு அங்கம்------- பேச்சாளர் சுகந்தினி
பரிசுப் புத்தகம்----------------- கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்
(தமிழ் பிரியன்)
மதிப்பீட்டு அங்கம்------------- பேச்சாளர் எழிலி கருணாகரன்
பரிசுப் புத்தகம் ---------------------இனிக்கும் இளமை (இறையன்பு)
எமது அடுத்த மன்றக் கூட்டம் ஜூன் 5, ஞாயிறு மாலை 4 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி!
வாழ்க தமிழ்!! வளர்க நற்றமிழர்!!

அனைவருக்கும் அன்பு வணக்கம்! மே 1, மாலை 4:15 மணி,  ‘உழைப்பென்னும் உன்னதம்’ என்ற கருப்பொருளுடன் துவங்கியது எமது தெம்பினீஸ்...
19/05/2022

அனைவருக்கும் அன்பு வணக்கம்!
மே 1, மாலை 4:15 மணி, ‘உழைப்பென்னும் உன்னதம்’ என்ற கருப்பொருளுடன் துவங்கியது எமது தெம்பினீஸ் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் 81வது மன்றக் கூட்டம்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’
எனும் குறளுடன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார் அன்றைய அரங்கக்காவலர் பேச்சாளர் சுதா அவர்கள்.
அடுத்ததாக, வந்திருந்த அனைத்து பேச்சாளர்களையும் நியமன அதிகாரிகளையும் இன்முகத்தோடு வரவேற்று, நிகழ்ச்சி நெறியாளரை அறிமுகப்படுத்தி மேடையை அவரிடம் ஒப்படைத்தார் தலைவர் மணிகண்டன் அவர்கள்.
அன்றைய நிகழ்ச்சியின் நெறியாளர் பேச்சாளர் வெங்கடசுப்பு அவர்கள் விதிமுறைகளை அறிவித்து, நிகழ்ச்சியை அழகுற வழிநடத்திச் சென்றார்.
இன்றைய சொல் : சீர்வளர்சீர்
முதல் அங்கம்: தயாரிக்கப்பட்ட உரை
முதலாவதாக திட்டம் படைத்தவர், பேச்சாளர் நித்யானந்தம் அவர்கள்.
‘ஒரு விளம்பரம்’ என்ற தலைப்பில், தான் ஆற்றிவரும் தொண்டு குறித்து அனைவரோடும் பகிர்ந்து கொண்டார். எவ்வாறு புலனம் என்ற ஊடகம், தன்னோடு சேர்த்து தன்னைச் சார்ந்தவர்களும் தொண்டு செய்ய உதவியாக இருந்தது என மிக நெகழ்வோடும், படவில்லைகளோடும் அருமையாக விளக்கினார்.
இரண்டாவதாகத் திட்டம் படைத்தவர், பேச்சாளர் மணிகண்டன் சண்முகம் அவர்கள். ‘அலை’ என்ற தலைப்பில் தான் மன்றத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல், மன்றத்தில் கொண்டுவந்த மாற்றங்கள் குறித்து ஆங்காங்கே நகைச்சுவை இழையோட நினைவலைகளாகப் பகிர்ந்துகொண்டார்.
நேரக் கண்காணிப்பாளரின் அறிக்கைக்குப் பின்
அடுத்த அங்கம்: அரங்கப்பேச்சு அங்கம்
இதனை வழிநடத்தியவர் பேச்சாளர் அகிலா மணிகண்டன் அவர்கள். கருப்பொருளுக்கேற்ற தலைப்புகளோடு அங்கத்தை விறுவிறுப்பாக வழிநடத்திச் சென்றார்.
நேரக் கண்காணிப்பாளரின் அறிக்கைக்குப் பின் சிறந்த அரங்கப் பேச்சு அங்கத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
அடுத்த அங்கம்: மதிப்பீட்டு உரை
பேச்சாளர் நித்யானந்தம் அவர்களின் திட்டத்தை சோழன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் குமுதப்பிரியா அவர்களும் பேச்சாளர் மணிகண்டன் அவர்களின் திட்டத்தை, பேச்சாளர் அகிலா மணிகண்டன் அவர்களும், பேச்சாளர்களின் நிறைகளைப் பாராட்டியும், குறைகளை தெரிவித்தும், மேம்பாடுகளை எடுத்துரைத்தும் தத்தம் மதிப்பீட்டினை வழங்கினார்கள்.
இறுதி அங்கம்: பொது மதிப்பீடு
உரிச்சொல் கணக்கீட்டை, பேச்சாளர் பக்தவத்சலம் அவர்களும், மொழி மதிப்பீட்டினை, பகுதி T2 இயக்குநர், பேச்சாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களும், பொதுவான மதிப்பீட்டினை கேன்பரா மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் ஆறுமுகம் ச அவர்களும் சிறப்புற வழங்கினார்கள்.
நேரக் கண்காணிப்பாளராக பேச்சாளர் சுதா அவர்களும், வாக்குச்சீட்டு கணக்கெடுப்பாளராக பேச்சாளர் மணிகண்டன் அவர்களும் செயல்பட்டார்கள்.
இம்மாதக் கூட்டத்திற்கான பதாகையை வரைந்த மிஷல் சஹானா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
நிறைவாக, தலைவர் மணிகண்டன் அவர்கள் அரங்கப் பேச்சு அங்கத்தின் வெற்றியாளரையும் அவருக்கான பரிசுப்புத்தகத்தையும் அறிவித்து குழுப் புகைப்படத்தோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அரங்கப் பேச்சு அங்கம்
வெற்றியாளர் : பேச்சாளர் ஆறுமுகம்
பரிசு புத்தகம்: இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்
எமது அடுத்த மன்றக் கூட்டம் மே 20, வெள்ளிக்கிழமை மாலை 7: 15 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி!!

happy labour day 🛠. Welcome you all to our club chapter meeting.
01/05/2022

happy labour day 🛠. Welcome you all to our club chapter meeting.

தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!! அரங்கக்காவலர் பேச்சாளர் அழகு தெய்வானை அவர்களின் குரலில் ஒலித்தது,        தொட்டணைத்த...
22/04/2022

தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!!
அரங்கக்காவலர் பேச்சாளர் அழகு தெய்வானை அவர்களின் குரலில் ஒலித்தது,
தொட்டணைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு
எனும் குறள்.
சிங்கப்பூர், தமிழ்மொழி மாதத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தருவாயில், அதனை ஒட்டி ‘செம்மொழி’ என்னும் கருப்பொருளோடு, ஏப்ரல் 15, வெள்ளிக்கிழமை மாலை 7:15 மணிக்கு அரங்கேறியது, தெம்பினீஸ் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் 80-வது மன்றக் கூட்டம்.
அரங்கக்காவலர் குறளைத் தொடர்ந்து, அன்றைய தலைவியாகப் பொறுப்பேற்றிருந்த பேச்சாளர் சுதா அவர்கள், வந்திருந்த அனைவரையும் வரவேற்று அன்றைய வெற்றியாளருக்கான பரிசுப் புத்தகத்தையும் அன்றைய நெறியாளரையும் அறிமுகப்படுத்தினார்.
நெறியாளர், பேச்சாளர் உமாமகேஸ்வரி அவர்கள், தன் அழகான தமிழ் உச்சரிப்பில் பாரதியார் கவிதையோடு தொடங்கி கருப்பொருளுக்கேற்றவாறு கச்சிதமாக கூட்டத்தை வழிநடத்திச் சென்றார்.
‘நன்மொழி’ எனும் சொல், இன்றைய சொல்லாக அறிவிக்கப்பட்டது.
முதல் அங்கம்: தயாரிக்கப்பட்ட உரை
முதலாவதாகத் திட்டம் படைத்தவர், பாரதியார் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் சிலம்பரசன் அவர்கள். ‘மனதை மாற்றுவோம்’ என்ற தலைப்பில் வாழ்க்கையில் தனக்கு நேர்ந்த சிறு சங்கடத்தையும், அதிலிருந்து மீண்டு வர காரணமாக இருந்த நிகழ்வையும் நேர்த்தியான சொல்லாடல்கள் கொண்டு திட்டம் படைத்தார்.
இரண்டாவதாகத் திட்டம் படைத்தவர், பேச்சாளர் ஆர்த்தி தமிழ்ச்செல்வன் அவர்கள். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’, ‘என்ன கொடுமை ஐயா இது’ என இருவேறு திடீர் தலைப்புகளில், குடும்பத்தில் நடக்கும் சிறுசிறு அன்றாட சம்பவங்களிலிருந்து நகைச்சுவை ததும்ப தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
நேரக்கண்காணிப்பாளரின் அறிக்கையோடு முதல் அங்கம் நிறைவடைந்தது.
இரண்டாவது அங்கம்: அரங்கப் பேச்சு அங்கம்.
இதனை வழி நடத்தியவர் பேச்சாளர் ராஜன் அவர்கள். ‘செம்மொழி’ எனும் கருப்பொருளை கருத்தில் கொண்டு, அதற்கு அழகு சேர்க்கும் வண்ணம் பல்வேறு குறட்பாக்களில் இருந்து ஒரு பகுதியை தலைப்புகளாகக் கொடுத்து, மிக நேர்த்தியாக அங்கத்தை வழிநடத்தினார். குறளில் மறுபகுதியைக் கூறி, குறள் குறித்து பேச வேண்டியிருந்தது பங்கேற்பாளர்களுக்கு, சவாலாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
நேரக் கண்காணிப்பாளரின் அறிக்கையோடு சிறந்த அரங்கப் பேச்சுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
மூன்றாவது அங்கம்: சிறப்பு அங்கம்
மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்ற சிறப்பு அங்கம் இது. தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் குழந்தைகளிடமும் அவர்தம் பெற்றோரிடமும் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுடனும் கருத்துக்களுடனும் கலந்துரையாடல் நடைபெற்றது. குழந்தைகள் தம் திறமைகளை வெளிப்படுத்தியதுடன் சரமாரியான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தனர்.
நான்காவது அங்கம்: மதிப்பீட்டு அங்கம்
பேச்சாளர் சிலம்பரசன் அவர்களின் திட்டத்தை, பேச்சாளர் தியாகராஜன் அவர்களும், பேச்சாளர் ஆர்த்தி தமிழ்ச்செல்வன் அவர்களின் திட்டத்தை, சேரன் மன்றத்தலைவர் பேச்சாளர் காட்வின் செல்வராஜ் அவர்களும் மிக அழகாக மதிப்பீடு செய்தனர்.
ஐந்தாவது அங்கம்: பொது மதிப்பீடு
உரிச்சொல் கணக்கீட்டை பேச்சாளர் அகிலா சுந்தர் அவர்கள் தெளிவாக வழங்கினார்கள்.
மொழி மதிப்பீட்டை பாரதியார் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் பாரதிசெல்வன் அவர்கள் வேறுபட்ட முறையில் வழங்கினார். முதலில் இன்றைய சொல்லை பயன்படுத்தியிவர்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். பின்னர், சிறந்த சொல்லாடல், பிறமொழிச்சொற்கள், இலக்கியச் செறிவு என மூன்றாகப் பிரித்து அதற்கான பாராட்டுகளையும் மேம்பாடுகளையும் விளக்கினார்.
பொது மதிப்பீடு வழங்கியவர் சோழன் மன்றத்தலைவி பேச்சாளர் லீலா ராணி ஏகப்பன் அவர்கள். ஏன் பொது மதிப்பீடு செய்ய வேண்டும் எனத் தொடங்கி அது மன்றத்தின் தரத்தை உயர்த்துவதற்காகத் தான் என்பதை தெளிவுபடுத்தினார். நிகழ்ச்சி தொடங்கியது முதல் இறுதி வரை அனைவருக்குமான பாராட்டுகளையும் பரிந்துரைகளையும் வழங்கினார். ‘செம்மொழி’ என்னும் கருப்பொருளுக்கு ஏற்ப தனது மதிப்பீட்டை செந்தமிழ் கவிதையில் தொகுத்தளித்து முடித்தது முத்தாய்ப்பாய் அமைந்தது.
நேரக்கண்காணிப்பாளராக பேச்சாளர் ஆ. மணிகண்டன் அவர்களும் வாக்குச்சீட்டு கணக்காளராக பேச்சாளர் சுதா அவர்களும் பொறுப்பேற்று இருந்தனர்.
இம்மாத மன்றக் கூட்டத்திற்கான பதாகையில் இருந்த திருவள்ளுவரை உயிர் ஓவியமாக வரைந்து கொடுத்த இந்தியாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி மதுஸ்ரீ அவர்களுக்கு எங்கள் மனப்பூர்வமான பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.
இறுதியாக அன்றைய பொறுப்புத் தலைவி பேச்சாளர் சுதா அவர்கள், சிறந்த அரங்கப் பேச்சுக்கான வெற்றியாளரையும் அவருக்கான சான்றிதழையும் புத்தகத்தையும் வழங்கினார். வெளிமன்றங்களிலிருந்து வந்து கலந்துகொண்டு நியமன அதிகாரிகளாக பொறுப்பேற்றிருந்த அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறந்த அரங்கப் பேச்சு அங்கம்
வெற்றியாளர் : பேச்சாளர் லீலாராணி ஏகப்பன்.
பரிசுப் புத்தகம்: பெருந்தன்மை பேணுவோம் (வெ. இறையன்பு)
குழுப் புகைப்படத்தோடு நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
எமது அடுத்த கூட்டம் மே 1 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.
நன்றி.

தெம்பனீஸ்  தமிழ்ப் பேச்சாளர் மன்றம். 79ஆவது மன்றக் கூட்டம்.ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணி.                                 ...
10/04/2022

தெம்பனீஸ் தமிழ்ப் பேச்சாளர் மன்றம்.
79ஆவது மன்றக் கூட்டம்.
ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணி.
‘ஏறுபோல் நட’
கருப்பொருளுக்கேற்ற புதுக் கவிதையோடு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் அன்றைய அரங்கக் காவலரும் நேரக்கண்காணிப்பாளரும் ஆன பேச்சாளர் அழகு தெய்வானை அவர்கள்.
பின்னர், நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்கள், நியமன அதிகாரிகள், பிற மன்ற உறுப்பினர்கள், பார்வையாளர்கள் அனைவரையும் மலர்ந்த முகத்தோடு வரவேற்றார் தலைவர் மணிகண்டன் அவர்கள். அன்றைய வெற்றியாளர்களுக்கான புத்தகங்களை அறிவித்த பின்னர் மேடையை அன்றைய நெறியாளரிடம் ஒப்படைத்தார். நெறியாளராக தன் பங்கை சிறப்புற ஆற்றினார் பேச்சாளர் ஆர்த்தி தமிழ்ச்செல்வன் அவர்கள்.
இன்றைய சொல் : விழைதல்
முதல் அங்கம்: தயாரிக்கப்பட்ட உரை
முதல் திட்டம் படைத்தவர் பேச்சாளர் வேல்முருகன் அவர்கள். ‘கதாநாயகன்’ என்ற தலைப்பில் தந்தைக்கும் பிள்ளைக்கும் இருக்கும் அற்புதமான உறவை, உயிர்ப்புடன் வைப்பதற்கான உத்திகளை, படவில்லைகளோடும் படிநிலைகளோடும் அழகாக விளக்கி நெகிழ்வான திட்டத்தைப் படைத்தார்.
இரண்டாவது, பேச்சாளர் வெங்கடசுப்பு அவர்கள் ‘முன்மாதிரி’ என்ற தலைப்பில் தான் அலுவலகத்தில் செய்த ஒரு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்…..
மூன்றாவது பேச்சாளர் ராதிகா ராமலிங்கம் அவர்கள் ‘நாடக மேடை’ என்ற ஒரு தலைப்பில் இரண்டு திட்டங்களைப் படைத்தார். கல்லூரி நாட்களில் தான் ஏற்பாடு செய்த நாடகத்தின் தயாரிப்புப் பணிகள் குறித்து முதல் திட்டத்திலும், நாடகம் மேடையில் அரங்கேறிய விதம் குறித்து இரண்டாவது திட்டத்திலும் நகைச்சுவையோடு விளக்கினார்.
நேரக்கண்காணிப்பாளரின் அறிக்கையோடு சிறந்த தயாரிக்கப்பட்ட உரைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இரண்டாவது அங்கம்: அரங்க பேச்சு அங்கம்
இதனை வழிநடத்தியவர், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பேச்சாளர் ஹரிபாபு தம்மாலா அவர்கள், மிக விளக்கமாக அரங்கப் பேச்சு குறித்த விபரங்களைத் தெளிவுபடுத்திய பின்னர், விறுவிறுப்பாக கருப்பொருளுக்கு ஏற்ற தலைப்புகளைக் கொடுத்து, பார்வையாளர்களை பரபரப்பாக அழைத்து பேசச் செய்து, வெகு சிறப்பாக அங்கத்தை வழிநடத்தினார்.
நேரக் கண்காணிப்பாளரின் அறிக்கையோடு சிறந்த அரங்கப் பேச்சுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
மூன்றாவது அங்கம் : மதிப்பீட்டு அங்கம்
பேச்சாளர் வேல்முருகன் அவர்களின் உரையை லிஷா பேச்சாளர் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் அர்ஜுன் அவர்களும், பேச்சாளர் வெங்கடசுப்பு அவர்களின் உரையை பெக்கியோ மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் காமாட்சி பாலமுருகன் அவர்களும் பேச்சாளர் ராதிகா அவர்களின் முதல் திட்டத்தை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பேச்சாளர் கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இரண்டாவது திட்டத்தை, பேச்சாளர் அகிலா மணிகண்டன் அவர்களும் மிகச்சிறப்பாக மதிப்பீடு செய்தனர்.
நேரக்கண்காணிப்பாளரின் அறிக்கையோடு சிறந்த மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இறுதி அங்கம்: உரிச்சொல் கணக்கீட்டை, பேச்சாளர் மணிகண்டன் அவர்கள் பொறுப்பேற்று செய்தார்.
மொழி மதிப்பீடு செய்தவர் இந்தியாவிலிருந்து தேன் தமிழ் சொல்வேந்தர் மன்றத்தைச் சேர்ந்த மேன்மைமிகு சொல்வேந்தர் வேணு நீலகண்டன் அவர்கள். இலக்கணக் குறிப்புகளோடு மேம்பாடுகளை எடுத்துரைத்த விதம் சிறப்பு.
பொது மதிப்பீடு செய்தவர் கேன்பரா பேச்சாளர் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் தினேஷ் ராஜன் அவர்கள். பல்வேறு காட்சிவில்லைகளோடு, பதாகை வடிவமைப்பு, நிகழ்ச்சி நிரல் என ஒவ்வொரு அங்கத்தையும் உன்னிப்பாக கவனித்து, உரிய இடங்களில் மேம்பாடுகளைக் கூறி தன் மதிப்பீட்டினை வழங்கினார்.
இறுதியாக, தலைவர் மணிகண்டன் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வெற்றியாளர்களின் பெயர்களையும் அவர்களுக்கான பரிசு புத்தகங்களையும் , பிற மன்றங்களில் இருந்து வந்து கலந்து கொண்ட நியமன அதிகாரிகளுக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.
குழுப் புகைப்படத்தோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
வெற்றியாளர்கள் விபரம்:
தயாரிக்கப்பட்ட உரை -------------பேச்சாளர் வேல்முருகன்
பரிசுப் புத்தகம் -----------------------உயர்ந்த உணவு (இறையன்பு)
அரங்க பேச்சு -------------------------பேச்சாளர் தியாகராஜன்
பரிசுப் புத்தகம்--------------------- இலக்கும் நோக்கமும் (இறையன்பு)
மதிப்பீட்டு உரை ------------------- கார்த்திக் சிதம்பரம்
பரிசுப் புத்தகம் ----------------------- தத்துவம் சொல்லும் ஜென் கதைகள்
(அரு. வி. சிறைநதி)
எமது அடுத்த மன்ற கூட்டம், ஏப்ரல் 15 வெள்ளிக்கிழமை, மாலை 7.15 மணிக்கு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.

மார்ச் 18, வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணி. அரங்கக்காவலர் பேச்சாளர் மணிகண்டன் அவர்கள் கூறிய ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்ற...
25/03/2022

மார்ச் 18, வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணி.
அரங்கக்காவலர் பேச்சாளர் மணிகண்டன் அவர்கள் கூறிய
‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’
என்ற குறளோடு தொடங்கியது தெம்பனீஸ் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் 78வது மன்றக் கூட்டம்.
கருப்பொருள்: அமுதசுரபி
அன்று ஒரு நாள் தலைவியாகப் பொறுப்பேற்றிருந்த பேச்சாளர் சுதா அவர்கள், வந்திருந்த நியமன அதிகாரிகள், பார்வையாளர்கள் அனைவரையும் வரவேற்று மேடையை அன்றைய நெறியாளரிடம் ஒப்படைத்தார்.
அழகான பாடலுடன் தொடங்கி அடுக்கடுக்கான தகவல்களுடனும், நகைச்சுவைத் துணுக்குகளுடனும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக வழிநடத்தினார் அன்றைய நெறியாளர் பேச்சாளர் ராதிகா அவர்கள்.
இன்றைய சொல்: மாட்சி
முதல் அங்கம்: தயாரிக்கப்பட்ட உரை
முதல் பேச்சாளர் இரா.மணிகண்டன் அவர்களுக்கு இது முதல் திட்டம் என்பதால் ‘எனக்கு ஏன் இந்த பேரு?’ என்ற தலைப்பில், பனித்திரையை உடைத்தார். தனது பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, குடும்பம், ஆர்வம் என அனைத்தையும் அனைவரோடும் பகிர்ந்து கொண்டதோடு தான் பேச்சாளர் மன்றத்தில் சேர்ந்த விதத்தையும் அழகுற விளக்கினார்.
இரண்டாம் பேச்சாளர் நித்யானந்தம் அவர்கள், ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்ற தலைப்பில் கூட்டுறவுக் கழகம் குறித்து தனது பார்வையையும் அது தொடங்கப்பட்ட வரலாறு, நோக்கம், சேமிப்பு எவ்வாறு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்கிறது என அனைத்து தகவல்களையும் மிகத் தெளிவாக விளக்கினார். திருக்குறள் கொண்டு சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது திட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
நேரக் கண்காணிப்பாளரின் அறிக்கையோடு முதல் அங்கம் நிறைவு பெற்றது.
இரண்டாவது அங்கம்: அரங்கப் பேச்சு அங்கம்
இதனையும் நெறியாளர் ராதிகா அவர்க ளே வழிநடத்தினார், மகளிர் தினத்தை ஒட்டிய தலைப்புகளை கொடுத்தார். அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்றார்கள்.
நேரக் கண்காணிப்பாளரின் அறிக்கையோடு சிறந்த அரங்கப் பேச்சுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.
மூன்றாவது அங்கம்: சிறப்பு அங்கம்
நமது மன்றத்தில் மாதம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் ஒரு சிறப்பு அங்கம் இடம்பெறும். அவ்வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு T4 பகுதியைச் சார்ந்த தெம்பனீஸ், கம்பன் மற்றும் சேரன் பேச்சாளர் மன்றங்கள் சேர்ந்து நடத்திய கருத்தரங்கம் இடம்பெற்றது.
தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் நடுவராக இருந்து வழிநடத்திச் சென்றவர் பேச்சாளர் தியாகராஜன் அவர்கள்.
முதல் பேச்சாளர் ஆர்த்தி அவர்கள், சாவித்திரிபாய் புலே என்ற இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை குறித்த தகவல்களையும் பெருமைகளையும் பகிர்ந்துகொண்டார்.
இரண்டாவது பேச்சாளர், சேரன் மன்றத்தைச் சேர்ந்த முனைவர் வசுந்தராதேவி அவர்கள் ‘பெண் என்னும் பெரும் சக்தி’ என்ற தலைப்பில் பல்வேறு கவிதைகளுடனும் உவமைகளுடனும் பெண்ணின் சிறப்புகள் குறித்து தன் வெண்கலக் குரலில் முழங்கினார்.
மூன்றாவதாக, கம்பன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் கேத்திரபாலன் மூக்காண்டி அவர்கள், ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தின் வலிமைமிகு பெண் பாத்திரமான குந்தவை பிராட்டி குறித்த ஆளுமைத்திறதைப் பற்றி அழகாகப் பேசினார்.
அடுத்த பேச்சாளர் சேரன் மன்றத்தைச் சேர்ந்த லதா மாசிலாமணி அவர்கள், தன் அன்பான அமைதியான குரலில், பிறருக்குத் தேவையான அன்பை வெளிப்படுத்துவதில் சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்த பஞ்சவன்மாதேவி குறித்துப் பேசினார்.
அடுத்ததாக, கம்பன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் சுகந்தினி அவர்கள் தனக்கு வழிகாட்டியாக விளங்கிய Louise Hay எனும் அமெரிக்க மனநல ஆலோசகர் பற்றி மிக நெகிழ்வாகப் பகிர்ந்து கொண்டார்.
இறுதிப் பேச்சாளர் வெங்கடசுப்பு அவர்கள், ‘அமுதசுரபி’ எனும் கருப்பொருளை ஒட்டிய முக்கிய கதாபாத்திரமான மணிமேகலை குறித்த கதையையும் தனது கருத்துக்களையும் எடுத்துரைத்தார்.
மிகச்சிறப்பாக நிறைவை நாடியது சிறப்பு அங்கம்.
நான்காவது அங்கம்: மதிப்பீட்டு அங்கம்
பேச்சாளர் இரா. மணிகண்டன் அவர்களின் திட்டத்தை, சேரன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் உமாசங்கர் அவர்களும், பேச்சாளர் நித்தியானந்தம் அவர்களின் உரையை, பெக்கியோ மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் காமாட்சி அவர்களும் மதிப்பீடு செய்தனர். இருவரின் நிறைகளைப் பாராட்டியும், மேம்பாடுகளை பரிந்துரைத்தும் தம் பணியை சிறப்புறச் செய்தனர்.
இறுதி அங்கம்
உரிச்சொல் கணக்கீட்டை சேரன் மன்றத்தைச் சேர்ந்த பேச்சாளர் சீர்காழி செல்வராஜ் அவர்கள் வேறுபட்ட முறையில் வழங்கினார் .
மொழி மதிப்பீட்டை பேச்சாளர் அழகு தெய்வானை அவர்கள் வழங்கினார்.
பொது மதிப்பீட்டை வழங்கியவர், இந்தியாவின் தேன்தமிழ் பேச்சாளர் மன்றத்தில் இருந்து வருகை தந்திருந்த பேச்சாளர் ராஜேஸ்வரி சீனிவாசன் அவர்கள்.
நிறைவாக, ஒருநாள் தலைவியாக விளங்கிய பேச்சாளர் சுதா அவர்கள் அரங்கப் பேச்சு அங்கத்தின் வெற்றியாளரையும் பரிசுப் புத்தகத்தையும் அறிவித்தார்.
வெற்றியாளர்: பேச்சாளர் ராஜேஸ்வரி சீனிவாசன்
பரிசுப் புத்தகம்: பெண் ஏன் அடிமையானாள்
(தந்தைப் பெரியார்)

அடுத்ததாக, பனித்திரையை உடைத்ததற்கான சான்றிதழை பேச்சாளர் இரா.மணிகண்டன் அவர்களுக்கும், மற்றும் பங்கேற்புச் சான்றிதழ்களை நட்பு மன்றங்களில் இருந்து வந்திருந்த நியமன அதிகாரிகளுக்கும் வழங்கினார்.
நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.
எமது அடுத்த மன்றக் கூட்டம் ஏப்ரல் 3, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.
நன்றி.

தயாரிக்கப்பட்ட உரை மற்றும் கருத்தரங்கத்துக்கான காணொளி இணைப்பு: https://www.youtube.com/watch?v=uVDLHDgeNjI https://www.youtube.com/watch?v=nfuOLs-D9Ys https://www.youtube.com/watch?v=ZDjvfqOraQc

👸👸👸👸நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் ...
18/03/2022

👸👸👸👸
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

வாருங்கள்..
இந்த மாத பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கருத்தரங்கம் இன்று மாலையில் நடைபெற உள்ளது வருக வருக🦋

Topic: Tampines Tamil TMC's Zoom Meeting

Join Zoom Meeting https://us02web.zoom.us/j/4245438486

Time Friday, March 18-2022 06:45 PM Singapore.

Meeting ID: 424 543 8486
Passcode: Tampines

பட்டை தீட்ட தீட்டத் தான் வைரங்கள் ஜொலிக்கும்---- கல்லை  செதுக்க செதுக்கத் தான் சிற்பங்கள் உருவாகும். அதுபோலத்தான் பேச்சா...
15/03/2022

பட்டை தீட்ட தீட்டத் தான் வைரங்கள் ஜொலிக்கும்---- கல்லை
செதுக்க செதுக்கத் தான் சிற்பங்கள் உருவாகும்.
அதுபோலத்தான் பேச்சாளரும்.
பேச்சாளர்களைப் பட்டை தீட்டவும், சிற்பமாய் செதுக்கவும் உதவுபவை போட்டிகள்.
கடந்த மார்ச் மாதம் 6 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று, மாலை 3 மணி அளவில் எமது தெம்பினீஸ் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தில் மன்ற அளவிலான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சாளர்கள் தம்மைத் தாமே மெருகேற்றிக் கொள்ளும் பொருட்டு, அரங்கப் பேச்சிலும் தயாரிக்கப்பட்ட உரையிலும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
முதலில் தலைவர் மணிகண்டன் அவர்கள், வந்திருந்த போட்டியாளர்கள், நியமன அதிகாரிகள், பல நாடுகளிலும் இருந்து பங்குகொண்ட பார்வையாளர்கள் அனைவரையும் வரவேற்று, பரிசுகளுக்கான புத்தகங்களை அறிவித்து, இணைய மேடையை அன்றைய நெறியாளரிடம் ஒப்படைத்தார்.
போட்டி நெறியாளராக பேச்சாளர் பிரபாவதி அவர்கள் நிகழ்வை சிறப்பாக வழிநடத்திச் சென்றார். முதலில் நியமன அதிகாரிகளை அறிமுகம் செய்துவைத்து, போட்டியின் விதிமுறைகளை அறிவித்தார். பின்னர் போட்டியாளர்கள் பேசும் வரிசை இரு போட்டிகளுக்கும் ஒன்றன்பின் ஒன்றாக random.org என்னும் இணையதளத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
அரங்கப் பேச்சுப் போட்டியாளர்கள் அனைவரும் வேறு ஒரு இணைய அறைக்கு மாற்றப்பட்டனர். பின்னர், தலைமை நடுவரின் ஆலோசனையின் பேரில் அரங்கப் பேச்சு தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளராக போட்டி அறைக்கு வரவழைக்கப்பட்டனர். அரங்க பேச்சுத் தலைப்பிற்கு ஏற்ப தத்தம் பேச்சை சிறப்புற வழங்கினார்கள். போட்டி முடிந்த பின் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அடுத்த போட்டி, தயாரிக்கப்பட்ட உரை. தேர்ந்தெடுக்கப்பட்ட வரிசைப்படி போட்டியாளர்கள் தாங்கள் தயாரித்த உரையை அழகுற படைத்தனர். போட்டி முடிந்த பின் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இறுதி அங்கம்: பங்கு கொண்டு பேருதவி செய்த நியமன அதிகாரிகளுக்கு, பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குழுப் புகைப்படத்துக்குப் பின் இரண்டு அங்கங்களிலும் வெற்றிபெற்றவர்கள் பெயர்களையும் அவர்களுக்கான பரிசு புத்தகங்களின் பெயரையும் தலைவர் மணிகண்டன் அறிவித்தார்.
அனைவரது விபரங்கள்:
நியமன அதிகாரிகள்:
ஏற்பாட்டுக் குழுத் தலைவர்: பேச்சாளர் மணிகண்டன்
போட்டி நெறியாளர் : பேச்சாளர் பிரபாவதி
தலைமை நடுவர்: பேச்சாளர் பாலா வெங்கட்
நேரக் கண்காணிப்பாளர்கள்: பேச்சாளர் ஷர்மிளா
பேச்சாளர் காட்வின் செல்வராஜ்
அரங்கக் காவலர்கள்: பேச்சாளர் சிலம்பரசன்
பேச்சாளர் காமாட்சி பாலமுருகன்
பேச்சாளர் கார்த்திக் சிதம்பரம்
அரங்கப் பேச்சு போட்டியாளர்கள்:
1. தமிழ்ச்செல்வன் ஆர்த்தி
2. அகிலா சுந்தர்
3. வேல்முருகன்
4. உமா
5. வெங்கடசுப்பு
6. அழகு தெய்வானை
7. இராஜன்

தயாரிக்கப்பட்ட உரை போட்டியாளர்கள்:
1. இராதிகா
2. தமிழ்செல்வன் ஆர்த்தி
3. அகிலா சுந்தர்
4. வெங்கடசுப்பு
5. நித்தியானந்தம்
6. வேல்முருகன்
7. அழகு தெய்வானை
வெற்றியாளர்கள்:
அரங்கப் பேச்சு
முதல் பரிசு--------------: பேச்சாளர் தமிழ்ச்செல்வன் ஆர்த்தி
பரிசுப் புத்தகம்--------: ஒரு மனிதன் ஒரு வீடு ஒருஉலகம்(ஜெயகாந்தன்)
இரண்டாவது பரிசு ----: பேச்சாளர் உமா
பரிசுப் புத்தகம்-----------: கொலையுதிர் காலம் (சுஜாதா)
மூன்றாவது பரிசு ------ பேச்சாளர் அழகு தெய்வானை
பரிசுப் புத்தகம்-----------: சேற்றில் மனிதர்கள் (ராஜம்கிருஷ்ணன்)

தயாரிக்கப்பட்ட உரை
முதல் பரிசு--------------: பேச்சாளர் இராதிகா
பரிசுப் புத்தகம்-----------: சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜெயகாந்தன்)
இரண்டாவது பரிசு ----: பேச்சாளர் அழகு தெய்வானை
பரிசுப் புத்தகம்-----------: சஞ்சாரம் (எஸ் ராமகிருஷ்ணன்)
மூன்றாவது பரிசு ------ பேச்சாளர் தமிழ்ச்செல்வன் ஆர்த்தி
பரிசுப் புத்தகம்-----------: அறம் (ஜெயமோகன்)

இரண்டு போட்டிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வெற்றியாளர்கள், எதிர்வரும் T4 பகுதி அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவார்கள். நிகழ்வில் பங்குகொண்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
எமது அடுத்த மன்றக் கூட்டம் மார்ச் 18ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க தமிழ்!! வளர்க நற்றமிழர்!!
நன்றி.

Address

TAMPINES Hub
Singapore

Opening Hours

Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+6583135769

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tampines Tamil Toastmasters Club - தெம்பனீஸ்தமிழ்ப் பேச்சாளர் மன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tampines Tamil Toastmasters Club - தெம்பனீஸ்தமிழ்ப் பேச்சாளர் மன்றம்:

Share