FSIM Federation of Singapore Indian Muslims (FSIM)

23/12/2025
இசைமுரசு நாகூர் ஹனிஃபா அவர்களின் நூற்றாண்டுப் பெருவிழா கொண்டாட்டம் வருகிற 28 டிசம்பர் 2025 ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில்...
29/11/2025

இசைமுரசு நாகூர் ஹனிஃபா அவர்களின் நூற்றாண்டுப் பெருவிழா கொண்டாட்டம் வருகிற 28 டிசம்பர் 2025 ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. முழு விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அழகிய தமிழ் பாடல்களையும், இஸ்லாமியப் பாடல்களையும் பாடி தமிழ் கூறும் நல்லுலகைப் பரவசப்படுத்திய இசைமுரசுக்கு நாம் செலுத்தும் சிறப்பான நினைவேந்தல் விழா!

அனைவரும் நுழைவுச் சீட்டுகளை வாங்கி ஆதரவளியுங்கள். நன்றி 💐

சிண்டா புராஜெக்ட் கீவ்வுக்கு இந்திய முஸ்லிம் பேரவையினர் நன்கொடை! சிண்டா ஆண்டுதோறும் புராஜெக்ட் கீவ் திட்டத்திற்கு நன்கொட...
21/10/2025

சிண்டா புராஜெக்ட் கீவ்வுக்கு இந்திய முஸ்லிம் பேரவையினர் நன்கொடை!

சிண்டா ஆண்டுதோறும் புராஜெக்ட் கீவ் திட்டத்திற்கு நன்கொடை திரட்டி வருகிறது. இந்த ஆண்டும் கேம்பல் லேனில் உள்ள இந்திய மரபுடைமை நிலயத்தில் சிண்டா நன்கொடை உண்டியல் மற்றும் பூத் அமைத்துள்ளது. நன்கொடையாளர்கள், பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அங்கு சென்று தங்கள் ஆதரவை ரொக்கமாகவோ, காசோலை மற்றும்
வங்கிப் பறிமாற்றம் மூலமாகவோ செலுத்தி வருகிறார்கள். சிங்கப்பூரில் உள்ள இலாப நோக்கற்ற சமூக அமைப்புகளும் தங்களுடைய ஆதரவை நன்கொடை மூலம் செலுத்துவார்கள்.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை தன் உறுப்பியங்களான இணை அமைப்பினரையும், தன் ஆதரவாளர்களையும் ஊக்குவித்து கடந்த சில ஆண்டுகளாக நன்கொடையை வழங்கிட ஒருங்கிணைத்து வருகிறது .

இவ்வாண்டு அஃப்லாக் ஸ்டார்ஸ் அமைப்பு, கட்டிமேடு மற்றும் ஆதிரெங்கம் முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், கொடிக்கால்பாளையம் சங்கம், முஸ்லிம் லீக் சிங்கப்பூர், நாகப்பட்டினம் சங்கம், பொதக்குடி சங்கம், சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலநபிவிருத்தி சங்கம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், சலாம் அமைப்பு, தோப்புத்துறை முஸ்லிம் சங்கம், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம் ஆகிய வற்றோடு இந்திய முஸ்லிம் பேரவையின் ஆதரவாளர்களும் புரவலர்களுமான ஆடிட்டர் அசன் மசூது, ராயல் கிங்ஸ் குழுமத்தின் திரு சிராஜுத்தீன், DMY ஜுவல்லர்ஸின் திரு சலீம் , நைனா முஹம்மது அன் சன்ஸின் திரு ஆதம் சாஹுல் ஹமீது, பாவா டெலிகசியின் முஹம்மது ஃபாரூக் ஆகியோரும் கரம் கோத்தனர்.

கடந்த 17 அக்டோபர் வெள்ளிக்கிழமை மாலை இந்திய மரபுடைமை நிலையத்தில் அமைந்துள்ள சிண்டா புராஜெக்ட் கீங் அரங்கில் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் திரு முஹம்மது பிலால் தலைமையில் ஒன்று கூடி தங்களுடைய நன்கொடைகளான 8 ஆயிரம் வெள்ளியை சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு இரா அன்பரசுவிடம் வழங்கி தங்களுடைய ஆதரவை தெரிவித்து மகிழ்ந்தனர்.

We at Federation of Indian Muslims (FIM) warmly welcome the appointment of Senior Minister of State, Associate Professor...
21/05/2025

We at Federation of Indian Muslims (FIM) warmly welcome the appointment of Senior Minister of State, Associate Professor Dr. Faishal Ibrahim, as Acting Minister for Muslim Affairs.

SMS Faishal's relentless efforts on the ground engagements over the years with the Muslim community seemed to have reaped rewards with PM Lawrence Wong recognising his efforts and appointing him to steer the Muslim community to greater heights. With his well-known involvements in events organised by the Indian Muslim Community, we're excited to collaborate with him to build a more successful and effective community as well as to contribute to the larger Muslim community.

We are also very heartened to hear PM Wong's statement when he mentioned of engaging Muslim community being a priority for him. This shows his commitment and unwavering support for the community.

We also extend our heartfelt gratitude to Minister Masagos for his tireless dedication in uplifting the Muslim community. We appreciate his selfless service and contributions to the Muslim community and our nation. As we move forward, we eagerly look forward to various opportunities to collaborate with SMS Faishal in empowering our Muslim community. Thank you, Minister Masagos, for laying the groundwork, and once again, a warm welcome to SMS Faishal from the Muslim Community in Singapore.

இந்திய முஸ்லிம் பேரவையினர் காஸாவுக்கு நன்கொடை !இந்திய முஸ்லிம் பேரவை தன் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்வை கடந்த மார்ச் 2...
29/03/2025

இந்திய முஸ்லிம் பேரவையினர் காஸாவுக்கு நன்கொடை !
இந்திய முஸ்லிம் பேரவை தன் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்வை கடந்த மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை மாலை பென்கூலன் பள்ளிவாசல் அரங்கில் நடத்தியது .

சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்ற (முயிஸ்) தலைமை நிர்வாகி ஹாஜி காதிர் மைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாணவி சபீரா முபாரக் திருக்குர்ஆனில் இருந்து வசனங்களை ஓதி தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்தார் . இந்திய முஸ்லிம் பேரவை துணைத்தலைவர் உபைதலி ஆங்கில மொழிபெர்ப்பை வாசித்தார். பொதுச்செயலாளர் அப்துல் மாலிக் நிகழ்ச்சியை நெறியாளுகை செய்தார்.

இந்திய முஸ்லிம் பேரவைத்தலைவர் ஹாஜி முஹம்மது பிலால்
அல்ஜீரியாவுக்கான சிங்கப்பூர் தூதர் முஹம்மது அலாமி மூசா, மேனாள் நியமன நாடாளுமன்ற உறுபலபினர்கள் டாக்டர் சையத் ஹாருன் அல்ஹப்ஷி , முனைவர் இரா. தினகரன், இந்து அறக்கட்டளை வாரிய தலைவர் இராஜன் கிருஷ்ணன், வளர்தமிழ் இயக்கத்தலைவர் திரு நசீர்கனி, இந்திய மரபுடைமை நிலைய தலைவர் திரு இராஜாராம் மற்றும் மலாய் முஸ்லிம் அமைப்பினர் , இந்திய முஸ்லிம் தலைவர்கள், தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், ஆதரவாளர்கள், தொண்டூழியர்களை வரவேற்றார். மேலும் அவருடைய உரையில் தீவு முழுவதும் 3200 குறைந்த வருமான குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கிய Tabung Amal Aidilfitri அமைப்புக்கும், நோன்பு கஞ்சி சமைப்பதற்கு அரிசியும், பேரீத்தம்பழம் வழங்கிய இந்து அறக்கட்டளை வாரியத்திற்கும், நோன்புப் பெருநாளை முன்னிட்டு 850 குடும்பங்களுக்கு விழாக்கால தொகுப்புப் பை மற்றும் 120 வெள்ளி ரொக்க அட்டை வழங்கிய சிண்டாவுக்கும், தமிழை வரும் (2026 )கல்வியாண்டில் இருந்து மத்ரஸா அல் இர்ஷாதில் தொடக்க நிலை ஒன்றில் தமிழ்ப்பாடம் இரண்டாம் மொழியாக கற்பிக்கப்படும் என்ற நற்செய்தியை சமீபத்தில் வெளியிட்ட முயிஸ் மற்றும் அதற்கு உதவிய சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்திற்கும் , இஃப்தார் விருந்தின் ஆதரவாளர் ராயல் கிங்ஸ் குழுமத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிராஜுத்தீன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும் முகமாக இந்திய முஸ்லிம் பேரவை தன் இணை அமைப்புகளிடம் ரொக்க நண்கொடை வழங்க வேண்டுகோள் வைத்திருந்தது. அஃப்லாக் ஸ்டார்ஸ் கல்வி மற்றும் கலாச்சார சங்கம் , சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், டிஎம்ஒய் ஜுவல்லர்ஸ் , சிங்கப்பூர் நாகப்பட்டினம் சங்கம், 12 ஹவர்ஸ் மணிசேஞ்சர் ஹாஜி ஜியாவுதீன் உள்ளிட்ட இணை அமைப்பினர் பலரின் ரொக்க உதவிகளோடு இந்திய முஸ்லிம் பேரவை தன் நன்கொடையையும் சேர்த்து சிங்கப்பூர் வெள்ளி 15,400 ஐ ரஹ்மான் லில் ஆலமீன் பவுன்டேஷன் தலைமை நிர்வாகி அத்னான் அப்துல் ஹமீதிடம் வழங்கியது.

இந்திய முஸ்லிம் அமைப்பினர், மலாய் முஸ்லிம் அமைப்பினர், தமிழ் அமைப்பின் நிர்வாகிகள் ஆகியோர் ஒரு இடத்தில் கூடியது மிகச்சிறப்பான நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி என்பதை உறுதி செய்தது.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ஒருங்கிணைப்பில் ஷேக் சலாம் இந்தியா நடத்திய சமூக நோன்பு திறப்பு விழா
29/03/2025

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ஒருங்கிணைப்பில் ஷேக் சலாம் இந்தியா நடத்திய சமூக நோன்பு திறப்பு விழா

இந்திய முஸ்லிம் பேரவை ஒருங்கிணைப்பில் ஷேக் சலாம் இந்தியா நடத்திய சமூக நோன்பு திறப்பு விழா

Federation of Indian Muslims (FIM) expresses deep concern over the attack on the priest at St. Joseph's Church. A respec...
10/11/2024

Federation of Indian Muslims (FIM) expresses deep concern over the attack on the priest at St. Joseph's Church.

A respected Priest Rev. Christopher Lee has been assaulted during worship in a state of intolerance and impatience. Violence of any kind is unacceptable.

We extend our full support to the injured priest for his speedy recovery and recovery from the trauma that happened.

செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய முஸ்லிம் பேரவை (எஃப்ஐஎம்) ஆழ்ந்த கவலை தெரிவித்துக் கொள்கிறது.

மரியாதைக்குரிய பாதிரியார் அருட்திரு கிறிஸ்டஃபர் லீ அவர்கள் வழிபாட்டின் போது சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையின்மை நிலையில் தாக்கப்பட்டுள்ளார். எந்த விதமான வன்முறையும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

காயமடைந்த பாதிரியார் விரைவில் குணமடையவும், ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவும் எங்களது முழு ஆதரவை வழங்குகிறோம்.

https://www.facebook.com/share/14dxGG5vzm/?mibextid=WC7FNe

Father Christopher Lee was sent to National University Hospital and is said to be in stable condition.

Federation of Indian Muslims (FIM) expresses deep concern over the attack on the priest at St. Joseph's Church. A respec...
10/11/2024

Federation of Indian Muslims (FIM) expresses deep concern over the attack on the priest at St. Joseph's Church.

A respected Priest Rev. Christopher Lee has been assaulted during worship in a state of intolerance and impatience. Violence of any kind is unacceptable.

We extend our full support to the injured priest for his speedy recovery and recovery from the trauma that happened.

செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் பாதிரியார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய முஸ்லிம் பேரவை (எஃப்ஐஎம்) ஆழ்ந்த கவலை தெரிவித்துக் கொள்கிறது.

மரியாதைக்குரிய பாதிரியார் அருட்திரு கிறிஸ்டஃபர் லீ அவர்கள் வழிபாட்டின் போது சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையின்மை நிலையில் தாக்கப்பட்டுள்ளார். எந்த விதமான வன்முறையும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

காயமடைந்த பாதிரியார் விரைவில் குணமடையவும், ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவும் எங்களது முழு ஆதரவை வழங்குகிறோம்.

https://www.facebook.com/share/14dxGG5vzm/?mibextid=WC7FNe

Father Christopher Lee was sent to National University Hospital and is said to be in stable condition.

Address

14 Scotts Road, 03-98B Far East Plaza
Singapore
228213

Alerts

Be the first to know and let us send you an email when FSIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to FSIM:

Share