தெரிந்ததும் தெரியாததும். Simple Health Tips.

  • Home
  • Saudi Arabia
  • Jeddah
  • தெரிந்ததும் தெரியாததும். Simple Health Tips.

தெரிந்ததும் தெரியாததும். Simple Health Tips. ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்

29/10/2024

#மறைக்கப்பட்ட_வரலாறு :
முஸ்லிம்களால் உருவான பெயர் தான் "மதராஸ்" மருவி மெட்ராஸ் என மாறி உள்ளது
இந்த சரித்திர உண்மையை மறைக்க தான் சென்னை என மாற்றப்பட்டுள்ளது
ஆய்வில் அதிர்ச்சி
மதராஸ் முஸ்லிம்கள்..
மதராசப்பட்டினம்
மதராஸ்
மெட்ராஸ்
சென்னை
அரபு வணிகர்களுக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவு என்பது மனித நாகரிகம் தோன்றிய காலத்தில் இருந்தே வந்துள்ளது.
குறிப்பாக தென் இந்தியாவில் உள்ள
கேரளா
தமிழகத்தில் உள்ள
குமரி மாவட்டம்
தேங்காய்ப்பட்டணம்
தொண்டி
கீழக்கரை
பரங்கிப்பேட்டை
காயல்(ப்பட்டினம்)
அதிரை(ப்பட்டினம்)
மற்றும்
மண்ணடி(ப்பட்டினம்)
ஆகிய நகரங்களில் வணிகம் செய்துவந்துள்ளனர்.
வணிகர்களாய் வருகை தந்து இங்கே வாழ்ந்த அரபுகள்
நபிகள் நாயகம் (ஸல்) கால துவக்கத்தில் முஸ்லிம்களாய் மாறி வணிகத்திற்கு வருகிறார்கள்.
இன்று சென்னையில் உள்ள மண்ணடி(பட்டினத்தில்) அதிகமாக வசித்தனர்.
அவர்களை அக்கால மக்கள் "மூர்கள்" என அழைத்தனர்.
அதன் அடிப்படையில் இன்றும் மண்ணடியில் "மூர் தெரு: உள்ளது.
ஆற்காடு இளவரசர் "நவாப் முகம்மது அப்துல் அலி" அவர்கள் கூறுகிறார்
சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்கள்
தற்போது மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான்.
ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்றால் நம்ப முடிகிறதா?.
இஸ்லாமிய பெயர்களில்தான் மயிலாப்பூரில் தெருக்கள் உள்ளது
நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி அவர்கள்
"மதரசப்பட்டினமும் முஸ்லிம்களும்"
இது வெள்ளையர் இங்கு வருவதற்கு முன்
ஆற்காடு நாவபின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்த நிலப்பரப்பில் மதரசா என்ற பள்ளிக்கூடங்கள் நிறைந்து இருந்ததால்,
மதராஸ் என்று அழைக்கப்பட்டது என்று காரணியும் உண்டு
17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் பெரியவர் "குணங்குடி மஸ்தான் சாகிப்"
இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள "தொண்டி"
ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர்.
அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை
அதாவது தொண்டியார் பேட்டை தற்பாது தண்டயார்பேட்டை அழைக்கப்படுகிறது.
சைய்யத் ஷா பேட்டை தான் தற்போது சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.
திரு அலி கேணி தான் தற்போது திருவல்லிகேணி என்று அழைக்கப்படுகிறது
தாஹிர் சாஹிப் தெரு தற்போது தாயார் தெரு என்று அழைக்கப்படுகிறது
டி.நகரில் இன்றும் முஸ்லிம் பெயர்களில் உஸ்மான் ரோடு, பசுலுல்லாஹ் சாலை,அபிபுல்லா சாலை உள்ளது
முஸ்லிம்களுக்கு பெரியமேட்டில் பெரிய மசூதி உள்ளது
திருவல்லிக்கேணி பெரிய மசூதி, சரித்திர சான்றுகளாக இன்றளவும் விளங்குகின்றன.
இன்னும் முஸ்லிம் சமுதாயத்தின் சரித்திர வரலாறுகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டும் மாற்றப்பட்ட வன்னம் உள்ளன.................தொடரும்.
அதிகம் பரப்புங்கள்

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளவு செய்யும் முற்படும் பொழுது .பெரும்பாலும் அந்த அளவுகள...
25/10/2024

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளவு செய்யும் முற்படும் பொழுது .

பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
****************************************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர்
1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி
1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்க‍ர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்

ஏக்கர்

1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ

செண்ட்

1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ

ஹெக்டேர்

1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ

ஏர்ஸ்

1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி

100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
3.5 மா = ஒரு ஏக்கர்
6.17 ஏக்கர் = ஒரு வேலி

1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை

• 10 கோண் = 1 நுண்ணணு

• 10 நுண்ணணு = 1 அணு

• 8 அணு = 1 கதிர்த்துகள்

• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு

• 8 துசும்பு = 1 மயிர்நுனி

• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்

• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு

• 8 சிறு கடுகு = 1 எள்

• 8 எள் = 1 நெல்

• 8 நெல் = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம்

• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)

• 4 காதம் = 1 யோசனை

• வழியளவை

• 8 தோரை(நெல்) = 1 விரல்

• 12 விரல் = 1 சாண்

• 2 சாண் = 1 முழம்

• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்

• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்

• 4 குரோசம் = 1 யோசனை

• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)

நிலவளவை குழிக்கணக்கு வருமாறு

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

கன்வெர்ஷன்

1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்

1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்

1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்

பிற அலகுகள்1

ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்

1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்

நில அளவை

100 ச.மீ - 1 ஏர்ஸ்

100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்

1 ச.மீ - 10 .764 ச அடி

2400 ச.அடி - 1 மனை

24 மனை - 1 காணி

1 காணி - 1 .32 ஏக்கர்

144 ச.அங்குலம் - 1 சதுர அடி

435 . 6 சதுர அடி - 1 சென்ட்

1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்

100 சென்ட் - 1 ஏக்கர்

1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்

2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்

1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )

1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)

100 சென்ட் = 4840 சதுர குழிகள்

1 சென்ட் = 48.4 சதுர குழிகள்

1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )

1 ஏக்கர் = 43560 சதுர அடி

1 குழி (Square Yard) = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)

1 ச.மீ(Square Meter) = 1.190 குழி

1 குழி = 9 சதுர அடி

1 ச.மீ(Square Meter) = 10.76 சதுர அடி

1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்

1 குந்தா (Guntha) = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி

100 குழி = ஒரு மா

20 மா = ஒரு வேலி

3.5 மா = ஒரு ஏக்கர்

6.17 ஏக்கர் = ஒரு வேலி

16 சாண் = 1 கோல்

18 கோல் = 1 குழி

100 குழி = 1 மா

240 குழி = 1 பாடகம்

08/09/2024

சவூதி அரேபியாவில் முதல் முறை ஓர் மாபெரும் இசைக் கொண்டாட்டம் - திரைப்படத் துறையில் பிண்ணனி குரல்,
பிண்ணனி பாடகி, வெள்ளித்திரை நடிகை என பன்முகத் திறமைகள் கொண்ட ஆண்ட்ரியா ஜெர்மியா கலந்து கொண்டு மக்களை மகிழ்விக்க இருக்கின்றார்.

அக்டோபர் 3 வியாழன் மாலை தலைநகர் ரியாத் மாநகரில்
பன்னாட்டுப் பள்ளி (ஆண்கள்) மைதானத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு மத்தியில் இசைக் கொண்டாட்டம் - ஆட்டம், பாட்டம் என அசத்தலான நிகழ்ச்சி.

சவூதி அரேபிய வரலாற்றில் ஓர் மைல் கல்லை தொட இருக்கும் 100% முற்றிலும் பொழுது போக்கு நிகழ்ச்சி. மகிழ்ச்சிக்கு கியாரண்டி.

ATC அரேபியா நிறுவனம் ஒருங்கிணைக்கும் தமிழ் மக்களுக்கான, தென்னிந்திய மக்களுக்கான பொழுது போக்கு நிகழ்ச்சி.

நுழைவுச் சீட்டுகள் - விற்பனையில்.

உங்கள் நிறுவன லோகோ இடம் பெற எனைக்கூட அழைக்கலாம் +966 542210896.

மூன்று நாட்கள் நடக்க இருக்கின்ற இத்திருவிழாவில் Food Court அல்லது உங்கள் ஸ்டால் போட விரும்பினாலும் எனைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது பகிர்ந்துள்ள செய்தியில் உள்ள அலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.

வாருங்கள் வரவேற்கின்றோம்.

தஞ்சை இனியவன் (எ)
ஜாஹிர் ஹூஷேன்,
செங்கடல் தமிழ்ச் சமூகம்
ஜெத்தாஹ் - சவூதி அரேபியா.

1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்?- பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கி...
07/09/2024

1. கழிவறையும், குளியலறையும் வீட்டிற்குள் வைக்காமல் கொல்லைபுறத்தில் வைத்தார்கள். ஏன்?
- பெயர் வைக்காத கண்ணுக்கு தெரியாத கிருமிகள்.

2. சலூனுக்கும், சாவுக்கும் சென்று வந்தால் எதையும் தொடாமல் குளித்தபின் வீட்டிற்குள் வந்தார்கள். ஏன்? -கிருமிகள்.

3. செருப்பை வீட்டின் வெளியே விட்டார்கள். ஏன்? -கிருமிகள்.

4. பள்ளிக்கும், வெளியேயும் சென்று வந்தால் கைகால் கழுவி வீட்டிற்குள் வர சொன்னார்கள். ஏன்? -கிருமிகள்.

5. பிறந்தாலோ, இறந்தாலோ தீட்டு என்று 10, 16 நாட்கள் தனிமைபடுத்தினர். ஏன்? -கிருமிகள்.

6. சாவு வீட்டில் சமைக்க கூடாது என்றார்கள். ஏன்? -கிருமிகள்.

7. குடும்பத்திற்கு சமைக்கும் பெண்கள் குளித்துவிட்டு சமைத்தார்கள். ஏன்? -கிருமிகள்.

8. வாசல் பெருக்கி சாணம், மஞ்சள் தெளித்து கோலமிட்டார்கள். ஏன்? -கிருமிகள்.

9. மண், செம்பு, வென்கல பாத்திரங்களை உபயோகித்தார்கள். ஏன்? -கிருமிகள்.

10. வீட்டில் சமைத்த உணவையே பெரும்பாலும் உண்டார்கள். ஏன்? -கிருமிகள்.

தனிமனித ஆரோக்கியம், சமூகத்தில் சுத்தம், அண்டை அயலாரோடு அகலாது அனுகாது உறவாடுதல் போன்ற நம் மூதாதையர் வாழ்வியல் நெறியை கிண்டலடித்து, திட்டமிட்டு சிதைத்து நாகரீகம் எனும் பெயரில் அதற்கான விலையை இன்று கொடுத்து கொண்டிருக்கிறோம்.
இனியாவது இத்தலைமுறையினர்

“மூத்தோர் சொல் வார்த்தையும், முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின்பு இனிக்கும்” என்றுணர்வோமா?

சுருக்கமாக சொல்லப்போனால் முன்பெல்லாம் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வெளியில் சென்று கக்கூஸ் இருக்கும், இப்போது வெளியில் சென்று கண்டதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து கக்கூஸ் இருக்கிறோம்...

Address

Garnatah Street, Aziziyah
Jeddah

Telephone

+966542210896

Website

Alerts

Be the first to know and let us send you an email when தெரிந்ததும் தெரியாததும். Simple Health Tips. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தெரிந்ததும் தெரியாததும். Simple Health Tips.:

Share