27/09/2026
#நாடு_திரும்ப_உதவி - சவுதி அரேபியா, தம்மாம் நகரில் சிக்கித்தவித்த தமிழருக்கு அனைத்து உதவியையும் #தமிழ்நாடு_நல_சங்கத்தால் செய்து தரப்பட்டது.. 🙏
பெயர் :- திரு. #செல்வன்_அந்தோனிச்சாமி.
இருங்கலூர், #திருச்சி மாவட்டம், தமிழ்நாடு.
#சவூதி_அரேபியா, #தம்மாம் பகுதியில்
திருச்சி, இருன்கலூர் பகுதியை சேர்ந்த சகோதரர் திரு. செல்வன் அந்தோனிசாமி சில வருடங்களாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் செல்வன் அவர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்கு செல்ல முடியாமலும், விசா காலாவதி ஆகியுள்ள காரணத்தாலும். நாடு திரும்ப முடியாமல் 3 வருடங்களாக தவித்து வந்தார். இதனால் சவூதி அரசிற்கு இவர் #அபராத_தொகை 33000/- ரியால்கள் ( #இந்திய_மதிப்பு_ரூ - 8.5 Lakhs) கட்டவேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. செய்வதெரியாது தவித்த செல்வன் அந்தோனிசாமி தமிழக அரசிடம் உதவி கோரினார்.
#தமிழ்நாடு_அரசின் சவூதிக்கான சட்ட ஆலோசகர் #மயிலாடுதுறை_திரு_வெங்கடேசன் அவர்களிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது, கேரளா சமூக செயல்பாட்டாளார் திரு . #நாஸ்_வக்கோம், தமிழ்நாடு நல சங்கம் துணைத்தலைவர் #திருச்சி_திரு_ஆரிஃப்_மஃபூல் ஆகியோர்கள் திரு. செல்வன் அவரின் நிலையை கண்டு துரிதமாக செயல்பட்டனர்.
பின், தமிழ்நாடு நல சங்கத்தின் தொடர் முயற்சியால் கடந்த 15 நாட்களாக துரிதமாக செயல்பட்டு இந்திய தூதரகம் மற்றும் சவூதி அரேபிய அரசால் செல்வன் அந்தோனிசாமிக்கு தடையில்லா சான்று கொடுத்து, நிலுவையில் இருந்த 8.5 Lakhs INR அபராத தொகையை ரத்து செய்தது.
#விமான_தொகையை தமிழ் நாடு நல சங்கம் நிர்வாகிகள் மயிலாடுதுறை திரு. வெங்கடேசன், #துறையூர்_திரு_கமால்_பாட்சா, திரு. #அபூரய்யான், திரு. #முகமத்_பாரூக், திரு. #கிரிக்கெட்_நூர்_ஹசன் ஆகியோர் இனைந்து தங்களது செலவில் 25ஆம் தேதி #ஸ்ரீலங்கா விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்,
இந்த சமூக சேவையில் மருத்துவமனையில் ஒத்துழைப்பு அளித்த கேரளாவின் செயல்பாட்டாளார் திரு. #மணிக்குட்டன் & #மஞ்சு ஆகியோர் உடனிருந்தனர்.
#குறிப்பு:-
இதில் எந்த விளம்பர நோக்கமும் இல்லை இதன் மூலமாக பிறர் உதவி பெறலாம், என்ற நல்ல எண்ணத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.
Email : [email protected]
& .🙏
தமிழ்நாடு நல சங்கம்
Chief Minister of Tamil Nadu
Udhayanidhi Stalin