16/03/2025
கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் எட்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது!
தோஹா மார்ச் 14, 2025
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையை கொண்டு கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் எட்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி 14-03-2024 வெள்ளிகிழமை மாலை 4:30 மணியளவில் தோஹா சல்வா ரோட்டில் உள்ள அல்-யமாமா காம்ப்ளக்ஸ் அரங்கில் கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் எட்டாம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி சீரோடும், சிறப்போடும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் 250-க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
விழா நடைபெற்ற அரங்கத்திற்கு மெளலானா மொளலவி ஷம்சுல் மில்லத் K.A முஹம்மது ஜக்கரிய்யா ஹள்ரத் அவர்களின் பெயரையும், விழா நடைபெற்ற அரங்க நுழைவாயிலுக்கு மெளலானா மொளலவி ஷேகுல் பிக்ஸ் S.A அப்துர் ரப் ஹள்ரத் அவர்களின் பெயரையும், இப்தார் நடைபெற்ற அரங்கிற்கு மெளலானா மொளலவி ஷேகுல் ஹதீஸ் A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் என மூன்று ஜாமிஆவின் பேராசிரியர்களின் பெயர்களையம் நினைவுகூறும் விதமாக சூட்டப்பட்டிருந்தது.
கத்தார் லால்பேட்டை ஜமாஅத் மூத்த உறுப்பினர்கள் முஹம்மது மஹ்ரூப், முஸ்தாக் அஹமது , முஹம்மது உஸாமா, முஹம்மது தஸ்லீம் முன்னிலை வகிக்க தலைவர் முஹம்மது மசியுல்லாஹ் , செயலாளர் முஹம்மது புஹாரி , பொருளாளர் நவ்பல் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் சிறப்பாக இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியை முஹம்மது புஹாரி தொகுப்புரையாற்ற,
துவக்கமாக முன்னால் தலைவர் முஹம்மது உஸாமா அவர்களின் மகனார் முஹம்மது ஆதில் அழகு குரலில் இறைவசனம் ஓத,ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது மசியுல்லாஹ் அனைவரையும் வரவேற்க,தொடர்ந்து ஜமாஅத்தின் ஒருங்கிணைப்பாளர் அஹமது ரிலா லால்பேட்டை ஊரைப்பற்றி மற்றும் ஜமாஅத்தின் செயல்பாடுகள் திட்ட பணிகள் குறித்தும் பேசினார், ஜமாஅத்தின் முன்னால் தலைவரும் மற்றும் லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளையின் செயலாளர் முஹம்மது உஸாமா Lalpet Health Care செய்லபாடுகள் பணிகள் பற்றி எடுத்துரைத்தார்கள்.
லால்பேட்டையிலிருந்து சிறப்பு விருந்தினராக மெளலானா, மெளலவி, ஹாபிழ் A.முஹம்மது முஹசின் ஹசனி ஹஜ்ரத் அவர்கள் ரமலானை பற்றியும், ஸதகா, ஜகாத், பித்ரா பற்றி சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள், இதில் அரங்கம் நிறைந்து அவர்களின் பயானை கேட்பதற்கு குழுமியிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள்,பல்வேறு ஊர் ஜமாஅத் (ஆயங்குடி, பரங்கிப்பேட்டை, காயல்பட்டினம், கீழக்கரை, கடையநல்லூர், இராஜகிரி, வழுத்தூர்,முதுகளத்தூர்,
அதிராம்பட்டினம்,கோட்டாறு, நாகப்பட்டினம்), மேலும் கத்தாரில் உள்ள சமுதாய அமைப்புகள் மற்றும் ஜமாஅத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் நிறைவுபெற்றது.
லால்பேட்டை மண்ணிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கத்தார் ஸ்கை தமிழ் மீடியா நிறுவனர் அப்துல் பாசித் & டீம் கலந்துகொண்டு இணையதளம் மூலம் நேரலை ஒளிப்பதிவு செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கத்தார் லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Photo courtesy - ஸ்கை தமிழ் கத்தார்