Hubbul Badhriyeen Association Qatar

Hubbul Badhriyeen Association Qatar The Hubbul Badhriyeen Association was founded by Ash Sheikh Moulavi Abdur Rauff Misbahee Bahjee

بسم الله الرحمن الرحيم‎السلام عليكم ورحمة الله وبركاتهகுவலயம் போற்றும் குத்புல் அக்தாப் கௌஸுல் அஃழம் எஜமான் முஹ்யித்தீன்...
25/09/2026

بسم الله الرحمن الرحيم‎

السلام عليكم ورحمة الله وبركاته

குவலயம் போற்றும் குத்புல் அக்தாப் கௌஸுல் அஃழம் எஜமான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்களின் நினைவு தின மஜ்லிஸ்- 2026

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மாநபி பேரர், வலீகட்கரசர், என்றும் நிகரில்லா குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்களின் நினைவுதின மௌலித் மஜ்லிஸ் 24 September 2026 அன்று மஜ்லிஸ் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்வு: சங்கைக்குரிய மௌலவீ MHM ஹன்ஸாத் ரப்பானீ

இடம்: தோஹா கத்தார்

ஆபத்தை தூராக்கி எம்மை ஆளும் முஹ்யித்தீன்!
அபாய கஷ்டத்தை அகற்றிவைப்பீர் முஹ்யித்தீன்!
உமை உண்மை கொண்டோர் உறுதி பெற்றார் முஹ்யித்தீன்!
உமை பொய் என்றோர் கடும் நஞ்சை திண்பார் முஹ்யித்தீன்!
எங்கள் முடிவை அழகாக்கி கை தாங்கும் முஹ்யித்தீன்!
எங்கள் மரண வேளையில் ஈடேற்றும் கௌதே முஹ்யித்தீன்!

إمداد کن، إمداد کن، إمداد کن
از رنج و غم آزاد کن
در دین و دنیا شاد کن
یا غوثِ اعظم دست‌گیر…

✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨ ✨

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் நடாத்தும் இரத்ததான நிகழ்வு -2026எமது ஷெய்ஹுனா ...
11/09/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ

ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் நடாத்தும் இரத்ததான நிகழ்வு -2026

எமது ஷெய்ஹுனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களின் நீண்ட ஆயுள் வேண்டி எமது சங்கத்தின் இரத்ததான முகாம் September 11 2026(வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி தொடக்கம் ஹமாத் வைத்தியசாலையின் புதிய இரத்த வழங்குனர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு எமது சங்க உருப்பினர்களின் ஒத்துழைப்புடன் நடை பெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் இந்நிகழ்வை சிறப்பாக நடாத்த பல்வேறு வகையிலும் உதவிகளை செய்த சகோதரர்கள், இரத்த தானம் செய்த சகோதரர்கள் மற்றும் இதற்காக பூரண ஒத்துழைப்பினை வழங்கிய ஹமாத் மருத்தவமனை நிருவாகத்தினருக்கும் எமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்
நிர்வாகம்

‎بسم الله الرحمن الرحيمவாராந்த ஸலவாத் மஜ்லிஸ்🌹🌹🌹🌹🌹🌹அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.இன்று (வியாழன் இரவு), 11 J...
11/06/2026

‎بسم الله الرحمن الرحيم

வாராந்த ஸலவாத் மஜ்லிஸ்

🌹🌹🌹🌹🌹🌹

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

இன்று (வியாழன் இரவு), 11 June 2026 பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீதிலான புனித ஸலவாத் மஜ்லிஸ் சரியாக 9.30 PM மணியளவில் எமது பின் மஹ்மூத் மஜ்லிஸ் அறையில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

மாதாந்த பயான்: மெளலவி MHM ஹன்ஸாத் (றப்பானீ)

இவ்வண்ணம்
நிர்வாகம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ…எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்க உறுப்பினர்களுக்கு இனிய ஹஜ்ப் பெருநாள் நல...
27/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ…

எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்க உறுப்பினர்களுக்கு இனிய ஹஜ்ப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்…

26/05/2026
‎بسم الله الرحمن الرحيم‎السلام عليكم ورحمة الله وبركاتهஹாஜா ஜீ  திருக்கொடியேற்றம்,  மெளலித் மஜ்லிஸ்- 2026🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹வ...
15/05/2026

‎بسم الله الرحمن الرحيم

‎السلام عليكم ورحمة الله وبركاته

ஹாஜா ஜீ திருக்கொடியேற்றம், மெளலித் மஜ்லிஸ்- 2026

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வட இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் சமாதி கொண்டு ஆட்சி புரியும் கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ அன்னவர்களினதும்
ஸாஹிபுல் ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ ஆகியோரினதும், அன்னவர்களினது அருந்தவப் புதல்வர்கள், ஆன்மீக குருநாதர் மற்றும் சங்கைமிகு கலீபா ஆகியோர்களினதும் கொடியேற்ற மஜ்லிஸ் நிகழ்வு எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் மிக விமர்சையாக 14.05.2026 அன்று 9.30 PM மணியலவில் Bin Mahmoud Majlish மண்டபத்தில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பயான்- சங்கைக்குரிய மெளலவி AJ. ஜாஸுல் ஜெஸாத் (றப்பானீ).

இவ்வண்ணம்
நிர்வாகம்

‎بسم الله الرحمن الرحيم‎السلام عليكم ورحمة الله وبركاتهபெரிய ஆலிம் வலியுல்லாஹ் நினைவு தின மஜ்லிஸ்- 2026🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹காத்...
02/04/2026

‎بسم الله الرحمن الرحيم

‎السلام عليكم ورحمة الله وبركاته

பெரிய ஆலிம் வலியுல்லாஹ் நினைவு தின மஜ்லிஸ்- 2026

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

காத்த நகரில் கண்ணுரங்கி பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் காமில் வலியும், ஷெய்ஹுனா மிஸ்பாஹி நாயகம் அன்னவர்களின் அருட் தந்தையுமான ஈழத்தின் அப்தால் அபுல் இர்பான் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவு தின மஜ்லிஸ் 2 April 2026 அன்று சரியாக 9.30 PM மணியலவில் Bin Mahmoud Majlish மண்டபத்தில் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பயான்: சங்கைக்குரிய மெளலவி AH ஸகீஸாத் றப்பானீ

இவ்வண்ணம்
நிர்வாகம்

‎بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ…எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்க உறுப்பினர்களுக்கு...
20/03/2026

‎بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ…

எமது ஹுப்புல் பத்ரிய்யீன் சங்க உறுப்பினர்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் -2026 நல்வாழ்த்துக்கள்…

Wishing you and your family a joyful and blessed Eid ul-Fitr 2026. May this special day bring peace, happiness, and pros...
19/03/2026

Wishing you and your family a joyful and blessed Eid ul-Fitr 2026. May this special day bring peace, happiness, and prosperity into your life…

‎بسم الله الرحمن الرحيمஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹுமுப்பெரும் நாதாக்களின் நினைவுதின மஜ்லிஸ்~2026⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐...
12/03/2026

‎بسم الله الرحمن الرحيم

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

முப்பெரும் நாதாக்களின் நினைவுதின மஜ்லிஸ்~2026

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிர் ஸூபி காதிரி ஹைதராபாதீ ரழியல்லாஹு அன்ஹு,
அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரீ ரழியல்லாஹு அன்ஹு,
அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் ஸூபி காதிரி ரழியல்லாஹு அன்ஹு, அன்னவர்களின் நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வு இன்று 12.03.2026 (வியாழன் பின்னேரம்) பின் மஹ்மூத் மஹ்மூத் மஜ்லிஸ் அறையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வண்ணம்
நிர்வாகம்

Address

Bin Mahmoud
Doha
15054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hubbul Badhriyeen Association Qatar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hubbul Badhriyeen Association Qatar:

Shortcuts

Share