KELAB BELL TAMIL Malaysia

KELAB BELL TAMIL Malaysia To Develop Tamil Culture, Literature , Language and Art
தமிழ் மொழி,கலை,ப? To Develop Tamil Culture, Literature, Language and Art

27/07/2026
27/06/2026

தமிழ் இளைஞர் மணி மன்றத்திலிருந்து ஓய்வு பெறுகிறவர்கள் விரும்பினால் மலேசியத் தமிழ் மணி மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்து கொள்ள அழைக்கின்றோம்.


தமிழ்த் தாத்தா முனைவர் சு.வை.லிங்கம் அழைப்பு

இளைஞர் அமைச்சின் வயது கட்டுபாடு காரணமாக தமிழ் இளைஞர் மணி மன்றத்திலிருந்து உறுப்பினராக செயல்பட முடியாதவர்கள் தொடர்ந்து மணி மன்ற உணர்வோடு செயல்பட வயது கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் மலேசியத் தமிழ் மணி மன்றத்தில் உறுப்பினராக சேர்ந்து கொள்ள அழைக்கின்றோம்.
இளைஞர் இயக்கத்திலிருந்து வெளியேறும் தலைவர்களும் உறுப்பினர்களும் தொடர்ந்து சமூக இயக்கத்தில் பணியாற்ற வாய்ப்பை உருவாக்க படவேண்டும் என்பதற்காகவும் இளைஞர் மணி மன்றத்தில் ஆற்றிய பணியில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காகவும் வயது கட்டு பாடின்றி செயல்பட மலேசியத் தமிழ் மனி மன்றம் அமைக்கப்பட்டது.

சிலாங்கூர் மாநில தமிழ் இளைஞர் மணி மன்றப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டேன். அப்போது தேசியத் தலைவராக இருந்த திரு .க. கிருஷ்ணனசாமி கேட்டுக் கொண்டதிற்காக மாநிலப் பொறுப்பேற்றேன் . மாநிலத் தலைவராக பொறுப் புக்கு வந்த போது மாநிலத்தில் 13 மன்றங்களே தேசியப் பேரவையில் உறுப்பியம் பெற்றிருந்தன.நான் சிலாங்கூர் பொறுப்பேற்ற பின்னர் படிப்படியாக 70 க்கும் மேற் பட்ட மன்றங்களை அமைத்தேன்.

மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் முன்னாள் தேசியத் தலைவர் திருமிகு க.கிருஷ்ணசாமி காலத்தில் சிலாங்கூர் கிளானா ஜெயாவில் வாங்கப் பட்ட மன்ற கட்டிடத்தின் கடனுக்கு ஜாமின் கையெழுத்து போட்டவர்களில் நானும் ஒருவன். அது மட்டுமல்ல மண்டபத்தின் சொத்து காப்பாளராகவும் கையெழுத்துபோட்டிருந்தேன்.
வயதின் காரணமாக இளைஞர் தமிழ் இளைஞர் மணி மன்றத்திலிருந்து விலகினேன் அதன் பின் ஏறக்குறைய 15 ஆண்டு இடை வெளிக்குப்பின்னர் மலேசியத் தமிழ் மணி மன்றத்தை அமைத்தேன். தமிழுக்கு அரணாக தமிழ் மணி மன்றம் இருக்கவேண்டுமென்பது தான் எங்கள் நோக்கமாகும்.
மலேசியத் தமிழ் மணி மன்ற கிளைகளை அமைக்க விரும்பினால் விவரங்களை தெரிந்துகொள்ள மன்ற பொதுச் செயலாளர் திருமதி இரா.கோகிலவாணி [019-2665920] அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

24/06/2026
10/01/2026

தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர அனைவரும் பிரச்சாரம் செய்வோம். 10.01.2026தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவர்களின் வெற்றி சாதனைகளை எழுத்தாளர்கள்,தமிழ் ஊடகங்கள் சுட்டிக் காட்டவேண்டும். தமிழ்த் தாத்தா முனைவர் சு.வை.லிங்கம் வேண்டுகோள்.
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று சொல்லப்படுவதில் பல காரணங்கள் முன் வைக்கப்படுகிறது.மலாய், சீனப்பள்ளிகளுக்கு நமது மாணவர்கள் சென்று விடுகிறார்கள் என்பது ஒரு பெரும் காரணம் சொல்லப்படுகிறது. அந்த பள்ளிகளை விட தமிழ்ப் பள்ளிகளின் போதனை தர்ம் குறைந்து விட்டதா என்பதை ஒரு கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்விக்கு தீர்வு காண தலைமையாசிரியர்கள், வாரியமும் ஆய்வு செய்யவேண்டுமென்பது வேண்டு கோளாகும் என மலேசியத் தமிழ் மணி மன்றம், மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் தேசியத் தலைவர் தமிழ்த் தாத்தா முனைவர் சு.வை.லிங்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ப் பள்ளிகளின் கல்வித்திட்டம் மற்ற பள்ளிகளுக்கு சமமாக இருக்கிறது. நமது ஆசிரியர்களும் போதனையில் சளித்தவர்கள் இல்லை. நம் பள்ளியின் போதனையின் சிறப்புகளை தலைமையாசிரியர்களும் பெறோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் வாரிய உறுப்பினர்களும் தமிழர்களுக்கு எடுத்து சொல்லும் நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்பது நமது கோரிக்கையாகும். அவரவர் பள்ளியில் படித்தவர்கள் நாட்டில் எப்படிப்பட்ட பணி ஆற்றுகிறார்கள் என்று விவரங்களை வெளிப்படுத்தவேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம், உயர் பதவில் இருக்கின்ற அப்பள்ளியின் மூத்தமாணவர்களை கௌர விக்கவேண்டும் . அப்படி செய்வது நம் பள்ளிக்கு பெருமை சேர்க்கும்.
ஆறாம் வகுப்பு இறுதி ஆண்டு பள்ளி தேர்வு கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டது. அந்த தேர்வு தமிழ் ஊடகங்களில் வெளி வந்தபோது மாணவர்களின் திறமை வெளியிடப்பட்டது , தேர்வு முடிவு முடிவுகளை தமிழர் தெரிந்து கொண்டு தமிழ்பள்ளிகளின் போதனை உயர்வாக இருப்பதாக தெரிந்து கொண்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளியில் படிக்க வைப்பதில் ஆர்வம் கொண்டார்கள். கல்வி அமைச்சு யூபி எஸ் ஆர் ,தேர்வை நிறுத்தி தமிழ் பள்ளிகளின் போதனை சாதனைகளை நிறுத்தி வைத்தது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
மலாய், சீன பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படாத நமது பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முன் உரிமை கொடுத்து மாணவர்களுக்கு பயிற்சிய ளிக்கவேண்டும். நமது பாரம்பரிய கலைகள் சொல்லிக் கொடுக்கப்படு வதையும் தமிழ்ப் பள்ளியில் படித்த மாணவர்களின் வெற்றி சாதனை களையும் எழுத்தாளர்கள்,தமிழ் ஊடகங்கள் சுட்டிக்காட்டவேண்டும்.

Address

Taman Sri Muda
Shah Alam
40400

Website

Alerts

Be the first to know and let us send you an email when KELAB BELL TAMIL Malaysia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to KELAB BELL TAMIL Malaysia:

Shortcuts

Share