KELAB PANCATAMIL MALAYSIA

KELAB PANCATAMIL MALAYSIA மலேசியப் பைந்தமிழ்க் கழகம்
~வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி!~

👨🏼‍🍼✨👨🏼‍🍼✨👨🏼‍🍼✨👨🏼‍🍼✨👨🏼‍🍼✨👨🏼‍🍼வேராக வாழும் ஓர் நிழல்,வாழ்க்கையின் நிலத்தில் உறைந்த ஆதாரம்,தோளில் சுமைகளைச் சுமக்கும் அமைத...
15/06/2025

👨🏼‍🍼✨👨🏼‍🍼✨👨🏼‍🍼✨👨🏼‍🍼✨👨🏼‍🍼✨👨🏼‍🍼

வேராக வாழும் ஓர் நிழல்,
வாழ்க்கையின் நிலத்தில் உறைந்த ஆதாரம்,
தோளில் சுமைகளைச் சுமக்கும் அமைதியான சக்தி,
தோழமையாய் வாழும் ஒற்றை நிழல் — தந்தை.

வாங்காமல் கொடுத்துவிட்டு,
தனக்கென ஆசை இல்லாமல் வாழும் தந்தைமார்கள் அனைவருக்கும், மலேசியப் பைந்தமிழ்க் கழகத்தின் தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

நன்றி ❤️
மலேசியப் பைந்தமிழ்க் கழகம்
______________________________

Not all heroes wear capes. Some wake up early, stay late, carry silent burdens, and love with quiet strength.

To the ones who give without asking, stand without showing, and protect without praise — Happy Father’s Day.

Thank you ❤️
Kelab Pancatamil Malaysia

☪️✨☪️✨☪️✨☪️✨☪️✨☪️தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கருணையைப் போற்றும் இந்த நாளில், அமைதியும் நல்வாழ்வும் எல்லோரையும் சூழட்டு...
07/06/2025

☪️✨☪️✨☪️✨☪️✨☪️✨☪️
தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கருணையைப் போற்றும் இந்த நாளில், அமைதியும் நல்வாழ்வும் எல்லோரையும் சூழட்டும். இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

நன்றி ❤️
மலேசியப் பைந்தமிழ்க் கழகம்
_____________________________

Wishing you a joyful Hajj Eid! May this day of sacrifice, devotion, and compassion bring peace and well-being to all.

Thank you ❤️
Kelab Pancatamil Malaysia

🌳🌻🌧️🌱🌸☘️🌺🌿🍃🪷மழைமுகிலின் மென்மை,பசுமையான இலையின் நாணம்,இயற்கையின் சுவாசம் — இவையெல்லாம் சோர்ந்து போகவில்லை...நாம் தான் மற...
05/06/2025

🌳🌻🌧️🌱🌸☘️🌺🌿🍃🪷
மழைமுகிலின் மென்மை,
பசுமையான இலையின் நாணம்,
இயற்கையின் சுவாசம் — இவையெல்லாம் சோர்ந்து போகவில்லை...
நாம் தான் மறந்துவிட்டோம்.
இன்றே விழித்துக்கொள்வோம்!
சுற்றுச்சூழலே வாழ்க்கையின் நாதம்! 🌍

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்.
இந்த முக்கிய நாளை முன்னிட்டு,
மலேசியப் பைந்தமிழ்க் கழகம்
சுற்றுச்சூழலின் மதிப்பையும் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பையும் நாம் அனைவரும் உணர வேண்டும் என வலியுறுத்துகிறது.

நன்றி ❤️
மலேசியப் பைந்தமிழ்க் கழகம்

______________________________

Today is World Environment Day!

A reminder to pause, reflect, and reconnect with the
gentle rhythm of nature.

The softness of the clouds,
the shyness of a green leaf,
and the breath of the Earth – they are still with us.
We’ve just forgotten to listen.

The Earth hasn’t forgotten us.
Let today be the day we remember our responsibility.
Let us rise together to protect, preserve, and nurture our only home.

On that note, Kelab Pancatamil Malaysia
extends its heartfelt wishes on this World Environment Day,
encouraging every individual to step forward
for a greener, kinder, and more sustainable future. 🌍🌿

Thank you ❤️
Kelab Pancatamil Malaysia

👩🏻‍🏫📚🧑🏼‍🏫📚👩🏻‍🏫📚🧑🏼‍🏫📚👩🏻‍🏫📚🧑🏼‍🏫*மாதா, பிதா, குரு, தெய்வம்* தாயும் தந்தையும் வாழ்க்கையின் முதற்கல்வியைப் போதிக்கின்றனர். அத...
16/05/2025

👩🏻‍🏫📚🧑🏼‍🏫📚👩🏻‍🏫📚🧑🏼‍🏫📚👩🏻‍🏫📚🧑🏼‍🏫

*மாதா, பிதா, குரு, தெய்வம்*

தாயும் தந்தையும் வாழ்க்கையின் முதற்கல்வியைப் போதிக்கின்றனர். அதன் பின்னர், ஆசிரியரோ உயிர் வாழ்வதற்கான வழியைக் காட்டுகிறார்.

அறிவின் ஒளியைப் பரப்பி,
மனிதனை முழுமையான மனிதனாக உருவாக்கும் அந்தக் குருவைத்,
தெய்வத்துக்கும் மேலாகப் போற்றி வணங்குவோமாக!

வாழ்கையின் ஒவ்வொரு படிக்கட்டையும் கடந்து செல்லும் ஒளியாக,
அறிவையும் ஆளுமையையும் விதைக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

நன்றி ❤️
மலேசியப் பைந்தமிழ்க் கழகம்

_______________________________

They ignite minds, shape characters, and guide souls.
Before we find our place in the world,
we find our light in a teacher.

Happy Teachers' Day to the ones who build futures in silence and strength.

Thank you ❤️
Kelab Pancatamil Malaysia

🪷☸️🪷☸️🪷☸️🪷☸️🪷☸️🪷விசாக் என்றும் அழைக்கப்படும் விசாக தினமானது, சாக்கியமுனி புத்தரின் வாழ்க்கை வரலாற்றில் மூன்று முக்கிய நி...
12/05/2025

🪷☸️🪷☸️🪷☸️🪷☸️🪷☸️🪷

விசாக் என்றும் அழைக்கப்படும் விசாக தினமானது, சாக்கியமுனி புத்தரின் வாழ்க்கை வரலாற்றில் மூன்று முக்கிய நிகழ்வுகளான அவருடைய பிறப்பு, ஞானம் பெற்றது மற்றும் உலகை விட்டு மறைந்தது ஆகியவற்றை பௌத்தர்கள் நினைவுகூர்ந்து கொண்டாடும் புனித நாளாக விளங்குகிறது. விசாக தினத்தன்று, பக்தர்கள் கோவில்களுக்குச் செல்லுதல், தர்ம உபதேசம் ஓதுதல், கண்காட்சி மற்றும் பொதுச்சேவை செய்தல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு கொண்டாட்டங்களில் இணைவர்.
புத்தரின் கருணையைப் போற்றும் விதமாகவும் நமக்குள்ளும் கருணையை வளர்ப்பதற்காகவும் அதே சமயம் நம்மால் இயன்றவரை எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி பிறருக்கு உதவ வேண்டும் என்பதனை நினைவுறுத்தும் வண்ணமாகவும் இப்புனித தினத்தைக் கொண்டாடுவோமாக.
மலேசியப் பைந்தமிழ்க் கழகத்தின் விசாக தின வாழ்த்துகள்.

______________________________

Visakha Day, also known as Wesak Day, is a holy day on which Buddhists commemorate and celebrate three important events in the life of Shakyamuni Buddha: his birth, enlightenment, and passing away. On Visakha Day, devotees join in the celebrations by visiting temples, reciting Dharma teachings, participating in exhibitions, and performing public service. Let us celebrate this holy day to honor the Buddha's compassion, to cultivate compassion within ourselves, and to remind ourselves to help others as much as we can, without any expectations. On that note, Kelab Pancatamil Malaysia wishes you a great Wesak Day.

🤰🏻🤱🏼🤰🏻🤱🏼🤰🏻🤱🏼🤰🏻🤱🏼🤰🏻🤱🏼🤰🏻"உன்னையும் என்னையும்படைச்சது இங்கே யாருடாதெய்வம் ஒவ்வொரு வீட்டிலும்இருக்குதுன்னா தாயடா"உலகில் பிற...
11/05/2025

🤰🏻🤱🏼🤰🏻🤱🏼🤰🏻🤱🏼🤰🏻🤱🏼🤰🏻🤱🏼🤰🏻

"உன்னையும் என்னையும்
படைச்சது இங்கே யாருடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும்
இருக்குதுன்னா தாயடா"

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருடனும் முதலில் தொடர்பு கொள்ளும் மற்றொரு உயிர் என்றால் அது அம்மாதான். அந்தப் புதிய உயிருக்கு உலகின் அனைத்து விடயங்ளையும் கருவிலிருந்தே முதன் முதலில் அறிமுகப்படுத்துவதும் அம்மாதான். இவ்வேளையில் உலக தாய்மார்கள் அனைவருக்கும், மலேசியப் பைந்தமிழ்க் கழகமானது அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

~ காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய் மட்டுமே; அவளை என்றும் மனதில் சுமப்போமாக!

நன்றி ❤️
மலேசியப் பைந்தமிழ்க் கழகம்.
_____________________________

A mother's love and sacrifice are the pillars on which this world stands.

Motherhood is not merely a role — it is a divine calling, woven with strength, sacrifice, and boundless love. Though the journey is never easy, there exists no duty more sacred, no devotion more profound. Every mother is a masterpiece of grace, resilience, and unconditional love. Hers is a force that shapes lives, uplifts generations, and anchors the very soul of humanity.

On this special occasion, Kelab Pancatamil Malaysia offers its deepest and most heartfelt gratitude to all mothers — for their tireless perseverance, infinite patience, unwavering affection, and the extraordinary care they pour into raising their children.

To every incredible mother across the world, we honour you, we thank you, and we celebrate you. Wishing you a Mother’s Day as remarkable as the love you give.

Thank you ❤️
Kelab Pancatamil Malaysia

"உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா அர ஹோயா…"💃🕺உதிரத்தை உழைப்பாக்கி, உலகத்தை உயர்த்திடும், உழைப்பாளர் பெருமக்கள்...
01/05/2025

"உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா அர ஹோயா…"💃🕺

உதிரத்தை உழைப்பாக்கி,
உலகத்தை உயர்த்திடும்,
உழைப்பாளர் பெருமக்கள் அனைவரையும் உள்ளத்தால் வணங்குவோம்! 🙏🏻✨
இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள். 🧑🏻‍🔧👨🏻‍⚖️🧑🏻‍💻👩🏻‍⚕️🧑🏼‍🌾🧑🏽‍🍳👩🏻‍🏫👨🏻‍✈️👷🏼‍♂️

To the hands that build, the hearts that strive, and the spirits that never give up - Today, we honour the true strength behind every nation. 🙏🏻✨
Happy Labour Day to all the champions of determination and dedication! 👨🏻‍⚖️🧑🏻‍💻👩🏻‍⚕️🧑🏼‍🌾🧑🏽‍🍳👩🏻‍🏫👨🏻‍✈️👷🏼‍♂️

புனித வெள்ளி என்பது இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் ஒரு தினமாகும். ☦️ மனித குலத்தைப் பாவத்திலிருந்து வி...
18/04/2025

புனித வெள்ளி என்பது இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வைக் குறிக்கும் ஒரு தினமாகும். ☦️ மனித குலத்தைப் பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக இயேசு தம்மையே பலியாகக் கொடுத்த உடன்படிக்கையின் நிறைவேற்றத்தைப் புனித வெள்ளி குறிக்கிறது. 🛐✝️ அவருடைய இரத்தம் இல்லையென்றால், மனிதகுலம் இரட்சிக்கப்பட்டிருக்காது.🩸✨

புனித வெள்ளியின் போது, எல்லாம் வல்ல இறைவன், அவர் பொழிந்த அனைத்து அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி செலுத்துவோம். 🙏🏻

சமயநெறியுடன் இப்புனித வெள்ளியை அனுசரிக்க மலேசியப் பைந்தமிழ்க் கழகத்தின் வாழ்த்துகள்.

நன்றி,
மலேசியப் பைந்தமிழ்க் கழகம் ❤️
........................................................................................

Good Friday is the Christian religious holiday celebrated as the day on which Jesus Christ was crucified. ☦️ Good Friday marks the fulfilment of the agreement made in the beginning where Jesus offers himself as a sacrifice to deliver mankind from sin. 🛐✝️ If not for His blood, mankind would never have been saved.🩸✨

On the occasion of Good Friday, let us thank the Almighty for all the love and blessings he has showered us with. 🙏🏻

On that note, Kelab Pancatamil Malaysia wishes you a Blessed Good Friday. 💫

Thank you,
Kelab Pancatamil Malaysia ❤️

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔சித்திரை மாதம் செழிக்கட்டும்,புதிய ஒளியில் பரிசளிக்கட்டும்!பூக்கதிராய் கனவுகள் மலர,புன்னகையாய் நாள்தோறும் விளங...
14/04/2025

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

சித்திரை மாதம் செழிக்கட்டும்,
புதிய ஒளியில் பரிசளிக்கட்டும்!
பூக்கதிராய் கனவுகள் மலர,
புன்னகையாய் நாள்தோறும் விளங்கட்டும்!

துன்பங்கள் எல்லாம் தூர விலகி,
தோழனாய் நம்பிக்கை சேரட்டும்!
உழைப்பில் ஒளியும், முயற்சியில் மெய்யும்,
உங்கள் வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்!

இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

நன்றி ♥️
மலேசியப் பைந்தமிழ்க் கழகம்
_______________________________

🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

May the month of Chithirai bloom with grace,
Bringing new gifts with each passing day.
Let dreams arise like morning rays,
And smiles light up all of your days.

May sorrow fade like passing rain,
We hope to walk with you through joy and pain.
With effort glowing and truth alight,
May victories bloom in your guiding light.

Wishing you a joyful Chithirai Puthandu!

Thank you ♥️
Kelab Pancatamil Malaysia

குறிஞ்சிப் பாட்டு மலர்கள் - பாகம் 1சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டில் கபிலரால் பாடப்பட்ட   குறிஞ்சிப்பாட்டு குறிஞ்சி நில...
13/04/2025

குறிஞ்சிப் பாட்டு மலர்கள் - பாகம் 1

சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டில் கபிலரால் பாடப்பட்ட   குறிஞ்சிப்பாட்டு குறிஞ்சி நில மக்களின் வாழ்வியல் நெறிகளையும் பண்பாட்டினையும் பறைசாற்றும் வண்ணமாக விளங்குகின்றது. குறிஞ்சி நில மக்களின் பண்பாட்டுடன் சேர்த்து, இந்தக் குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான தமிழ்ப் பூக்கள் பொதிந்து கிடக்கின்றன.

கபிலர் குறிப்பிட்டுள்ள பூக்கள், பெரும்பாலும் நாம் அறிந்தவையே. ஆனால், இன்று நடைமுறையில் அப்பூக்களை வேறு பெயர்களில் நாம் அழைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாரத்தின் பதிவின் வழி  இப்பூக்களின் பெயர்களை நாம் அறிந்து கொள்வோமாக.

நன்றி 🙏

மலேசியப் பைந்தமிழ்க் கழகம்

💮🌸🌷🪷🪻🌻🌼🌺🌹🏵️🌺🌼🌸🪷

The Kurinjipattu, as sung by Kapilar in the Sangam literary work Pattupattu, describes the lifestyle and culture of the Kurinji people. Along with the culture of Kurinji people, 99 types of Tamil flowers are embodied in this Kurinjipattu. Most of the flowers listed by Kapila are familiar to us. However, in reality today, we refer to them by various names.  Let's learn the names of these flowers in this week's post.

Thank you 🙏

Kelab Pancatamil Malaysia

குறிஞ்சிப் பாட்டு மலர்கள் - பாகம் 2சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டில் கபிலரால் பாடப்பட்ட   குறிஞ்சிப்பாட்டு குறிஞ்சி நில...
06/04/2025

குறிஞ்சிப் பாட்டு மலர்கள் - பாகம் 2

சங்க இலக்கிய நூலான பத்துப்பாட்டில் கபிலரால் பாடப்பட்ட   குறிஞ்சிப்பாட்டு குறிஞ்சி நில மக்களின் வாழ்வியல் நெறிகளையும் பண்பாட்டினையும் பறைசாற்றும் வண்ணமாக விளங்குகின்றது. குறிஞ்சி நில மக்களின் பண்பாட்டுடன் சேர்த்து, இந்தக் குறிஞ்சிப்பாட்டில் 99 வகையான தமிழ்ப் பூக்கள் பொதிந்து கிடக்கின்றன.

கபிலர் குறிப்பிட்டுள்ள பூக்கள், பெரும்பாலும் நாம் அறிந்தவையே. ஆனால், இன்று நடைமுறையில் அப்பூக்களை வேறு பெயர்களில் நாம் அழைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாரத்தின் பதிவின் வழி  இப்பூக்களின் பெயர்களை நாம் அறிந்து கொள்வோமாக.

நன்றி 🙏

மலேசியப் பைந்தமிழ்க் கழகம்

💮🌸🌷🪷🪻🌻🌼🌺🌹🏵️🌺🌼🌸🪷

The Kurinjipattu, as sung by Kapilar in the Sangam literary work Pattupattu, describes the lifestyle and culture of the Kurinji people. Along with the culture of Kurinji people, 99 types of Tamil flowers are embodied in this Kurinjipattu. Most of the flowers listed by Kapila are familiar to us. However, in reality today, we refer to them by various names.  Let's learn the names of these flowers in this week's post.

Thank you 🙏

Kelab Pancatamil Malaysia

ஈகைத் திருநாள் என்பது வெறும் பண்டிகை அல்ல, இஃது ஒரு புனிதமான பயணம் – மன்னிப்பின் அழகு, அன்பின் மகிமை, ஒற்றுமையின் ஒளி! இ...
31/03/2025

ஈகைத் திருநாள் என்பது வெறும் பண்டிகை அல்ல, இஃது ஒரு புனிதமான பயணம் – மன்னிப்பின் அழகு, அன்பின் மகிமை, ஒற்றுமையின் ஒளி! இந்தப் புனித நாளில் உங்கள் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி, மற்றும் நல்லோர்கள் சூழட்டும்! உங்கள் இதயத்தில் வெள்ளி நிலவு போல் ஒளிரும் சந்தோஷம் என்றும் நிலைக்கட்டும்! ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!

நன்றி,
மலேசியப் பைந்தமிழ்க் கழகம் ❤️🤲🌙🕌

The Eid-al-Fitr is not just a celebration; it is a sacred journey – a journey of forgiveness, the glory of love, and the light of unity. On this blessed day, may peace, joy, and kindness surround your life. May happiness shine in your heart like the silver moon and remain forever.

On this joyous occasion, Kelab Pancatamil Malaysia wishes you an Eid Mubarak filled with peace, prosperity, and endless blessings.

Thank you,
Kelab Pancatamil Malaysia ❤️🤲🌙🕌

#ஈத்முபாரக் #தமிழ்மொழி #தமிழ்சமூகம் #தமிழ் #ஈகைத்திருநாள்
#2025
#00

Address

Petaling Jaya

Alerts

Be the first to know and let us send you an email when KELAB PANCATAMIL MALAYSIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to KELAB PANCATAMIL MALAYSIA:

Share