20/05/2022
*வாழ்க்கை மலர்கள்:*
*தியாக உணர்வு*
எல்லோரும் என்னை அருள்தந்தை என்று அழைக்கிறீர்கள். ஆனால், உங்களுடைய திருமணத்தை நான் நேரடியாகப் பார்க்கவில்லை. ஆனால் இன்று அகக்காட்சியாகப் பார்க்கிறேன்.
நீங்கள் சாதாரணமாகப் பெண்மையைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என்ற தேவையே இல்லை. உள்ளதைப் பாராட்டினாலே போதும். சாப்பாடு செய்து போட்டால் ரொம்ப நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் இல்லையா? நாக்கு வராது. அதை மாற்றிக் கொள்ள வேண்டும். இனிமேல் காலை முதல் மாலை வரை யார் நன்மை செய்தாலும் நன்றி பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும். அது பண்பாட்டின் உயர்வு. இனி மேல் இந்தப் பண்பாடு எல்லா இடத்திலும் வரவேண்டும்.
உலகத்திலேயே நட்பு மிகமிகச் சிறந்தது; பயனுடையது; அதிலே
கணவன் – மனைவி நட்பைப் பற்றிச் சாதாரணமாகச் சொல்ல முடியாது. அத்தகைய நட்பு எந்த விதத்திலும் மேலானதாகவும், மேன்மையுறவும், வளர்ச்சி பெறவும், வலுப்பெறவும் இரண்டு பேருடைய வாழ்க்கையும், தூய்மையானதாகவும், மேன்மையுடையதாகவும் இருக்க வேண்டும்.
அப்போது அவர்களின் குழந்தைகள் எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பாருங்கள். இந்த உயர்வான நன்மையைக் கருதி முன் ஏதேனும் பிணக்கு இருந்தாலும் மன்னித்து விடுங்கள். மன்னிக்க முடியாத குற்றமேயில்லை. எல்லோரும் ஒருவருக்கொருவர் தியாக உணர்வுடன் வாழ்கிறீர்கள். அந்த உணர்வையே நினைவில் வைத்துக் கொண்டு சிறு சிறு குற்றம், குறைகள் இருந்தால் அவைகளை எல்லாம் போக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ உங்கள் அனைவரையும் இறைநிலையில் மனதை நிறுத்தி வாழ்த்துகிறேன்.
*- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி*
*Daily A Noble Thought*
*Sacrificial Attitude*
Everyone calling me as ‘Spiritual Father’. But, I have not seen your marriage directly. But, could see it as a inner-scene now.
There is no need for you to appreciate the feminine extra ordinarily. It’s enough if you appreciate what is there. You can congratulate if the served food is nice, isn’t it? Your tongue might not have inclined for it. You should change that attitude. Should start learning to thank everyone who does some good things, from morning till evening. That’s excellence in culture. This culture should come everywhere from now on.
Friendship is great thing in world; it’s beneficial; in that, just can’t say normally about the friendship between husband and wife. This friendship should be superior, excellent, ever growing, strong enough for both of couple’s life to be neat and high.
Just imagine how their children would be in such a scenario. Considering this great benefit, forgive each other even if any conflict exist already. There is no such crime which cannot be forgiven. Everyone is living with attitude of sacrifice for each other. Keeping the mind in the state of almighty, I bless all of you to lead life happily remembering such feeling, clearing off all tiny crime and deficiencies.
*- Vethathiri Maharishi*