sri bala subramaniar kampung awah

sri bala subramaniar kampung awah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sri bala subramaniar kampung awah, Community Center, Jalan Temerloh-Maran, Kampung Awah.

“58-ஆம் ஆண்டு சித்திரை நிறைமதி பெருவிழா" ("சித்திரை பௌர்ணமி மஹோற்சவ திருவிழா")03.05.2026 (ஞாயிற்றுக்கிழமை / SUNDAY)அன்பு...
03/04/2026

“58-ஆம் ஆண்டு சித்திரை நிறைமதி பெருவிழா"

("சித்திரை பௌர்ணமி மஹோற்சவ திருவிழா")

03.05.2026 (ஞாயிற்றுக்கிழமை / SUNDAY)

அன்புடையீர், வணக்கம்.
மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலமுமாக விளங்கும் மலேசியா என்னும் தீபகற்பத்தின் கிழக்கு பகுதி பகாங் மாநிலத்தில் அமைந்துள்ள கம்போங் ஆவா, அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் தன்னை நாடி வரும் பத்த அடியார்களின் துன்பங்களை களைந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கும் குறிஞ்சி நிலக்கடவுளாக விளங்கும் குன்றிற குமரன் அருள்மிகு பாலசுப்பிரமணியர் முருகப்பெருமானுக்கு,

திருவள்ளுவர் ஆண்டு 2057 சித்திரை திங்கள் 28-ஆம் நாள் (03.05.2026 ஞாயிற்றுக்கிழமை) நன்னாளில் "சித்திரை நிறைமதி பெருவிழா" மிக நேர்த்தியாக நடைபெற திருவருள் கூடியுள்ளது. அவ்வண்ணம் கம்போங் ஆவாவில் வீற்றிருக்கும் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் ஆண்டுதோறும் நிகழ்கின்ற "சித்திரை நிறைமதி திருவிழா" 23/04/2026 தொடங்கி 04/05/2026 வரை 12- நாட்களாக பின்வரும் நிகழ்ச்சி நிரலின்படி மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. பத்தர்கள் அனைவரும் திரளாக வருகை தந்து முருகப்பெருமானின் அருள் பெற்றுய்யுமாறு என மனமுவந்து அழைக்கின்றோம்.




25/10/2025
*கம்போங் அவா, அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியம் திருக்கோயில் பக்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம். *🙏🏼🙏🏼 கந்தர் அறுமி திர...
15/10/2025

*கம்போங் அவா, அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியம் திருக்கோயில் பக்த நல்லுள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்.

*🙏🏼🙏🏼 கந்தர் அறுமி திருவிழா 2025 (கந்த சஷ்டி விரதம்) 🙏🏼🙏🏼 /

,🙏🙏Kantar Aṟumi Thiruvizha 2025 (Kanda Sashti Viratam 2025) - 22/10/2025 to 28/10/2025*🦚🦚🐓🐓

அன்புடையீர், வணக்கம்.
திருவள்ளுவர் ஆண்டு 2056 ஐப்பசி திங்கள் 10-ஆம் நாள் வளர்பிறை (ஆங்கிலம் 27.10.2025) திங்கட்கிழமை நன்னாளில் "கந்த சஷ்டி திருவிழா" மிக நேர்த்தியாக நடைபெற திருவருள் கூடியுள்ளது. அவ்வண்ணம் கம்போங் ஆவாவில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயில் ஆண்டுதோறும் நிகழ்கின்ற " கந்த சஷ்டி திருவிழா" 22.10.2025 தொடங்கி 28.10.2025 வரை 7- நாட்களாக பின்வரும் நிகழ்ச்சி நிரலின்படி மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. பத்தர்கள் அனைவரும் கந்த சஷ்டி பூசனையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். திரளாக வருகை தந்து முருகப்பெருமானின் அருள் பெற்றுய்யுமாறு என மனமுவந்து அழைக்கின்றோம்.

🦚தினசரி காலை மற்றும் மாலை சிறப்பு திருமஞ்சனம், பதினாறு திருப்பணி விடைகள் பூசனை, (ஷோடச உபசாரம்) 108 போற்றி,
கந்த சஷ்டி கவசம் முற்றோதல்🦚

🦚Daily Morning and Evining Special Abisagam, Poojas with 16 Thirupanividai Rituals (Shodasa Upacharam) performed for Lord Murugan, 108 Potri, Recitation of Kanda Sashti Kavasam🦚

sri bala subramaniar kampung awah

Address

Jalan Temerloh-Maran
Kampung Awah
28030

Telephone

+60139681071

Website

Alerts

Be the first to know and let us send you an email when sri bala subramaniar kampung awah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share