13/01/2026
2026 - ஆம் ஆண்டின் பள்ளியின் முதல் நாள் ( 12.1.2022 - திங்கள் ).நாள் இனிதே நடந்தேறியது ஆகவே, இவ்வாண்டு கல்வி பயணத்தை இனிதே தொடர வருகை புரிந்த மாணவர்கள் அனைவரும், கல்விக்கேள்விகளில் சிறந்து விளங்க வாழ்த்தி, அவர்களை அன்போடும் வரவேற்றோம். தொடர்ந்து 9 ஆண்டுகளாக நாம் நற்பணி இயக்கம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு பொருட்களையும் இனிப்பு வகைகளையும் வழங்கி கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இவ்வாண்டு பெருவாஸ் தமிழ்ப்பள்ளி பள்ளியில் பயிலும் அனைத்தும் மாணவர்களுக்கு பள்ளி சீருடையும் உபகரண பொருட்களும் வழங்க பட்டது. தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பை நல்கி வரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு குணசீலன் அவர்களுக்கும் பள்ளியின் ஆசிரிசியர்களுக்கும் மற்றும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
*தமிழ்ப்பள்ளியே நம் தேர்வு* எனும் வேட்கையோடு நமது பள்ளியில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்தமைக்குப் பள்ளியின் சார்பில் நன்றிகள்.