29/07/2025
ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி
நிலையான வளர்ச்சியுடன்
ஆரோக்கியமான சமுதாயம் என்றால் என்ன? நாம் இதை அறிமுகப்படுத்துவதன் நோக்கம்தான் என்ன?
ஒரு சமுதாயம் ஆரோக்கியமானது என்று சொல்லும்போது, அது தனிமனித ஆரோக்கியங்களையும், அந்த மனிதர்கள் வாழும் சுற்று சூழ் நிலைகளின் ஆரோக்கியங்களையும் உள்ளடக்குவதாகும்.
தனி மனித ஆரோக்கியம் என்று பார்த்தால் அவற்றை 3 வகையாக பிரிக்கலாம்.
• மன ஆரோக்கியம்
• உடல் ஆரோக்கியம்
• உறவுமுறை ஆரோக்கியம்
சமூக ஆரோக்கியம் என்று பார்த்தால் அவற்றை நாம் பின்வருமாறு பார்க்கலாம்
• சமூக உறவுமுறை ஆரோக்கியம்
• கல்வி ஆரோக்கியம்
• சுற்றுசூழல் ஆரோக்கியம்
• பொருளாதார ஆரோக்கியம்
• அரசியல் ஆரோக்கியம்
• உட்கட்டமைப்பு ஆரோக்கியம்
o தகவல் தொழில்நுட்பம் ஆரோக்கியம்
o சுகாதாரசேவை ஆரோக்கியம்
o தொழிற்படு எரிசக்தி ஆரோக்கியம்
o புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆரோக்கியம்
o புதுப்பிக்கமுடியாத எரிசக்தி ஆரோக்கியம்
o போக்குவரத்து ஆரோக்கியம்
o தொழில்துறை ஆரோக்கியம்
o சட்டம் / ஒழுங்கு ஆரோக்கியம்
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சீரழிவுக்கும், காலாச்சார சீரழிவுக்கும் உள்ளாகி, உருக்குலைந்து அடையாளமின்றி அனாதையாக ஏங்கி நிற்கும் எமது தமிழ் சமுதாயத்தினை, ஒரு சீரானமுறையில் சிந்திக்க வைக்கவும், நேர்த்தியான வழியில் செயட்பட வைக்கவும் விரும்பி நிற்கும் நாம் ஆரோக்கியமான சமுதாயம் என்னும் ஒரு வழிகாட்டலை அறிமுகப்படுத்துகிறோம்.
காலாச்சார சீரழிவுக்கும், பொருளாதார சீரழிவுக்கும் உள்ளாகி உள்ள எமது சமுதாயத்தை திருப்பி கட்டியெழுப்புவது எப்படி?
நீதி, நேர்மை, நியாயம், சமத்துவம் ஆகிய தூண்களை கலை, கலாச்சாரம், பண்பாடு, பராம்பரியம் ஆகிய சமுதாயத்தின் அடிப்படை கூறுகளிலிருந்து கட்டிய எழுப்ப படவேண்டும். இந்த அணுகுமுறையை நாம் நிலத்தை பதப்படுத்தல் (Prepare the Ground) என்று அழைக்கிறோம். பயிர்ச் செய்கையின் முற்பாடு நிலம் பதப்படுத்தல் முக்கியம்.
நிலத்தை பதப்படுத்தல் (Prepare the Ground) என்னும் அடிப்படையில் இளம் சமுதாயத்தினரை பகுத்தறிவு உள்ளவர்களாகவும், ஒரு முழுமையான மனிதர்களாக உருவாக்குவதற்குமுரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
முழுமையான மனிதன் என்று நாம் சொல்லும்போது, அது ஒரு பிள்ளை பிறந்து வளர்ந்து வாழ்கையில் அன்பு, பண்பு, பாசம், நேசம், கருணை போன்ற குணாதிசியங்களுடன் சீரிய கட்டுப்பாடு, நேர்த்தியான சிந்தனை, வாக்குத்தவறாமை போன்ற அணுகுமுறைகளுடன் விடாமுயற்சி, கடினஉழைப்பு, மற்றவர்களிடம் தங்காது சொந்தக்காலில் நின்று வெற்றியை தழுவிக்கொள்ளும் மனப்பான்மையுடன் ஒரு முழுமையான மனிதனாக நிறைவு பெறுவதே.
இவற்றிக்கான அறிவு உள்வாங்குதல் என்பது அவர் பிறப்பிலிருந்து 5 ஆவது வயதிற்குள் பெற்றோர்களாலும், 5 இலிருந்து 12 வயதிற்குள் பெற்றோர்கள், ஆரம்பப்படசாலை, சுற்றாடல் போன்றவற்றாலும் தூண்டப்படுகின்றன (Influence).
இளம் சமுதாயத்தினரே, தன்னம்பிக்கை (Self-Confidence), மனஉறுதி (Determination), தன்முனைப்பாற்றல் ( Self-Motivation), ஊக்கத்தோடு கூடிய ஆர்வம் (Enthusiasm), மனத் திண்மை (WillPower) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு விடாமுயற்சியுடன் (Perseverance) எவற்றையும் முன்னெடுத்தால் நாம் வாழ்க்கையில் ஒரு இலக்கையடைய முடியும்.
கல்வி ஆரோக்கியம் ஒரு முக்கியமான அங்கம். எமது பிள்ளைகள் O/L தரத்தில் இணைக்கப்பட்டுள்ள 9 பாடங்களையும் தாமாக மனம் விரும்பி படிக்க வேண்டும். 9 பாடங்களும் அவர்கள் தேர்வில் வசதியாக தேர்ச்சி பெற வேண்டும். இந்த 9 பாடங்களும் தங்களை யார் என்று கண்டறிய உதவும். இந்த அறிவே இவர்களின் பகுத்தறிவையும், வாழ்க்கையில் முன்னோக்கி போகக்கூடிய தன்மையும் தரும்.
இன்றைய நாட்களில் இவற்றிற்கு முட்டுக்கட்டையாக நாடு முழுக்க வறுமை முளைத்து நிற்கிறது.
வயிற்று பசியுடன் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மனிதனால் சரியான சிந்தனையுடனும் நேர்த்தியான செயற்பாட்டுடனும் இயங்குவது மிக சிரமம். அதனால் முதலில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டுவரும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி ஓரளவுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் மேலேவரத் தொடங்குகையில், நாம் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்குரிய வேலைத்திட்டங்களை முன்வைக்கலாம் .
இவற்றை எங்கிருந்து ஆரம்பிக்கலாம்? எமது அடிப்படை அணுகுமுறை.
நாம் ஆரம்பிக்க வேண்டியது, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை வறுமைக்கோட்டிற்கு மேல் கொண்டுவர வேண்டும்.
அவர்களுக்கு நிரந்தர வருமானம், நிரந்தர வசிப்பிடம், நிரந்தர சமூக உறவு அமையும்போது,
•அவர்கள் மனதில் நிம்மதியும் ஓர் திடமான நம்பிக்கையும் ஏற்படும்.
இதனைத்தொடர்ந்து நேர்மறையாக
•சுயமாக சிந்திக்க தோன்றும்
•அறிவை வளர்க்க தோன்றும்
•வாழ்க்கையின் அடுத்தபடிக்கு போக முனையும்
•படைப்பாற்றல் மற்றும் புதுமை நிறையும்
ஒரு தனி நபரின் விருத்தி பின் சமூக விருத்தியாக விரிவடைந்து ஒரு தன்னிறைவான சமூகத்தை அதாவது ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும்.
ஓரளவுக்கு நிலத்தை பதப்படுத்தும் நிலைப்பாடுகளை மேற்கொண்டபின், அவற்றை ஒரு நிலையான மாற்றமாக கொண்டு வருவதானால், அவற்றிற்குரிய சூழ் நிலைகளையும் உருவாக்க வேண்டும் அவற்றில் முக்கியமான அங்கம் நிரந்தர வருமானம்.
நாம் முதலில் குடிசைக் கைத்தொழில், அதை தொடர்ந்து, மைக்ரோ இண்டஸ்ட்ரி எனும் பாதையில் போக வேண்டும்.
இவ்வளவு விஷயத்தையும் நாம் சொல்கிறோம், இதில் எமது பங்குதான் என்ன?
நாம் ஆரோக்கியமான சமுதாயம் HealthSoc என்னும் NGO, மற்றும் www.healthsoc.org எனும் இணையத்தள வாயிலினூடாகவும் ...
மேல் சொல்லப்பட்ட அணுகுமுறைகளை நடைமுறைப் படுத்துவதற்காக கடந்த 3 வருடமாக நாம் உருவாக்கி வரும் பிளாட்போர்ம் ஒரு நடைமுறை பாதையை கொண்டுவரும் என உறுதியாக உள்ளோம்.
எமது முக்கியமான நோக்கம் தமிழ் சமுதாயத்தை பொருளாதார வளர்ச்சியில் மேற்படுத்தி, ஒரு தன்னிறைவான சமுதாயமாக மாற்றியமைப்பதே. இந்த பயணத்தில் எங்களுடன் சேர்ந்து ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி செல்வோம் என அன்புடன் அழைக்கிறோம்.
நடைமுறையில் எமது முதன்மையான சிந்தனையும் செயற்பாடும் எம்மை சுற்றவர உள்ள இயற்கை வளங்களை பயன் படுத்தி.
•பசியை தீர்ப்போம்
•அறிவை வளர்ப்போம்
•அபிவிருத்தியை பேணுவோம்
•பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்போம்
•நம்பிக்கையை நிலைநிறுத்துவோம்
•நிம்மதியாக திருப்தியுடன் மகிழ்ச்சியாக வாழ
ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்.
துரைராஜா முகுந்தராஜ்
முக்கிய குறிப்பு: நாளைய சமுதாயத்தின் தலைவர்கள் நீங்கள் தான் என்பதை அனுசரித்துக்கொண்டு முடிவுகளை நீங்களே எடுக்க பழகுங்கள். பலவிதமான போர்வையை போர்த்துக்கொண்டு, தமது சொந்த நோக்கத்திற்காக உங்கள் வாழ்கையில் விளையாடுபவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். உங்களுக்காக மற்றவர்களை முடிவெடுக்க அனுமதிக்காதீர்கள். உங்களில் முழுநம்பிக்கை வைத்து உறுதியாக, ஆரோக்கியமாக சிந்தித்து செயட்படுங்கள் வாழ்க்கை சிறக்கும்.