FAM Federation of Aspiring Mavericks
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்❤️🔥

03/12/2025

வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு எங்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணங்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் ஏனைய தண்ணீர் போத்தல்கள் மற்றும் விசுக்கொத்து பொதிகள் வெருகல் பிரதேசசபையினரிடம் முறையாக கையளிக்கப்பட்டது.
❤️🔥

வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட குறிப்பிட்ட சில  பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வி...
03/12/2025

வெருகல் பிரதேச சபைக்குட்பட்ட குறிப்பிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு கிட்டத்தட்ட 2000L+ (2000லீற்றர்) குடிநீர்ப்போத்தல்கள் , 250 மதிய உணவுப்பொதிகள் , உலர் உணவுப்பெட்டிகள் , விசுக்கோத்து பெட்டிகள் போன்றவற்றை சேகரித்து 02/12/2025 (செவ்வாய்க்கிழமை ) கடல் வழியாக கொண்டு பாதிக்கப்பட்ட மக்களில் கைகளில் சேர்த்திருந்தோம்.

தரை வழிப்போக்குவரத்து (திருகோணமலை-மட்டக்களப்பு வீதி ) முற்றாக தடைப்பட்டிருந்த வேளையிலும் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய கடல் மார்க்கமாக போக்குவரத்தை ஏற்படுத்தி பாதுகாப்பாக எங்களை அழைத்துச்சென்று வந்த பட்டணத்தெரு பத்தாம் குறிச்சியை சேர்ந்த மீனவர் சமூகத்துக்கும் , பொருட்களை மக்களிடத்தில் வழங்கும்போது துணையாக நின்ற பத்தாம் குறிச்சி இளைஞர்களுக்கும் இக்கணத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

எங்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க பாதிக்கப்பட்டமக்களுக்கு எங்களூடாக உதவிபுரிந்த அனைவருக்கும் நன்றிகள்.

தொடர்ந்து பயணிப்போம் ❤️🔥

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருக்கும் உறவுகளின் குடிநீர்த்தேவையை தற்காலிகமாக பூர்த்தி செய்யும் நோக்கில் எங்கள...
01/12/2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்திருக்கும் உறவுகளின் குடிநீர்த்தேவையை தற்காலிகமாக பூர்த்தி செய்யும் நோக்கில் எங்கள் FAM அமைப்பினால் மூடிய (sealed) குடிநீர் போத்தல்களை (1L,5L)சேகரித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்கிறோம்.

உங்களுடைய பங்களிப்பும் தற்காலிகமாக ஒருவரின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்யும்.
ஆகையால் எம்முடன் கைகோர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த இடரில் உறுதுணையாகவிருங்கள்

📞 தயவு செய்து அழைக்கவும் உங்கள் வீடு தேடி நாங்கள் வருகிறோம்:

0707365678 0768765678
0769123027 0763555537

Good luck to all the A/L Students facing their exams! You've worked incredibly hard for this moment. Believe in yourself...
10/11/2025

Good luck to all the A/L Students facing their exams! You've worked incredibly hard for this moment. Believe in yourself and trust in all that preparation.❤️🔥

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் குருப்பு. Fearlessness, generosity, wisdom, and zeal – these four are...
27/09/2025

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் குருப்பு.

Fearlessness, generosity, wisdom, and zeal – these four are the essence of leadership.

திருக்கோணமலை இ.கி.ச. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில், இளைஞர்களின் தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்குடன், 07-09-2025 அன்று FAM அமைப்பானது மூன்று நாள் “Leadership Scout Workshop” ஒன்றை அனுசரணை செய்துவைத்தது.

இத்திட்டத்தின் மூலம் தங்கள் சமூகத்திலும், நாட்டிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சிறந்த தலைவர்களாக வளர்வதற்கான வழிகாட்டுதலை பெறுவர்.

தொடர்ந்து பயணிப்போம் ❤️🔥

உங்கள் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி அறிவை பகிருங்கள்! 📚உங்கள் பழைய புத்தகங்கள், வேறொருவரின் புதிய வாய்ப்பாக மாறலாம். 2...
03/04/2025

உங்கள் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி அறிவை பகிருங்கள்! 📚

உங்கள் பழைய புத்தகங்கள், வேறொருவரின் புதிய வாய்ப்பாக மாறலாம். 2025 மே 30க்குள் உங்கள் புத்தகங்களை வழங்கி, ஒரு சிறந்த மாற்றத்தை உருவாக்குங்கள்!
இந்த அருமையான முயற்சியில் பங்கேற்று, அறிவை பகிர்ந்து நல்லதை செய்யுங்கள்.

தொடர்ந்து பயணிப்போம் ❤️🔥

Donate Your Books, Share the Knowledge! 📚

Your old books can open new doors for someone in need. Help us collect books before May 30, 2025, and be a part of a positive change!
Let's come together, share wisdom, and make a lasting impact.

We'll keep running ❤️ 🔥

உங்கள் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி அறிவை பகிருங்கள்! 📚உங்கள் பழைய புத்தகங்கள், வேறொருவரின் புதிய வாய்ப்பாக மாறலாம். 2...
27/03/2025

உங்கள் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி அறிவை பகிருங்கள்! 📚

உங்கள் பழைய புத்தகங்கள், வேறொருவரின் புதிய வாய்ப்பாக மாறலாம். 2025 மே 30க்குள் புத்தகங்களை வழங்கி நல்ல மாற்றத்தை உருவாக்குங்கள்!
எங்களுடன் இணைந்திடுங்கள் மற்றும் இந்த அருமையான முயற்சியில் பங்கேற்கவும்.

தொடர்ந்து பயணிப்போம் ❤🔥

Donate Your Books, Share the Knowledge! 📚
Your old books can create new opportunities for someone in need. Help us collect books before May 30 and make a difference!
Join with us and be a part of this.

We'll keep running ❤🔥

-ஒளிவிழிந்து கல்வி உறின் கல்விஇடும்பை திருத்தி விடும்-எமது FAM அமைப்பினால் கடந்த 2025.02.25 மற்றும் 2025.02.09 ஆம் திகதி...
26/02/2025

-ஒளிவிழிந்து கல்வி உறின் கல்வி
இடும்பை திருத்தி விடும்-

எமது FAM அமைப்பினால் கடந்த 2025.02.25 மற்றும் 2025.02.09 ஆம் திகதிகளில் "கல்வித்தழல் " செயற்திட்டத்தின் 3வது கட்டமாக
தி/விபுலானந்தா கல்லூரி உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கு
வினாத்தாள் பயிற்சி புத்தகங்கள் மற்றும் வளநூல் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்ந்து பயணிப்போம் ❤🔥

Like a lamp that spreads light, education removes the sorrows of those who pursue it.

Our FAM organization provided question papers, practice books and resource books to the Advanced Level Science students of Vipulananda College on 2025.02.25 and 2025.02.09 as part of the 3rd phase of the "Kalvithazhal" project.

We'll keep running ❤🔥

-கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்-எமது FAM அமைப்பினால் கடந்த 2024.12.19 அன்று "பயிலரங்கம் "...
16/01/2025

-கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்-

எமது FAM அமைப்பினால் கடந்த 2024.12.19 அன்று "பயிலரங்கம் " செயற்திட்டத்தின் 3வது கட்டமாக
தி/இலிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயம் தரம் 10,11 மாணவர்களுக்கு கணித பாட செயலமர்வு மிக சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. இக் கருத்தரங்கின் போது மாணவர்களுடன் ஒவ்வொரு பாடத்தினையும் கற்பதற்கான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதோடு மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சந்தேகங்கள் கேட்டறியப்பட்டு தீர்வுகளும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பயணிப்போம்❤🔥

"The learned are said to have eyes on their faces;
The unlearned have only two sores instead."

An education seminar program "PAYILARANGAM 3.0" was conducted by our FAM organization on 2024.12.19.
the maths seminar was conducted for T/lingapuram Saraswathi Vidyalayam grade 10 and 11 students.During this seminar students were discussed about the methods of learning each subject and their personal problems and doubts were asked and solutions were provided.

We'll keep running ❤🔥

மக்களின்  கவனத்திற்கு!வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயல் மேலும் தீவிரம் அடைந்து கிழக்கு மாகாண கரையோரப் பகுதியை நோக்க...
24/11/2024

மக்களின் கவனத்திற்கு!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயல் மேலும் தீவிரம் அடைந்து கிழக்கு மாகாண கரையோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த அனர்த்த நிலமைகளின் போது எவ்வாறு முன்னெச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்பது பற்றிய சிறிய விழிப்புணர்வை உங்களுடன் பகிர்ந்துள்ளோம்.

கனமழை மற்றும் புயல் காரணமாக ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தொடர்பினை ஏற்படுத்துங்கள்.

முற்கூட்டியே தயாராவோம்! தன்னார்வலர்களை இணைந்து செயல்பட அழைக்கிறோம்

077 918 5685

070 736 5678

076 357 2139

Attention people!

The cyclone that has formed in the Bay of Bengal has intensified and is moving towards the Eastern Province coast.

We have shared with you a little awareness on how to be alert during these disaster situations.

If you need any assistance due to heavy rain and storm, please contact us.

Let's prepare in advance! We invite volunteers to work together

உங்கள் பாதுகாப்புடன் தொடர்ந்து பயணிப்போம் ❤️🔥

Address

Trincomalee

Website

Alerts

Be the first to know and let us send you an email when FAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share