11/06/2025
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு இலங்கை சுற்றாடல் அமைச்சினால் நடாத்தப்பட்ட பசுமையான புகையிரத நிலையங்களுக்கான போட்டியில் இகில இலங்கை ரீதியில் திருகோணமலை மாவட்ட இரயில் நிலையம் முதலாமிடத்தை பெற்று அதிமேதகு ஜனாதிபதியின் கையினால் விருதினை பெற்றுக்கொண்டது. இதனை பாராட்டி கௌரவிக்கும் முகமாக Trinco Aid நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாராட்டு நிகழ்வு மற்றும் மரம் நடுகையும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வினில் பிரதேச செய்லாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், நகர சபை செயளாலர் மற்றும் உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை பணியக தலைவர், மேனால் தலைவர் மற்றும் முகாமையாளர், MEPA அமைப்பின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், சாரணிய இயக்க ஆணையாளர் மற்றும் சாரணர்கள், Blossom சிரார் பள்ளி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், ஊடகவியலாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மற்றும் Trinco Aid உத்தியோகத்தர்கள் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பாராட்டு நிகழ்வினை சிறப்பித்ததுடன் Trinco Aid இனுடைய Environmental Ambassador அவர்களின் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் 50 கல்யாண புங்கை மரங்களும் வருகை தந்திருந்த விருந்தினர்களால் நாட்டப்பட்டது.
Trincomalee District Railway Station Wins First Place in Green Railway Stations Competition
In celebration of World Environment Day, the Trincomalee District Railway Station was awarded First Place in the Green Railway Stations Competition organized by the Ministry of Environment of Sri Lanka. The award was presented by His Excellency the President in recognition of the station’s outstanding environmental practices.
To commemorate this achievement, Trinco Aid organized an Appreciation Ceremony and Tree Planting Event. The ceremony was attended by a distinguished group of guests, including:
• The Divisional Secretary and Officers
• The Secretary and Officers of the Urban Council
• The Chairman of the Tourism Bureau
• The Head and Manager of the Railway Main Office
• The Director and Officers of the Marine Environment Protection Authority (MEPA)
• The Scout Movement Commissioner and Scouts
• The Principal, teachers, parents, and students of Blossom Sirar School
• Journalists and health officials
• Trinco Aid officials
• The Station In-charge and Railway Officers
As a symbolic gesture towards environmental conservation, 50 Kalyana Pungai saplings were planted under the One Lakh Sapling Plantation Project, spearheaded by Trinco Aid’s Environmental Ambassador.