15/03/2026
மக்களின் நிலையறிந்து மலசலகூடங்களை அமைத்துக் கொடுத்த ஊடறு பெண்கள் அமைப்பு / காப்போம் அமைப்பு.
சமூகத்தின் தேவைகளை நன்கு புரிந்து செயல்பட்டு வரும் ஊடறு பெண்கள் அமைப்பும் மற்றும் காப்போம் அமைப்பும், மக்கள் எதிர்கொண்ட அடிப்படை சுகாதார பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு பல குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகளை அமைத்துக் கொடுத்து மனிதநேய சேவையை செய்து வருகின்றன.
பல ஆண்டுகளாக பொருளாதார சிக்கல்கள் காரணமாக மலசலகூட வசதியின்றி வாழ்ந்து வந்த குடும்பங்களின் நிலையை அறிந்து, அவர்களின் ஆரோக்கியமும் மரியாதையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த அமைப்புகள் முன்னெடுத்து இந்த உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தின.
மலசலகூட வசதி இல்லாமை காரணமாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில், இந்த சேவை அவர்களின் தினசரி வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரமான வாழ்க்கை முறையை உருவாக்கவும், நோய்கள் பரவாமல் தடுக்கவும் இந்த திட்டம் முக்கிய பங்காற்றுகிறது.
மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு தொடர்ந்து சமூக சேவைகளை செய்து வரும் ஊடறு பெண்கள் அமைப்பும் அவர்களது ஆதரவு நண்பர்களும் எதிர்காலத்திலும் இவ்வாறான பல மனிதநேய பணிகளை முன்னெடுத்து சமூக முன்னேற்றத்திற்கு துணை நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Oodaru Women Organization / Kaappom Organization built toilets after understanding the needs of the people
The Ooaru Women Organization and the Kaappom Organization, which are working with a clear understanding of the needs of the community, have carried out a humanitarian service by providing toilet facilities to several families after recognizing the basic sanitation problems faced by the people.
Due to economic difficulties, many families had been living for years without proper toilet facilities. Understanding their situation, these organizations implemented this support project with the aim of protecting their health, dignity, and well-being.
Because of the lack of sanitation facilities, women, children, and elderly people had been facing many hardships in their daily lives. This service has brought a significant positive change to their living conditions. The project also plays an important role in promoting a healthy lifestyle and preventing the spread of diseases.
The Oodaru Women Organization, together with their supporting friends and well-wishers, continues to place people’s welfare first through social service activities, and it is noteworthy that they will keep carrying out many more humanitarian projects in the future for the progress of society.
Kaappom Organization Ranjani Pathmanathan VG Viji Thra Embassy of Switzerland to Sri Lanka and the Maldives Jr Praveena Australian Tamils Periyal Sabu I Tamil Foundation Canada Charities Aid Foundation Kanges Kowloon Kanges Hk Gsk Suji News Day CNTV Vinthujan Sandhiya Waran Yoganayagam