PL/ Al Rifai M V - OBA

PL/ Al Rifai M V - OBA This is the official page of the Old Boys' Association of Pl Al Rifai M V

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXQ0-kdy-CwX6bMz6YOJ_eraYqn2TGEnmyXZJ8Il20vxJDAA/viewform?usp=dialogஅஸ்ஸலாமு அ...
10/02/2026

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXQ0-kdy-CwX6bMz6YOJ_eraYqn2TGEnmyXZJ8Il20vxJDAA/viewform?usp=dialog

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

அல் றிபாய் மஹா வித்தியாலய பழைய மாணவர்களின் தரவுகளை சேகரிக்கும் முகமாக மேலுள்ள Google form இனை பகிர்ந்துள்ளோம்.

அனைவரும் இதனை பூர்த்தி செய்து தங்களது தகவல்களை வழங்குமாறுகேட்டுக்கொள்வதோடு, எமது பழைய மாணவர்கள் அனைவருக்கும் இப்படிவத்தை பகிர்ந்து கொள்ளுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அத்தோடு,
இது எமது பாடசாலையில் பயின்ற மாணவர்கள், மாணவிகள் அனைவருக்குமுரியதாகும்.

பாடசாலையில் முக்கிய சில நிகழ்வுகள் மற்றும் முக்கியமான தகவல்களை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால். இதனை அனைவரும் அதிகமாக பகிருமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றோம்.

M.H.M. Suhaib
செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்.
பொ / அல் றிபாய் மஹா வித்தியாலயம்.

அல் றிபாய் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்ற அனைத்து பழைய மாணவர்களினதும் தரவுகளை உள்ளடக்கிய புதிய தரவுத்தளத்தை...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு .எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் TMK மற்றும் Rifai OBA இணைந்து வெள்ளத்தால...
04/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு .

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் TMK மற்றும் Rifai OBA இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல் கட்ட நன்கொடையை (02/12/2025) பணிவுடன் வழங்கினோம் الحمد لله.

சுமார் 150 குடும்பங்களுக்கு சுத்தம் செய்ய தேவையான பொருட்களை வழங்கி, அவர்களின் கடினமான நேரத்தில் சிறிய துணையாக இருக்க முடிந்தது எங்களுக்கு பெரும் நெகிழ்ச்சி.

இந்த நற்செயலில் மனதளவில், பொருளளவில், உடல் உழைப்பால் உதவிய அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றி.

எங்கள் நோக்கம் அல்லாஹ்வின் திருப்தி பெறுவதே தவிர வேறில்லை.

மனிதநேயம் உயிருடன் இருக்க, இந்த சேவை வழி தொடர்ந்து நிலைக்க அல்லாஹ் அருள் புரிவானாக.”
آمين يارب العالمين.

بارك الله فيكم 🤲
(தொடரும் எம் பணி…)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு. சமீபத்திய வெள்ளத்தால் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அல் ...
04/12/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

சமீபத்திய வெள்ளத்தால் பல குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அல் ரிஃபாய் மகா வித்யாலயத்தில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்திருந்தனர்.

அவர்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்த OBA உறுப்பினர்கள், உடனடியாக சோப்பு, பற்பசை, போன்ற பொருட்களை (30/11/2025) வழங்கினர்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், மக்கள் சந்தித்திருந்த சிரமத்தை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த உதவி செய்யப்பட்டது.

பாடசாலையில் தங்கியிருந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இந்த பொருட்கள் பெரும் ஆதரவாக இருந்தது.

الحمد الله

இதற்கு உதவிய அனைத்து உள்ளங்கள் மற்றும் நிதியுதவி வழங்கிய MRA அமைப்பினருக்கும் (2016 O/L batch )
இறைவன் அருள் புரிய வேண்டும்

بارك الله فيكم

30/09/2025

போதை ஒழிப்போம்.....
அல் றிபாய் மஹாவித்தியாலய மாணவர்களின் வீதி நாடகம் இன்னும் சற்று நேரத்தில் தம்பாளை (நடு சந்தி)மக்கள் வங்கி முன்பாக நடைபெற உள்ளது அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.கடந்த 12/09/2025 வெள்ளிக்கிழமை 4.00 மணிக்கு பாடசாலையில் நடைபெற்ற பழைய மாணவர...
18/09/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.
கடந்த 12/09/2025 வெள்ளிக்கிழமை 4.00 மணிக்கு பாடசாலையில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க தெரிவு கூட்டத்தில் 15 பேரை அங்கத்தவர்களாக கொண்ட பழைய மாணவர் சங்கம் தெரிவுசெய்யப்பட்டது.

இதில் அதிபர் A. Akbar தலைவராக செயற்பட செயலாளராக M.H.M.Suhaib உம் பொருளாளராக R.M.Akram உம் தெரிவுசெய்யப்பட்டனர்.
உப செயலாளராக K.M.Halik மற்றும் உப பொருளாளராக H.M.Fahoodh உம் தெரிவுசெய்யப்பட்டனர்.

மற்றும் ஆலோசகர்களாக, S.Sahi Ahamed , H.M. Asfak, H.M.M.Nafeer ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு
ஏனைய அங்கத்தவர்களாக P.M.Sajahan, M.A.M.Musarrif, R.Raaidh , I.M.Aadheel , A.R.M.Afras , A.H.M.Farhan , I.M.Aflal மற்றும் Y.M.Rifthi ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

14/09/2025
11/09/2025
05/09/2025
அல்ஹம்துலில்லாஹ்நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் அல்-ரிபாய் மஹா வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சா...
04/09/2025

அல்ஹம்துலில்லாஹ்
நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சையில் அல்-ரிபாய் மஹா வித்தியாலய மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
வெளியான பெறுபேறுகளின் படி 18 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். அம் மாணவ செல்வங்களுக்கும் மற்றும் பரீட்சையில் தோற்றிய ஏனைய மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

17/07/2025

#தம்பாளை_அல்_றிபாய்_முஸ்லிம்_மஹா_வித்தியாலயத்தின் ொ_த_சாதாரண_தரப்_பரீட்சையின்_பெறுபேறுகள். | #2024(2025)

:

Address

Rifaipura
Thambala

Alerts

Be the first to know and let us send you an email when PL/ Al Rifai M V - OBA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share