Sammanthurai Chamber Of Commerce And Industries

Sammanthurai Chamber Of Commerce And Industries Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sammanthurai Chamber Of Commerce And Industries, Community Organization, Main Street, Sammanthurai.

சம்மாந்துறை வர்த்தகத் துறையை மேம்படுத்தி நாடிவரும் நுகர்வோருக்கு(மக்களுக்கு) நம்பிக்கையான சிறந்த சேவை வழங்கும் தளமாக வடிவமைத்தல்.

இம்முன்னெடுப்பை வெற்றிகரமாக கொண்டுசெல்ல வர்த்தகர்கள் ஒத்துழைப்பும் நுகர்வோர் ஆதரவும் பக்க பலமாக அமையும்.

02/02/2026

வேலைத் திட்டம் - 03

ரமழான் கரீம்.

கொடையாளர்களை இணைத்துக் கொள்கிறோம்.

ரமழான் காலத்தின் சிறப்பு நிகழ்வான கஞ்சி வினியோகம், தராவிஹ் போன்ற அமல் திட்டங்களுக்கு உதவ கொடையாளர்களுக்கு அழைப்பு விடுகிறோம்.

எமது பள்ளிவாயலின் மஹல்லா பிரதேசம் சுய கௌரவம் கொண்ட நடுத்தர குடும்பங்கள் வாழ்கின்ற பிரதேசமாக காணப்படுகிறது. பெரியவர்கள் குழந்தைகள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மஹல்லாவாசிகள் காணப்படுகின்றார்கள்.

அந்த அடிப்படையில் கெளரமிக்க உங்களுக்கு இந்த விடயத்தை எத்தி வைக்கலாம் என எமது செயற்குழு தீர்மானித்து.

ஆகவே தங்களால் முடியுமான பொருளாதார பங்களிப்பை வழங்கி உதவுமாறு கௌரவத்துடன் வேண்டிக் கொள்கிறோம்.

திட்டங்களையும் நடைமுறைப்படுதலுக்கான செலவு விபரம்.

கஞ்சி வினியோகம் - 30000/-
தராவீஹ் - 10000/-

வங்கிக் கணக்கு விபரம்:

People's Bank
JAMIUL ALFAR JUMMAH MOSQUE DEVE.SOCIETY
064100180000628

Amana Bank
JAMIUL ALFAR JUMMA MOSQUE
110276

மேலதிக விபரங்களுக்கு:
(தலைவர்)
+94 77 947 1143

ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய பதில் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட  ஜனாப். யூ. எல். ஏ. மஜீத் அவர்களுக்கு எமது Sammant...
22/10/2025

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய பதில் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாப். யூ. எல். ஏ. மஜீத் அவர்களுக்கு எமது Sammanthurai Chamber Of Commerce And Industries சார்பான வாழ்த்துகள்.

அண்மையில் எமது வர்த்தக மற்றும் தொழில்கள் சம்மேளனத்தின் தவிசாளர் அவர்களுக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களுக்கும் இட...
21/09/2025

அண்மையில் எமது வர்த்தக மற்றும் தொழில்கள் சம்மேளனத்தின் தவிசாளர் அவர்களுக்கும், அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களுக்கும் இடையில் சினேக பூர்வ சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.

சந்திப்பின்போது பிராந்தியத்தின் பொதுவான மேம்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

சிறப்பு மிகு சந்தர்ப்பம். தொழில்துறையில் பயணிக்கும் தொழில் முயற்சியாளர்கள் சிறந்த மேம்பாட்டு நடைமுறைகளை அடைவதற்கான சிறந்...
18/09/2025

சிறப்பு மிகு சந்தர்ப்பம்.

தொழில்துறையில் பயணிக்கும் தொழில் முயற்சியாளர்கள் சிறந்த மேம்பாட்டு நடைமுறைகளை அடைவதற்கான சிறந்த வாய்ப்பினை Industrial Development Board அமைத்துள்ளது.

இந்நிகழ்வில் தொழில் முனைவோர்கள் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் தொழில் துறைகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

Sammanthurai Chamber Of Commerce And Industries

இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் சிறந்த தொழில்முனைவோர் விருதை பெற்ற எமது சம்மேளனத்தின் பணிப்பாளர் MILM Ihlas அவர...
09/09/2025

இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் சிறந்த தொழில்முனைவோர் விருதை பெற்ற எமது சம்மேளனத்தின் பணிப்பாளர் MILM Ihlas அவர்களுக்கு எமது வர்த்தக சமூகம் சார்பான வாழ்த்துக்கள்.

சம்மாந்துறை ஸகாத் பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று 22/08/2025 வெள்ளிக்கிழமை சினேக பூர்வ சந்திப்பு ஏற்பாடு செய்...
22/08/2025

சம்மாந்துறை ஸகாத் பரிபாலன சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று 22/08/2025 வெள்ளிக்கிழமை சினேக பூர்வ சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச் சந்திப்பில் ஸகாத் பரிபாலன சபையின் நிலைப்பாடு மற்றும் சகாத் துறையின் மேம்படு தொடர்பான பலதரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டு இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன . இந்நிகழ்வில் Sammanthurai Chamber Of Commerce And Industries , #சம்மாந்துறை_ஸகாத் பரிபாலன சபை ஆகிய இரு அமைப்புகளினதும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சம்மாந்துறை பலசரக்கு மொத்த விற்பனை துறையில் பெரும் பங்கை வகிக்கும் அக்பர் ஸ்டோர் (Akbar Store) தனது விற்பனை நிலையத்தினை ...
19/07/2025

சம்மாந்துறை பலசரக்கு மொத்த விற்பனை துறையில் பெரும் பங்கை வகிக்கும் அக்பர் ஸ்டோர் (Akbar Store) தனது விற்பனை நிலையத்தினை இடமாற்றம் செய்துள்ளது.

பழைய இடம்:
சம்மாந்துறை அமானா வங்கி முன்பாக.

புதிய இடம்:
பிரதேச சபையின் அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்பாக.

எமது வர்த்தகத்தின் பங்குதாரர்கள் ஆகிய சிறப்பு நுகர்வோர் சமூகத்தின் எதிர்பார்ப்பு.முறையான வியாபார முறைமை. எமது வர்த்தக நி...
09/06/2025

எமது வர்த்தகத்தின் பங்குதாரர்கள் ஆகிய சிறப்பு நுகர்வோர் சமூகத்தின் எதிர்பார்ப்பு.

முறையான வியாபார முறைமை.

எமது வர்த்தக நிலையங்களில் காணப்படுகின்ற தராசுகள் வருடா வருடம் சரி பார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட ஸ்டிக்கரிணை நுகர்வோர் கண்களில் படும் வகையில் ஒட்டி வைப்பது முறையான நம்பிக்கையான வியாபாரத்தின் தன்மையை உறுதிப்படுத்தும். இதனையே எமது நுகர்வோர் சமூகமும் எதிர்பார்க்கின்றது.

குறிப்பு:
இங்கு பதிவிடப்பட்டிருக்கும் புகைப்படம் எமது சம்மாந்துறை Cargills Food City சந்தியில் காணப்படும் கோழி இறைச்சி விற்பனை நிலையமாகும்.
குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளரது குறித்த விடயம் பாராட்டத்தக்கது.
வாழ்த்துக்கள்..🎉🎉🎉

இன்று சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ செயலாளர் MAK Mohamed அவர்களுடனனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மேற்கொள்ளப்பட்டிருந்...
29/01/2025

இன்று சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ செயலாளர் MAK Mohamed அவர்களுடனனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இச் சந்திப்பின் போது வர்த்தகர்களின் மேம்பாடுகள், சமூக நலன் விடயங்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் பேசப்பட்டன.

குறிப்பாக எமது சம்மேளனத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் எந்த ஒரு வேலை திட்டத்திற்கும். விசேடமாக பிரதேச சபை, மற்றும் அதன் கௌரவ செயலாளர் MAK Mohamed அவர்களின் ஒத்துழைப்பு, எமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் உறுதுணையாக இருப்பது ஒரு வரப்பிரசாதம்.

விசேடமாக இச் சந்திப்பில் சம்மேளனத்தின் தவிசாளர் அல்-ஹாஜ் A Hakeem மற்றும் பனிப்பாளர்கள் AHM Kalith, S Kaleemullah ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Admin:
Sammanthurai Chamber Of Commerce And Industries

நேற்று வெள்ளிக்கிழமை (24.01.2025)  சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை அமர்வு நடைபெற்றது .இதில் அதிக பணிப்பாளர்கள் கலந்து சிறப்...
25/01/2025

நேற்று வெள்ளிக்கிழமை (24.01.2025) சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை அமர்வு நடைபெற்றது .
இதில் அதிக பணிப்பாளர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இவ் அமர்வில் சம்மேளனத்தின் மேம்பாடு, வலுவான கட்டமைப்பு, வர்த்தகர்களில் சவால்கள், வர்த்தகத் துறையின் மேம்பாடுகள், சமூகத்தின் அடிப்படை விடயங்களான கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், சமூகக் கட்டமைப்பில் நாம் கொண்டுள்ள வகை பாகம், அரச நிறுவனங்களோடு இணைந்து செயல்படும் திட்டங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு, சிறப்பான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

நுகர்வோரின் நம்பிக்கையை பெற்ற மேம்படுத்தப்பட்ட வர்த்தக சூழலை வடிவமைக்க ஒன்றிணைவோம்.

நன்றி.

Sammanthurai Chamber Of Commerce And Industries

14/01/2025
சம்மாந்துறையின் அனைத்து வர்த்தகர்களுக்கும்,கடந்த மூன்று தினங்களாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இழந்த உயிர்களை தேடும் பணி நடந்து...
29/11/2024

சம்மாந்துறையின் அனைத்து வர்த்தகர்களுக்கும்,

கடந்த மூன்று தினங்களாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இழந்த உயிர்களை தேடும் பணி நடந்து கொண்டிருப்பது தாங்கள் அறிந்ததே அதனடிப்படையில் இதுவரை ஒரு உயிரை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளதாலும் ஊரில் இது ஒரு மிகப்பெரிய துயரச் சம்பவமாகவும் இருப்பதாலும் நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து (30.11.2024) கடை அடைப்பு செய்து நோன்பு, துஆ போன்ற நற்கருமங்களில் ஈடுபட எமது வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அனைத்து சகோதரர்களும் இவ்விடயத்தை கருத்தில் கொள்ளுமாறும் நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Address

Main Street
Sammanthurai
32200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sammanthurai Chamber Of Commerce And Industries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share