Youth Federation - SM

Youth Federation - SM Youth Federation - Sainthamaruthu

Together for Change 🙌🔥
20/07/2025

Together for Change 🙌🔥

🗣️ சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2025/26 ஆம் ஆண்டுக்கான நிர்வாக தெரிவு
-------------------‐----------------------------------------------------------------

இன்று(19/07/2025) சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.சமீலுல் இலாஹி அவர்களின் தலைமையில் 2025/26 ஆம் ஆண்டுக்கான இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

இதில் எமது அமைப்பின் செயற்பாட்டாளர்களான A.AFRATH ALI தலைவராகவும், LM.SHIFNAS உப தலைவராகவும், HM.AMAZIR உப செயலாளராகவும், AM.SAHEE பொருளாளராகவும், MM.THALA அமைப்பாளராகவும், ANM.JAFITH உப அமைப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் ஏனைய பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட எமது அமைப்பின் செயற்பாட்டாளர்களுக்கும் மற்றும் சாய்ந்தமருது இளைஞர் சம்மேளனத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் எமது நண்பர்கள் வட்டம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

- 𝐅𝐂𝐒𝐒𝐎 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐔𝐍𝐈𝐓 -

🗣 சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவுக்கூட்டம்.!------------------------------------------------------...
20/07/2025

🗣 சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவுக்கூட்டம்.!
------------------------------------------------------------------------------------

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கான 2025/2026 நிர்வாகத் தெரிவுக் கூட்டம், சாய்ந்தமருது இளைஞர் தொழில் பயிற்சி நிலையத்தில், இளைஞர் சேவை உத்தியோகத்தர் MM. ஸமீலுல் இலாஹி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பிரதேச இளைஞர் கழக உப தலைவர் ARM. ஜப்ரான் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் WA. கங்கா சாகரிக்கா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ADFS. அத்துக்கொரள, சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் MSM. நளீர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் RM. சிறிவர்த்தன, சாய்ந்தமருது பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் A. தல்சுரூன், பொத்துவில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் AG. அன்வர் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள், சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கும் அனைத்து இளைஞர் கழகங்களின் செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்று, புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

நிகழ்வின் போதான உரையாற்றல்களில், இந்நாட்டில் இளைஞர்களுக்கான சந்தர்ப்பங்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் சமூக ஈடுபாடுகள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது.

2025ஆம் ஆண்டுக்கான சாய்ந்தமருது பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிர்வாகம் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டது.

☑️ தலைவர் – எ.அப்ரத் அலி
☑️ உப தலைவர் – எல்.எம்.சிப்னாஸ்
☑️ உப செயலாளர் – எச்.எம்.அமாஸிர்
☑️ பொருளாளர் – ஏ.எம்.ஸஹி
☑️ அமைப்பாளர் – எம்.எம்.தலா
☑️ உப அமைப்பாளர் – ஏ.என்.எம்.ஜாபித்

மேலும் நிர்வாக குழுவின் ஏனைய உறுப்பினர்களும், அனைவரின் ஒருமனப்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

- 𝐒𝐌𝐘𝐅 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐔𝐍𝐈𝐓 -

Address

Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Federation - SM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share