Z-Force

Z-Force Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Z-Force, Youth Organization, Puttalam.

கடந்த மாதம் ஸாஹிறா கல்லூரியினால் நடத்தப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், எமது அணியான Z-Fo...
19/06/2026

கடந்த மாதம் ஸாஹிறா கல்லூரியினால் நடத்தப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், எமது அணியான Z-Force மற்றும் Legend அணி ஆகியவற்றுக்கிடையில் நடைபெற்ற போட்டியின்போது, Mr. Thufail ஆசிரியர் அவர்கள் எதிர்பாராத விதமாக காலில் காயமடைந்தார். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் அவரின் உடல்நிலை குறித்து அறிந்து, Z-Force Batch சார்பாகவும் அப்போட்டியில் விளையாடிய வீரர்கள் சார்பாகவும் 16.06.2026 அன்று அவர்களின் இல்லத்திற்குச் சென்று உடல்நலம் விசாரித்தோம்.

அல்லாஹ்வின் அருளால் ஆசிரியர் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து நலம்பெற பிரார்த்திக்கின்றோம். 🤲🏻

🏆 2026 Football Champions – Z-Force🏆2026.05.30 & 31 ஆகிய தினங்களில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கி...
19/06/2026

🏆 2026 Football Champions – Z-Force🏆

2026.05.30 & 31 ஆகிய தினங்களில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டிகளில் எமது Z-Force அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று, இறுதிப் போட்டியில் Youth Vision அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வெற்றிக் கோப்பையையும் தன்வசப்படுத்தியது. 🏆💪

மேலும், வெற்றியாளர்களுக்குக் கிடைத்த ரூ. 50,000/- பரிசுத் தொகையை பாடசாலையின் பஸ் திட்டத்திற்காக நன்கொடையாக மீண்டும் பாடசாலைக்கே கையளித்தது. 🚌❤️

கடந்த ஆண்டுகளில் பலமுறை முயற்சித்தும் எட்டாத இலக்கை, அல்லாஹ்வின் அருளாலும், வீரர்களின் அர்ப்பணிப்பாலும், எமது Z-Force Batch உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்பாலும் இந்த ஆண்டு அடைய முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். 🤲

இந்த வெற்றிக்காக களத்தில் முழு அர்ப்பணிப்புடன் விளையாடிய அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், மைதானத்திற்கு வருகை தந்து உற்சாகமளித்த Z-Force அங்கத்தவர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 💙

Together We Win... Z-Force! 🏆

ஸாஹிறா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கு  இடையிலான cricket சுற்றுப்போட்டி Zahira Green மைதானத்தில் (2025.12.13 )...
15/12/2025

ஸாஹிறா கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களுக்கு இடையிலான cricket சுற்றுப்போட்டி Zahira Green மைதானத்தில் (2025.12.13 )நேற்று நடைபெற்றது. இதில் எமது Z-Force சார்பாக களம் இறங்கிய அணியில் அணித் தலைவர் Mnm Atheef தலைமையில் Ahsan Mars, Minhas Misbah, Hassan, Azmi Azeem, Rifaideen, Simak ,Asmy Mohamed ஆகியோர் கலந்து காலிறுதி சுற்று வரை தகுதி பெற்று வந்து துடுப்பாட்டம், களத்தடுப்பு ,பந்துவீச்சு ஆகியவற்றில் தமது திறமைகளை வெளிக்காட்டினர்.
திறமையாக விளையாடிய எமது அணி வீரர்களுக்கு எமது Z-Force சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


Address

Puttalam
61300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Z-Force posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share