USRO

USRO மனித வாழ்வியலில் தெளிவும், அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதினூடாக சமூக மறுமலர்ச்சி. We thinking that, this is the time to change!.

20/06/2026
12/06/2026

New Intake 2026
​POSTPONED

⭕*மாதம்பை இஸ்லாஹிய்யாவின் புதிய  மாணவர் அனுமதி 2026* க.பொ.த (சாதாரண) பெறுபேறுகளுக்குப் பின் உயர்தர கலை, வர்த்தக துறையுடன...
12/06/2026

⭕*மாதம்பை இஸ்லாஹிய்யாவின் புதிய மாணவர் அனுமதி 2026*

க.பொ.த (சாதாரண) பெறுபேறுகளுக்குப் பின் உயர்தர கலை, வர்த்தக துறையுடன் இணைந்து இஸ்லாமியக் கற்கைகளைத் தொடர விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி ஒரு வாரத்தில் நேர்முகப் பரீட்சை நடைபெறும்.

கற்கைநெறிகள்:
1. Licentiate in Arabic Language and Islamic Studies (Arts Stream)
காலம் - 05 வருடங்கள்
2. Diploma in Arabic Language and Islamic Studies (Commerce Stream)
காலம் - 03 வருடங்கள்

✅TVEC அங்கீகாரம் பெற்ற தகவல் தொழில்நுட்பச் சான்றிதழ் (IIIT).
✅அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடரும் வாய்ப்பு.
✅மும்மொழிப் பாண்டித்தியம் மற்றும் சிறந்த ஆளுமை விருத்தி வழிகாட்டல்கள்.

கீழுள்ள லிங்க் மூலம் உங்களது முன்பதிவுகளை இப்போதே மேற்கொள்ளலாம்:
https://forms.gle/wH2s1XpNrJnEAZKy5

மேலதிக தொடர்புகளுக்கு:
077 376 3814
075 547 4726
076 261 0450

புதிய மாணவர் அனுமதிக்கான வட்சப் குழுமம்:
https://chat.whatsapp.com/BOn5rdPkecFHPAL0qlpedg

இஸ்லாஹிய்யாவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம்:
https://www.facebook.com/share/1b9yjtuL5R/

*தன்னிறைவு  வாழ்வும் தாராள மனமும்*இமாம் லைஸ் இப்னு ஸஃத் (ரஹ்) அவர்கள் தானும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததோடு தன்னைச் சுற்றியுள்...
01/06/2026

*தன்னிறைவு வாழ்வும் தாராள மனமும்*

இமாம் லைஸ் இப்னு ஸஃத் (ரஹ்) அவர்கள் தானும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததோடு தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியில் வாழ வைக்க விரும்பினார். இதற்காக தாராளமாக செலவு செய்பவராக இருந்தார். “இவ்வுலகில் உனக்குரிய பங்கினை நீ மறந்துவிடாதே! அல்லாஹ் உனக்கு நன்மையைச் செய்தது போலவே, நீயும் (மற்றவர்களுக்கு) நன்மை செய்.” (அல்-கஸஸ்:77)
இந்தத் திருவசனத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட இமாம் லைஸ் அவர்கள் ஒரு கருத்தை முன்வைத்தார்கள்: “மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, ஒரு தனிமனிதன் செல்வத்தைக் குவித்து வைப்பதில் நியாயமில்லை.” மேலும், ஆட்சியாளர்களும் பொறுப்பாளர்களும் மக்களுக்கு வெறும் “பிழைப்புக்கான மட்டத்தை” (حد الكفاف) மட்டும் வழங்காமல், “தன்னிறைவு மட்டத்தை” (حد الكفاية) உறுதி செய்ய வேண்டும் என்பதில் அவர்கள் இறைவனிடம் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றும் வலியுறுத்தினார்கள்.
இரண்டிற்கும் உள்ள வேறுபாடு:

பிழைப்புக்கான மட்டம் (حد الكفاف): இது மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச உணவு மற்றும் பானம் போன்றதைக் குறிக்கும்.

தன்னிறைவு மட்டம் (حد الكفاية): இது தரம்மிக்க உணவு, பானம் மற்றும் வசதியான உறைவிடம் என ஒரு மனிதன் கண்ணியமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாகும்.

*ஸலாஹுத்தின் அய்யூபியின் சொத்துக்கள்*

எகிப்து, ஷாம், சிரியா, யெமன் மற்றும் ஹிஜாஸ் போன்ற விரிவான பகுதிகளுக்கு ஆட்சியாளராக இருந்த ஸலாஹுத்தீன் அல்-அய்யூபி அவர்கள் மரணிக்கும் போது அவரிடம் 47 திர்ஹம்கள் மட்டுமே இருந்தது. ஹிஜ்ரி 589 ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் போது, அவரின் ஜனாஸா செலவுக்கு கூட போதுமான பணம் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் தனது செல்வத்தையெல்லாம் போராட்டத்திலும், சிறைப்பட்டவர்களை விடுவிப்பதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்கும், பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் நிர்மாணிப்பதற்கும் செலவழித்தார்.
அவர் உலகப் பற்றற்றவராக (ஸுஹ்த்) வாழ்ந்தவர். அவர் விரும்பியிருந்தால், பூமியின் செல்வங்களை தன்வசப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவர் மறுமை வாழ்வைத் தேர்ந்தெடுத்தார்.

*உள்ளங்கள் அமைதிபெற*

أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

“அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வை நினைவுபடுத்துவதன் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன” (அர்-ரஃது:28).

மன நிறைவோடு வாழ்வதற்கான சிறந்த வழி இறைநினைவுடன் எப்போதும் வாழ்வது. அவனை எப்போதும் நினைவில் கொள்வது. காலையில், மாலையில் மட்டுமல்லாது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவன் எம்முடன் இருக்கின்றான் என்ற உணர்வுடன் வாழ்வது. காலை மாலை அவ்ராதுகள், சந்தர்ப்ப துஆக்களை தவறாமல் ஓதி வருவதும் இதில் ஒரு பகுதியே.

பெருமானார் முஹம்மது (ﷺ) அவர்கள் கூறினார்கள்: *ஒரு மனிதன் மரணித்துவிடும் போது அவனது நற்செயல்கள் அனைத்தும் முற்றுப் பெற்றுவிடுகின்றன, மூன்று அமல்களைத் தவிர.* அவை: நிலையான தர்மம் (சதகா ஜாரிய்யா), பிறருக்குப் பயன் தரும் அறிவு மற்றும் பெற்றோருக்காக பிழைப்பொறுக்க வேண்டி துஆ செய்யும் ஸாலிஹான பிள்ளை.' - (சுனன் அன்-நஸாயி: 3651)

வெறும் பொழுதுபோக்காக மாத்திரம் இருக்கும் விளையாட்டு ஒரு சமூகத்தையே நிலையாக மாற்றக்கூடியது. நாங்கள் விளையாட்டினூடாக சமூகத...
25/05/2026

வெறும் பொழுதுபோக்காக மாத்திரம் இருக்கும் விளையாட்டு ஒரு சமூகத்தையே நிலையாக மாற்றக்கூடியது.

நாங்கள் விளையாட்டினூடாக சமூகத்திற்கும் நாட்டிற்கும் தேவையான நற்பிரஜைகளை உருவாவதற்கு உதவி செய்கின்றோம்.

அனைவரும் இணைந்தால் வளம்பெற்ற ஒரு சமூகத்தை உருவாக்கலாம்.

அடுத்த தலைமுறைக்கு மிகவும் சவாலாக இருப்பது ஒழுக்கமே!இஸ்லாம் மனிதனை:* நல்ல மனிதராக,* சமூகத்திற்கு பயனுள்ளவராக,* நீதியுள்ள...
23/05/2026

அடுத்த தலைமுறைக்கு மிகவும் சவாலாக இருப்பது ஒழுக்கமே!

இஸ்லாம் மனிதனை:

* நல்ல மனிதராக,
* சமூகத்திற்கு பயனுள்ளவராக,
* நீதியுள்ளவராக,
* கருணையுள்ளவராக மாற்ற விரும்புகிறது.

அதனால் இஸ்லாத்தில் ஒழுக்கம் என்பது வெறும் மரியாதை மட்டும் அல்ல, அது ஈமான் மற்றும் இறைபக்தியின் ஒரு பகுதியுமாகும்.

ஒழுக்கத்தை அளவுகோலாக வைத்து ஒரு சமூகத்தை உருவாக்க எம்மோடு இணையுங்கள்.

USRO

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, புகழ் மாலைகளையும் மக்களின் கரகோசங்களையும் விரும்பாத தலைவர்களே ஒரு சமூக...
13/05/2026

அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, புகழ் மாலைகளையும் மக்களின் கரகோசங்களையும் விரும்பாத தலைவர்களே ஒரு சமூகத்தை உண்மையாக முன்னேற்றம் செய்ய முடியும்.”

செய்யிது குதுப் (ரஹ்)❤️‍🩹❤️‍🩹

Address

Pottuvil
32500

Alerts

Be the first to know and let us send you an email when USRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to USRO:

Shortcuts

Share