Old OBA PMNS Page From 2008 to 2023

Old OBA PMNS Page From 2008 to 2023 Higher Education Guidance, Career Guidance and Education Consultancy

25/04/2026
19/01/2026

Celebrating my 13th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் வாசிக்க வேண்டிய கண்ணீர் பதிவு 👇 ஒரு இளம்  பல்கலைக்கழக மாணவன்,ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் மே...
28/12/2025

ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் வாசிக்க வேண்டிய கண்ணீர் பதிவு 👇

ஒரு இளம் பல்கலைக்கழக மாணவன்,
ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் மேலாண்மை பதவிக்கான நேர்காணலுக்கு சென்றான்.

அவனுடைய கல்வித் தகுதிகள் மிக உயர்ந்தவை.
எல்லா சுற்றுகளையும் வெற்றிகரமாக கடந்து,
இறுதி சுற்றில் அவனை நேர்காணல் செய்தது
அந்த நிறுவனத்தின் இயக்குனர் தான்.

இயக்குனர் அவனுடைய சான்றிதழ்களை கவனமாக பார்த்துவிட்டு கேட்டார்:

“மகனே, உனக்கு இந்தப் படிப்புக்காக ஏதேனும் உதவித்தொகை (Scholarship) கிடைத்ததா?”

அந்த இளைஞன் அமைதியாக பதிலளித்தான்:

“இல்லை சேர்…
என் உம்மாதான் என் படிப்புக்காக எல்லாவற்றையும் செய்தார்கள்.”

இயக்குனர் மீண்டும் கேட்டார்:

“உன் உம்மா என்ன வேலை செய்கிறார்கள்?”

அவன் சற்றே நெகிழ்ந்து சொன்னான்:

“என் உம்மா …
வீடுகளில் உடுப்பு கழுவும் வேலை செய்கிறார்கள்.
பிறர் உடைகளை துவைத்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.”

இயக்குனரின் பார்வை, அவன் கைகளில் நின்றது.
அந்த கைகள்…
மிக மென்மையானவை, சினுங்கியவை.

அவர் கேட்டார்:

“நீ ஒருநாளாவது உன் உம்மிக்கு உடை துவைக்க உதவி செய்ததுண்டா?”

அவன் தலை குனிந்து பதிலளித்தான்:

“இல்ல சேர்…
உம்மாக்கு நான் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் ஆசை.
மேலும், என்னைவிட அவர்கள் வேகமாகவும் நன்றாகவும் துவைப்பார்கள்.”

இயக்குனர் சில நிமிடங்கள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார்.
பின்னர் மெதுவாகச் சொன்னார்:

“சரி…
இன்று வீட்டுக்கு போய்,
உன் உம்மாவின் இரண்டு கைகளையும் நீயே கழுவு.
கழுவிவிட்டு, நாளை காலை என்னை வந்து சந்தி.”

இளைஞனுக்கு இது பெரும் ஆச்சரியம்.

“இது வேலை கிடைக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் ஒரு சின்ன சோதனையோ?”
என்று எண்ணிக்கொண்டான்.

அன்று மாலை அவன் வீட்டுக்குச் சென்றான்.
உம்மாவிடம் மெதுவாகச் சொன்னான்:

“உம்மா…
இண்டெகி நான் ஒங்கட கைகளை கழுவணும்.”

உம்மா ஆச்சரியப்பட்டார்கள்.
ஆனால் மகனின் முகத்தில் இருந்த தீவிரத்தைப் பார்த்து,
அமைதியாக தன் கைகளை நீட்டினார்கள்.

மகன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து,
உம்மாவின் கைகளை கழுவத் தொடங்கினான்…

மெல்ல…
மெல்ல…

அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

அந்த நாள்தான்…
அவன் முதன்முறையாக,
தன் தாயின் கைகளை
உண்மையாகப் பார்த்தான்.

அந்த கைகள் —

சுருக்கம் நிறைந்தவை…
நீரில் கரைந்தது போல மெல்லியவை…
சவக்கார தூள், நீரும் அடிக்கடி பட்டதால்
பல இடங்களில் புண்கள்… கீறல்கள்… கைகள் இரண்டும் பவுடர் போட்டது போல்... காயிந்து, வறண்டு...

"எப்பாலும் இல்லாத மாதிரி ஏன் இண்டைக்கு என் கைகளை கழுவுகிறாய்"...

அவன் தாய் சிரித்தவாறு கேட்டார்கள்...

அவன் கைகளைத் தேய்க்கும் போது,
அந்த புண்கள் வலியால்
உம்மா மெதுவாக உளறினார்கள்.

அந்த நொடியில்தான்,
அந்த இளைஞனின் உள்ளம் உடைந்தது…

“இந்த கைகளில் இருக்கும் ஒவ்வொரு புண்ணும்,
என் படிப்புக்காக, பல்கலைக்கழக கட்டணத்திற்காக
உம்மா கொடுத்த விலையே…

இந்த சுருங்கிய தோல்தான்
என் நாளைய வாழ்க்கையை
அழகாக்கிய அடித்தளம்…”

அந்த இரவு அவன் தூங்கவே இல்லை. பாவம் என் உம்மா...
எனக்காக எவ்வளவு பாடுபட்டு இருக்கா...

கண்ணீரைத் துடைத்து துடைத்தே அவன் கைகள் வலித்தன...

உம்மா துவைக்காமல் வைத்திருந்த
முழு உடை மூட்டையையும்
அவனே துவைத்து முடித்தான் அந்த இரவில்.
---
அடுத்த நாள் காலை,
அவன் இயக்குனரை சந்திக்க சென்றான்.

அவன் கண்கள் சிவந்திருந்தன…
அழுததின் சாட்சி.

இயக்குனர் கேட்டார்:

“என்ன மகனே…
நேற்று என்ன நடந்தது?”

அவன் தரையைப் பார்த்தபடி சொன்னான்:

"சேர்…
இன்றுவரை நான் நினைத்துக் கொண்டிருந்தது —
என் திறமையால், என் புத்தியால் தான் இந்தப் பட்டம் எல்லாம் பெற்றேன்,
இங்கே வந்தேன் என்று.

ஆனால் நேற்று தான் உணர்ந்தேன்…
என் உம்மாவின் அந்த கரைந்த கைகள் இல்லையென்றால்,
இன்று ‘நான்’ என்று ஒருவன்
இருந்திருக்கவே மாட்டேன்.

நான் வாழ்க்கையின் மிகப் பெரிய பாடத்தை
கற்றுக்கொண்டேன்.”

இயக்குனர் புன்னகைத்தார்.

“ஒரு மேலாளருக்கு இருக்க வேண்டிய
மிக முக்கியமான தகுதி இதுதான்.

மற்றவர்களின் வலியை உணரும் மனம்…
தன் உயர்வுக்குப் பின்னால் இருக்கும்
தியாகத்தை மதிக்கும் குணம்.

அப்படிப்பட்ட ஒருவரைத்தான்
நான் தேடினேன்.

முபாரக்!
உனக்கு இந்த வேலை கிடைத்துவிட்டது.”
🤝
---
நாம் அழகான வீடுகளில் வாழும்போது…
அழகான உடைகள் அணியும்போது…
வாகனங்களில் பயணம் செய்யும்போது…

“இது என் திறமை”
என்று நினைக்கிறோம்.

ஆனால் ஒருமுறை திரும்பிப் பாருங்கள்…

அந்த திறமையின் பின்னால்,
திரை மறைவில் நின்று,
தன் முழு வாழ்க்கையையும் கரைத்து
உங்களை உயர்த்திய
இருவர் இருக்கிறார்கள்.

அவர்கள் —

உங்கள் உம்மா …
உங்கள் வாப்பா…

நீங்கள் இன்று எந்த உயரத்தில் நிற்கிறீர்களோ,
அது அவர்கள் நேற்று சுமந்த
வலியின் விளைவு.

உங்கள் பிள்ளைகளுக்கு
பெரிய வீடுகள் கொடுப்பதைவிட,

"இஸ்லாமிய பண்புகள் "
“வலி என்றால் என்ன?”
“முயற்சி என்றால் என்ன?”

என்பதை கற்றுக்கொடுங்கள்.

ஏனெனில் —
ஒரு பட்டத்தால் கற்றுக்கொள்ள முடியாத
“அன்பு, கருணை,மனிதநேயம்”
அங்கேதான் பிறக்கிறது. 💚

Anbiya page ஜை follow பண்ணி என்றும் இணைதிருங்கள். ஜஸாக்கல்லாஹ் 🙂

அவதானம்📌🛑 இலங்கை மத்திய வங்கி, வங்கி சட்ட எண் 30 of 1988 இன் பிரிவு 83(C)ன் கீழ் 22 நிறுவனங்களை தடைசெய்யப்பட்ட திட்டங்கள...
20/11/2025

அவதானம்📌
🛑 இலங்கை மத்திய வங்கி, வங்கி சட்ட எண் 30 of 1988 இன் பிரிவு 83(C)ன் கீழ் 22 நிறுவனங்களை தடைசெய்யப்பட்ட திட்டங்களாக அறிவித்துள்ளது

⭕ மத்திய வங்கி, SGO/sgomine.com தடைசெய்யப்பட்ட பைரமிட் (Pyramid) திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

⭕ 🇱🇰 மேலும் கீழ்க்காணும் நிறுவனங்கள்/Appsகளும் தடைசெய்யப்பட்ட திட்டங்களாக கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன:

1. Tiens Lanka Health Care (Pvt) Ltd

2. Best Life International (Pvt) Ltd

3. Mark-Wo International (Pvt) Ltd

4. V M L International (Pvt) Ltd

5. Global Lifestyle Lanka (Pvt) Ltd

6. Fast3Cycle International (Pvt) Ltd

7. Sport Chain app / Sport Chain ZS Society Sri Lanka

8. OnmaxDT

9. MTFE App and associated groups

10. Fastwin (Pvt) Ltd

11. Fruugo Online App / Fruugo Online (Pvt) Ltd

12. Ride to Three Freedom (Pvt) Ltd

13. Qnet / Questnet

14. Era Miracle (Pvt) Ltd and Genesis Business School

15. Ledger Block

16. Isimaga International (Pvt) Ltd

17. Beecoin App and Sunbird Foundation

18. Windex Trading

19. The Enrich Life (Pvt) Ltd

20. Smart Win Entrepreneur (Pvt) Ltd

21. Net Fore International (Pvt) Ltd / Netrrix

22. Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd

⭕ CBSL பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, இத்திட்டங்களில் இருந்து விலகி எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறது.



எங்கள் DARK WARRIORS 2021 O/L அணியின் பெருமைமிகு தருணம்! 🎓எங்கள் அணியில் இருந்து இரண்டாவது நபராகMOHAMED SAJAHAN ASKIN MO...
09/11/2025

எங்கள் DARK WARRIORS 2021 O/L அணியின் பெருமைமிகு தருணம்! 🎓

எங்கள் அணியில் இருந்து இரண்டாவது நபராக
MOHAMED SAJAHAN ASKIN MOHOMED SUHAIL இன்று தனது பல்கலைக்கழக வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார் 🏫

📘 Course & University:
Information Communication Technology – University of Vavuniya

அவர் தனது கல்வியிலும், எங்கள் அணியின் நிர்வாகத்திலும் எப்போதும் சிறப்பாக செயல்பட்ட ஒருவர் 👏
அவரின் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு, மற்றும் நம்பிக்கை எங்கள் அணிக்கு எப்போதும் ஒரு முன்மாதிரி 🌟

இன்று அவர் பல்கலைக்கழக வாழ்க்கைக்குள் நுழையும்போது,
அவரின் தாயாருக்கும் தந்தையாருக்கும் பெருமை சேர்க்கும் ஓர் மகனாகவும்,
எங்கள் DARK WARRIORS குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கும் ஒரு அங்கமாகவும் இருப்பதில் எங்கள் இதயம் நிறைந்த மகிழ்ச்சி ❤️

அவரின் எதிர்கால கல்வி பயணமும் வெற்றிகளும் ஒளி பொழியட்டும் 💫
அனைவரின் துவாவும் ஆசீர்வாதமும் அவருடன் இருக்கட்டும்! 🤲

💪 DARK WARRIORS 2021 O/L TEAM – ஒரே மனம், ஒரே சக்தி, ஒரே வெற்றி! 💙

♦Technical College Application - 2026 (Student Intake)♦තාක්ෂණ / කාර්මික විද්‍යාලවල පැවැත්වෙන පාඨමාලා සඳහා සිසුන් ඇතුළත්ක...
06/11/2025

♦Technical College Application - 2026 (Student Intake)♦

තාක්ෂණ / කාර්මික විද්‍යාලවල පැවැත්වෙන පාඨමාලා සඳහා සිසුන් ඇතුළත්කර ගැනීම

தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் கற்கை நெறிகளுக்கு மாணவர்களை இணைத்தல்

♦ 199 Courses (Full Time/Part Time)
♦ NVQ Level: 03, 04, 05, 06
♦ Free Courses (Full Time)
♦ 39 Colleges (Island wide)

♦ Closing Date : 2025-12-04

♦ முழு விபரம் அடங்கிய தமிழ்மொழியிலான வர்த்தமானி:

https://govdoc.lk/download/690b14833824b

♦ Online Application Form:

https://222.165.180.84/OnlineDTET/public/Application

♦Application Pdf:

https://tamilguru.lk/wp-content/uploads/2025/10/App-E-Technical-College-Intake-2026.pdf

உன் தாயாரின் தியாகம் இன்று மலர்ந்தது,அவரது கண்களில் கண்ணீராக அல்ல, பெருமையாகப் பொலிந்தது 💖கனவு கண்டது அவர்தான்,நனவாக்கிய...
04/11/2025

உன் தாயாரின் தியாகம் இன்று மலர்ந்தது,
அவரது கண்களில் கண்ணீராக அல்ல, பெருமையாகப் பொலிந்தது 💖

கனவு கண்டது அவர்தான்,
நனவாக்கியது நீ தான் —
MOHAMMADH SUHAIR MOHOMED ASHRY🌟

🎓 PL/Polonnaruwa Muslim National School
இன்று உன்னை நினைத்து பெருமை கொள்கிறது 💫

இன்று நீ தொடங்கும் புதிய பாதை,
அறிவின் ஒளி பரப்பும் பயணம் அது ✨

🩺 University of Colombo – Faculty of Medicine (UCFM)
என்ற பெருமைமிக்க இடத்தில்
உன் பெயர் இன்று பொலிவுடன் பதிந்தது 🌿

எங்கள் DARK WARRIORS 2021 O/L அணியின் பெருமை நீ 💪
உன் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக மாறட்டும் 🌸

உன் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும்
நம்பிக்கையும் ஆசீர்வாதமும் நிறையட்டும் 🌺

எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்! 🎉

வாழும் போதே வாழ்த்துவோம்!மலர்ந்து பூவாகும்  சின்னச் சின்ன மொட்டுக்களுக்கு"அ" முதல் அகிலம் வரை சொல்லிக்கொடுத்த,ஆசான் எனும...
27/10/2025

வாழும் போதே வாழ்த்துவோம்!

மலர்ந்து பூவாகும் சின்னச் சின்ன மொட்டுக்களுக்கு
"அ" முதல் அகிலம் வரை சொல்லிக்கொடுத்த,
ஆசான் எனும் தாயாய்,
3.5தசாப்த_( ்டு) கல்விச் சேவையிலிருந்து #ஓய்வு பெறுகிறார் எங்கள் அன்பு பெரியம்மா #செய்னம்பு_டீச்சர்.

"இது அகரம்… இது உலகத்தின் முதல் ஒளி..." என்று
சின்னச் சிறு கைகளைக் கைபிடித்து
எழுத்துக்கும் உயிர் கொடுத்த அந்த குரல்,
இன்று நூறுகளல்ல,
ஆயிரக்கணக்கான மாணவர்களின் மனதில்
மெதுவாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

பாடசாலை தன் குடும்பம்
வகுப்பறை அவர் வீடு.
அந்த சின்னஞ் சிறு குழந்தைகள் எல்லாம்
அவருடைய பிள்ளைகள்.

ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றத்திலும்
கண்ணில் நீர் ததும்பும் அளவு மகிழ்ச்சி.
ஒவ்வொரு சாதனையிலும்
“இத தானே நான் எதிர்பாத்தேன்…” என்று
இதயம் பெருமையால் நிறையும்.
அதுவே #செய்னம்பு_டீச்சரின் இதயம்.

அகர வரிசை கற்பித்தவர் ஏராளம்.
ஆனா அன்பு வரிசை கற்பித்தவர் சிலர் மட்டுமே.
அந்தச் சிலரில்…
முதல் வரிசையில் இருக்கிறார் எங்கள் செய்னம்பு டீச்சர்.

ஓய்வு என்பது வேலை நிறுத்தம் மட்டும்.
அன்பு, நினைவு, ஆசிர்வாதம் அவையெல்லாம் ஓய்வதில்லை.

அன்று கற்பித்த பல சின்னஞ் சிறு சிட்டுக்கள் எல்லாம் இன்று பல துறைகளில் சாதனையாளர்களாய் , இவள் மனதிலோ ஓரமாய் பெருமை அலையடித்து, புன் முறுவலுச் செய்கிறது அவளை!

ஐந்து வயதில் பள்ளி வாசல் சென்ற அந்தச் சிறுமி, இன்று ஐம்பத்தேழு வயதிலும் பள்ளி வாசலில் தான்,
உயிரோடு கலந்த பயணம், இனிதே முற்றுப் பெற்று, ஓய்வு காலம் தேக ஆரோக்கியத்துடன் மனம் மகிழ்ந்து இறைவன் வழி வாழ,
இம் மகனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

"குழந்தை கையில் பென்சில் வைத்தவுடன்
உலகமே வர்ணமாகிப் போகிறது…
அந்த வர்ணத்துக்கு முதல் ஒளி
ஆசிரியரின் புன்னகை."

- ✍️

அறிவாளியாக இருப்பதால் நீங்கள்உணர்ச்சி ரீதியாக புத்திசாலியாகுவதில்லை. பெரும்பாலான மக்கள் IQ ஐ EQ உடன் குழப்பிக் கொள்கிறார...
23/07/2025

அறிவாளியாக இருப்பதால் நீங்கள்உணர்ச்சி ரீதியாக புத்திசாலியாகுவதில்லை.

பெரும்பாலான மக்கள் IQ ஐ EQ உடன் குழப்பிக் கொள்கிறார்கள், இது அவர்களுக்கு வாய்ப்புகள், பதவி உயர்வுகளை, மற்றும் மரியாதையை இழக்கச் செய்கிறது.

📌 உங்களுக்கு அதிக IQ இருந்தாலும், இன்னும் வாழ்க்கை உங்களுக்கு போராட்டமாக இருக்கும்:

அழுத்தத்தைக் கையாளுதல்

சரியாகக் கேட்டல்

ஒரு குழுவில் வேலை செய்தல்

உண்மை என்னவென்றால்?
உணர்ச்சி நுண்ணறிவு (EQ) வாழ்க்கையில் வெற்றிக்கான ஒரு சிறந்த கருவியாகும்.

நீங்கள் செயல்பட வேண்டிய EQ இன் 4 முக்கிய தூண்கள் இங்கே:

சுய விழிப்புணர்வு

↳ உங்கள் உணர்ச்சிகள் உங்கள் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு முன் அவற்றைப் புரிந்து கொள்ளுங்கள்.

↳ உங்கள் நடத்தையில் உள்ள வடிவங்களையும் அவை மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் கவனியுங்கள்.

சுய முகாமைத்துவம்

↳ விஷயங்கள் தவறாக நடக்கும்போது அமைதியாக இருங்கள்.

↳ பதிலளிக்கவும், எதிர்வினையாற்ற வேண்டாம்.

சமூக விழிப்புணர்வு

↳ உங்களோடு இருப்பவர்களை கற்றுக்கொள்ளுங்கள்.

↳ குறிப்பாக மற்றவர்களுக்கு ஆதரவு தேவைப்படும்போது, உடன் இருங்கள்.

உறவு முகாமைத்துவம்

↳ தெளிவாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

↳ நேர்மை மற்றும் நிலைத்தன்மை மூலம் நம்பிக்கையை உருவாக்குங்கள்.

👉 உங்கள் EQ உங்கள் தலைமைத்துவ திறனை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம்.

நீங்கள் சரியானவராக இருக்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

CREDIT TO: EMOTIONAL INTELLIGENCE LINKEDIN

Musthafa Ansar

Annual Kids Bazaar | Grade 2Zahira Primary | Muslim Colonyவரலாற்றில் முதன்முறையாக Zahira ஆரம்ப பாடசாலையில் இடம் பெற இருக...
22/07/2025

Annual Kids Bazaar | Grade 2
Zahira Primary | Muslim Colony

வரலாற்றில் முதன்முறையாக Zahira ஆரம்ப பாடசாலையில் இடம் பெற இருக்கும் Kids Bazaar குழந்தைகளுக்கான சந்தை இன்ஷா அல்லாஹ் நாளை (23.07.2025) இடம்பெறும். இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மாணவர்களை கல்வியில் மாத்திரம் இன்றி ஏனைய பிரயோசனம் தரக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றோம்.

A memorable day to Kids and Family!

21/07/2025

நன்கொடைகள் ஆலயங்களை விட பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டுமென்ற அறிக்கையொன்றை சில மாதங்களுக்கு முன்னர் நடிகை ஜோதிகா வெளியிட்டதன் மூலம் அதிக விமர்சனத்திற்கு உட்பட்டு வருகின்றார். அந்த வரிசையில் நடிகர் சூரியும் விமர்சிக்கப்பட்டார்.

இந்த அறிக்கை சொல்ல வரும் செய்தி எமது சமூகத்திலும் உள்ளது.

ஒரு நாளில் 5 நேரத் தொழுகைக்காகவும் வாரமொரு குத்பாவிற்கும் மாத்திரம் பயன்படுத்தப்படும் பள்ளிவாசல்களுக்கு செலவழிக்கும் ஆர்வம் பாடசாலை சமூக மேம்பாட்டு நலனில் காட்டப்படுவதில்லை...?

இங்கு பள்ளிவாசலா பாடசாலையா பெரிசு என்பதல்ல விடயம். சமூக உருவாக்கத்தில் பாடசாலைகள் ஆற்றும் வகிபாகம் சரிவர புரிந்து கொள்ளப்படவில்லை என்பதுதான் பேசுபொருள்..

பாடசாலைகளின் வகிபாகம் பற்றி ஒருவர் குறை மதிப்பீட்டை கொண்டிருப்பார் எனில் அவர் இஸ்லாம் பற்றியும் கல்வி பற்றிய இஸ்லாமியப் பார்வையிலும் போதிய அறிவில்லாத மனிதராக உள்ளார் என்றே அர்த்தமாகும்.

ரமழானில் 27 ஆம் இரவு பல மில்லியன் செலவில் உணவு பகிரப்படும் ஊர்களில் மாணவர், ஆசிரியர், பெற்றோர் மற்றும் பாடசாலைகளின் மேம்பாட்டுக்கு சில இலட்சங்களை திரட்டுவது சவாலானது. குறைந்தபட்சம் பாடசாலை மேம்பாடு பற்றிய சிந்தனையாவது உள்ளதா...?

பாடசாலைகள் அரச சொத்து, ஆசிரியர்களின் பணி கற்பிப்பது, பிள்ளைகளை அனுப்புவது பெற்றோர் கடமை என்ற குறுகிய சிந்தனை மாறவேண்டும். அதேநேரம் பாடசாலைகள் பரீட்சைப் பெறுபேறுகளை மையப்படுத்தி பெருமைவாதம் பேசும் இடமும் அல்ல. அது கற்றல் எனும் இபாதத் நடைபெறும் இடம். அங்கு இபாதத்துக்கு முரணாக நடப்பவை பாவமாகிவிடலாம்.

பள்ளிவாசலுக்கு தொழச் செல்பவருக்கு அவரது உளத்தூய்மைக்கே அல்லாஹ்விடம் கூலி வழங்கப்படுகின்றது. அதேபோன்று சமூகத்திற்கு பயனுள்ள மனிதனாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் செயற்படும் பாடசாலை சமூகத்தை சார்ந்த அனைவரது தூய எண்ணத்திற்கும் அல்லாஹுத்தஆலா கூலித்தரப் போதுமானவன்.
ஆட்டோ சாரதி உட்பட.

இச்சிந்தனை சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் விதைக்கப்படல் வேண்டும். சடவாத சிந்தனை கொண்டவர்களால் இச்சிந்தனை விதைக்கப்பட சாத்தியமில்லை.

சமூகத்திலுள்ள ஆன்மீகவாதிகள், கல்வியலாளர்கள், தனவந்தர்கள் கூட்டாக அமர்ந்து திட்டமிட்டு செயற்படுத்த வேண்டிய பல பணிகள் ஒவ்வோர் ஊரிலும் காத்திருக்கின்றன.

அப்பணியை செய்யாமல் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
பொறுப்புதாரிகள் அப்பணியை செய்யாமல் விட்டால் அல்லாஹ்விடம் பொறுப்புச் சொல்ல வேண்டிவரும் என்பதையும் நினைவில் வைப்போம்.

எமது சிந்தனையை விரிவுபடுத்தி செயற்படுவோம்...

MI Sahir

Address

MUSLIM COLONY
Polonnaruwa
51000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Old OBA PMNS Page From 2008 to 2023 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share