30/11/2025
Kinniya Central College – 2015 O/L & 2018 A/L Batch
இளைஞர்கள் நாம் முன்மாதிரியாக ஒன்றிணைவோம்!
அன்பிற்கினிய KCC 2015 O/L & 2018 A/L நண்பர்களே,
நம் ஊருக்கு வந்துள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நம் மக்கள் உணவு, உடை, அவசியப் பொருட்கள் என்பவற்றுக்கு தேவையுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நேரத்தில் “நாம் யார்?” என்று நாமே நம்மை கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது.
நாம் Kinniya Central College-ன் பொறுப்புள்ள இளைஞர்கள்…
நாம் உதவியை செயலில் மாற்றக்கூடிய தலைமுறை…
நாம் ஊருக்காக ஒன்றிணைந்து நிற்கும் முன்மாதிரி சமுதாயம்!
ஆகவே,
நமது Batch நண்பர்கள் அனைவரையும் நிவாரண உதவி சேகரிப்பில் இணைந்து கொள்ள வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்காக நாமே கை கொடுப்போம்