16/02/2024
அஸ்ஸலாமு அலைக்கும்..
பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கமைப்பில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கும் செயல் திட்டம் 16/02/2024,வெள்ளிக்கிழமை, பறகஹதெனிய தேசிய பாடசாலையில் சிறப்புற நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்!
இந்நிகழ்வில் கனிஷ்ட பிரிவிற்கான பாடசாலை உபகரணங்களை நன்கொடை அளித்த *Batch 2005* பழைய மாணவர்கள், பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணளவாக *ரூ 700,000/-* (ரூ ஏழு இலட்சம்) பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரினால் பாடசாலையின் அதிபர் ஜனாப் ஐ.அப்துல் ரஹ்மான் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன.பாடசாலை சார்பில் அதிபருடன் பிரதி அதிபர்கள்,பகுதித் தலைமையாசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இச்செயல் திட்டத்திற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பழைய மாணவர் சங்க உறுப்பினர்களால் அவை பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக விநியோகிக்கப்பட்டன.
செயல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய உதவி செய்த வல்ல இறைவனுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், நிகழ்வை பாடசாலையில் ஒழுங்கு செய்ய ஒத்துழைத்த பாடசாலை அதிபர்,ஜனாப் I.Abdul Rahuman உள்ளிட்ட பாடசாலை நிர்வாகம்,நன்கொடை,பொதி செய்தல் மற்றும் விநியோகத்தில் உதவிய *Batch 2005* பழைய மாணவர்கள்,நிதியுதவியளித்த பழைய மாணவ,மாணவிகள்,பழைய மாணவர் வகுப்புகள்,வகுப்பாசிரியர்களுடனான தொடர்பாடலில் தம் பூரண ஒத்துழைப்பை வழங்கிய ஆசிரியர் Mr.Fayas Fouzan,ஆசிரியை Mrs.Rasna Azeez , செயல்திட்டத்துக்கான தகவல் திரட்டலில் பூரண ஒத்தாசையளித்த கனிஷ்ட பிரிவு , சிரேஷ்ட பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு தலைமைப் பொறுப்பாசிரியர்கள்,வகுப்பாசிரியர்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விநியோகத்துக்காக ஒழுங்கு படுத்த தன்னார்வத்துடன் முன்வந்து உதவிய சிரேஷ்ட பிரிவு பாடசாலை மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் தன் உளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.ஜஸாகல்லாஹு ஹைரன்.
அது மட்டுமன்றி ,பழைய மாணவர்களான உங்கள் அனைவரதும் அன்பும்,பங்களிப்பும் ,ஒத்துழைப்பும் மட்டுமன்றி பின்னூட்டங்களும் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் கூட தொடர்ந்தும் கிடைக்கும் பட்சத்தில் பழைய மாணவர் சங்கம் இவ்வாறான அறப்பணிகளில் சளைக்காது முன்னின்று செயல்படும் என்று உறுதி கூறுகிறது.
-பழைய மாணவர் சங்கம்,
பறகஹதெனிய தேசிய பாடசாலை
Copied; PPA Discussion forum