Muslim Women's Development Trust

Muslim Women's Development Trust MUSLIM WOMEN’S DEVELOPMENT TRUST was established in Puttalam in 27th September in 2011 but the registered on 2nd of December in 2014.

"MUSLIM WOMEN’S DEVELOPMENT TRUST" is a Trust organisation, non-political, non-profit oriented voluntary national social services organization on based in Puttalam District. as a response to the many challenges that were being experienced by the Internally Displaced People (IDPs) who were directly affected by the war in the North and the East of the country. The organization decided to focus on th

e women and children who were at risk of abuse and neglect due to their displacement. MUSLIM WOMEN’S DEVELOPMENT TRUST is the Women NGO working solely in the Puttalam District and was the first organisation in Puttalam to conduct awareness of women rights and child rights. Today, they base all of our activities on the rights of women and children.

🌸Sexual and Reproductive Health and Rights (SRHR)🌸📅 Date: 13.08.2026🕘 Time: 9.00 am –  4.00 pm📍 Venue: Motivation Centre...
19/08/2026

🌸Sexual and Reproductive Health and Rights (SRHR)🌸

📅 Date: 13.08.2026
🕘 Time: 9.00 am – 4.00 pm
📍 Venue: Motivation Centre, MWDT, Palavi.
👩‍⚕️ Resource: Ms. செலஸ்டின் பிள்ளை குமுதினி (Chief Nursing Officer)

✨ பெண்களின் ஆரோக்கியம், உரிமைகள் மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அர்ப்பணிப்பான முயற்சி! ✨

🤝 முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தில் (MWDT), பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் (Sexual and Reproductive Health and Rights) தொடர்பான திறன் மேம்பாட்டு நிகழ்வு (Capacity Building Programme) சிறப்பாக நடைபெற்றது📚. இந்நிகழ்வின் மூலம் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், தனிநபர் உரிமைகள், சுகாதார விழிப்புணர்வு மற்றும் தங்களது ஆரோக்கியம் தொடர்பான சரியான புரிதல் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு பயனுள்ள அறிவும் வழிகாட்டலும் வழங்கப்பட்டது.

🩺 வளவாளராக கலந்து கொண்ட Ms. செலஸ்டின் பிள்ளை குமுதினி அவர்கள் SRHR தொடர்பான முக்கியமான தகவல்களை தெளிவாகவும் பயனுள்ள வகையிலும் பகிர்ந்து கொண்டு, பங்கேற்பாளர்களின் அறிவையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.

🌱 பெண்களின் சுகாதார அறிவையும், உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும் வலுப்படுத்துவதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் தன்னம்பிக்கையான சமூகத்தை உருவாக்க MWDT தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. 🕊️

🕊️ அறிவை வலுப்படுத்துவோம்.
💜 உரிமைகளை அறிந்துகொள்வோம்.
🌸 ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்!

🌱 MWDT Capacity Building Training 🌱📅 Date: 10.08.2026📍Venue: MWDT Office🕘Time: 9.00 a.m. – 4.00 p.m.🎤வளவாளர்: திருமதி, ஜ...
17/08/2026

🌱 MWDT Capacity Building Training 🌱

📅 Date: 10.08.2026
📍Venue: MWDT Office
🕘Time: 9.00 a.m. – 4.00 p.m.
🎤வளவாளர்: திருமதி, ஜுவைரியா முகைதீன்

பெண்களின் திறனை மேம்படுத்தி, சமூகத்தை வலுப்படுத்தும் ஒரு சிறப்பான முயற்சி!✨

The Asia Foundation வழங்கும் நிதியுதவியின் கீழ், MWDT மூலம் தெரிவு செய்யப்பட்ட 10 மகளிர் சங்கங்களுக்கு (WCC) குறிப்பிட்ட மானியம் வழங்கப்பட்டது. அந்த மகளிர் சங்கங்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில் Capacity Building Training நடைபெற்றது. இப்பயிற்சியில் வளவாளராக கலந்து கொண்ட திருமதி, ஜுவைரியா முகைதீன் அவர்கள் பயிற்சியை சிறப்பாக வழிநடத்தினார். 🌷

📝 இப்பயிற்சியின் முக்கிய அம்சமாக Reporting தொடர்பான பயிற்சி இடம்பெற்றதுடன், மகளிர் சங்கங்கள் தங்களுடைய செயற்பாடுகளை முறையாக ஆவணப்படுத்தி, பயனுள்ள முறையில் அறிக்கையிடுவதற்கான அறிவும் திறன்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 💜

🌸பெண்களை வலுப்படுத்துவோம் | சமூகங்களை மேம்படுத்துவோம் | திறன்களை வளர்ப்போம்🌸

📅 08.06.2026📍 RDF Puttalamஎம் MWDT நிறுவனத்தின் ஏற்பாட்டில், வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உள ஆற்றலை மேம்படுத்த...
17/08/2026

📅 08.06.2026
📍 RDF Puttalam

எம் MWDT நிறுவனத்தின் ஏற்பாட்டில், வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உள ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு தேவையான உளவளத்துணை ஆதரவுகளை வழங்குவதற்கான மன ஆறுதல் & மீட்பு நிகழ்ச்சி (Healing Program) அமர்வு RDF Puttalam இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளர் தெஹானி (Thehani) மற்றும் அவரது உதவியாளர் ஏன் (Anne) ஆகியோரின் வழிகாட்டலில் 31 பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த அமர்வின் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களின் மன அழுத்தங்களை குறைத்து, தன்னம்பிக்கை, மன ஆறுதல் மற்றும் புதிய நம்பிக்கையுடன் பயணத்தை தொடர ஊக்கமளிக்கப்பட்டனர். 🌸🌿

🌱

📅 10 July 2026📍 MWDT Office, Palavi, Puttalam ✨ வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் அர்ப்பணிப்பான முயற்சி! ✨🤝 PALMERA நி...
14/07/2026

📅 10 July 2026
📍 MWDT Office, Palavi, Puttalam

✨ வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் அர்ப்பணிப்பான முயற்சி! ✨

🤝 PALMERA நிறுவனத்தின் நிதியுதவியுடன், SLCDF-ஆல் ஆரம்பிக்கப்பட்டு, பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகம் (MWDT)-ஆல் செயல்படுத்தப்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் உதவிகள் வழங்கும் நிகழ்வு, MWDT அலுவலகம், பாலாவியில் சிறப்பாக நடைபெற்றது.

🪡 இத்திட்டத்தின் கீழ், இதுவரை தங்களது சுயதொழில்களை பதிவு (Registration) செய்யாத பெண் தொழில்முயற்சியாளர்களுக்கும் தேவையான வழிகாட்டல் மற்றும் ஆதரவு வழங்கப்பட்டது. மேலும், சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடும் பெண்களுக்கு தொழில் உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் நிதியுதவிக்கான காசோலைகள் வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வலுவான ஆதரவு வழங்கப்பட்டது.

👩🏻 முதற்கட்டமாக 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும், இரண்டாம் கட்டமாக 29 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் என மொத்தம் 50 குடும்பங்களுக்கு, ரூ. 30 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

🌸 இந்நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தின் (MWDT) தலைவி ஹபீபா மொஹமட் றிஸ்மி, நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜூவைரியா முகைதீன், திட்ட இணைப்பாளர் எஸ். சுமித்ரா, பொருளாளர் பஹீமா பேஹம், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எச். நியாஸ், நீதிமன்ற சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் ஏ.சி. அஸாருதீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

🌱 பெண்களின் பொருளாதார வலிமை மற்றும் சமூக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு, தொழில்முயற்சிகளை ஊக்குவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முன்னேற MWDT தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

🕊️ பெண்களை வலுப்படுத்துவோம்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்துவோம்.
சமூகத்தை முன்னேற்றுவோம்! 🌟

24/06/2026
🌱 சமூக அபிவிருத்தியில் சிறுவர்களின் பங்களிப்பு 💚📍 நாகவில்லு மற்றும் பாலாவி சிறுவர் கழக உறுப்பினர்களுக்காக "சமூக அபிவிருத...
24/06/2026

🌱 சமூக அபிவிருத்தியில் சிறுவர்களின் பங்களிப்பு 💚

📍 நாகவில்லு மற்றும் பாலாவி சிறுவர் கழக உறுப்பினர்களுக்காக "சமூக அபிவிருத்தியில் ஆண் சிறுவர்களும் பெண் சிறுமிகளும் ஆற்றும் பங்களிப்பு" என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 🌟

📅 20.06.2026
🏢 பாலாவி சிறுவர் கழகம்
📍 MWDT அலுவலகம், பாலாவி

📅 21.06.2026
🏫 நாகவில்லு சிறுவர் கழகம்
📍 பு/எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயம்.

🎤 நிகழ்வின் வளவாளராக MWDT நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் *திருமதி ஜூவைரியா முஹைதீன்* அவர்கள் கலந்து கொண்டு, சமூக முன்னேற்றத்தில் ஆண் சிறுவர்களும் பெண் சிறுமிகளும் சமமாக பங்களிப்பதன் அவசியம், 🤝 ஒத்துழைப்பு, 🌍 சமூகப் பொறுப்புணர்வு, தலைமைத்துவம் மற்றும் 🌱 நல்ல பண்புகள் குறித்து பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

✨ இந்நிகழ்வுகள் சிறுவர் கழக உறுப்பினர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கவும், பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், 🌟 எதிர்கால சமூகத் தலைவர்களாக உருவாக ஊக்கமளிக்கும் சிறந்த நிகழ்வுகளாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

💚 நாம் ஒன்றுபடுவோம் – நமது சமூகத்தினை ஒற்றுமையான சமூகமாக உருவாக்குவோம்!🤝

நன்றி
ஊடக குழு
_______________________________

🌙✨ ஈத் அல்-அத்ஹா திருநாள் நல்வாழ்த்துகள் ✨🌙அகிலங்கள் போற்றும் தியாகத் திருநாளாம் இந்த ஈத் அல்-அத்ஹா நன்னாளில், MWDT சார்...
27/05/2026

🌙✨ ஈத் அல்-அத்ஹா திருநாள் நல்வாழ்த்துகள் ✨🌙

அகிலங்கள் போற்றும் தியாகத் திருநாளாம் இந்த ஈத் அல்-அத்ஹா நன்னாளில், MWDT சார்பாக உங்கள் அனைவருக்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த இனிய பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.✨

இறைவனின் அளவற்ற அருளும், அன்பும், பேரமைதியும், மகிழ்ச்சியும் உங்களுடைய இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றும் நிறைந்து நிலைத்திருக்க மனதாரப் பிரார்த்திக்கிறோம். 🤍🕌

இனிய ஈத் முபாரக்! 🤝✨

இரசாயனப் பொருட்கள் அற்ற உணவு உற்பத்தி மற்றும் சுயதொழில் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி2026.05.12 மற்றும் 2026.05.13 ஆகிய த...
21/05/2026

இரசாயனப் பொருட்கள் அற்ற உணவு உற்பத்தி மற்றும் சுயதொழில் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி

2026.05.12 மற்றும் 2026.05.13 ஆகிய தினங்களில் Naga Pasumai Private Limited நிறுவனத்தின் Director அவர்கள் வளவளராக கலந்து கொண்டு, இரசாயனப் பொருட்கள் அற்ற மற்றும் நீண்ட காலம் பாதுகாத்து விற்பனை செய்யக்கூடிய உணவு உற்பத்தி முறைகள் தொடர்பான பயிற்சியை வழங்கினார். இப்பயிற்சி Muslim Women Development Trust நிறுவனத்தில் சுயதொழில் முயற்சியில் ஈடுபட விரும்பும் மற்றும் சுயதொழில் செய்து கொண்டிருக்கும் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பயிற்சியின் மூலம் பெண்களுக்கு ஆரோக்கியமான மற்றும் தரமான உணவுப் பொருட்களை தயாரிக்கும் முறைகள், அவற்றை சுத்தமாக பாதுகாக்கும் நுட்பங்கள், சந்தைப்படுத்தல் முறைகள் மற்றும் வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டக்கூடிய சுயதொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவூட்டப்பட்டது. குறிப்பாக chemical அற்ற உணவுப் பொருட்களின் அவசியம் மற்றும் மக்களின் அதிகரித்து வரும் ஆரோக்கிய விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு, சந்தையில் நல்ல வரவேற்பைப் பெறக்கூடிய உற்பத்திகளை உருவாக்குவது பற்றி நடைமுறை ரீதியாக கற்றுக்கொடுக்கப்பட்டது.

மேலும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தையும் தன்னம்பிக்கையையும் உயர்த்தும் நோக்கில் இப்பயிற்சி பெரும் பயனளித்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டு, எதிர்காலத்தில் தங்களுக்கென சிறிய அளவிலான தொழில்களை ஆரம்பிக்கத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் பெற்றுக்கொண்டனர்.

நன்றி
ஊடகக்குழு
________________________________

Address

Fareethabath, Colombo Road
Palavi
61280

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 13:00

Telephone

+94322269197

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Women's Development Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muslim Women's Development Trust:

Shortcuts

Share