15/06/2026
AL ISLAH HELPING ZONE -140
கண் சத்திர சிகிச்சைக்கு நிதியுதவி
---------------------------------------------
◾ தியாவட்டவானில் வசிக்கும் முன்னர் ஆட்டோ சாரதியாக பணியாற்றிய நபர் ஒருவரால் தனது கண் சத்திர சிகிச்சைக்கு நிதி உதவி வழங்குமாறு அமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற கடிதத்திற்கு அமைய,அல் இஸ்லாஹ் அமைப்பின் உறுப்பினர்களால் கள ஆய்வு செய்யப்பட்டது.
◾அதன் அடிப்படையில் குறித்த சகோதரர் முன்னர் ஆட்டோ சாரதியாக உழைத்து தற்போது பார்வைக் குறைபாட்டால் வீட்டோடு இருப்பது தெரியவந்தது.அத்தோடு கண் சத்திர சிகிச்சைக்கு குறித்த தொகையொன்றை சேகரித்து கொண்டிப்பதாக தெரிவித்தார்.
◾இதனை கருத்திற்கொண்டு 11.05.2026 அமைப்பின் தலைவர் அனீஸ் அஹமட் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர் அஷ்வின் ஆகியோரினூடாக அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் MKM.சஹீல் அவர்களால் பயனாளியின் வீடு சென்று ரூ.20,000 பணம் வழங்கப்பட்டது.
◾இவ் உதவியை செய்து வழங்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாளிப்பானாக!
💰நிதி மூலம் -
தனவந்தர் ஒருவரினால் அமைப்பிற்கு வழங்கப்பட்ட ஷகாத் நிதியிலிருந்து - ரூ.20,000