Occ-99 Association

Occ-99 Association We are BT/BC/Oddamavadi National School 1999 O/L Batch. We are warmly welcome all well wishers. Thank you-OCC-99
-Keep In Touch With Friendship-

OCC 99 அமைப்பின் 11 வது வருடாந்த இப்தார் நிகழ்வு தியாவட்டவானில் சிறப்பாக நடைபெற்றது.2015 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட OCC...
02/03/2026

OCC 99 அமைப்பின் 11 வது வருடாந்த இப்தார் நிகழ்வு தியாவட்டவானில் சிறப்பாக நடைபெற்றது.

2015 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட OCC 99 அமைப்பானது தனது 11வது வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (01.03.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை தியாவட்டவானில் அமைந்துள்ள அதன் காரியாலயத்தில் தலைவர் ஜே.எம். இம்தியாஸ் அவர்களின் தலைமையில் மிக விமர்சையாக நடைபெற்றது.

ஒரு சில ஆண்டுகளைத் தவிர்த்து, ஆரம்பம் முதலே இப்தார் நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் இவ்வமைப்பின் இப்தார் நிகழ்வு மாலை 5:31 மணிக்குத் தொடங்கி உறுப்பினர்களின் வருகையினால் களைகட்டியிருந்தது.

குறிப்பாக, அமைப்பின் நண்பர்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளுடன் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் Occ99 Association  பழைய மாணவர் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்புஓட்டமாவடி தேசிய ப...
12/01/2026

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் Occ99 Association பழைய மாணவர் சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தினால் (OCC 99 Association) அதன் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு கடந்த 10.01.2026 சனிக்கிழமை மீராவோடை எல்லை வீதியில் அமைந்துள்ள
அந் நூர் கேட்போர் கூடத்தில் அமைப்பின் தலைவர் ஜே.எம். இம்தியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சுமார் 80 மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இம் மாணவர்கள் அனைவரும் OCC99 Association அமைப்பின் உறுப்பினர்களுடைய பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் உரையாற்றிய தலைவர் ஜே.எம். இம்தியாஸ், மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் சங்கம் முன்னெடுக்கவுள்ள பல முக்கிய திட்டங்களை அறிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம் (O/L) 9A மற்றும் உயர்தரப் (A/L) பரீட்சைகளில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் எனவும், பாடசாலை மட்டத்தில் நடைபெறும் பேச்சுப் போட்டி, ஆங்கிலத் தினம், கணிதப் போட்டி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாவட்ட, மாகாண மற்றும் அகில இலங்கை ரீதியில் முதலிடங்களைப் பெற்று சாதனை படைக்கும் மாணவர்களுக்கு சங்கத்தின் சார்பாக தங்கப் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்படுவார்கள் எனவும் புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் (ஹாபிழ்) மாணவர்களுக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும் எனவும் தனது உறையில் குறிப்பிட்டார்.
அமைப்பின் உறுப்பினர்களின் பிள்ளைகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து அமைப்பினரால் பாடசாலை கற்றல் உபகரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்கான நிதிப் பங்களிப்பினை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் Occ99 Association மாணவர் சங்கத்தின் நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கியிருந்தனர்.

எதிர்காலத்திலும் இவ்வாறான பல சமூகப் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைப்பினார் தெரிவித்தனர்.

மீராவோடை அமீர் அலி வித்தியாலய மாணவர்களுக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் OCC 99 Association அமைப்பினால் நிதிய...
11/01/2026

மீராவோடை அமீர் அலி வித்தியாலய மாணவர்களுக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் OCC 99 Association அமைப்பினால் நிதியுதவி

OCC 99 அமைப்பினால், மீராவோடை அமீர் அலி வித்தியாலய மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபரின் விசேட வேண்டுகோளுக்கிணங்க, மாணவர்களுக்குத் தேவையான பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை கொப்பிகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போது OCC 99 அமைப்பின்
தலைவர் ஜே.எம். இம்தியாஸ், செயலாளர் எம். ஐ. முஸம்மில், பொருளாளர் எம்.எச். நஜீப் உபதலைவர் யூ. எல். நஜீம் மற்றும் அமைப்பின் உறுப்பினர்களான பி.எம். ஜாபீர்,
எஸ். டீ. இஹ்ஸான் ஆகியோர் இணைந்து, பாடசாலை அதிபர் ஜனாப் எம். சீ. ஐயூப்கான் மற்றும் பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களிடம் இந்த நிதி உதவிக்கான காசோலையை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

எங்களுடைய OCC99 அமைப்பானது கடந்த ஒரு தசாப்த காலமாக மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

20/12/2025
எமது அமைப்பின் நண்பர் சகோதரர் B. பௌர்தீன் அவர்கள் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டவான்  கிராம உத்திய...
12/12/2025

எமது அமைப்பின் நண்பர் சகோதரர் B. பௌர்தீன் அவர்கள் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கான சமுதாய அபிவிருத்திச்சபைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எங்களுடைய OCC99 அமைப்பின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களுடைய OCC99 Association அமைப்பின் உறுப்பினர் நண்பன் Dr BM.பிர்னாஸ்அவுஸ்திரேலியாவின் மருத்துவ நிபுணருக்கான இறுதிப்பரீ...
06/12/2025

எங்களுடைய OCC99 Association அமைப்பின் உறுப்பினர் நண்பன் Dr BM.பிர்னாஸ்

அவுஸ்திரேலியாவின் மருத்துவ நிபுணருக்கான இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்து பொது நல மருத்துவத் துறையில்(குடும்ப நல மருத்துவர் - Consultant Family Physician/ Specialist General Practitioner) மருத்துவ நிபுணருக்கான FRACGP(Aus) எனும் பட்டத்தை பெற்றிருக்கிறார்.

அவருக்கு எங்களுடைய OCC99 அமைப்பின் சார்பாக மனமார்ந்த
வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

எங்களுடைய OCC99 ASSOCIATION அமைப்பின்  உறுப்பினர் நண்பர் சகோதரர் MBM. MUBARAK அவர்கள் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரா...
24/11/2025

எங்களுடைய OCC99 ASSOCIATION அமைப்பின் உறுப்பினர் நண்பர் சகோதரர் MBM. MUBARAK அவர்கள் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளராக இன்றைய தினம் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனாஸா அறிவித்தல் .எமது அமைப்பின் நண்பர் எல்.றமீஸ் அவர்களின் தாயார் முஹம்மது ஸாலி சித்தி றெய்ஹானா என்பவர் இன்று 18.11.202...
18/11/2025

ஜனாஸா அறிவித்தல் .

எமது அமைப்பின் நண்பர் எல்.றமீஸ் அவர்களின் தாயார் முஹம்மது ஸாலி சித்தி றெய்ஹானா என்பவர் இன்று 18.11.2025 காலை (08.15) மணியளவில் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைத்து இறையழைப்பை ஏற்றுக்கு கொண்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜிஊன்.

அன்னார். இப்றா லெப்பை முஹம்மது லத்தீப் என்பவரின் அன்பு மனைவியும்.

சித்தி ரமீஸா. நியாஷா, எல். ரமீஸ் (peoples Development micro credit) பணிப்பாளர்)ஆகியோரின் பாசமிகு தாயும்.

முபாறக் கஸீறா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்ஸாஹ் அல்லாஹ் இன்று அஸர் தொழுகையின் பின் ஒட்டமாவடி முகைதீன் ஜூம்மாஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்

தகவல் மகன் ரமீஸ்.

25/05/2025

Address

Oddamavadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Occ-99 Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share