Nintavur Welfare Council - NWC

Nintavur Welfare Council - NWC For the betterment of Nintavur by joining hands from across the globe to uplift community standards in terms of Education, Health, Religious, Social etc...

 #ரமழான்2026 பொதிகள்°°°°அல்லாஹ்வின் பேரருளால் இன்று நிந்தவூர் நலன்புரிச் சபையினால் ரமழான் உலர் உணவுப் பொதிகள் தேவையுடைய ...
08/03/2026

#ரமழான்2026 பொதிகள்
°°°°
அல்லாஹ்வின் பேரருளால் இன்று நிந்தவூர் நலன்புரிச் சபையினால் ரமழான் உலர் உணவுப் பொதிகள் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கும் பாக்கியம் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!

NWC அங்கத்தினர்கள், மற்றும் பரோபகாரிகளிடமிருந்து பெற்ற நன்கொடை நிதி மூலம் தலா ரூபா 5,000 பெறுமதியான 1808 ரமழான் உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

நிந்தவூர் அனைத்து பள்ளிவாசல் பரிபாலன சபைகளினால் பரிந்துரை செய்யப்பட்ட தேவையுடைய குடும்பங்களுக்கு சுமார் 90 இலட்சம் ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!!

இந் நிகழ்வுகளை மிகவும் அர்ப்பணத்துடன் NWC யின் செயற்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டு ஒழுங்கமைத்து சிறப்பாக நடாத்தினர். மேலும் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழக (MATHEENA SC) இளைஞர்கள் பக்கபலமாக நின்று உதவினர்.

எங்களுக்கு பல வகையிலும் பொருளாதார, உடல் உதவிகள் செய்த சமூக ஆர்வலர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், நலன் விரும்பிகளுக்கு நாங்கள் நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளோம்.

எமது அனைத்து முயற்சிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டு உதவிகள் புரிந்த அனைவருக்கும் அல்லாஹ் பொருளாதார உடல் உள ஆரோக்கியத்தில் பரக்கத்தும் மஃக்பிரத்தும் செய்வானாக, ஆமீன்!

நிந்தவூர் நலன்புரிச்சபை
Nintavur Welfare Council
Registered Charity Organisation

 #றமழான் பொதிகள் 2025°°°°°°அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் பேரருளால் இன்று 1500 றமழான் உலர் உணவுப் பொதிகளை தேவையுடைய குடும...
15/03/2025

#றமழான் பொதிகள் 2025
°°°°°°
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் பேரருளால் இன்று 1500 றமழான் உலர் உணவுப் பொதிகளை தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கும் பாக்கியம் கிடைத்தது.

நிந்தவூர் நலன்புரிச் சபையினால் (NWC) அதன் அங்கத்தினர்கள், பரோபகாரிகளிடமிருந்து பெற்ற நன்கொடை நிதி மூலம் தலா ரூபா 5,000 பெறுமதியான 1522 உலர் உணவுப்பொதிகள் றமழான் நோன்பையும் இக்கால தேவைகளையும் கருதி அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இம்முறை நிந்தவூர் அனைத்து பள்ளிவாசல்கள் பரிபாலன சபைகளினால் பரிந்துரை செய்யப்பட்ட தேவையுடைய குடும்பங்களுக்கு சுமார் 75.5 இலட்சம் ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்!!!

இந் நிகழ்வுகளை மிகவும் அர்ப்பணத்துடன் NWC யின் செயற்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டு ஒழுங்கமைத்து சிறப்பாக நடாத்தி முடித்தனர். மேலும் இந்த நிகழ்வுகளில் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தைச் (MATHEENA SC) சேர்ந்த இளைஞர்கள் பக்கபலமாக நின்று உதவினர்.

எங்களுக்கு பல வகையிலும் பொருளாதார, உடல் உதவிகள் செய்த சமூக ஆர்வலர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், நலன் விரும்பிகள் ஆகியோர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றி செலுத்துகின்றோம்.

எமது அனைத்து முயற்சிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டு உதவிய அனைவர்களுக்கும் அல்லாஹ் பறக்கத்தும் மஃக்பிரத்தும் செய்வானாக, ஆமீன்!

நிந்தவூர் நலன்புரிச்சபை
NWC
Registered Charity Organisation

மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் விநியோகம் °°°°நிந்தவூர் நலன்புரிச் சபையின் வட்டியில்லா வங்கி நிதியம், தாறுத்தகாபுலின்  ஒ...
02/02/2025

மாணவர்களுக்கு பாடசாலை பொருட்கள் விநியோகம்
°°°°
நிந்தவூர் நலன்புரிச் சபையின் வட்டியில்லா வங்கி நிதியம், தாறுத்தகாபுலின் ஒரு முன்னெடுப்பான மேற்படி நிகழ்வு இன்று 02.02.2025 காலை NWC காரியாலயத்தில் மிக எளிமையாக நடந்தேறியது. இதில் 70 தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு பாடசாலை பேக், அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்கள் அடங்கிய தலா ரூபா 3,000 பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சிறார்கள் தாறுத்தகாபுல் நிதியத்தில் சிறுவர் கணக்கு அங்கத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Inna Lillahi wa Inna Ilaihi Raji’unIt is with deep sorrow that we announce the passing of Dr. Achi M. Ishaq, of 23, Kass...
26/12/2024

Inna Lillahi wa Inna Ilaihi Raji’un

It is with deep sorrow that we announce the passing of Dr. Achi M. Ishaq, of 23, Kassapa Road, Colombo 5, who passed away in Makkah on 25th December 2024.

Hailing from the village of Nintavur in the Eastern Province, Professor Ishaq was an exceptional student during the renowned Azeez Era of Zahira College, excelling in both academics and sports.

After graduating from the University of Ceylon in Colombo in 1962, he embarked on a remarkable journey of higher education and professional achievement. Following his initial training in the Survey and Irrigation Departments in Sri Lanka, he pursued advanced studies in the Netherlands on a Nabuta Fellowship, specializing in Aerial Surveys and Hydraulic Engineering. As a Fulbright Fellow, he completed his Master’s Degree and PhD in Civil and Environmental Engineering at the University of Washington, Seattle, and the University of Wisconsin-Madison, USA.

Professor Ishaq served as a faculty member at Michigan State University and for over 30 years at the prestigious King Fahd University of Petroleum and Minerals. He was a Fellow of the American Society of Civil

Engineers, a Chartered Civil Engineer, and a consultant to numerous international organizations.

In Sri Lanka, he generously contributed his expertise as an honorary consultant to the Ministry of Ports and Shipping and the Ministry of Environment and Natural Resources. He served as the Chancellor of South Eastern University from 2007 to 2022, leaving an enduring legacy in academia and public service.

Professor Ishaq’s life was a testament to dedication, excellence, and service to humanity. His loss will be deeply felt by his family, friends, colleagues, and all who had the privilege of knowing him.

May Allah (SWT) grant him the highest place in Jannah and provide strength to his loved ones during this time of grief.

முன்னாள் நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசல் இமாமும்  பயிற்றப்பட்ட ஆசிரியருமான Al-Hafil AC. Ashraf (Falahi)(BA SAUDI, BIS Mala...
29/09/2024

முன்னாள் நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசல் இமாமும் பயிற்றப்பட்ட ஆசிரியருமான Al-Hafil AC. Ashraf (Falahi)(BA SAUDI, BIS Malaysia, MA - University of Peradeniya) அவர்களை அமீரக அமைச்சின் General Authority of Islamic Affairs and Endowments AWQAF*நிறுவனம் சுமார் 6000 இமாம்களுக்கு மத்தியில் மிகச்சிறந்த 16 இமாம்களை தெரிவுசெய்துள்ளார்கள்.

அவர்களுள் கண்ணியத்திற்குரிய AC. Ashraf Hafiz அவர்களும் உள்வாங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

எமது ஊரின் மகத்துவத்தை சர்வதேச ரீதியில் பறைசாற்றிய சான்றோர் வரிசையிலே, எமது மண்ணுக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த எமது NWC உயர் பீட உறுப்பினர் AC. Ashraf Hafiz அவர்களை மனதார வாழ்த்துகின்றோம்.
பாரகல்லாஹு பீஃக்!

Eid Al Adha Mubarak 2024!
16/06/2024

Eid Al Adha Mubarak 2024!

EID MUBARAK!
09/04/2024

EID MUBARAK!

 #றமழான் பொதிகள் 2024(பகுதி 1)°°°°°°அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் பேரருளால் இம்முறை முதற்கட்டமாக 867 றமழான் உலர் உணவுப் ...
25/03/2024

#றமழான் பொதிகள் 2024
(பகுதி 1)
°°°°°°
அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் பேரருளால் இம்முறை முதற்கட்டமாக 867 றமழான் உலர் உணவுப் பொதிகளை தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கும் பாக்கியம் கிடைத்தது.

நிந்தவூர் நலன்புரிச் சபையினால் (NWC) அதன் அங்கத்தினர்கள், பரோபகாரிகளிடமிருந்து பெற்ற நன்கொடை நிதி மூலம் தலா ரூபா 5,650 பெறுமதியான 867 உலர் உணவுப்பொதிகள் றமழான் நோன்பையும் இக்கால தேவைகளையும் கருதி அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இம்முறை நிந்தவூர் பள்ளிவாசல்கள் பரிபாலன சபைகளினால் பரிந்துரை செய்யப்பட்ட தேவையுடைய குடும்பங்களுக்கு சுமார் 49 இலட்சம் ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலதிக சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதிகள் 2ம் கட்டமாக இன்ஷா அல்லாஹ் விரைவில் வழங்கி வைக்கப்படவுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்!!!

இந் நிகழ்வுகளை மிகவும் அர்ப்பணத்துடன் NWC யின் செயற்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டு ஒழுங்கமைத்து சிறப்பாக நடாத்தி முடித்தனர். மேலும் இந்த நிகழ்வுகளில் நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தைச் (MATHEENA SC) சேர்ந்த இளைஞர்கள் பக்கபலமாக நின்று உதவினர்.

எங்களுக்கு பல வகையிலும் பொருளாதார, உடல் உதவிகள் செய்த சமூக ஆர்வலர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், நலன் விரும்பிகள் ஆகியோர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றி செலுத்துகின்றோம்.

எமது அனைத்து முயற்சிகளையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டு இதற்கு உதவிய அனைவர்களுக்கும் அல்லாஹ் பறக்கத்தும் மஃக்பிரத்தும் செய்வானாக, ஆமீன்!

நிந்தவூர் நலன்புரிச்சபை

Address

144 Ahamed Tuhuffa Bldg, Main Street
Nintavur
32340

Opening Hours

Monday 08:30 - 15:00
Tuesday 08:30 - 15:00
Wednesday 08:30 - 15:00
Thursday 08:30 - 15:00
Saturday 09:00 - 15:00

Telephone

94672251510

Alerts

Be the first to know and let us send you an email when Nintavur Welfare Council - NWC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Nintavur Welfare Council - NWC:

Share