Hapugastalawa Youngsters Development Association - HYDA

Hapugastalawa Youngsters Development Association - HYDA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hapugastalawa Youngsters Development Association - HYDA, Nonprofit Organization, Main Street Hapugastalawa, Nawalapitiya.

🌙✨ **Eid al-Adha Mubarak!** 🌟🐏To all our esteemed association members and the entire Muslim community, we extend our hea...
16/06/2024

🌙✨ **Eid al-Adha Mubarak!** 🌟🐏

To all our esteemed association members and the entire Muslim community, we extend our heartfelt wishes for a joyous and blessed Eid al-Adha. May this special occasion bring peace, happiness, and prosperity to you and your loved ones. 🕌🤲

Let us celebrate the spirit of sacrifice and devotion, and may Allah accept your good deeds and sacrifices. Enjoy this festive time with your family and friends, cherishing the moments of togetherness and gratitude. 🌿🍛👨‍👩‍👧‍👦

Eid Mubarak! 🕋✨

HYDA

🛑அஸ்ஸலாமு அலைக்கும்🛑ஹபுகஸ்தலாவை இளைஞர் அபிவிருத்தி சங்கத்தினால் (HYDA), இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண் மாணவ...
09/06/2024

🛑அஸ்ஸலாமு அலைக்கும்🛑

ஹபுகஸ்தலாவை இளைஞர் அபிவிருத்தி சங்கத்தினால் (HYDA), இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண் மாணவிகளுக்கான விசேடமாக கவுன்சிலிங் நிகழ்வு, அல்லாஹ்வின் கிருபையால் மிகச் சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்✨

குறித்த கவுன்சிலிங் நிகழ்வில் உயர்தர மாணவிகளுள் 30 இற்கும் அதிகமான மாணவிகள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மாணவர்களின் feedback இனை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்வானது மாணவர்கள் மத்தியில் எத்தகைய நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி இருந்தது என்பதை நாம் கண்கூடாகவே அவதானித்திருந்தோம், அல்ஹம்துலில்லாஹ்.

இளமைப் பருவம் வாழ்வில் எத்தகைய முக்கியமான பருவம், அப்பருவத்தை இறைவனுக்காக இஸ்லாமிய நெறிமுறைகளின் படி எவ்வாறு கழிக்க முடியும், இந்த பருவத்தில் பெண் மாணவிகளின் மத்தியில் வரக்கூடிய பிரதானமான சவால்கள் மற்றும் அவ்வாறான சவால்களை எவ்வாறு வெற்றிகரமான முறையில் எதிர்கொள்வது, போன்ற பல முக்கியமான விடயங்கள் தொடர்பாக நமது வளவாளர் M.I.Irfan (islahi) அவர்கள் உரையாற்றியிருந்தார்.

நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தபோது, இதுபோன்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை மேலும் எமது ஊரில் ஏற்பாடு செய்து தருமாறும் கேட்டிருந்தார்கள்.

எதிர்வரும் காலங்களில் இது போன்ற இன்னும் பல நிகழ்வுகளை எமது HYDA நிறுவனத்தினால் ஊரில் ஏற்பாடு செய்வதற்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் உதவிகளையும் எதிர்பார்க்கின்றோம்.

ஜஸாக்கல்லாஹூ ஹைரன்.

*HYDA* நிறுவனத்தினால் எமது ஊரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2024, 25 மற்றும் 26ஆம் வருட உயர்தர பெண் மாணவிகளுக்காக ஏற்பாட...
06/06/2024

*HYDA* நிறுவனத்தினால் எமது ஊரில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2024, 25 மற்றும் 26ஆம் வருட உயர்தர பெண் மாணவிகளுக்காக ஏற்பாடு செய்திருக்கும்,

*மாபெரும் கவுன்சிலிங் நிகழ்வு.*🔥🔥

🗓️: 09.06.2024
🕐: காலை 8:30 மணி
📍: அந்நூர் ஆரம்ப பாடசாலை


சிரேஷ்ட ஆலோசகர் M.I.Irfan (islahi) அவர்களால் நடாத்தப்படவுள்ள இந்நிகழ்வில்,

முதன்மை தலைப்புக்களாக,

1. *வாலிப வயதின் முக்கியத்துவம்*
2. *இளவயதில் மனநிலை மாற்றங்கள்*
3. *வாலிப சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது*
4. *தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்களை சமாளித்தல்*

போன்ற முக்கியமான பல விடயங்கள் கலந்துரையாடப்படும்.

வாழ்வில் மிக முக்கியமான பருவமான இவ் வாலிபப் பருவத்தில், குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பெண் மாணவிகள் உளவியல் சவால்களுக்கும் மன உளைச்சலுக்கும் அதிகமாக உள்ளாவதை காண முடியும்.

சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றால் இச்சவால்களை வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும்.

இந்த அமர்வின் மூலம், வாலிபத்தின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் மதிப்புமிக்க அறிவுரைகளை பெறலாம். உங்கள் எதிர்காலத்தை ஒளிரச் செய்ய இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.📌🔥✨

"Congratulations to all the students of the G.C.E. Advanced Level exams of 2024, from the Hapugastalawa Youngsters Devel...
01/06/2024

"Congratulations to all the students of the G.C.E. Advanced Level exams of 2024, from the Hapugastalawa Youngsters Development Association!

To those who performed exceptionally, your success is well-deserved, and we celebrate your accomplishments wholeheartedly. Your future is bright, and we have every confidence that you will continue to excel in your chosen paths.

To those who may not have achieved the results they desired, remember that setbacks are not failures but opportunities for growth. Your journey is far from over, and with determination and perseverance, you can overcome any challenge that comes your way.

Congratulations to each and every one of you on reaching this significant milestone. Your hard work has brought you this far, and we look forward to witnessing the great things you will achieve in the future. Here's to a bright and promising future for all!"

*اَللَّهُـمَّ لَا سَهْلَ إِ لاَّ مَا جَعَلْتَهُ سَهْـلاً، وَأَ نْتَ تَجْعَلُ الْحَـزَنَ إِذَا شِئْتَ سَهْـلاً* O Allah, ...
05/05/2024

*اَللَّهُـمَّ لَا سَهْلَ إِ لاَّ مَا جَعَلْتَهُ سَهْـلاً، وَأَ نْتَ تَجْعَلُ الْحَـزَنَ إِذَا شِئْتَ سَهْـلاً*

O Allah, there is no ease except in that which You have made easy, and You make the difficulty, if You wish, easy.🤲

Good luck from our side for everything you wish for. May you get good grades and we wish you reach higher.

May Allah's guidance be with you all during the exam!

All the best our sisters and brothers🖤

*HYDA*

அஸ்ஸலாமு அலைக்கும் ..இன்றைய தினம் 12.02.2024 (திங்கட்கிழமை) HYDA அமைப்பின் உதவியுடன் AL MINHAJ தேசிய பாடசாலையில்  மாணவர்...
12/02/2024

அஸ்ஸலாமு அலைக்கும் ..

இன்றைய தினம் 12.02.2024 (திங்கட்கிழமை) HYDA அமைப்பின் உதவியுடன் AL MINHAJ தேசிய பாடசாலையில் மாணவர்களின் நலன் கருதி O/ L Project ஆரம்ப கட்டமாக நடைபெற்றது..

இன்றைய தினம் விஞ்ஞான பாடம் நடைபெற்றது.. அதில் அனைத்து மாணவர்களும் பங்கு பற்றியதோடு மாணவர்கள் உற்சாகமாக கல்வி கற்றதையும் காணக்கூடியதாக இருந்தது..மேலும் அவர்களுக்கான மற்றைய பாடங்களுக்கான வகுப்புகள் வரு‌ம் நாட்களில் தொடர்ந்து நடைபெறும் என்பதையும் அறியத் தருகின்றோம்..

மேலும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை அடைந்து கொள்வதற்கு உங்களுடைய பங்களிப்புகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி தொடர்ந்தும் முன் நோக்கி செல்ல உதவி புரியுமாறு கேட்டு கொள்கின்றோம்

இப்படிக்கு,
HYDA

All the best 🎉
03/01/2024

All the best 🎉

ஹபுகஸ்தலாவை வாழ் இளைஞர்களே!அஸ்ஸலாமு அலைக்கும்!கடந்த 2 வருட காலங்களாக எமது ஊரில் HYDA எனும் அமைப்பு இயங்கி வருவதை அறிவீர்...
10/12/2023

ஹபுகஸ்தலாவை வாழ் இளைஞர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!

கடந்த 2 வருட காலங்களாக எமது ஊரில் HYDA எனும் அமைப்பு இயங்கி வருவதை அறிவீர்கள்.ஊரில் உள்ள பல நல் உள்ளங்களின் உதவியுடன் எம்மால் முடியுமான ஒரு சில,பல வேலைதிட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

அந்த வகையில்,இந் நிறுவனமாவது எமதூர் இளைஞர்,யுவதிகள் அனைவரதும் சொத்தாகும்.இதனை கொண்டு எமது ஊரின் முன்னேற்ற செயற்பாடுகள் பலவற்றில் எம்மால் பங்களிப்பு செய்ய முடியும்.

ஆகவே தற்போது HYDA நிறுவனத்தின் உறுப்புரிமை திறக்கப்பட்டுள்ளது.க.பொ.த உயர் தரம் எழுதிய 35 வயதுக்குற்பட்ட ஆண்,பெண் அனைவரும் இதில் இணைந்து கொள்ள முடியும்.

இதனூடாக,

📌கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்தல்

📌சுகாதார,சுற்றாடல் செயற்பாடுகளை மேற்க்கொள்ளல்

📌வழிகாட்டல் நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல்

📌வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல்

📌விளையாட்டு துறை நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கள்

📌கலாசார நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்

என பல்வேறு வேலைதிட்டங்களை எம்மால் ஒன்றிணைந்து மேற்கொள்ள முடியும் இன்ஷாஅல்லாஹ்.

எனவே தாங்களும் இந் நிறுவனத்தில் இணைந்து இவ்வூரின் வளர்ச்சிக்கு துணை புரிய விரும்பினால் கீழ் உள்ள இணைப்பின் மூலம் தங்களது அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.

https://surveyheart.com/form/6574ad2db135e20a41495571

⭕பதிவு செய்தவர்களுக்குரிய மேலதிக விபரங்கள் யாப்பின் அடிப்படையில் விரைவில் உங்களது வாட்ஸாப் எண்ணுக்கு வழங்கப்படும்.

அத்தோடு 35 வயதுக்கு மேற்பட்ட,எனினும் இளைஞர் விவாகரத்தில் எமக்கு ஒத்துழைக்க விரும்பும் அன்பின் சகோதரர்களும் எம்மை தொடர்பு கொள்ளலாம்.
0766004712

ஊர் நிறுவனங்களுடன் ஒத்துழைத்து/இணைந்து வளமிக்க ஊரை உருவாக்க முன்நோக்கி பயணிப்போம்.

ஜசாக்கல்லாஹு ஹைரன்.

நிர்வாகம்.
HYDA

𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐡𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡!😍First of all we congratulate our students  who has selected to universities in academic year 22/23 and w...
03/12/2023

𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐡𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡!😍

First of all we congratulate our students who has selected to universities in academic year 22/23 and we are grateful to the parents and donars for the constant support you all gave for us.

Once again, cheers to your well deserved success.. Your sincere efforts deserve this success.. All the best for your future!

Allahumma bariq!❤️

🤩CONGRATULATIONS🤩2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. எமது ஊரில் சிறந்த பெறுபேறுகளை ...
01/12/2023

🤩CONGRATULATIONS🤩

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. எமது ஊரில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ள சகல மாணவர்களுக்கும் எமது அமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப் பெறுபேறுகளை கொண்டு உயர் தரம் மற்றும் ஏனைய துறைகளில் சிறந்த முறையில் முயற்சித்து எதிர்காலம் சிறப்பிக்க வாழ்த்துக்கள்.!

அதே சமயம் ஹபுகஸ்தலாவை மண்ணில் வளமிக்க இளைஞர்களாக பணிபுரியவும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை நிற்பானாக❤️

அத்தோடு இவர்களின் வெற்றி மற்றும் முயற்சியில் பங்குகொண்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள்,அமைப்புகள் அனைவருக்கும் Hapugastalawa Youngsters Development Association - HYDA சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துகொள்கிறோம்.

நிர்வாகம்.

THE EFFORTS AND SUCCESS OF THE YOUTH OF OUR HAPUGASTALAWA IN THE FIELD OF SPORTSBy participating and winning the distric...
05/11/2023

THE EFFORTS AND SUCCESS OF THE YOUTH OF OUR HAPUGASTALAWA IN THE FIELD OF SPORTS

By participating and winning the district level competitions which was held in Nuwara Eliya district our youth have etched their names in the record line of hapugastalwa history.

According to that Shamrihan has won the first place in the shot put and Izzath has won the second place in discus throw. Also, Azki has got the second place in triple jump event.
Also, Nuzair has finished second in 200m race and third in both 100 m race and long jump. And Arkam has won the third place in both 800m race and 1500m race.

Also, in 4*100 m relay Nuzair, Shamrihan, Izzath and Azki ha secured the second position and in 4*400 m relay Nuzair, Arkam, Izzath & Azki got the second place.
It's worth to say that these victories are achieved by contesting in Nuwara Eliya district level competitions.

At this moment, we congratulate the Hapugastalawa Youth Organization including brother Malik who prepared our youngsters to this competitions and the Back Benchers Youth Club who helped to bring the competition into a framework.
Also, we would like to express our appreciation on behalf of HYDA committee and in sha Allah we'll give our best contribution in future for such things.

To develop their social skills and to explore different kinds of interests of youngsters it's a must to focus on co curricular activities such as sports, arts, community services etc. And this has started to reflect in our Hapugastalawa.

*HYDA பரிசளிப்பு விழா-2023*2022 க. பொ. த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய Hapugastalawa Youngsters Development Association (HY...
30/09/2023

*HYDA பரிசளிப்பு விழா-2023*

2022 க. பொ. த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய Hapugastalawa Youngsters Development Association (HYDA) நிறுவனத்தில் கல்வி பயின்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம் அந்நூர் ஆரம்ப பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தனவந்தர்கள், ஊர் நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளடங்களாக மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் இந் நிகழ்வினை நடாத்த எமக்கு மண்டபத்தை வழங்கிய அந்நூர் ஆரம்ப பாடசாலை அதிபர் அவர்களுக்கும் நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவிக்கிறோம்.

தொடர்ந்தும் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபட காத்திருக்கும் எமது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உங்களுடைய பெறுமதிமிக்க துஆக்களில் எம்மையும் இணைத்துகொள்ளுங்கள்.

குறைகளனைத்தும் எம்மை சார்ந்தன.நிறைகள் அனைத்தும் இறைவனை சார்ந்தன.

அல்ஹம்துலில்லாஹ்.

Address

Main Street Hapugastalawa
Nawalapitiya
20668

Telephone

+94766004712

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hapugastalawa Youngsters Development Association - HYDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hapugastalawa Youngsters Development Association - HYDA:

Share