20/04/2026
நூல் பதிப்பும் வெளியீடும்
பதிப்பு - 80
#தாய்_மாமன்
வகை - கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் - குகதா
வெளியீடு - அன்பின்பாதை எண்ணம்போல் வாழ்க்கை
பதிப்பு - மூதூர் ஜே.எம்.ஐ பப்ளிகேஷன்
ஆண்டு - 2025.டிசம்பர்
பக்கங்கள் - 128
விலை - 750.00
தொடர்பிலக்கம் - 0772747298
#நூல்_பற்றி
பாடசாலைக் காலங்களில் சாதாரணமாக கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பங்கேற்று சிறுகச்சிறுகச் சேகரித்த வெற்றிகளுக்கு அமோக வரவேற்பளித்து தட்டிக்கொடுத்து எனக்கான புதுப்பாதையை அமைத்துக் கொடுத்ததுடன், தரம் 11ல் கற்றுக் கொண்டிருந்த போது “இலங்கை நீரிழிவு சம் மேளனத்தினால்” நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற வுடன் சாற்றிதழையும் பரிசிலையும் பார்த்து விட்டு மகிழ்ந்து ஆசீர்வதித்தார் "புத்தகமாக வெளியிட வேண்டும் எல்லாத்தையும் கவனமா கச் சேர்த்துவை நிறைய வாசி நினைய எழுதலாம்” இந்த ஆசீர்வாதம் இன்றும் என்னை ஆசீர் வதித்து நிற்பதாய் உணர்ந்து பேருவகையடை கின்றேன்.
இவ்வாறு தொடர்ந்த எனது எழுத்துப் பயணம் நாளடைவில் பல களங்கள், வெற்றிகள், விருதுகள், பரிசில்கள் எனப்பலவற்றைப் பரிசளித்தது. தினகரன், மித்திரன், தமிழ்மிரர், தமிழருவி, காலைக்கதிர், தீம்புனல் போன்ற இலங்கைப் பத்திரிகைகளிலும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள், தொகுப்பு நூலகளிலும் எனது கவிதைகள் இன்றும் வெளிவந்த வண்ணமுள்ளன.
பல்வேறுபட்ட உணர்வுகள், கலாச்சாரம், பண் பாடுகள், மறந்தவை, மறந்து கொண்டிருப்பவை, நாட்டு நடப்புகள், விழிப்புணர்வுகள் எனப் பல் வேறுபட்ட கவிதைகளின் சங்கமாய் “தாய்மாமன்” நூல் வெளிவருகின்றது.
🔖 *இதுபோன்று உங்களின் நூல்களையும் வெளியீடு செய்வதற்கான அனுசரணையை எம்மிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்*
மேலதிக தொடர்புகளிற்கு
𝐌𝐮𝐭𝐮𝐫 𝐉𝐌𝐈 𝐏𝐯𝐭 𝐋𝐭𝐝
Contact - 𝟎𝟕𝟕𝟏𝟎𝟐𝟎𝟎𝟑𝟎 | 𝟎𝟕𝟏𝟕𝟖𝟗𝟏𝟖𝟖𝟕
WhatsApp 👇
https://wa.me/message/TYEME6WVMEPBH1
𝐌𝐨𝐫𝐞 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬
👉 muturjmi.com