மிளிரும் பூமி Flashing Earth

மிளிரும் பூமி  Flashing Earth சுதந்திரமானதும் சீரான ஒழுக்கம் பேணும் இளைய தலைமுறையை உருவாக்குவோம்

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிளிரும் பூமியின் இனிய அன்பு வணக்கங்கள் !
இன்றைய தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் நாளாந்தம் பல சமூகவலைத்தளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன அந்த வகையில் அதிக பயனர்களைக் கொண்ட சமூக வலைத்தளமாக காணப்படுவது முகநூல் ஆகும்.
இன்று சிறுவர் முதல் பெரியோர் வரை முகநூல் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நல் எண்ணம் கொண்டு பல்கலைக்கழக மாணவர்களால் உதயமா

னதே
மிளிரும் பூமி எனும் முகநூல் பக்கம் ஆகும்.
இப்பக்கத்தில் கல்வி மற்றும் அறிவியல்சார் தகவல்கள் மற்றும் பல்சுவை சார்ந்த பதிவுகள்
எம்மால் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்பதனை இத்தால் அறியத்தருகின்றோம்
மேலும்
நாளாந்தம் எமது விரிவுரையாளர்களால் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட வண்ணம் உள்ளது அத்துடன் அப்போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற அனைவருக்கும் எம்மால் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் என்பன வழங்கப்பட்டு வருகின்றன.
நீங்களும் எமது போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ்களினை பெற்றுக்கொள்ள விரும்பினால்
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் நீங்கள் எமது முக நூல் பக்கத்தினை விருப்பு ( like ) செய்துகொள்வதன் மூலமாக நீங்களும் எமது போட்டியாளர்களுள் ஒருவராகலாம்.

சிறைச்சாலையில் பிறந்த குழந்தை… இன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்!ஈழதேசம் கண்ட கண்ணீரில் மாண்டுவிடாமல்...
05/03/2026

சிறைச்சாலையில் பிறந்த குழந்தை… இன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்!

ஈழதேசம் கண்ட கண்ணீரில் மாண்டுவிடாமல் மீண்டெழுந்த கிளிநொச்சி வட்டக்கட்சியைச் சேர்ந்த சாதனைப் பெண் – ராஜினி சந்திரசேகரம்.

போர், வன்முறை, அச்சம் நிரம்பிய காலத்தில் அவள் பிறந்தாள். பெற்றோர் தங்கள் குழந்தையை காப்பாற்றும் நம்பிக்கையில் தமிழ்நாட்டில் தஞ்சம் நாடினர். ஆனால், பாதுகாப்புக்குப் பதிலாக சிறைச்சாலையே எதிர்கொண்டது. அந்தச் சிறைச்சாலையின் சுவர்களுக்குள் பிறந்த குழந்தை – தடுப்புக்கம்பிகளுக்குள் எழுந்த ஒரு நம்பிக்கையின் மழலைச் சத்தம்.

போராட்டத்தில் ஈடுபட்ட தந்தையின் உடலில் காயங்கள்; தலையில் பதிந்திருந்த சன்னங்கள்; பின்னர் அறுவைச் சிகிச்சை; தொடர்ந்து ஏற்பட்ட வலிப்பு (seizures)… இவையெல்லாம் சிறுமியான ராஜினியின் மனதில் எண்ணற்ற கேள்விகளை எழுப்பின.

“மனித மூளை எப்படி செயல்படுகிறது?”
“இந்த வலியைத் தடுக்க முடியாதா?”

அந்தக் கேள்விகளே அவளின் வாழ்க்கைப் பாதையை நிர்ணயித்தன.

பின்னர் குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சம் அடைந்தது. பொருளாதார சிரமங்களையும் மன உளைச்சல்களையும் கடந்து, கல்வியிலே முழுமையாக கவனம் செலுத்திய ராஜினி, உலகப் புகழ்பெற்ற University of Cambridge-இல் நரம்பியல் (Neuroscience) துறையில் கல்வி கற்றார்.

பத்து ஆண்டுகள் கடின உழைப்பும் தீவிர ஆராய்ச்சியும் மேற்கொண்டு, நரம்பியல் துறையில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றார். மூளை மற்றும் நரம்பியல் குறித்து ஆழமான புரிதலை வழங்கும் முக்கியமான அறிவியல் நூலையும் வெளியிட்டார்.

இன்று அதே University of Cambridge-இல் விரிவுரையாளராக பணியாற்றி, அடுத்த தலைமுறைக்கு அறிவை பகிர்ந்து வருகிறார்.

சிறைச்சாலையில் பிறந்த ஒரு குழந்தை — உலகின் முன்னணி கல்வி மையத்தில் அறிவைப் பகிரும் நிலைக்கு உயர்ந்திருப்பது, மனவலிமை மற்றும் விடாமுயற்சியின் ஜீவந்த சான்று.

ராஜினி சந்திரசேகரம் — துன்பத்தை சாதனையாக மாற்றிய உறுதியின் பெயர்.

மேலும் பல உயரங்களை எட்ட எமது மனமார்ந்த வாழ்த்துகள்!

24/12/2025

நீங்கள் பல்கலைக்கழக வாய்ப்பு இன்றி கவலைப்படுபவரா? கவலையை விடுங்கள்.
அரச உயர் கல்வி நிறுவனமான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது உங்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்குகிறது
மாகாணத்திற்கு ஒவ்வொரு மொழி மூலத்திற்கும் 6பேரிற்கு வாய்ப்பு உண்டு. இன்றே விண்ணப்பியுங்கள். பரீட்சையில் சித்தி பெறுங்கள்! நீங்களும் உள்வாரி பட்டதாரியாகும் கனவை நனவாக்க எம்மோடு இணைந்திடுங்கள்…
மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் தொடர்பு கொள்ளவும்
0776281134

https://www.facebook.com/share/16kwTYo3yK/
21/08/2025

https://www.facebook.com/share/16kwTYo3yK/

முகப்பு rortaryclub வவுனியா Rotaract கிளப்பின் இரத்ததான முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.  வவுனியா Rotaract கிளப்பின் இரத்த.....

இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையிலான 32 KM பாக்கு நீரிணையை 9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 5...
01/03/2024

இலங்கையின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடையிலான 32 KM பாக்கு நீரிணையை 9 மணித்தியாலங்கள் 37 நிமிடங்கள் 54 வினாடிகள்ல் இன்று (01.03.2024) நீந்தி கடந்து சாதனை நிகழ்த்திய திருகோணமலை ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கு பெருமை சேர்த்த 13 வயதான ஹரிஹரன் தன்வந்த் என்ற மாணவன்.

வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு நீந்திச் சென்று மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்தி வந்து சாதனை படைத்திருந்தார்.

கணவன் கைவிட்டு சென்ற நிலையில் ஒரு பெண் பிள்ளை உட்பட மூன்று பிள்ளைகளுடன் காரைநகரில் வாழ்வாதாரத்திற்கு போராடும் தாய் தண்ணீ...
10/12/2023

கணவன் கைவிட்டு சென்ற நிலையில்
ஒரு பெண் பிள்ளை உட்பட மூன்று பிள்ளைகளுடன் காரைநகரில் வாழ்வாதாரத்திற்கு போராடும் தாய் தண்ணீர் வசதி மற்றும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக உதவி கோரியுள்ளார்.

மண்ணிற்காக கடல்பகுதியில் தன் வாழ்வில் பாதியை செலவழித்து தடுப்பில் இருந்து வெளியில் வந்து தாங்கொண்ணா வறுமையில் கூலி வேலை செய்து வாழ்ந்து வரும் இந்த முன்னாள் போராளி ஆஸ்துமா நோயின் கோரப்பிடியில் வேலை செய்ய முடியாத நிலையில் தற்போது உள்ளார்.

உங்களுக்காக வாழ்ந்தவர்கள் உங்களிடமே உதவி கேட்டு நிற்கிறார்கள் அள்ளி கொடுக்காவிடினும் சிறிதேனும் கிள்ளி கொடுங்கள்.

நாம் மண்ணில் நிலைத்து நிற்க வாடியவர்கள் வாழ்வும் சிறிதேனும் மலரட்டும்.!

நேரில் சென்று பார்வையிட்டு உண்மைதன்மை அறிந்து உதவலாம்..!

நேரடி தொடர்பு இலக்கம்.
0769269071

இறந்தும் உயிர்வாழும் பல்கலைகழக மாணவன்-நெகிழ்ச்சி சம்பவம்..!மூளைச்சாவு அடைந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் உடல் உறுப்புகளை...
21/11/2023

இறந்தும் உயிர்வாழும் பல்கலைகழக மாணவன்-நெகிழ்ச்சி சம்பவம்..!

மூளைச்சாவு அடைந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க மாணவனின் பெற்றோர் தீர்மானித்துள்ளனர்.

வெயங்கொடை மாலிகதென்ன பகுதியில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது.

23 வயதான இசங்க ரணசிங்க ரயிலில் பயணித்த போது தெமட்டகொட மற்றும் களனி நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது, மாணவன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் மாணவரின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

வைத்தியர்களின் அறிவித்தலையடுத்து, இசங்க ஏற்கனவே தெரிவித்திருந்த படி, அவரது அனைத்து உறுப்புக்களையும் தானமாக வழங்குவதற்கு இசங்கவின் பெற்றோர்கள் வைத்தியர்களிடம் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இசங்கவின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கணையம் மற்றும் கல்லீரல் ஆகிய உடல் உறுப்புக்கள் ஐந்து நோயாளர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, இலங்கை கண் மருத்துவச் சங்கம் இசங்கவின் கண்களைப் பெற்றுள்ள நிலையில், அவரது தோல் இரத்த நாளங்கள், முழங்கால் எலும்புகள் உள்ளிட்ட பல உடல் உறுப்புகளை நோயாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

21/11/2023
75 வயதில் வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்த  பெண்அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics ...
21/11/2023

75 வயதில் வெறும் காலுடன் ஓடி சாதனை படைத்த பெண்

அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றார்.

1500m ஓட்டம் _ தங்கப் பதக்கம்
5000m விரைவு நடை _தங்கப் பதக்கம்
800m ஓட்டம் _வெங்கலப் பதக்கம்
5000m ஓட்டம்_நான்காம் இடம்

××××××××××××××××××××××××××××××××××மு/வற்றாப்பளை ம.வி பங்கு பற்றிய ஐந்து நிகழ்ச்சிகளும் தேசிய மட்டத்தில் முதலிடம்========...
18/11/2023

××××××××××××××××××××××××××××××××××
மு/வற்றாப்பளை ம.வி பங்கு பற்றிய ஐந்து நிகழ்ச்சிகளும் தேசிய மட்டத்தில் முதலிடம்
=================================
புலியாட்டம்
தப்பாட்டம்
குழு இசை
இசைநாடகப்பாடல்
தனி இசை
==================================
மு/வற்றாப்பளை மகா வித்தியாலயம்
(301 - 1000 மாணவர்கள்)
==================================
இன்றைய தினம் (2023.11.18) அனுராதபுரத்தில் சுவர்ண பாலிகா மகளிர் பாடசாலையில் நடைபெற்ற தேசியமட்ட கர்நாடக சங்கீத மற்றும் நடனப் போட்டிகளில் முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவர்களின் ஐந்து நிகழ்ச்சிகளும் தேசிய நிலையில் முதலிடங்களைப் பெற்றிருக்கின்றன. இவ்வெற்றியின் சாதனையாளர்களான பிள்ளைகள், ஆசிரியர்கள், அதிபர், பெற்றோர், அணி இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, விசேடமாக இப்போட்டிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து இச்சாதனையை நிகழ்த்தி இருக்கின்ற பாடசாலையின் இசை ஆசிரியை திருமதி சாந்தகுமாரி கமலகாந்தன் மற்றும் நடன ஆசிரியை திருமதி ஜஸ்மினி சிவகுமாரன் அவர்களுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
திசைகள் வெளிக்கட்டும்!

Happy Diwali! Blessings to you and your family. All the best as you continue on this new amazing journey. Doing what you...
12/11/2023

Happy Diwali! Blessings to you and your family. All the best as you continue on this new amazing journey. Doing what you love is a wonderful feeling.

Address

Vattappalai
Mulliyavalai
42600

Telephone

+94776281134

Website

Alerts

Be the first to know and let us send you an email when மிளிரும் பூமி Flashing Earth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to மிளிரும் பூமி Flashing Earth:

Share

இளைஞர் சமுதாயத்தின் ஒழுக்கம் மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல் Providing opportunities for improving the discipline and educational activities of young people

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிளிரும் பூமியின் இனிய அன்பு வணக்கங்கள் ! சுதந்திரமானதும் சீரான ஒழுக்கம் பேணும் இளைய தலைமுறையை உருவாக்குவோம் We will create a younger generation of The Independent and balanced discipline இளைஞர் சமுதாயத்தின் ஒழுக்கம் மற்றும் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல் Providing opportunities for improving the discipline and educational activities of young people போன்ற செயற்பாடுகளை முன்னேடுத்து செல்ல மாவட்ட பிரதிநிதிகளை தேடி மிளிரும் பூமி நிறுவகம் பயணிக்கின்றது நீங்களும் உங்கள் சேவைகள் மற்றும் திறமைகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால் எம்முடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை அனைவருக்கும் அறியத்தருவதுடன் மிளிரும் பூமியின் உருவாக்கம் மற்றும் எம்மால் மேற்க்கொள்ளப்படும் சேவைகள் என்பவற்றை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

மிளிரும் பூமின் தோற்றம்

இன்றைய தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியினால் நாளாந்தம் பல சமூகவலைத்தளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன அந்த வகையில் அதிக பயனர்களைக் கொண்ட சமூக வலைத்தளமாக காணப்படுவது முகநூல் ஆகும். இன்று சிறுவர் முதல் பெரியோர் வரை முகநூல் பயன்படுத்தி வருவதனை அனைவரும் அறிந்ததே

இன்று எண்ணில் அடங்காத பல வகையான முகநூல் பக்கங்கள் காணப்படுவதுடன் நாளாந்தம் புதிய பக்கங்கள்பல புதியவடிவில் தோற்றம் பெற்றவாறு உள்ளன அதில் மிக குறைவான பக்கங்களே பயனுள்ளதாக காணப்படுகின்றன. எனவே இதனை கருத்திற்கொண்டு ஓர் நல்லெண்ண அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்களால் உதயமானதே மிளிரும் பூமி எனும் முகநூல் பக்கம் ஆகும். இப்பக்கத்தில் கல்வி மற்றும் அறிவியல்சார் தகவல்கள் மற்றும் பல்சுவை சார்ந்த பதிவுகள் எம்மால் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன பயனுள்ள தகவல்கள் கொண்ட பக்கங்களில் ஒன்றாக மிளிரும் பூமி முகநூல் பக்கமும் விளங்குகின்றது . என்பதனை இத்தால் அறியத்தருவதுடன் நீங்கள் எத்தனையோ பயனுள்ள மற்றும் பயனற்ற முகநூல் பக்கங்களை உங்கள் விருப்பு பக்கங்களாக இணைத்திருப்பீர்கள் அதுபோலவே மிளிரும் பூமி முகநூல் விருப்பு பக்கத்தினையும் உங்கள் முகநூலின் விருப்பு பக்கமாக மாற்றிட இப் பக்கத்தினை விருப்பு like செய்யுங்கள் .