அவ்ண்பவுண்டேசன் (Awn Foundation) எனும் இவ்வமைப்பு 2016 பெப்ரவரி 29ந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட உலமாக்கள்¸ கல்விமான்கள்¸ தனவந்தர்கள்¸ நலன்விரும்பிகள் ஆகியோரை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் 1990 முதல் யாழ்நகரிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை முன்னேற்றும் நோக்கில் அவ
ர்களுக்குத் தேவையான நிதியுதவியை வழங்குவதே ஆகும். ஆரம்ப கட்டமாக க.பொ.த.(உ/.த)மாணவர்களின் பிரத்தியேக வகுப்புக்கான நிதியுதவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
1993 இல் JDM நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனர்களில் ஒருவரான Marhoom அல்ஹாஜ் S.H.M.அஸ்மி அவர்கள் 1990 இல் இடம்பெயர்ந்து புத்தளம் அகதி முகாம்களில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுமுகமாக நிதி உதவுதொகையை வழங்கி வந்தார்கள். 1994 இல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியூன்) அவர் ஆரம்பித்த இப்பணியைத் தொடர்நது மேற்கொள்ளும் நோக்கில் அவரது சகோதரர் JDM நிறுவனத்தின் முகாமைத்துவ இயக்குனர் அல்ஹாஜ் S.H.M.. நியாஸ் அவர்கள் தனது நண்பர்கள் சிலரையும்¸ சகோதரரின் நண்பர்கள் சிலரையும் இணைத்துக்கொண்டு இப்பணியைத் தொடர்ந்தார்கள். அல்ஹாஜ் M.G.M.ஜெமீல் அல்ஹாஜ் A.M.M..முனீப் இவர்கள் இருவரும் ஆரம்பமுதல் இன்று வரை இப்பணியைத் தொடர்ந்து கொண்டு செல்ல அல்ஹாஜ் நியாஸ் அவர்களுக்கு உறுதுணையாகச் செயற்பட்டார்கள்.
இவர்களது இச்சேவையை நிறுவனப்படுத்தி ஒரு அமைப்பாக நீண்டகாலத்திற்கு செயற்படுத்த வேண்டுமென்ற நோக்கிலேயே அவுண் பவுண்டேசன் எனும் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களாக அஷ்ஷெய்க்.அப்துல்லாஹ் பாயிஸ்¸ S.H.M.நியாஸ்¸ M.G.M.ஜெமீல்¸ A.H.அம்ஜத்¸ M.A.C.பளீல்¸ MJ.M.இம்திஹான்¸ S.A. அமீன்¸ A.M.M. முனீப்¸ M.S.A.M.முகுதார் ஆகியோரும்¸ அனுசரனையாளர்களாக A.M.பௌஸ் ¸ M.G.நஸ்ரூன்¸ T.M.நஜாத்¸¸ M.S.மிஸ்தாக் ஆகியோரும் செயற்படுகின்றார்கள்.
ஆரம்பக்கட்டமாக 14-11-2016 அன்று கொழும்பு ¸நீர்கொழும்பு¸ பாணந்துறை¸ தர்ஹாடவுன்¸ திஹாரிய¸ மதவாச்சி¸வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த க பொ த (உ/ த) கற்கும் 29 மாணவரக்கும்¸ 20-11-2016 அன்று புத்தளம்¸ இக்கிரிகொள்ளாவ போன்ற பிரதேசங்களைச் சார்ந்த 99 மாணவர்களுக்கும் புலமைப்பிரிசில்கள் வழங்கப்பட்டன.
இன்ஷா அல்லாஹ் வெகுவிரைவில் யாழ்ப்பாணத்தில் கற்கும் மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்நது இம்மாணவர்கள் உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்யும் வரை உதவி வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எமது இவ்வமைப்பில் சேர்ந்து சதக்கதுல் ஜாரியா எனும் இப்பணியை மேலும் விரிவுபடுத்தி சிறப்பாகக் கொண்டு செல்ல ஆர்வமுள்ள தனவந்தர்களை நாம் அன்புடன் வரவேற்கிறோம். எல்லாம்வல்ல அல்லாஹதஆலா எம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக ஆமீன்.