Team Centenary

Team Centenary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Team Centenary, Nonprofit Organization, Malwana, Malwana.

புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட OBA நிர்வாகக் குழுவிற்குTeam Centenary சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்AL MUBARAK CENTRAL CO...
25/01/2026

புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட OBA நிர்வாகக் குழுவிற்கு

Team Centenary சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள்

AL MUBARAK CENTRAL COLLEGE பழைய மாணவர் சங்கம் (OBA) புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவினருக்கு Team Centenary சார்பாக எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தத் தேர்வு, பழைய மாணவர் சமூகத்தின் உங்கள்மீது வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கை, மரியாதை மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாகும். உங்கள் தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை மனப்பாங்கு, சங்கத்தின் வலிமையை மேலும் உறுதிப்படுத்தி, எங்கள் அன்பிற்குரிய கல்வி நிலையத்தின் பெருமைமிக்க பாரம்பரியத்தையும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் எங்களுக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நூற்றாண்டுக் காலகட்டத்தில், AL MUBARAK CENTRAL COLLEGE இன் மதிப்புகள், மரபுகள் மற்றும் எதிர்காலக் கனவுகளை முன்னெடுத்துச் செல்லும் அர்த்தமுள்ள முயற்சிகளில், Team Centenary, OBA நிர்வாகக் குழுவுடன் தோளோடு தோள் நின்று இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளது.

உங்கள் பதவிக்காலம் வெற்றிகளாலும் சாதனைகளாலும் நிறைவடைய எங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

மனமார்ந்த வாழ்த்துகளுடன்,
Team Centenary

ஐந்து வருடங்கள் கடந்து சேவையாற்றிக் கொண்டிருக்கும் அதிபர் S.H.M. Naeem அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். அல் முப...
26/08/2025

ஐந்து வருடங்கள் கடந்து சேவையாற்றிக் கொண்டிருக்கும் அதிபர் S.H.M. Naeem அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அல் முபாரக் தேசிய பாடசாலையின் அதிபர் S.H.M. Naeem அவர்கள் எமது பாடசாலைக்கு அதிபராக நியமணம் பெற்று வந்து இன்றுடன் (26.08.2020 - 26.08.2025) ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றது.

கடந்த 26.08.2020 ஆம் திகதி எமது பாடசாலைக்கு உத்தியோகபூர்வமாக வருகை தந்து கடமைகளை பொறுப்பேற்று எமது பாடசாலைக்கும் மள்வானைக்கும் அளப்பறிய சேவைகளை ஆற்றி வரும் அதிபர் அவர்களுக்கு 2019 - 2023 (நூற்றாண்டு) பழைய மாணவர் சங்கம் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நாம் பழைய மாணவர் சங்கத்தில் இருந்த 26.08.2025 - 26.11.2023 காலப்பகுதியில்அதிபர் S.H.M. Naeem அவர்களுடன் இணைந்து கல்வி மற்றும் இணைப்பாடவிதான அபிவிருத்தி செயற்பாடுகள், நூற்றாண்டு நிகழ்வுகள், பழைய மாணவர் சங்க செயற்பாடுகள் என பல்வேறுபட்ட செயற்திட்டங்களை மேற் கொண்டிருந்தோம்.
எமது அனைத்து செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக அதிபர் அவர்கள் இருந்ததுடன் தற்போதும் அவரால் இயலுமான அனைத்து விடயங்களையும் பாடசாலைக்கு வழங்கி வருகின்றார்.

கடந்த நூறு ஆண்டுகளில் எமது பாடசாலைக்கு வருகை தந்து சேவையாற்றிய அதிபர்களில் ஐந்து வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஓரிருவர்களில் அதிபர் S.H.M. Naeem அவர்களும் ஒருவர் என்ற வரலாற்று சிறப்பும் இன்ஷா அல்லாஹ் அவரைச் சேரும்.

முதல்வரின் வரவேற்பு நிகழ்வு
https://www.facebook.com/share/p/1JhLbFit3e/

அன்றைய பதிலதிபரிடமிந்து உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வு.
https://www.facebook.com/share/p/19T7nNF3hf/

முதல்வருக்கு எமது பழைய மாணவர் சங்கத்தால் வழங்கப்பட்ட முதல் விருந்துபசாரம்.
https://www.facebook.com/share/p/1FB4E3UYfJ/

அதிபரை அவரின் பன்னலையில் உள்ள இல்லத்திற்கு சென்று நாம் சந்தித்த தருணம்.
https://www.facebook.com/share/p/1CSYgt3qZY/

பழைய மாணவர் சங்கத்துடன் நடைபெற்ற முதல் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்
https://www.facebook.com/share/p/16ZpsjigBr/

பல்வேறுபட்ட தியாகங்களுக்கு மத்தியிலும் எமது பாடசாலைக்கும் ஊருக்கும் தொடர்ந்து சேவையாற்றி வரும் அதிபர் S.H.M. Naeem அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Centenary OBA
Media.

06/07/2025

Hiru TV News ❤🔥

06/07/2025

Mubarakians Champions Trophy 2020. The Grand Opening Ceremony.

06/07/2025

Mubarakians Centenary Walk.

06/07/2025

Centenary Mubarakians Champions Trophy 2022. The Grand Finale. Chief Guest Speech by Captain Dasun Shanaka.❤

06/07/2025

🔥

That Moment 🦾🎯👍What is that Sound? 😜
18/06/2025

That Moment 🦾🎯👍
What is that Sound? 😜

மள்வானை அல் முபாரக் பாடசாலையின் முன்னால் அதிபரும், பழைய மாணவருமான காலம் சென்ற அல் ஹாஜ் மவ்லவி எம். எச். எம் லாபிர் அவர்க...
12/05/2025

மள்வானை அல் முபாரக் பாடசாலையின் முன்னால் அதிபரும், பழைய மாணவருமான காலம் சென்ற அல் ஹாஜ் மவ்லவி எம். எச். எம் லாபிர் அவர்கள் பல்வேறுபட்ட சமூக சேவைகளுக்காக தனது வாழ்நாட்களை முழுமையாக அர்ப்பணித்தவர்.

01/08/1977 - 31/07/2009 வரை சுமார் 32 வருடங்கள் எமது பாடசாலையில் சேவையாற்றிய அல் ஹாஜ் மவ்லவி எம். எச். எம். லாபிர் அவர்கள் பிரதானமாக 1995 மற்றும் 2005 காலப்பகுதிகளில் இரு முறை அதிபராக கடமையாற்றியவர் என்பதுடன் எமது பாடசாலையின் பிரதி அதிபராகவும், இஸ்லாம் பாட ஆசிரியராகவும் கடமையாற்றியவர்.

எமது பாடசாலையின் பழைய மாணவர்களில் 1977 முதல் 2009 வரை கல்வி கற்ற மாணவ மாணவிகளில் லாபிர் மவ்லவி அவர்களிடம் இஸ்லாம் பாடம் கற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.

ஜனாப் பாரூக் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் முஸ்லிம் மாணவிகளுக்கான பர்தா உடை அணிய விஷேட அனுமதி பெற்று அதனை நடைமுறைப்படுத்த ஆவண செய்தவர்.

அத்துடன் பெண் மாணவிகளின் ஒழுக்க மேம்பாட்டை கருத்திற் கொண்டு பெண்களை வேறாக பிரித்து வெவ்வேறான வகுப்பு வசதிகளை ஏற்படுத்தியதோடு, கந்தவத்த கனிஷ்ட பிரிவில் தரம் 6 - 13 வரையான மாணவிகளுக்காக ஒதுக்கி தனியான பெண்கள் பிரிவை உருவாக்கியவர். எனினும் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இத்திட்டம் காலப்போக்கில் செயலிழந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது பாடசாலையின் ஆங்கில பிரிவு உருவாக்கியதில் இவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. தற்போதைய எமது பாடசாலையின் நூல் நிலையம், விஞ்ஞான ஆய்வு கூடம் போன்றவை இவரின் காலத்திலேயே உருவாக்கப்பட்டது.

அவர் எமது பாடசாலைக்கும் எமது சமூகத்திற்கும் மேற்கொண்ட ஏராளமான சேவைகளில் மிக சொற்பமான விடயங்களையே நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம்.

கடந்த 01/01/2022 அதிகாலையில் நடைபெற்ற எமது பாடசாலையின் நூற்றாண்டு துஆ பிரார்த்தனையிலும் விஷேட அழைப்பின் பேரில் அன்னார் கலந்து கொண்டிருந்தார்.

அன்னாரின் அனைத்து நற்செயல்களையும் பொருந்திக் கொண்டு அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸில் நுழைவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக.

ஆமீன்.

Media
Centenary OBA

08/02/2025

Our Heartfelt Congratulations to
His Lordship Justice M.T.M Laffar on his elevation of
Acting President of Court of Appeal.
Proud to be a Mubarakian.

Centenary OBA Media.

Address

Malwana
Malwana

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Centenary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share