United Welfare Forum - Gandiyawalawwa

United Welfare Forum - Gandiyawalawwa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United Welfare Forum - Gandiyawalawwa, Community Organization, Malwana.

3 வது நாளாக இன்று (2025.11.30 ஞாயிற்றுக்கிழமை)  மல்வானை காந்தியவளவ்வையை  உழுக்கிய வரலாறு காணாத வெள்ளம் .மல்வானை மக்களுக்...
30/11/2025

3 வது நாளாக இன்று (2025.11.30 ஞாயிற்றுக்கிழமை) மல்வானை காந்தியவளவ்வையை உழுக்கிய வரலாறு காணாத வெள்ளம் .
மல்வானை மக்களுக்கு வெள்ளம் ஒன்றும் புதிதல்ல, ஆனால் இது இயற்கைக்கு புறம்பானது. 2 முதல் 3 நாட்களில் ஏற்படுத்துகின்ற பாதிப்பை ஒரே நாளில் தந்துவிட்டது. திரும்புகின்ற இடமெல்லாம் வெள்ளநீர் .

பாதிப்பை பொருத்தவரையில், 20 கும் மேற்பட்ட வீடுகள் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. 15 முதல் 20 வரையான வீடுகளில் பகுதியளவு / வசிக்க முடியாதளவு நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது.
150 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ( சுமாராக 550 - 600 தனிநபர்கள் ) கைக்குழந்தைகள் , சிறுவர்கள் , வயோதிபர்கள் உட்பட நோயாளர்களும் பாதிக்கப்பட்டு அவதியுருகின்றார்கள்.

மல்வானை நபவிய்ய இஸ்லாமிய இளைஞர்கள் இரவு பகலாக உழைத்து
மூவேளை உணவை சமைத்தும் விநியோகித்தும் தருகின்றனர் ( அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டும் , இதற்காக கழிக்கின்ற பொன்னான நேரகாலத்தை மீஸான் தராசில் கணமானதாக்க வேண்டும் , அவர்களின் செயற்பாடுகளுக்கு உழைப்பையும் செல்வத்தையும் கொட்டுகின்ற நல்லடியார்களை கொண்டுவந்து சேர்க்கவேண்டும் : ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்).
உணவு , உறையுளுக்கு அப்பால் உடைகள் , சிறுவர்களுக்கான பால்மா , Disposable Diapers , Sanitary Napkins , சுத்தம் செய்யும் பொருட்கள் , உலர் உணவுப்பொதிகள் என பலதை வேண்டி நிற்கின்றனர்.

உங்களால் முடிந்த உதவிகளை எமக்கு தாருங்கள். எங்களுக்காக துஆ செய்வதோடு எங்கள் துஆ பரகத்திலும் இணைந்து கொள்ளுங்கள் .

Bro. Shiyam 0771110082
Bro. Jiffry 774444464

30/11/2025
மல்வானையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக,  கடந்த 3 நாட்களாக மூன்று வேளையும் உணவுகளை சமைத்து வீடு வீடாக விநியோ...
05/06/2024

மல்வானையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கடந்த 3 நாட்களாக மூன்று வேளையும் உணவுகளை சமைத்து வீடு வீடாக விநியோகமும் செய்த நபவிய்யா இஸ்லாமிய இளைஞர் அமைப்பிற்கு ஜஸாகல்லாஹு ஹைரன் வ அஹ்ஸனல் ஜஸாஉ

இதற்காக அயராது பாடுபட இளைஞர் குழுவிற்கும் , பணத்தாலும் பொருளாலும் உதவிகளை புரிந்த அனைவருக்கும் அல்லாஹ் உயர்ந்த கூலிகளை வழங்குவானாக ! அவர்கள் இதற்காக செலவிட்ட நேரம் , பணம் , பொருட்களை மீஸான் தராசில் கணமானதாக ஆக்கிவைப்பாயாக !

காந்தியவளவ்வை மக்கள் .

3rd June , 5.45 AM , Gandiyawalawwa
03/06/2024

3rd June , 5.45 AM , Gandiyawalawwa

Gandiyawalawwa Malwana - Dompa Main Road
26/05/2024

Gandiyawalawwa
Malwana - Dompa Main Road

3 வது நாளாகவும் பாரிய வெள்ளப்பெருக்கினால் அவதியுறும் காந்தியவளவ்வை மக்கள் 40 க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ள ...
17/10/2022

3 வது நாளாகவும் பாரிய வெள்ளப்பெருக்கினால் அவதியுறும் காந்தியவளவ்வை மக்கள்
40 க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், சுமார் 175 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது தொழில் தொரவுகள் இன்றி இவ் இக்கட்டான சூழ்நிலையில் தட்டுதடுமாறுகின்றனர். இவர்களுக்கான உதவி ஒத்தாசைகளில் நீங்களும் பங்காளியாகி மறுமையில் அல்லாஹ்வின் அரசின் கீழ் நிழல் பெறும் கூட்டத்தில் சேர்ந்திடுங்கள் .

மேலதிக தொடர்புகளுக்கு ,
AHM. SHIYAM - 0771110082
Al Haj . JIFFRY - 0774444464

மள்வானை காந்தியவளவ்வை பகுதியின் வெள்ள காட்சிகளே இவை
15/10/2022

மள்வானை காந்தியவளவ்வை பகுதியின் வெள்ள காட்சிகளே இவை

மள்வானை காந்தியவலவ்வ (ஷஹீட் ஹாஜியார் மாவத்தை)  பகுதியில்2017 September 5 ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட  United Welfare...
18/09/2022

மள்வானை காந்தியவலவ்வ (ஷஹீட் ஹாஜியார் மாவத்தை) பகுதியில்
2017 September 5 ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட United Welfare Forum தனது பயணத்தில் 5 வருடத்தை கடந்து 6 வது வருடத்தில் தடம் பதிக்கின்றது அல்ஹம்துலில்லாஹ். முற்றுமுழுதாக மக்களுக்கான சேவையை மட்டும் இலக்காக கொண்டு செயற்படும் இந்த அமைப்பு தன்னகத்தே நிர்வாக கட்டமைப்பு , பெளதீக வளம் , மனித வளம் என அனைத்தையும் கொண்டுள்ளது.

மர்ஹும் அல்ஹாஜ் M.H.ஷஹீத் அவர்களது ஏற்பாட்டிலும் தலைமையிலும் வெள்ளம் நெருக்கடி , மரண நிகழ்வு , கல்வி , விளையாட்டு உட்பட எதிர் காலங்களில் தாய் சேய் நல நிலையம் என இதர காத்திரமான பணிகளுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த ஐந்து வருடங்களாக
சிறப்பாக இயங்கி வரும் மேற்படி நலன்புரி அமைப்பு 17.9.2022 அன்று அதனது
5வது வருட நிறைவையும் பொதுக்கூட்டத்தையும் நடாத்தியது .

5வது வருடப் பொதுக்கூட்டம் இரவு 8.15 அளவில் அல்ஹாஜ் ஜிப்ரி அவர்களது வளாகத்தில் இடம்பெற்றது. இதில் அடுத்த வருடங்களுக்கான நிர்வாகக்குழு தெரிவும் இடம்பெற்றது. அங்குராப்பன நிகழ்வில் சிறப்பு வளவாளராக உரையாற்றிய அஷ்ஷெய்ஹ் அஹமட் பிஸ்தாமி (நளீமி) அவர்களே இப் பொது கூட்டத்திலும் உரையாற்றினார். அவரது உரை , சமூக சேவைகள் நலன்புரி பணிகள் ஏன்? எதற்கு? எப்படி? என இஸ்லாமிய மற்றும் சமூகவியல் நோக்கில் வரலாற்று உதாரணங்களுடன் நபியவர்களை முன்மாதிரியாகக்கொண்டு இடம்பெற்றது.

மர்ஹூம் ஷஹீத் ஹாஜியார் ஆரம்பித்து வைத்த பணி இன்னும் அழகாக தொடர்கிறது. அவரோடு பலரும் இணைந்து ஒத்துழைப்பை வழங்கி இந்த அமைப்பை முன்னெடுத்து வருகின்றனர். மள்வானை வரலாறு குறித்து 2 நூல்களை அன்னார் எழுதியுள்ளார்.அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவனத்தை வழங்கட்டுமாக. அவரது எண்ணங்கள் பெருவிருட்சமாகி நல்ல விளைவுகளை தரட்டுமாக. ஆமீன்.

ஊர் மக்கள் அனைவரையும் இதனோடு கைகோர்த்து பயணிக்க அன்பாக அழைக்கின்றோம். நீங்கள் இதற்காக செலவிடும் நேரம் , உழைப்பு , பணம் அனைத்தும் மீஸான் தராசில் கனக்கட்டுமாக.. .

18/09/2022

Address

Malwana
11670

Telephone

+94771110082

Website

Alerts

Be the first to know and let us send you an email when United Welfare Forum - Gandiyawalawwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share