Uruthirapuram Sports Club Kilinochchi

Uruthirapuram Sports Club Kilinochchi Uruthirapuram Sports Club is a well known sports club in Kilinochchi district, Northern Province

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக இளைஞர் கழக உதைபந்தாட்ட தொடர் இரண்டாமிடத்தினை தனதாக்கியது  உருத்திரபுரம் விளையாட்ட...
31/05/2026

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச செயலக இளைஞர் கழக உதைபந்தாட்ட தொடர் இரண்டாமிடத்தினை தனதாக்கியது உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்.

கரைச்சி இளைஞர் கழக உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதல் போட்டியில் கனகபுரம் விளையாட்டுக் கழகத்தை உருத்திரபுரம் விளையாட்டு கழகம் 02:01(கிருசன் ⚽, தனுசன்⚽) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

அரையிறுதிப் போட்டியில் கலைமகள் விளையாட்டு கழகத்தினை
04:00(சுதர்சன் ⚽⚽, தனுசியன் ⚽, குறியாளன் ⚽)என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

இறுதிப் போட்டியில் லக்கிஸ்டார் விளையாட்டு கழகத்திடம் 02:01 என்ற கோல்கணக்கில் (கிருசன்⚽) தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை தனதாக்கியது உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்.

இறுதிவரை சிறப்பாக விளையாடிய உருத்திரபுர விளையாட்டுக் கழக வீரர்களுக்கும், ஆதரவளித்த ஆதரவாளர்களுக்கும்
வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
உருத்திரபுரம் வி.கழகமும் சனசமூக நிலையமும்.

தொடரில் இருந்து வெளியேறியது உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் பூநகரி உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் பூநகரி மத்திய நண்...
11/05/2026

தொடரில் இருந்து வெளியேறியது உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்

பூநகரி உதைபந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் பூநகரி மத்திய நண்பர்கள் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட உழவர் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்

✅மன்னார் குழந்தை யேசு வி.கழகத்தை 3:1என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று
சுதர்சன்-⚽⚽
தனுசியன்-⚽

❌அடுத்த போட்டியில் யாழ்ப்பாணம் றோயல் வி.கழகத்திடம் 2:1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் [USC]
கிருசன்-⚽

சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் ஆதரவளித்த ஆதரவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தொரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடக பிரிவு
உருத்திரபுரம் வி.கழகமும் சனசமூக நிலையமும்.

அழகாபுரி உதைபந்தாட்ட தொடர் இரண்டாமிடத்தினை தனதாக்கியது  உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்.கிளிநொச்சி கால்பந்தாட்ட சங்கத்த...
04/05/2026

அழகாபுரி உதைபந்தாட்ட தொடர் இரண்டாமிடத்தினை தனதாக்கியது உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்.

கிளிநொச்சி கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் அழகாபுரி விளையாட்டு கழகம் நடாத்திய விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதல் போட்டியில் இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தை உருத்திரபுரம் விளையாட்டு கழகம் 01:00(குறியாளன் ⚽) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

அரையிறுதிப் போட்டியில் உழவர் ஒன்றியம் விளையாட்டு கழகத்தினை
04:00(சுதர்சன் ⚽, கிருசன் ⚽, டனுசன் ⚽, குறியாளன் ⚽)என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

இறுதிப் போட்டியில் திருநகர் விளையாட்டு கழகத்திடம்
சமநிலை தவிர்ப்பு உதையில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தினை தனதாக்கியது உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம்.

இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக உருத்திரபுர விளையாட்டுக் கழக வீரன் குறியாளன் அவர்களும்.
வளர்ந்து வரும் வீரனாக உருத்திரபுர விளையாட்டுக் கழக வீரன் சுதர்சன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இறுதிவரை சிறப்பாக விளையாடிய உருத்திரபுர விளையாட்டுக் கழக வீரர்களுக்கும், ஆதரவளித்த ஆதரவாளர்களுக்கும்
வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
உருத்திரபுரம் வி.கழகமும் சனசமூக நிலையமும்.

24/04/2026

வடமாகாண ரோல் போல் சம்பியன்ஸ்ஷிப் போட்டியின் போது சம்பியனாகிய கிளிநொச்சி மாவட்ட அணி.

ஊடக பிரிவு
உருத்திரபுரம் விளையாட்டுக்கழகமும் சனசமூக நிலையமும்

வடமாகாண ரோல் போல் சம்பியன்ஸ்ஷிப் போட்டியில் சம்பியனாகியது கிளிநொச்சி மாவட்ட அணி.இலங்கை ரோல் போல் சம்மோளத்தினால் கிளிநொச்...
24/04/2026

வடமாகாண ரோல் போல் சம்பியன்ஸ்ஷிப் போட்டியில் சம்பியனாகியது கிளிநொச்சி மாவட்ட அணி.

இலங்கை ரோல் போல் சம்மோளத்தினால் கிளிநொச்சியில் நடாத்தப்பட்ட வடமாகாண ரோல் போல் சம்பியன்ஸ்ஷிப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தினை தனதாக்கியது கிளிநொச்சி மாவட்ட அணி .
இவ் மாவட்ட அணியில் பங்குபற்றி வெற்றிக்கு வித்திட்ட உருத்திரபுரம் விளையாட்டுக் கழக வீர வீராங்கனைகளான

#இளஞ்செழியன் புருசோத் (14வயது பிரிவு முதலிடம்)

#இளஞ்செழியன் பிரண்யா (Mini Girls முதலிடம்)

#யசீகரன் பிரித்வின் (11வயது பிரிவு முதலிடம்)

ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஊடக பிரிவு
உருத்திரபுரம் விளையாட்டுக்கழகமும் சனசமூக நிலையமும்

சென் அன்ரனிஸ் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப்போட்டியை நேரடி ஒலிபரப்பு செய்வதற்கு ஊடக அனுசரணை வழங்கியlive for தமிழ் net...
23/04/2026

சென் அன்ரனிஸ் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப்போட்டியை நேரடி ஒலிபரப்பு செய்வதற்கு ஊடக அனுசரணை வழங்கிய
live for தமிழ் network
Gomakal Studio

பராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்
உதைபந்தாட்ட போட்டிகள்,துடுப்பாட்ட போட்டிகளை நேரலையாக facebook, YouTube ல் வழங்க தொடர்புகொள்ளவும்
0764046098

ஊடக பிரிவு
உருத்திரபுரம் விளையாட்டுக் கழகமும் சனசமூக நிலையமும்.

20/04/2026

சென் அன்ரனிஸ் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் தனுசனால் அடிக்கப்பட்ட இரண்டாவது கோல்.

20/04/2026

சென் அன்ரனிஸ் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் யு.தனுசனால் அடிக்கப்பட்ட முதலாவது கோல்.

சென் அன்ரனிஸ் வெற்றிக் கிண்ணம் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக வசம்.கிளிநொச்சி கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன்  கல்ம...
20/04/2026

சென் அன்ரனிஸ் வெற்றிக் கிண்ணம் உருத்திரபுரம் விளையாட்டுக் கழக வசம்.

கிளிநொச்சி கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் கல்மடுநகர் சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகம் நடாத்திய விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் முதல் போட்டியில் திருநகர் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்ட உருத்திரபுரம் விளையாட்டு கழகம் 01:00(சுதர்சன் ⚽) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

காலிறுதிப் போட்டியில் பரந்தன் இளைஞர் வட்டம் விளையாட்டு கழகத்தினை
06:01(சுதர்சன் ⚽⚽⚽⚽ , கிருசன் ⚽⚽)என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

அரையிறுதிப் போட்டியில் இளந்தளிர் விளையாட்டு கழகத்தினை
01:01 (யானுசன்⚽)
சமநிலை தவிர்ப்பு மூலம் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

வெற்றிக் கிண்ணத்தினை தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டியில் உருத்திரபுர விளையாட்டுக் கழகம் எதிர் கிளிநொச்சி ஸ்டார் ஈகில்ஸ் விளையாட்டுக் கழகம் மோதியது. இப் போட்டியில் 2:1 (தனுசன்⚽⚽ ) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தை உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம் தன்வசமாக்கியது.

இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக உருத்திரபுர விளையாட்டுக் கழக வீரன் யு.தனுஷன் அவர்களும். சிறந்த கோல்காப்பாளராக உருத்திரபுர விளையாட்டுக் கழக வீரன் ச. பவுசிகன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இறுதிவரை சிறப்பாக விளையாடி இப்போட்டித் தொடரின் நாயகர்களாக தெரிவு செய்யப்பட்ட உருத்திரபுர விளையாட்டுக் கழக வீரர்களுக்கும், ஆதரவளித்த ஆதரவாளர்களுக்கும்
வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
உருத்திரபுரம் வி.கழகமும் சனசமூக நிலையமும்.

Address

Uruthirapuram
Kilinochchi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Uruthirapuram Sports Club Kilinochchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Uruthirapuram Sports Club Kilinochchi:

Share