26/05/2026
களனியவள்
கரங்களில் கனவோடு
புதுப்பயிர்களாய் முளைத்து வரும்
பண்பு மிக்க களனியர்கள் ;
தாம் கொண்டு வந்த கனவடைந்து - நல்
நினைவுடை கழகம் தாண்டி விடை பெறும் எம் நாயகர்கள் ;
ஒன்றனுப்பி ஒன்றேற்கும் ஒரு வட்டப் பெருநிகழ்வில் ஒன்றுபட்டு வந்து நிற்க, ஒட்டுமொத்த மழலைகளை கட்டித் தழுவ காத்திருக்கும் களனித்தாய் கை வாரீர்... களனியரே !
✍🏻 வரிகள் : ராகுலன் பிரியங்கன்
🎨வடிவமைப்பு : லிங்கேஸ்வரன் கஜானி