People's Union for Social Welfare

People's Union for Social Welfare We Are Doing Social Services For This Community.

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினரும் சமூக மேம்பாட்டுக்கான இளைஞர் கழகத்தின் உறுப்பினருமான MA ஆகிப் அலி அ...
17/10/2025

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினரும் சமூக மேம்பாட்டுக்கான இளைஞர் கழகத்தின் உறுப்பினருமான MA ஆகிப் அலி அவர்கள் சமூக மேம்பாட்டுக்கான இளைஞர் கழகத்தின் ஊடாக பிரதேச நீச்சல் போட்டியின் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யட்டுள்ளார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

35வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் விளையாட்டு நிகழ்வில் கடந்த வாரம் நீச்சல் போட்டி இடம்பெற்றது அந்தவகையில் எமது காத்தான்குடி இளைஞர் சம்மேளனத்தை பிரதிநித்துவப்படுத்தி சமூக மேம்பாட்டுக்கான இளைஞர் கழக வீரர்கள் பங்குபற்றி இருந்தனர் பலத்த போட்டிக்கு மத்தியில் இடம்பெற்ற சுற்றுப்போட்டியில் MA AAKIF ALI தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மட்டத்திலும் சாதிக்க சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் சார்பாக வாழ்த்துகின்றோம்.

பொது செயலாளர்.
சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்.
ஊடக பிரிவு.

Congratulations to M.A. Aakif Ali💐

M.A. Aakif Ali, a member of the People's Union for Social Development and the Youth Club for Social Development, has been selected to compete at the National Level in the Regional Swimming Competition through the Youth Club for Social Development. We extend our warmest congratulations to him.
The swimming competition took place last week as part of the sports event organized by the Batticaloa District Youth Federation to mark the 35th National Youth Sports Festival. Our athletes from the Youth Club for Social Development, representing the Kattankudy Youth Federation, participated in this event. After a closely contested tournament, M.A. AAKIF ALI was selected to participate in the National Level competition.
The People's Union for Social Development wishes him all the best for success at the National Level as well.

General Secretary
People's Union for Social Development
Media Division.

சம்மேளன முன்னாள் தலைவர் மர்ஹும். மௌலவி. அல்ஹாஜ். MI.ஆதம்லெப்பை (பலாஹி) BA அவர்களின் மறைவினையிட்டு காத்தான்குடி சமூக மேம்...
16/10/2025

சம்மேளன முன்னாள் தலைவர் மர்ஹும். மௌலவி. அல்ஹாஜ். MI.ஆதம்லெப்பை (பலாஹி) BA அவர்களின் மறைவினையிட்டு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் விடுக்கும் இரங்கல் செய்தி...

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் சங்கைக்குரிய மூத்த உலமாக்களில் ஒருவருமான ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் மர்ஹும். மௌலவி. அல்ஹாஜ். MI.ஆதம்லெப்பை (பலாஹி) BA அவர்களின் மறைவினையிட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம்.

எமது பிரதேசத்தின் மூத்த புத்திஜீவிகளில் ஒருவரான அன்னார் ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியில் இரண்டாவது மாணவனாக வெளியேறி, தன்னை மார்க்க கல்வியுடன் மாத்திரம் சுருக்கி கொள்ளாமல் ஏககாலத்தில் பொதுக் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து பயிற்றப்பட்ட ஆசிரியராக தேர்ச்சி பெற்று வெளிவாரி பட்டதாரியாக தன்னை புடம் போட்டு சமகாலத்தில் ஆலிமாகவும் ஆசிரியராகவும் பாத்திரமேற்று சமூகத் தளத்தில் அறிவுப் பணியாற்றியுள்ளார்.

சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகளை கையாள்வதில் சமயோசிப் போக்கினை கொண்ட அவர் அவற்றினை தீர்த்து வைப்பதில் நளினப் போக்குடையவராகவும் காணப்பட்டார்.

அதேபோன்று எமது காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சமூக சேவைகளின் போது பங்களிப்பு வழங்கியும் ஆலோசகராக செயற்பட்டும் எம்மையும் எமது செயற்பாடுகளையும் இச்சமூகத்திற்காக வழிப்படுத்தியமை மறக்க முடியாத அனுபவங்களால் நிரம்பி காணப்படுகிறது.

எமதூரின் சமூக சமய மற்றும் நிர்வாக விடயங்களில் அச்சாணியாய் செயற்பட்டு அளப்பெரிய சேவைகளினை ஆற்றி தனது பணிகளினை சிறப்பித்து மறுமை வாழ்விற்கான பாக்கியங்களினை சேகரித்துள்ளமையானது சற்று ஆறுதலளிக்கின்றது.

இவரது இழப்பால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காக பிரார்த்திப்பதுடன்,
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களது அனைத்து முயற்சிகளினையும் பொருந்திக் கொண்டு மறுமையில் மகத்தான பாக்கியங்களினை வழங்க வேண்டுமென பிரார்த்திக்கின்றோம்.

பணிப்பாளர்/ பொதுச் செயலாளர்,
சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்,
காத்தான்குடி.
2025.10.16

‎காத்தான்குடி  பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய இள...
12/10/2025

‎காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய இளைஞர்கள் இணைந்து பூநொச்சிமுனை கடற்கரையினை சுத்தம் செய்யும் நிகழ்வு..!

‎‎Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் இளைஞர்கள் இணைந்து பூநொச்சிமுனை கடற்கரையினை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி RMIB. ரத்னாயக்க அவர்களின் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் சிவில் பொறுப்பதிகாரி AM. ஜவாஹிர் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பணிப்பாளரும் பொலிஸ் உப தேச குழுவின் பிரதி தலைவருமான தேசபந்து அல்ஹாஜ் MIM ஹாரிஸ் JP உப தேச குழுவின் BM பயாஸ் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் நிதி பணிப்பாளர் AM நிவாஸ் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டுகளுக்கு பொறுப்பான இனைப்பாளர் MMM சர்ஜுன் உட்பட சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பொலிஸ் உபதேசக்குழு உறுப்பினர்கள், சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

‎ஊடக இணைப்பாளர் MMM அர்ஹப்

‎பொது செயலாளர்
‎சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்.







කාත්තන්කුඩි පොලිස් ස්ථානය යටතේ ක්‍රියාත්මක වන පොලිස් උපදේශක කමිටුවේ සංවිධානයෙන් සහ සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමයේ තරුණයින්ගේ එකතුවෙන් පූනොච්චිමුණේ වෙරළ පිරිසිදු කිරීමේ වැඩසටහන!
'පිරිසිදු ශ්‍රී ලංකා' වැඩසටහන යටතේ කාත්තන්කුඩි පොලිස් ස්ථානය යටතේ ක්‍රියාත්මක වන පොලිස් උපදේශක කමිටුවේ සංවිධානයෙන් සහ සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමයේ තරුණයින්ගේ එකතුවෙන් පූනොච්චිමුණේ වෙරළ පිරිසිදු කිරීමේ වැඩසටහන අද (12) ඉරිදා දින පැවැත්විණි.

මෙම වැඩසටහන කාත්තන්කුඩි පොලිස් ස්ථානයේ ස්ථානාධිපති RMIB. රත්නායක මහතාගේ ප්‍රධානත්වයෙන්, පරිසර සහ සිවිල් කටයුතු භාර නිලධාරී AM. ජවාහිර් මහතා, සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමයේ අධ්‍යක්ෂ සහ පොලිස් උපදේශක කමිටුවේ උප සභාපති දේශබන්දු අල්හාජ් MIM. හාරිස් JP මහතා, උපදේශක කමිටුවේ BM. ෆයාස් මහතා, සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමයේ මූල්‍ය අධ්‍යක්ෂ AM. නිවාස් මහතා, සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමයේ මානව හිමිකම් කටයුතු භාර සම්බන්ධීකාරක MMM. සර්ජුන් මහතා ඇතුළු සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමයේ සාමාජිකයින්, පොලිස් උපදේශක කමිටුවේ සාමාජිකයින්, සිවිල් ආරක්ෂක කමිටුවේ සාමාජිකයින් සහ මහජනතාව ඇතුළු විශාල පිරිසක් සහභාගී වූහ.

මාධ්‍ය සම්බන්ධීකාරක: MIM. අර්හබ්

මහලේකම්
සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමය








Cleaning Event at Poonochchimunai Beach Organized by the Police Advisory Committee Operating Under Kattankudy Police Station, Joined by Youth from the People's Union for Social Development!

As part of the 'Clean Sri Lanka' program, a cleaning initiative was held today, Sunday (12), at Poonochchimunai Beach, organized by the Police Advisory Committee operating under the Kattankudy Police Station, and joined by the youth of the People's Union for Social Welfare (PUSW).

The program was held under the leadership of the Officer-in-Charge (OIC) of the Kattankudy Police Station, RMIB. Rathnayake. Many participated in the event, including the Environmental and Civil Affairs Officer AM. Jawahir, the Director of the People's Union for Social Welfare and Deputy Head of the Police Advisory Committee Deshabandhu Alhaj MIM. Haris JP, Police Advisory Committee member BM. Fayaz, PUSW Finance Director AM. Niwas, PUSW Coordinator for Human Rights Activities MMM. Sarjun, PUSW Members, Police Advisory Committee members, Civil Security Committee members, and the general public.

Media Coordinator: MMM. Arhab

General Secretary
People's Union for Social Development





இளைஞர்களுக்கான கொளரவம்...💐🤝🏻‎‎அண்மையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சமூகப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காத்தான்குடி பிரதேச...
06/10/2025

இளைஞர்களுக்கான கொளரவம்...💐🤝🏻

‎அண்மையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சமூகப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இனக்குழுமங்களின் கலைச் சங்கமம்- 2025 நிகழ்வில் எமது சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் சார்பில் ஒழுங்கமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்ட உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வும், சமகாலத்தில் இடம்பெற்ற பல பொது நிகழ்வுகளிலும் சமூக மேமம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் இளைஞர்கள் சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி சேவைபுரிந்தமையை பாராட்டி கொளரவிக்கும் முகமாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைமை காரியாலயத்தில் 2025/10/06 இன்று தேசிய பணிப்பாளர் தேசபந்து அல்ஹாஜ் MIM.ஹாரிஸ் JP அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

‎இதன்போது சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் பிரதி பணிப்பாளர் ALM நளீம் J.P
சமூக சேவைகள் பிரிவின் இணைப்பாளர் ILM சாபிர், ஊடகத்துறை இணைப்பாளர் MIM அர்ஹப் உட்பட மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள், குழு தலைவர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

தம்மை இரவு பகல் பாராது அர்பணித்து சேவையாற்றி வரும் இவ் இளைஞர்களுக்கு இச்சான்றிதளை வழங்குவதில் பெருமிதம் அடைவதுடன் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

‎-ஊடக பிரிவு-
‎சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்.









🏅 Honor for the Youth… 💐🤝🏻

Recently, a certificate awarding ceremony was held at the head office of the People’s Union for Social Welfare (PUSW) on 2025/10/06, under the leadership of National Director Deshabandu Al Haj M.I.M. Harris JP.

The event recognized and honored the youth members who actively participated in organizing and supporting activities for the “Inter-Community Cultural Festival – 2025” jointly organized by the Eastern Provincial Department of Social and Cultural Affairs and the Kattankudy Divisional Secretariat.

In addition, certificates were also awarded to the youth who have continuously engaged in social service activities through the People’s Union for Social Welfare.

During the event, Deputy Director ALM Naleem JP, Social Services Coordinator ILM Sabir, Media Coordinator MIM Arhab, as well as executive committee members, group leaders, regional youth federation executives, and many youth members participated.

We express our gratitude and appreciation to these youth who continue to dedicate themselves day and night in service to society

– Media Division –
People’s Union for Social Welfare (PUSW)









🏅 යෞවනයන්ට ගෞරවයක්… 💐🤝🏻

අවසන් කාලයේදී නැගෙනහිර පළාත් සමාජ හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව සහ කාත්තන්කුඩි ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය එක්ව සංවිධානය කළ “ජාතික සමූහයන්ගේ කලා සංගමය – 2025” අවස්ථාවට දායක වූ, සමාජ සංවර්ධනය සඳහා ජන එක්සත් සංගමයේ සාමාජිකයින්ට සහතික පිරිනැමීමේ උත්සවය 2025 ඔක්තෝබර් 6 දින එම සංවිධානයේ ප්‍රධාන කාර්යාලයේදී, ජාතික අධ්‍යක්ෂ දේශබන්දු අල්-හාජ් M.I.M. හාරිස් JP මහතාගේ ප්‍රධානත්වයෙන් පැවැත්වුණි.

මෙම අවස්ථාව තුළ, ඉහත කලා සංගමයේ සංවිධාන කටයුතු සඳහා සේවය කළ සාමාජිකයින්ට පමණක් නොව, තවත් බොහෝ පොදු වැඩසටහන්වලදී සමාජ සේවාවලට කැපවූ සමාජ සංවර්ධනය සඳහා ජන එක්සත් සංගමයේ යෞවන සාමාජිකයින්ටද ගෞරව සහතික පිරිනැමිනි.

මෙම උත්සවයට නිලධාරී උපදේශක ALM නලීම් JP, සමාජ සේවා සමන්වයකාරක ILM සාබිර්, මාධ්‍ය සමන්වයකාරක MIM අර්හබ්, සහ කාර්යනායක මණ්ඩල සාමාජිකයින්, කණ්ඩායම් නායකයින්, ප්‍රාදේශීය යෞවන සංගම් නායකයින් සහ බොහෝ යෞවන සාමාජිකයින් සහභාගී විය.

අඛණ්ඩව රාත්‍රී හා දින සේවය කරමින් සමාජයට තමන් කැප කරගන්නා මෙම යෞවනයන්ට අපගේ ගෞරවය, ස්තුතිය හා ආදරය ප්‍රකාශ කරමු

– මාධ්‍ය අංශය –
සමාජ සංවර්ධනය සඳහා ජන එක්සත් සංගමය (PUSW)









நன்றி நவில்கின்றோம்.💐‎‎காத்தான்குடி பிரதேசத்தில் 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூகப் பணிகளிலில் ஈடுபட்டு வரும் எமது சம...
06/10/2025

நன்றி நவில்கின்றோம்.💐

‎காத்தான்குடி பிரதேசத்தில் 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூகப் பணிகளிலில் ஈடுபட்டு வரும் எமது சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சமூக பணிகளில் ஒன்றான இலவச கண் சத்திர சிகிச்சை முகாமில் இலங்கையில் முஸ்லிம் இளைஞர் ஒன்றியம் (AMYS) நிறுவனம் அல் பஷர் சர்வதேச அமைப்புடன் இணைந்து கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றது.

‎வழமை போன்று இவ்வருடமும் கடந்த 30.09.2025 தொடக்கம் 06.10.2025 வரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இவ் முகாம் இடம்பெற்றதுடன் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் இளைஞர்களின் முழுமையாக பங்களிப்புடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‎இம் முகாமில் கண் பார்வையினை இழந்தவர்களுக்கான கண் சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் பங்குபற்றி இப்பாரிய பணிக்காக தம்மை இரவு பகலாக அர்பணித்து சேவையாற்றிய எமது சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் மகளிர் பிரிவினருக்கும் விஷேடமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் நிறுவனத்தின் நிருவாக சபையினர் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

‎-ஊடக பிரிவு -

‎பணிப்பாளர்/செயலாளர்
‎சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம்.
06.10.2025







ස්තූතියි. 💐

කාත්තන්කුඩි ප්‍රදේශයේ වසර 25කට වැඩි කාලයක් විවිධ සමාජ සේවාවන්හි නිරත වන අපගේ සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමයේ (PUSW) සමාජ සේවා කටයුත්තක් වන නොමිලේ අක්ෂි ශල්‍යකර්ම කඳවුර සමග ශ්‍රී ලංකා මුස්ලිම් තරුණ සංවිධානය (AMYS) අල් බෂර් ජාත්‍යන්තර සංවිධානය හා එක්ව පසුගිය වසර ගණනාවක් තිස්සේ කටයුතු කර ඇත.
පුරුදු පරිදි මේ වසරේද පසුගිය 2025.09.30 වන දින සිට 2025.10.06 වන දින දක්වා කාත්තන්කුඩි මූලික රෝහලේදී මෙම කඳවුර පැවැත්විණි. සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමයේ තරුණයින්ගේ පූර්ණ දායකත්වයෙන් මෙය පැවති බවද විශේෂයෙන් සඳහන් කළ යුතුය.
මෙම කඳවුරේදී අන්ධභාවයට පත් වූවන් සඳහා අක්ෂි ශල්‍යකර්ම සිදු කිරීම වෙනුවෙන් විවිධ කැපකිරීම් මධ්‍යයේ සහභාගී වී, මෙම විශාල මෙහෙවර වෙනුවෙන් දිවා රෑ වෙහෙසෙමින් සේවය කළ අපගේ සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමයේ කණ්ඩායම් නායකයින්ට සහ සාමාජිකයින්ට මෙන්ම කාන්තා අංශයටද සංවිධානයේ කළමනාකරණ මණ්ඩලය වෙනුවෙන් විශේෂ ස්තූතිය හා ප්‍රශංසාව පළ කරමු.

-මාධ්‍ය අංශය -

අධ්‍යක්ෂ/ලේකම්
සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංගමය (PUSW).
2025.10.06






Our sincere gratitude. 💐

The Sri Lanka Muslim Youth Organization (AMYS), in collaboration with Al-Bashar International Organization, has been working for many years on the free eye surgery camp, which is one of the social service activities of our People's Union for Social Welfare (PUSW), an organization that has been involved in various community works in the Kattankudy area for over 25 years.
As is customary, this year the camp was held at the Kattankudy Base Hospital from 30.09.2025 to 06.10.2025. It is noteworthy that the camp took place with the full participation of the youth of the People's Union for Social Welfare (PUSW).
On behalf of the organization's Governing Body, we would like to express our special thanks and appreciation to the team leaders, members, and Women's Wing of our People's Union for Social Welfare (PUSW) who participated amidst various sacrifices to perform eye surgeries for those who had lost their sight, dedicating themselves day and night to this huge undertaking.

-Media Division -

Director/Secretary
People's Union for Social Welfare (PUSW).
06.10.2025




இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்-2025நாள் -05 (04/10/2025)சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிம...
05/10/2025

இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்-2025

நாள் -05 (04/10/2025)

சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையம்' (King Salman Humanitarian Aid and Relief Centre) அனுசரணையில் கண் வெண்படலம் அகற்றும் இலவச சத்திரசிகிச்சை முகாம் "சவூதி நூர்" இன்று 01.10.2025 திகதி முதல் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றது

'சவூதியின் ஒளி' பார்வைக் குறைபாடு மற்றும் அதற்கான காரணிகளுக்கு எதிராக போராடும் தன்னார்வ நிகழ்ச்சித் திட்டம் என்ற உலகளாவிய திட்டத்தின் கீழ் இலங்கையில் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சத்திரசிகிச்சை
இடம்பெறுகின்றது.

இலங்கையில் முஸ்லிம் இளைஞர் ஒன்றியம் (AMYS) நிறுவனம் அல் பஷர் சர்வதேச அமைப்புடன் இணைந்து 30 ஆவது தடவையாக காத்தான்குடியில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் (PUSW) உறுப்பினர்களின் பங்களிப்புடன் இவ் இலவச கண் வெண்படலம் அகற்றும் சத்திர சிகிச்சை முகாமை நடாத்துகிறது.

இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்-2025நாள் -04 (03/10/2025)சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிம...
04/10/2025

இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்-2025

நாள் -04 (03/10/2025)

சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையம்' (King Salman Humanitarian Aid and Relief Centre) அனுசரணையில் கண் வெண்படலம் அகற்றும் இலவச சத்திரசிகிச்சை முகாம் "சவூதி நூர்" இன்று 01.10.2025 திகதி முதல் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றது

'சவூதியின் ஒளி' பார்வைக் குறைபாடு மற்றும் அதற்கான காரணிகளுக்கு எதிராக போராடும் தன்னார்வ நிகழ்ச்சித் திட்டம் என்ற உலகளாவிய திட்டத்தின் கீழ் இலங்கையில் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சத்திரசிகிச்சை
இடம்பெறுகின்றது.

இலங்கையில் முஸ்லிம் இளைஞர் ஒன்றியம் (AMYS) நிறுவனம் அல் பஷர் சர்வதேச அமைப்புடன் இணைந்து 30 ஆவது தடவையாக காத்தான்குடியில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் (PUSW) உறுப்பினர்களின் பங்களிப்புடன் இவ் இலவச கண் வெண்படலம் அகற்றும் சத்திர சிகிச்சை முகாமை நடாத்துகிறது.

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்திற்கு மற்றுமொரு கௌரவம்-2025‎‎காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 25 வருடங்களுக்கு மேலா...
03/10/2025

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்திற்கு மற்றுமொரு கௌரவம்-2025

‎காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூகப் பணிகளிலில் ஈடுபட்டு வரும் எமது சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சேவையினை பாராட்டி காத்தான்குடி நகரசபையினால் காத்தான்குடி நகரசபையின் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு 21.09.2025 அன்று இடம்பெற்ற "மறுமலர்ச்சி நகரம்" இறுதி நாள் நிகழ்வில் நினைவுச்சின்னமொன்று வழங்கி கொளரவிக்கப்பட்டது.

‎இவ் விருதானது காத்தான்குடி நகரசபை கடந்த உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட வைத்திய முகாம் மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் இளைஞர்களையும் மற்றும் மக்கள் ஒன்றியத்தின் சேவைகளையும் பாராட்டி இவ் விருது ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் அமைப்பின் உறுப்பினர்கள் புடை சூல அமைப்பின் கௌரவ பணிப்பாளர் தேச பந்து அல்ஹாஜ் MIM ஹாரிஸ் JP அவர்களிடத்தில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் றிப்கா சபீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

‎ கூடுதலான இளைஞர்களைக் கொண்டு எமது சமூகத்திற்கு இரவு பகல் பாராது அர்ப்பணிப்போடு சேவையாற்றி வருகின்றமைக்கு தொடர்ச்சியாக இவ் விருதுகள் கிடைக்கப்பெற்று வருகின்றமை கூறிப்பிடத்தக்கது







සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංවිධානයට තවත් ගෞරවයක්-2025

කාත්තන්කුඩි නගරයේ (Kattankudy) වසර 25කට වැඩි කාලයක් විවිධ සමාජ සේවාවන්හි නිරතව සිටින අපගේ සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංවිධානය විසින් සිදුකරනු ලබන සේවාව අගයමින්, කාත්තන්කුඩි නගර සභාවේ (Kattankudy Urban Council) පළාත් පාලන සතිය නිමිත්තෙන් 2025.09.21 දින පැවති "පුනරුද නගරය" අවසාන දින උත්සවයේදී මතක සටහනක් පිරිනමා ගෞරවය දැක්වීය.
මෙම සම්මානය පිරිනැමීම සිදුවූයේ, පසුගිය පළාත් පාලන සතිය නිමිත්තෙන් කාත්තන්කුඩි නගර සභාව විසින් පවත්වන ලද වෛද්‍ය සායනය සහ අනෙකුත් ක්‍රියාකාරකම් සඳහා සමාජ සංවර්ධනය සඳහා වූ මහජන සංවිධානයේ තරුණ තරුණියන්ගේ සහ සමස්ත සංවිධානයේම සේවාව අගයමිනි. මෙම සම්මානය හිස්බුල්ලා ශාලාවේදී (Hisbullah Mandapam) සංවිධානයේ සාමාජිකයින් පිරිවරා සිටියදී, මඩකලපුව දිස්ත්‍රික් පළාත් පාලන සහකාර කොමසාරිස් රිෆ්කා සබීන් මහත්මිය විසින් සංවිධානයේ ගෞරවනීය අධ්‍යක්ෂ දේශබන්දු අල්හාජ් MIM හාරිස් JP මහතා වෙත පිරිනමන ලදී.
තරුණ තරුණියන් විශාල පිරිසක් සමඟින් අපගේ සමාජය වෙනුවෙන් රැය දහවල නොබලා කැපවීමෙන් සේවය කරමින් සිටීම හේතුවෙන් මෙවැනි සම්මාන අඛණ්ඩව ලැබීම විශේෂත්වයකි.







Another Honour for the People's Union for Social Welfare - 2025

In appreciation of the services rendered by our People's Union for Social Welfare - (PUSW), which has been involved in various social activities in the Kattankudy area for over 25 years, the Kattankudy Urban Council honoured the organisation with a memento at the final day event of "Marumalarhchi Nagaram" (Renaissance City), held on 21.09.2025 to commemorate the Kattankudy Urban Council's Local Government Week.
This award was presented in recognition of the excellent service of the youth members of the People's Union and the organisation's overall contributions, particularly its cooperation with the medical camp and other activities conducted by the Kattankudy Urban Council during the recent Local Government Week. The award was presented at the Hisbullah Mandapam by the Assistant Commissioner of Local Government for the Batticaloa District, Rifka Safeen to the organisation's Honorary Director, Deshabandu Al Haj MIM Haris JP, with the organisation's members in attendance.
It is noteworthy that the organisation continuously receives these awards in recognition of its dedicated service to our community, day and night, primarily carried out by a large contingent of youth members.





இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்-2025நாள் -03 (02/10/2025)சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிம...
02/10/2025

இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்-2025

நாள் -03 (02/10/2025)

சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையம்' (King Salman Humanitarian Aid and Relief Centre) அனுசரணையில் கண் வெண்படலம் அகற்றும் இலவச சத்திரசிகிச்சை முகாம் "சவூதி நூர்" இன்று 02.10.2025 திகதி முதல் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றது

'சவூதியின் ஒளி' பார்வைக் குறைபாடு மற்றும் அதற்கான காரணிகளுக்கு எதிராக போராடும் தன்னார்வ நிகழ்ச்சித் திட்டம் என்ற உலகளாவிய திட்டத்தின் கீழ் இலங்கையில் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சத்திரசிகிச்சை
இடம்பெறுகின்றது.

இலங்கையில் முஸ்லிம் இளைஞர் ஒன்றியம் (AMYS) நிறுவனம் அல் பஷர் சர்வதேச அமைப்புடன் இணைந்து 30 ஆவது தடவையாக காத்தான்குடியில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் (PUSW) உறுப்பினர்களின் பங்களிப்புடன் இவ் இலவச கண் வெண்படலம் அகற்றும் சத்திர சிகிச்சை முகாமை நடாத்துகிறது.

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்திற்கு மற்றுமொரு அங்கீகாரம்...‎‎காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 25 வருடங்களுக்கு மே...
02/10/2025

சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்திற்கு மற்றுமொரு அங்கீகாரம்...

‎காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூகப் பணிகளிலில் ஈடுபட்டு வரும் எமது சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சேவையினை பாராட்டி காத்தான்குடி நகரசபையினால் 2023 ம் ஆண்டு "எழுச்சி விழா" நிகழ்வில் வழங்கப்பட இருந்த விருது தவிர்க்க முடியாத காரணத்தினால் வழங்கப்படாமல் இருந்த விருதினை கடந்த காத்தான்குடி நகரசபையின் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு 21.09.2025 அன்று இடம்பெற்ற "மறுமலர்ச்சி நகரம்" இறுதி நாள் நிகழ்வில் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

‎இவ் விருதானது கடந்த பல வருடங்களாக காத்தான்குடி நகரசபை , பிரதேச செயலகம்,மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,காத்தான்குடி பொலிஸ் நிலையம், என்பவற்றுடன் இணைந்து பாரிய டெங்கு ,கொரோனா மற்றும் வெள்ள அனர்த்த காலங்களில் இரவு பகலாக பல்வேறு தியாகங்களுடன் கூடுதலான இளைஞர்களை கொண்டு எமது சமூகத்திற்கு இரவு பகல் பாராது அர்ப்பணிப்போடு சேவையாற்றி வருகின்றமைக்காக இவ் விருதி வழங்கி வைக்கப்பட்டது.

Another recognition for the People's Union for Social Development...

In appreciation of the service rendered by our People's Union for Social Development, which has been involved in various social activities in the Kattankudy area for over 25 years, an award that was unavoidably postponed from the 2023 "Ezhuchi Vizha" event organized by the Kattankudy Urban Council was finally presented. This presentation took place on September 21, 2025, at the concluding ceremony of the "Marumalarchi Nagaram" (Renaissance City) event, which was held to mark the recent Local Government Week of the Kattankudy Urban Council.
This award was presented for the organization's selfless service and dedication, working day and night with a large number of youth, especially during major crises such as Dengue, COVID-19, and flood disasters. Their work involved collaborating with the Kattankudy Urban Council, Divisional Secretariat, Medical Officer of Health Office, and the Kattankudy Police Station over the past several years.
The core message is that the People's Union for Social Development received a long-overdue award from the Kattankudy Urban Council for its decades of tireless service, particularly during health and natural disasters.







இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்-2025நாள் -02 (01/10/2025)சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிம...
01/10/2025

இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்-2025

நாள் -02 (01/10/2025)

சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையம்' (King Salman Humanitarian Aid and Relief Centre) அனுசரணையில் கண் வெண்படலம் அகற்றும் இலவச சத்திரசிகிச்சை முகாம் "சவூதி நூர்" இன்று 02.10.2025 திகதி முதல் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றது

'சவூதியின் ஒளி' பார்வைக் குறைபாடு மற்றும் அதற்கான காரணிகளுக்கு எதிராக போராடும் தன்னார்வ நிகழ்ச்சித் திட்டம் என்ற உலகளாவிய திட்டத்தின் கீழ் இலங்கையில் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சத்திரசிகிச்சை
இடம்பெறுகின்றது.

இலங்கையில் முஸ்லிம் இளைஞர் ஒன்றியம் (AMYS) நிறுவனம் அல் பஷர் சர்வதேச அமைப்புடன் இணைந்து 30 ஆவது தடவையாக காத்தான்குடியில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் (PUSW) உறுப்பினர்களின் பங்களிப்புடன் இவ் இலவச கண் வெண்படலம் அகற்றும் சத்திர சிகிச்சை முகாமை நடாத்துகிறது.

இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்-2025நாள் -01 (30/09/2025)சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிம...
30/09/2025

இலவச கண் சத்திரசிகிச்சை முகாம்-2025

நாள் -01 (30/09/2025)

சவூதி அரேபிய மன்னர் சல்மான் அவர்களின் 'நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கான மன்னர் மையம்' (King Salman Humanitarian Aid and Relief Centre) அனுசரணையில் கண் வெண்படலம் அகற்றும் இலவச சத்திரசிகிச்சை முகாம் "சவூதி நூர்" இன்று 30.09.2025 திகதி முதல் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றது

'சவூதியின் ஒளி' பார்வைக் குறைபாடு மற்றும் அதற்கான காரணிகளுக்கு எதிராக போராடும் தன்னார்வ நிகழ்ச்சித் திட்டம் என்ற உலகளாவிய திட்டத்தின் கீழ் இலங்கையில் கண் புரை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் இந்த சத்திரசிகிச்சை
இடம்பெறுகின்றது.

இலங்கையில் முஸ்லிம் இளைஞர் ஒன்றியம் (AMYS) நிறுவனம் அல் பஷர் சர்வதேச அமைப்புடன் இணைந்து 30 ஆவது தடவையாக காத்தான்குடியில் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் (PUSW) உறுப்பினர்களின் பங்களிப்புடன் இவ் இலவச கண் வெண்படலம் அகற்றும் சத்திர சிகிச்சை முகாமை நடாத்துகிறது.

Address

B21, X, Main Street, Kattankudy/01
Kattankudi

Telephone

+94773753788

Website

Alerts

Be the first to know and let us send you an email when People's Union for Social Welfare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to People's Union for Social Welfare:

Share