SEUSL Kattankudy Undergraduate Association

SEUSL Kattankudy Undergraduate Association South Eastern University of Sri Lanka

Congratulations to the team for a stellar victory! Your dedication, teamwork, and passion shone through on the field, se...
02/10/2024

Congratulations to the team for a stellar victory! Your dedication, teamwork, and passion shone through on the field, securing an impressive win. Keep up the fantastic work!! 🔥

A huge shout-out to our Kattankudy Undergraduates' Association member M.I.M.Sifnas for being a part of Inter University Games 2024 - Football Team.

Congratulations on this remarkable achievement!

*தொழில்சார் வழிகாட்டல் கருத்தரங்கு - 2024*சவூதி வாழ் காத்தான்குடி சமூகம் (KCSA) மற்றும் RISE Sri Lanka, UG Friends இணைந்...
06/06/2024

*தொழில்சார் வழிகாட்டல் கருத்தரங்கு - 2024*

சவூதி வாழ் காத்தான்குடி சமூகம் (KCSA) மற்றும் RISE Sri Lanka, UG Friends இணைந்து வழங்கும் தொழில்சார் வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 23 June 2024ம் திகதி, ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு காத்தான்குடி அல்மனார் கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கின்றது.

இக்கருத்தரங்கானது தொழில் வாய்ப்பு ஒன்றினை சவூதி அரேபியா நாட்டில் பெற்றுக் கொள்வதற்காக வருகைதர உத்தேசித்துள்ளவர்களை மையப்படுத்தியதாக அமைய இருக்கின்றது.

சவூதி அரேபியா நாட்டில் அதிகரித்து வரும் தொழில் வாய்ப்புக்கள், தொழில் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சவால்கள், தொழில் விசா ஒன்றினைப் பெறுவதில் உள்ள சவூதி அராசங்கத்தின் விதிமுறைகள் உள்ளிட்ட பல பயனுள்ள விடயங்கள் தொடர்பில் இக்கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள ஆர்வம் கொண்டவர்கள் கீழ்க்காணும் link இல் இணைக்கப்பட்டுள்ள Google படிவத்தினைப் பூர்த்தி செய்வதன் மூலம் தமது வரவினை உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

*குறிப்பு:*
Google படிவத்தினை பூர்த்தி செய்து தமது வரவினை உறுதிப்படுத்துபவர்களுக்கே கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப் படுவதோடு பிரத்தியேக WhatsApp குழுமத்திலும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்

https://forms.gle/9FyyvwrcMvnyTjX77

08/04/2024

Kattankudy Undergradute Association South Eastern University of Sri Lanka அமைப்பினால் பல்கலைக்கழக மாணவர்களின் பகிடிவதை (Ragging) எதிராக உருவாக்கப்பட்ட செயற்பாடுகளை தொடர்ந்து மேலும் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்களினால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக்காணொளி உருவாக்கப்பட்டுள்ளது 🛑🛑🛑

மாணவர்கள் பாடசாலை வாழ்க்கை முடிந்ததும் அவர்களின் பல்கலைக்கழக வாழ்க்கையை தொடங்குவதற்காக பல கனவுகளுடன் பல எதிர்பார்ப்புகளுடன் இங்கே வருகை தருகின்றனர் ஆனால் இங்கே பகிடிவதை எனும் பெயரில் சிலர் செய்யும் அட்டூழியங்களால் மாணவர்கள் உடலில் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பல இன்னல்களை முகம் கொடுக்கின்றனர்

அதனை முற்றுமொழுதாக ஒழிக்கும் கட்டமாக எமது அமைப்பினால் எமது அமைப்பில் இருக்கும் மாணவர்கள் யாராவது ஏதேனும் சிறு சிறுவிடங்களில் பாதிக்கப்பட்டாலும் எமது அமைப்பு முன்னின்று அவர்களுக்கான தீர்வை வழங்கும் என வாக்களித்துள்ளோம்

அதனை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக எமது பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் (Marshell) அது தொடர்பான தெளிவான விளக்கத்தை மேலே உள்ள காணொளியில் உங்களுக்காக வழங்கி உள்ளார்

பகிடிவதை (Ragging) என்பதற்குள் உடலில் ரீதியாக துன்புறுத்துவது மட்டும் உள்ளடங்காது அதனை தாண்டி ஒருவரின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் எது கூறப்பட்டாலும் சரி எது திணிக்கப்பட்டாலும் சரி அது பகடிவதைக்குள் உள்ளடங்கும்

உடலியல் ரீதியான துன்புறுத்தலை தாண்டி சிரேஷ்ட மாணவர்கள் செய்யும் சில பகிடிவதைக்கான உதாரணங்கள்:

🛑 தலைமுடி , ஆடை என்பவற்றை அவர்கள் கூறுவதைப் போன்று அணியக்கூறுதல்

🛑 பல்கலைக்கழகத்தில் வரிசையாகவே சென்று வரிசையாகவே வரவேண்டும் என சட்டம் ஏற்றுதல்

🛑 பல்கலைக்கழகத்தின் சில பிரதேசங்களுக்கு செல்ல முடியாது என வலியுறுத்தல்

🛑 தொலைபேசி மூலமாகவோ அல்லது whatsapp மூலமாகவோ தொடர்பு கொண்டு கட்டளைகள் இடுதல்

🛑 எங்களின் சட்டங்களை பின்பற்றாவிட்டால் உங்களை நிகழ்வுகளிகள் பங்கு கொள்ள விடமாட்டோம், உங்களை சக நண்பர்களுடன் இருக்க விடமாட்டோம் என போலியான வார்த்தைகளை கூறி மிரட்டுதல்

🛑 பல்கலைக்கழகத்தில் அல்லது வெளி பிரதேசங்களிலோ தான் சிரேஷ்ட மாணவர் என்ற அடிப்படையில் அவர்களிடம் உரிமையாக நடந்து கொள்ளுதல்

மேலும் இதுபோன்று பல உதாரணங்கள் காணப்படுகின்றன ஆனால் இதன் தாழ்பரியம் தெரியாமல் பலர் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் ஆகவே அதனை முற்று முழுதாக ஒழிக்கும் பட்சத்தில் எமது அமைப்பும் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து இவ்விழிப்புணர்வு சம்பந்தமாக மேலே உள்ள காணொளி மூலம் அனைத்து தகவல்களையும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வழங்கியுள்ளோம்

நீங்கள் எதற்காகவும் தயங்காமல் சிரேஷ்ட மாணவர்கள் உங்களது உரிமையை பறிக்கும் அல்லது உங்களது சுதந்திரத்தை பறிக்கும் சந்தர்ப்பத்தில் தைரியமாக எமது அமைப்பிடமோ அல்லது உரிய நிர்வாகிகளிடம் பிரச்சினைகளை கூறும் பட்சத்தில் உங்களுக்கு நடந்ததை போன்று பிரச்சினை வேறு மாணவர்களுக்கும் நடக்காமல் இருக்க மற்றும் பகிடிவதை (Ragging) வகையை முற்றுமுழுமையாக ஒழிக்க எம்மால் முடியும் ஆகவே உங்கள் சிறு வாக்குமூலம் அல்லது உங்கள் சிறு முறைப்பாட்டு கடிதம் மூலம் சம்பந்தப்படுபவர்களின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றோம்

மேலும் பகிடிவதையில் ஈடுபடுபவர்கள், அதற்கு சார்பாக இயங்குபவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு உங்களது பல்கலைக்கழக நடவடிக்கையை சுதந்திரமாக தொடருங்கள்

(இது KUA SEUSL மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானது)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூஎன்று எமது Kattankudy Undergraduate Association South Eastern University...
07/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹூ

என்று எமது Kattankudy Undergraduate Association South Eastern University of Sri Lanka வினால் ஏற்பாடு செய்யப்பட்டு நாடாத்தப்பட்ட இப்தார் நிகழ்வு அல்லாஹ்வின் உதவியுடன் நடைபெற்று முடிந்தது…

01/04/2024

Address

Kattankudi

Telephone

+94764353591

Website

Alerts

Be the first to know and let us send you an email when SEUSL Kattankudy Undergraduate Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SEUSL Kattankudy Undergraduate Association:

Share