23/05/2025
#கூட்டுக்குர்பான்_செயற்திட்டம்_2025_
#களுத்துறை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், ஸலவாத்தும் ஸலாமும் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவரைப் பின்பற்றியோர், பின்பற்றுவோர் அனைவர் மீதும் மறுமை நாள் வரை நிலவட்டுமாக.
முஸ்லிம்களின் கடைசி மாதமான துல்ஹஜ் பிறை பத்தில் பெருநாள் தினத்தன்று நிறைவேற்றப்படும் மிகவும் முக்கியமான, இறைவனின் விருப்பத்திற்குரிய வணக்கமாகிய உழ்ஹிய்யாவினை நிறைவேற்றுவதற்கு எமது களுத்துறை வாழ் மக்களுக்காக ஒரு சிறந்த சந்தர்ப்பம்
#கூட்டுக்குர்பான்_செயற்திட்டம்_2025
*ஒருவர் தனக்காக அல்லது தனது குடும்பத்திற்காக தனியாகவோ அல்லது ஏழு நபர்கள் சேர்ந்து கூட்டாகவோ உழ்கியா (குர்பான்) வணக்கத்தினை நிறைவேற்ற முடியும்.*
*உங்களுக்காக அல்லது உங்களது குடும்பத்திற்காக (தாய், தந்தை, மனைவி....) குர்பான் கொடுக்க முடியும்.*
ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி); ஆதாரம்: அபூதாவூத் (2425)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.” (முஸ்லிம் 2537)
ஆகவே ஒரு மாட்டை முழுமையாக குர்பான் கொடுக்க வசதியற்றவர்கள் எமது கூட்டுக் குர்பான் செயற்திட்டத்தில் பங்கு கொண்டு உங்களது குர்பான் வணக்கத்தினை மேற்கொள்ள முடியும்.
*குர்பான் வணக்கத்தின் முக்கியத்துவம்*
*உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (108:02)
*ஈதுல் அழ்ஹாவுடைய நாளில் மனிதன் செய்கின்ற நற்செயல்களில் இறைவனுக்கு விருப்பமானது குர்பானி கொடுப்பதாகும். நிச்சயமாக குர்பானி அதன் முடிகள், கொம்புகள், குளம்புகளுடன் கியாமத் நாளில் குர்பானி கொடுத்தவனைத் தேடி வருகிறது. அதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்னர் அல்லாஹ்வை அடைந்து விடுகிறது.“ [இப்னு மாஜா. 3126]
*குர்பானி கொடுக்கப்படுகின்ற பிராணிகளின் ஒவ்வொருரோமத்திற்கு(ப் பகரமாக) ஒரு நன்மையை அல்லாஹ் வழங்குகிறான். ( திர்மிதி 1493]
நன்மைகளை இலகுவாக பெற ரமலான் மாதம் நமக்கு உதவியாக இருந்தது போல, இந்த குர்பானியின் அமல் மூலம் இலகுவாக நன்மை பெற மற்றொரு அழகிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்புள்ளவர்களே! அதனை நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ளவும்!!!
*எமது நிபந்தனைகள்,*
*1).ஏழு பேர் கொண்ட ஒரு முழு மாட்டுக்கு ஒருவருக்கான பங்கு ரூபா 40,000/-*
*2). உங்களது பங்கிற்கு 05 பொதிகள் உங்களுக்கு வழங்கப்படும்.
*3).உங்களது உழ்கியாக்கள் வரிய குடும்பங்களுக்கு பங்கிடப்படும்.*
6).*பதிவு செய்யப்பட்ட பங்குகளின் பணங்களை 02/06/2025 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்க வேண்டும்.*
5).*உமது உழ்கியா தொடர்பான அனைத்து அப்டேட்ஸ் களும் எமது வாட்ஸ் அப் குழுமம் மூலம் உங்களுக்கு அப்டேட்ஸ் செய்யப்படும்.*
*6).உங்களது பங்குகளை கீழுள்ள எமது உரிப்பினர்களுக்கு தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் அழைப்பினை மேற்க் கொண்டு குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவும்.*
*தொடர்புகளுக்கு*
1).+94 77 249 1456 (Al Haj Hassan Siddeek)
2).+94 77 212 4243 (Al Haj Lafir )
3).+94 75 024 4634 (Mr.Mufthi)
4).+94 75 663 2858 (Mr.Innam)
*குறிப்பு*- 02/06/2025 ஆம் திகதி அல்லது அதற்கு முன் உமது பங்குகளை பதிவு செய்து கொள்ளவும்!
இப்படிக்கு
நிர்வாகம்
களுத்துறை அபிவிருத்திச் சங்கம் (KDC)