31/05/2024
பாராட்டுக்களும் நன்றியும்
========================
“ கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து நீக்கும். சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. கல்வியும் , உழைப்பும் போதுமானது” என்ற காமராஜரின் கூற்றிக் கிணங்க,
எமது பாடசாலையில் வர்த்தகப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதற்காக சீறிய வழிகாட்டல்ளை மேற்கொண்ட அதிபர் இம்ரான்கான் சேர் அவர்களுக்கும்,
நான்கு பிள்ளைகளை பல்கலை கழகத்திற்கு அனுப்புவதற்கு அயராது பாடுபட்ட வர்த்தகப் பிரிவின் பகுதிப் பொறுப்பாளரும் கணக்கியல் ஆசிரியருமான றயீஸ் சேர்; அவர்களுக்கும், பொருளியல், வணிகக் கல்வி ஆசிரியைகளாக கடமையாற்றி சிறப்பான கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட நிப்லா, பர்ஹத் ஆசிரியைகளுக்கும் ,
மற்றும் வர்த்தக திட்டத்திற்காக (SDEC ) பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் நியமிக்கப்பட்டவரும், கணக்கியல் ஆசிரியரும் இத்திட்டத்தை மேற்பார்வை செய்து சிறந்த முறையில் வழிநடாத்திக்கொண்டிருப்பவருமாகிய ஹக்மான் ஆசிரியர் அவர்களுக்கும்,
அவருடன் இணைந்து பொருளியல் ஆசிரியர் அஹ்மட் சேர் மற்றும் வணிகக் கல்வி ஆசிரியர் றசீல் சேர் ஆகியோருக்கும்,
மற்றும்,
இவ்வளவு காலமும் எமது மாணவர்களின் கல்வி முன்னேறத்திற்காக தங்களது நன் கொடைகளையும், உதவிகளையும் வழங்கிய கல்விக்காக கரம் கொடுக்கும், கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து கல்வி அவிவிருத்தி நிதியத்தின் உறுப்பினர்களுக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் சார்பாக மேலான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்;.
மேலும்
“நிலை பெற்று சோர்ந்து விடாது வளர்கின்ற தென்னை மரமானது தன் அடியால் உண்ட தண்ணீரை முடியாலே சுவையுள்ள இளநீராக்கி தானே தருவததைப் போல நல்ல பண்புடைய மாணவனுக்கு உதவி செய்தால் அந்த உதவியை அவன் எப்பொழுது மற்றோருக்கு செய்வானோ என்று அச்சம் கொள்ள வேண்டியதில்லை” என்ற ஒளவையாரின் முது மொழிக்கிணங்க தங்களின் இவ்வுதவியால் பட்டதாரியாகிய இம்மாணவர்கள் தொடர்ந்தும் இந்த வர்த்த திட்டத்தை மேற்கொண்டு ஏனை மாணவர்களையும் பட்டதாரிகளாக மற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தங்களின் இவ்வுதவி நீடிக்க வல்ல இறைவனை இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன்.
அல்லாஹ் தங்களுக்கும் தங்களது குடுப்பத்திற்கும் மென்மேலும் அருள் புரிவானாக ! ஆமின.;.