Manarians’ Warriors

Manarians’ Warriors Embracing the Past, Envisioning the Future

அஸ்ஸலாமு அலைக்கும்.Alhamdulillah 🤍மனாரியன்ஸ் வாரியர்ஸ் 2007 அமைப்பினரால்…Batchmates மற்றும் Human Link Management உடன் ந...
25/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும்.

Alhamdulillah 🤍

மனாரியன்ஸ் வாரியர்ஸ் 2007 அமைப்பினரால்…

Batchmates மற்றும் Human Link Management உடன் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் அவர்களுக்கு தற்போது தேவையாக இருந்த big size Rice Cooker ஒன்றை அவர்கள் கேட்ட specificationsக்கு ஏற்ப வாங்கி இன்று (25/03/2026) Human Link Management க்கு கையளிக்கப்பட்டது.

இதற்காக நிதியினை வழங்கியிருந்த மற்றும் பங்களித்த அனைவருக்கும் எமதமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். இறைவன் அனைவருக்கும் மேன்மேலும் நன்மைகளை வழங்குவானாக.

அல்ஹம்துலில்லாஹ்…எமது Manariyan Warriors 2K07 அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு, 13/03/2026 அன்ற...
15/03/2026

அல்ஹம்துலில்லாஹ்…

எமது Manariyan Warriors 2K07 அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு, 13/03/2026 அன்று Green Leaf Restaurant இல் அனைவரின் பங்குபற்றுதலுடன் இனிதே நிறைவு பெற்றது.
இவ் நிகழ்வின் போது, இந்த வருடத்திற்கான திட்டங்கள் மற்றும் எதிர்கால நகர்வுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அதன் அடிப்படையில், எமது ஊரில் கிட்னி நோயினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருடைய சத்திர சிகிச்சைக்கு உதவித்தொகையாக 50,000.00 ரூபா பணம் இன்று (15/03/2026) அவர்களின் இல்லம் சென்று எமது நிர்வாக உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த ஏற்பாட்டிற்கு நிதி உதவி வழங்கிய எமதமைப்பின் அனைத்து நன்பர்களுக்கும் இதனை திறன்பட செயற்படுத்திய நிர்வாக குழுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

மிக விரைவில் அடுத்த நகர்வில் சந்திப்போம்…

ஏறாவுர் Eastern Cancer Care Hospice தொடர்ச்சி…..இரண்டாம் கட்டமாக இன்று 29/12/2025 மட்டகளப்பு போதனா வைத்தியசாலைக்கு (புற்...
29/12/2025

ஏறாவுர் Eastern Cancer Care Hospice தொடர்ச்சி…..

இரண்டாம் கட்டமாக இன்று 29/12/2025 மட்டகளப்பு போதனா வைத்தியசாலைக்கு (புற்றுநோய்) சமூகமளித்த எமது அமைப்பினர் அங்குள்ள நோயாளிகளை நேரடியாக சந்தித்து அவர்கள் அனைவருக்கும் பழ வகைகளை வழங்கி வைத்ததோடு அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளையும் கூறி கனத்த மனதோடு விடை பெற்றிருந்தனர்.

இதற்கு தேவையான பங்களிப்பினை வழங்கிய எமதமைப்பின் உறுப்பினர்களுக்கு அவர்களுடைய பொருளாதாரத்தில் அல்லாஹ் மேன்மேலும் பறக்கத் செய்வானாக…

மனாரியன்ஸ் வாரியர்ஸ் 2007 அமைப்பினரால் ஒரு நாள் உணவுத் திட்டத்திற்கான நிதி கையளிப்பு.அஸ்ஸலாமு அலைக்கும்.இன்று 07.12.2025...
07/12/2025

மனாரியன்ஸ் வாரியர்ஸ் 2007 அமைப்பினரால் ஒரு நாள் உணவுத் திட்டத்திற்கான நிதி கையளிப்பு.

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று 07.12.2025 Manarian Warriors 2007 அமைப்பின் உறுப்பினர்களின் (ஆண் & பெண்) பங்களிப்புகளுடன் அத்தியவசிய சேவைவகளில் ஒன்றான சமூக நலச் செயற்பாடான Eastern Cancer Care Hospice இல் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகளுடைய ஒரு நாள் உணவிற்குரிய தொகையினை எமதமைப்பு பொறுப்பெடுத்ததோடு உரிய இடத்திற்கு நேரடியாக சென்று நோயாளிகளையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறியதோடு நிதியினையும் பொறுப்பாளர்களிடம் வழங்கியிருந்தனர்.

இதற்காக நிதியினை வழங்கியிருந்த எமதமைப்பின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் மேன்மேலும் பறக்கத் செய்வானாக.

அல்ஹம்துலில்லாஹ்…எமது மனாரியன் வோரியஸ் (2007) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று 22/03/2025...
22/03/2025

அல்ஹம்துலில்லாஹ்…

எமது மனாரியன் வோரியஸ் (2007) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று 22/03/2025 Occasia Resortல் இனிதே சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது. இவ் ஏற்பாட்டினை சிறப்பாக வழிநடாத்திய ஏற்பாட்டுக் குழுவுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்...

மிக விரைவில் அடுத்த ஒன்றுகூடலில் சந்திப்போம் ✌️👉

Address

Maruthamunai
Kalmunai

Telephone

+94772486856

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manarians’ Warriors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Manarians’ Warriors:

Share