Kalmunaians Forum

Call Directions Website Contact the organization

Kalmunaians Forum Kalmunaians Forum, a non-profit social service organization which is dedicated for the betterment of

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா? அல்லது பிரதேச செயலாளரா?; நீதிமன்றில் அம்பலமான முக்கிய திருப்பம்!கல்முனையன்ஸ் போரம் அம...
08/09/2026

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளரா? அல்லது பிரதேச செயலாளரா?; நீதிமன்றில் அம்பலமான முக்கிய திருப்பம்!

கல்முனையன்ஸ் போரம் அமைப்பினால் மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபாவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு (WRT/645/23) இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு எழுத்தாணை மனுவும் (WRT/67/23), ஏ.எம். நஸீரினால் தாக்கல் செய்யப்பட்ட எழுதாணை மனுவும் ((WRT/300/18) இணைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கான இடையீட்டு மனுதாரர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர்.

மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்டத்தரணி றுடானி ஸாஹிரின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கோரியா ஆஜராகியிருந்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களின் மனுவை ஆதரித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது சட்ட வாதங்களை சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் முன்வைத்தார்.

மனுதாரர் முபாரிஸ் எம். ஹனீபா தாக்கல் செய்த மனுவில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஐந்தாவது பிரதிவாதி "பிரதேச செயலாளர்" அல்ல மாறாக அவர் ஒரு "உப பிரதேச செயலாளர்" (ADS) மட்டுமே என்பதாகும்.

அதனடிப்படையில், ஒரு உப பிரதேச செயலாளர் என்பவர் பிரதேச செயலாளருக்குரிய முழுமையான அதிகாரங்களையும் கடமைகளையும் செயற்படுத்தவோ அல்லது உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகள், பதவி முத்திரைகள் மற்றும் ஏனைய அலுவலக ஆவணங்களில் தன்னை "பிரதேச செயலாளர்" எனத் தகுதியுயர்த்திப் பயன்படுத்தவோ முடியாது என்பதை உறுதிப்படுத்தவும், இத்தகைய செயற்பாடுகளைத் தடுக்குமாறு கட்டளையிடக் கோரியும் இந்த எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில், ஐந்தாவது பிரதிவாதியான கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியிடம் அவரது தரப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

அதற்குப் பதிலளித்த பிரதிவாதி தரப்புச் சட்டத்தரணி, ஐந்தாவது பிரதிவாதி ஒரு "உப பிரதேச செயலாளர்" மட்டுமே என்பதைத் திறந்த நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட அரசுத் தரப்புச் சட்டத்தரணி, இவ்விடயம் இன்று நீதிமன்றத்தில் தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதுவே அரசின் நிலைப்பாடும் ஆகும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், சட்டமா அதிபர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ள சத்தியக்கடதாசியில் ஐந்தாவது பிரதிவாதி ஏன் கையொப்பமிடவில்லை என்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் ஓர் அரச அதிகாரியாகப் பதவியில் இருப்பினும், சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்காக ஆஜராகுவதிலிருந்து விளகியிருந்த நிலையில், தனக்கெனத் தனிப்பட்ட (Private) சட்டத்தரணி ஒருவரை நியமித்து வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் முழுமையான இறுதி விவாதங்களுக்காக எதிர்வரும் 07.10.2026 மற்றும் 02.11.2026 ஆகிய இரு தினங்கள் ஒதுக்கப்பட்டு, வழக்கு விசாரணை அன்றைய நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் வாயிலாக, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தில் கடமையாற்றுபவர் ஒரு "உப பிரதேச செயலாளர்" மட்டுமே என்பதும், அவர் "பிரதேச செயலாளர்" அல்ல என்பதும் திறந்த நீதிமன்றத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருநாளை கொண்டாட வழியின்றி தவிக்கும் குடும்பங்களுக்காக நிறைவேற்றப்பட்ட ஸதகதுல் ஈத் - 2026புனித நோன்புப் பெருநாளைக் கொண்ட...
22/03/2026

பெருநாளை கொண்டாட வழியின்றி தவிக்கும் குடும்பங்களுக்காக நிறைவேற்றப்பட்ட ஸதகதுல் ஈத் - 2026

புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட வழியின்றி தவிக்கும் குடும்பங்கள் சந்தோசமாக பெருநாளைக் கொண்டாடும் பொருட்டு கல்முனையன்ஸ் போரமினால் வருடாந்தம் ரமழான் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஸதகதுல் ஈத் செயற்றிட்டம் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இவ்வருடமும் இறைவனின் உதவியால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரமழானின் ஆரம்ப பகுதியில் வழங்கப்பட்ட உண்டியல்கள் மூலமாக சேகரிக்கப்பட்டவையூடாகவும், நிதி மற்றும் பொருள் அன்பளிப்பாக பெறப்பட்டவற்றைக் கொண்டும் இணங்காணப்பட்ட தேவையுடைய 166 குடும்பங்கள் பயனடையும் படி பகிர்ந்தளிக்கப்பட்டன.

புனித நோன்புப் பெருநாளைக்கொண்டாட தேவையான ரூபா 5000 பெறுமதியான உணவுப்பொதிகள் 150 குடும்பங்களுக்கும், ரூபா 5000 படி 16 குடும்பங்களுக்கு நிதியாகவும் கடந்த 19-03-2026 மற்றும் 20-03-2026ம் திகதிகளில் இரவு பகிர்ந்தளிக்கப்பட்டன.

பகிர்ந்தளிக்கப்பட்ட உணவுப்பொதியில்;
அரிசி - 5Kg
கோழி இறைச்சி - 1Kg
சீனி - 1kg
பால்மா - 01
கஸ்டர்ட் - 01
ஜெலி - 01
1/2 kg பெரிய வெங்காயம்
1/2 kg தக்காளி
1/4kg பச்சை கொச்சிக்காய்
1/4kg கத்தரி
1/2kg போஞ்சி
1/2kg உருளைக்கிழங்கு
போன்ற பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட தேவையான உணவுப்பொருட்கள் உள்ளடங்கியிருந்தது.

இதற்கான பயனாளிக்குடும்பங்கள் கல்முனை, இஸ்லாமபாத் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!

கல்முனையன்ஸ் போரத்தினால் இவ்வருட ரமழானில் 5755 ஸஹர் உணவுப் பொதிகள் விநியோகம்புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு கல்முனையன்...
20/03/2026

கல்முனையன்ஸ் போரத்தினால் இவ்வருட ரமழானில் 5755 ஸஹர் உணவுப் பொதிகள் விநியோகம்

புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு கல்முனையன்ஸ் போரம் அமைப்பினால் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் "இலவச ஸஹர் உணவு விநியோகம்" இவ்வருடமும் மிகச் சிறப்பான முறையில் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த எட்டு வருடங்களாக தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தின் மூலம் இவ்ரமழான் முழுவதும் மொத்தமாக ரூபா 1,896,600.00 பெறுமதியான 5755 ஸஹர் உணவுப் பொதிகள் கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களுக்கு எவ்வித தடைகளுமின்றி உரிய ஸஹர் நேரத்திற்கு நோன்பாளிகளின் காலடிக்கே சென்று எம்மால் வழங்க முடிந்தது.

மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 7:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Kalmunaians Forumயின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் - 2026
16/03/2026

Kalmunaians Forumயின் வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் - 2026

ஸஹர் உணவு விநியோகம் - 2026கல்முனையிலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும், கல்மு...
18/02/2026

ஸஹர் உணவு விநியோகம் - 2026

கல்முனையிலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும், கல்முனையில் தங்கியுள்ள வெளியூர் பயணிகளுக்கும் ஸஹர் உணவு இலவசமாக ஏற்பாடு செய்துதரப்படும்.

ஸஹர் உணவு தேவைப்படுபவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தினை குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளுங்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் மாத்திரமே முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஸஹர் நேரத்தில் உங்கள் காலடிக்கே நேரில் வந்து ஸஹர் உணவு வழங்கப்படும், இன்ஷா அல்லாஹ்!

வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களும், பல்வேறு தேவைகளுக்காக வெளியூர்களிலிருந்து கல்முனைக்கு வருகை தருபவர்களும் ரமழான் மாதத்தில் ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல் நிலையை கருத்திற்கொண்டு கல்முனையன்ஸ் போரம் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

Sahar Meals Distribution

Sahar meals will be provided at free of cost for those who are staying with the patients in the government and private hospitals in Kalmunai region and for the out-of-town travelers staying in Kalmunai.

Those who need Sahar Meals can contact the below mentioned phone numbers within the mentioned time and make a reservation.

We will come to your feet at the time of Sahar and serve the meals, Insha Allah!

Kalmunians Forum has been carrying out this program for eight consecutive years in view of the struggle in getting Sahar meals of bystanders with patients in hospitals and those who visit Kalmunai from other places for various needs.

ஸதகதுல் ஈத் - 2026+++++++++++++++அன்புசால் சகோதர, சகோதரிகளே! இதோ உங்களிடம் எமது கல்முனையன்ஸ் போரம் ஓர் உண்டியலைத் தருகின...
17/02/2026

ஸதகதுல் ஈத் - 2026
+++++++++++++++

அன்புசால் சகோதர, சகோதரிகளே!

இதோ உங்களிடம் எமது கல்முனையன்ஸ் போரம் ஓர் உண்டியலைத் தருகின்றது. அது மறுமையில் நமது மீஸான் தட்டில் பெரும் படிக்கல்லாக மாறியிருக்கும், இன்ஷா அல்லாஹ்!

தினமும் குறித்த ஒரு தொகையை அவ்வுண்டியலில் இடுங்கள். அதனையும் உங்கள் அன்புச் செல்வங்களான குழந்தைகளைக் கொண்டு உண்டியலை நிரப்ப வையுங்கள். அவர்களுக்கு இவ்வுண்டியலை ஏன் நிரப்ப வேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள்.

புனித ரமழானின் 25ம் நாளில் எமது உறுப்பினர்கள் உங்கள் இல்லத்துக்கு வந்து அவ்வுண்டியலை எடுத்துச் செல்வார்கள். நமதூரில் கொடுக்கப்படும் அனைத்து உண்டியல்களிலும் சேர்ந்த முழுப் பணத்தையும் ஒன்று சேர்த்து புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட வசதியற்று, வழியின்றி தவிக்கும் ஏழைகளை இரகசியமாகத் தேடிக் கண்டுபிடித்து அவர்களும் பெருநாளைக் கொண்டாட உடுதுணிகளும், உணவுப் பொருட்களும் உங்கள் பெயரில் வழங்கி வைப்போம்.

அதனால் அவ்வேழைகள் அடையும் மனநிறைவு நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் “றிழா” வெனும் திருப்பொருத்தத்தை நிலுவையாகப் பெற்றுத்தரும். நிச்சயமாக நமது கப்ரிலும், மறுமையிலும் அதன் பலனைக் கண்ணாரக் காண்போம், இன்ஷா அல்லாஹ். இவ்வாறு தினம் சேர்ந்த குறித்த தொகை மறுமையில் பல கோடிகளுக்கும் மிகையாக நம்முன்னே குவியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது உள்ளங்களை ஏழை எளியவர்களின்பால் இரங்கும் உள்ளங்களாக ஆக்கித் தருவானாக, அமீன்!

உண்டியல்களை பெற்றுக்கொள்ள;
‭+94771235758

Address

4J, Madarasa Road
Kalmunai
32300

Alerts

Be the first to know and let us send you an email when Kalmunaians Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kalmunaians Forum:

Shortcuts

Share